சுமார் முப்பது வருடகளுக்கு முன்னர் 1979ம் ஆண்டு வாக்கில், கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் விஞ்ஞானிகள்ஆழ்கடலில் உள்ள நில படுகையை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது மெக்சிகோ கடல் பிராந்தியத்திற்கு அருகே கடல் படுகையில், மூழ்கியிருந்த பெரும் மலைகளையும் அவற்றின் மீது கூம்பான ‘புகைபோக்கி’ அமைப்புகளையும் கண்டனர். அந்த கூம்புகளில் இருந்து சூடான நீர் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், அந்த பிராந்தியம் முழுவதும் ஏராளமான உலோகத் தாதுக்களால் நிரம்பி இருப்பது தெரியவந்தது.
அதாவது இந்த மலைகள் யாவும் ‘கடலுக்கடியில்’ உள்ள எரிமலைகலாகும். அவற்றில் இருந்து பூமிக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்ட சூடான ‘லாவாக்களே’ சுற்றியுள்ள நீரை சூடாக்கி வெளியாக்கிய நிலையில், உலோக தாதுக்களை அவை கொண்டிருந்ததால் சுற்றிலும் அந்த உலோகத்தாதுக்கள் நிரம்பி இருந்துள்ளன.
அந்தத் உலோகத்தாதுக்களில் தாதுக்களில், தங்கம் (Gold), வெள்ளி (Silver), தாமிரம் (copper), ஈயம் (lead), துத்தநாகம் (zinc), ஆகியவை கடல் நீரில் உள்ள சல்பைடுடன் கலந்து பாலிமெட்டாலிக் சல்பைட்களாக மாறி கிடந்துள்ளன.
இந்த பரபரப்பான கண்டுபிடிப்பை அடுத்து உலகெங்கிலும் இந்த கனிமங்கள் குறித்த பெருத்த ஆர்வமும், அவற்றை தோண்டியடுத்து பயன்படுத்த பல்வேறு நாடுகளிடையே பெரும் போட்டியும் உருவானது.
இதன் பின்னர், பல்வேறு பிரதேசங்களில் உள்ள சர்வதேச கடற்படுகைகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வுகளின் ஒரு அங்கமாக இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்படுகையும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சீனா உடனடியாக அவற்றை கைப்பற்றும் நோக்கில் ஒரு நீண்ட கால, பிரந்திய மற்றும் உலகளாவிய ராஜதந்திர திட்டத்தை செயல்படுத்தியத்தின் விளைவாக கிடைத்த பலனையே சீனா இப்போது அறுவடை செய்துகொண்டுள்ளது.
இவ்வாறாக, இந்தியப் பெருங்கடலில் நீண்டகால அடிப்படையில் திட்டமிட்ட ஒருங்கிணைவுடன் செயல்பட்ட சீன, இந்த கனிமங்களை தோண்டியெடுக்க அனுமதியை பெற்று, சர்வதேச கடல் படுகை ஆணையத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனா இந்த 10,000 சதுர கி.மீ பரப்பளவு பிராந்தியத்தில் கடலுக்கடியில் உரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கனிமங்களைத் தோண்டவும் பயன்படுத்திக்கொள்ளவும் இயலும்.
இது தவிர, முன்னரே குறிப்பிட்ட கடலடி எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்ட கிழக்கு பசிபிக் கடலில் சுமார் 75,000 சதுர கி.மீ. பிராந்தியத்திலும் கனிமங்களை எடுக்க சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
முன்னதாக யூனிட்டி மீடியா நியூஸ், வெளிடப்பட்ட கடலுக்கடியில் 5 கிலோமீட்டர்களுக்கு மனிதர்களை ‘நீர்மூழ்கியில்’ அனுப்பி சீனா சாதனை!!! ஆழ்கடல் ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நாடுகளுடன் ஐந்தாவதாக சேர்ந்தது!!! தலைப்பிலான் செய்தியில் சீனா கடலில் அதிக ஆழத்தில் தனது ‘நீர்மூழ்கி கலத்தை’ இறக்கி செய்த சாதனை பற்றி தெரிவித்திருந்தோம்.
அந்த சாதனையின் நோக்கமே சீனாவின் ‘ஆழ்கடல்’ உலோகப்படிமங்களின் மீதான ‘தாகம்’ என்பது இப்போது தெளிவு. நேற்றைய நிலவரங்களின் படி, பசிபிக் பெருங்கடலில் தனது ஆழ்கடல் ஆய்வுக் களத்தை 3 ஆராய்ச்சியாளர்களுடன் இறக்கி விட்டு, சுமார் 5,180 மீட்டர் ஆழத்தை எட்டிவிட்டனர்.
இதன் அடுத்த கட்டமாக சீனா, ஆழ்கடல் மூழ்கலில் ஒரு உலக சாதனையாக 7000 மீட்டர் ஆழத்தை தொட உத்தேசித்துள்ளது. கடலுக்கடியில் இந்த ஏழு கிலோமீட்டர் சாதனையை படிப்பதன் மூலம் ‘சீனாவால்’ உலகின் 98 சதவீத கடல் அடிப்பரப்பை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன கடலியல் துறை ஆய்வாளர்கள் இனி அங்கு கடலுக்கடியில் உள்ள உலோகத்ததுக்களை தோண்டி எடுக்கும் முயற்ச்சியை தொடங்குவார்கள் என தெரிகிறது.
இது மட்டுமின்றி, சர்வதேச கடல் படுகை ஆணையத்தின் சட்டப்படியான அனுமதியால், கனிம ஆராய்ச்சி என்ற நோக்கில் இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய கடல் பகுதி முழுவதும் சீனாவின் கடற்படை கப்பல்களின் ஆதிக்கத்திற்குள் மறைமுகமாக வரும் அபாயமும் இதில் அடங்கியுள்ளது.
இந்த பிராந்தியத்தின் கனிமப் படிமங்கள், கடலடி நிலவரங்கள், பொருளாதார ரீதியான, உயிரியல் சார்ந்த மற்றும் கடற்படை மீகாம (Naval Sea-faring) விவரங்கள் யாவும் சீனாவின் கைக்கு கிடைக்கும் நிலையில், இந்தப் பகுதியில் உள்ள இந்திய கடல் பாதுகாப்பு போர்கப்பல்கள், வானூர்திகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்த அனைத்து தகவல்களும் இனி சினாவின் நேரடி கண்காணிபிற்குள்ளாகும்.
சீனாவின் ‘ஆராய்ச்சி நடவடிக்கைகளால்’ இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள ‘கடற்பாதுகாப்பு சார்ந்த’ பேராபத்தை, இந்திய கடற்படையின் உளவுப் பிரிவு (Directorate of Naval Intelligence-DNI) மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின், இலங்கையுடனான உறவுகளில் கடந்த பத்தாண்டுகளில் நடந்த ஏற்றத்தாழ்வான நிலை, மத்திய அரசின் கொள்கை வகுப்பாலர்களிடம் இருந்த அசமந்தம் மற்றும் ஒருங்கிணைப்பின்மை, ‘சேது சமுத்திர திட்டம்’ போன்ற ஒரு நாட்டின் கடல் பாதுகாப்பிற்கு உயிர் நாடியான விடயங்களில் வட இந்திய ‘ஹிந்துத்த்வா ‘ வெறியர்களையும் ‘சுப்பிரமணியம் சுவாமி’ போன்ற சாதி மற்றும் இன வெறியர்களின் பேச்சையும் கேட்டு நடந்தது’ போன்ற பல காரணிகள், இந்தியாவின் பின்னடைவுக்கு காரணமாகியுள்ளன .
கடந்த காலங்களில் சீனா விடுதலை புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசுக்கு செய்த உதவி, அதன் பலனாக அது அந்த பிராந்தியத்தில் பெற்ற பலன் ஆகியவற்றை கணக்கில் கொண்டோமானால், சீனாவின் நோக்கம் இதை நோக்கியதாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது தெரியும்.
இதே காலகட்டத்தில் இந்திய கொள்கை வகுப்பாளர்களும் தமிழக அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயல்பட இயலாத வகையில் அமைந்துவிட்ட பல பிரச்சினைகளினால், ‘இலங்கைக்கு’ எல்லா வகைகளிலும் உதவிய இந்திய அரசால், சீனா வெகு ‘குறுகிய’ கால அளவில் பெற்ற ‘பொருளாதார’ பயன்களை பெற இயலாமல் போனது கவனிக்கத்தக்கது.
குறிப்பாக எந்த அடிப்படைகளும் இல்லாமல் ‘ஹிந்துத்துவா சாதி வெறி’ அரசியலால் தூண்டிவிடப்பட்டு, ‘சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை’ இல்லாமல் அடித்த ‘வட இந்திய’ வலது சாரி அரசியல் வாதிகளால், இந்தியாவின் கடல் ஆராய்ச்சி மற்றும் கப்பல் போக்குவரத்து இந்த பிராந்தியத்தில் வெகுவாக குறைந்து போனது மிகப்பெரும் தவறாகி, இந்தியாவிற்கு நீண்டகால அளவில் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கடந்தகால தவறுகளில் இருந்து ‘இந்திய நடுவன் அரசின்’ கொள்கை வகுப்பாளர்கள் விரைவாக பாடம் கற்று, தங்களது அடுத்த நடவடிக்கைகளுக்கு தயாராகவேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதன் முதல் அம்சமாக இந்தியாவின் கடலாய்வுபணிகள் முடுக்கிவிடப்பட்டு, பெருமளவிலான ஆராய்ச்சி முயற்சிகளை பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தொடங்குவது அவசியம்.
அடுத்ததாக ‘ஹிந்துத்வா பயங்கரவாதிகளின்’ முட்டாள்தனமான செயல்பாடுகளை ஒடுக்கி, ‘சேது சமுத்திர திட்டத்தை’ உடனடியாக செயல்படுத்தி, கப்பல் போக்குவரத்து, இந்திய கடற்ப்படை நடமாட்டம் மற்றும் கடலாராய்ச்சி ஆகிவற்றை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, இலங்கை மீது இந்தியாவின் தாக்கத்தை அதிகப்படுத்தும் முயற்சிகளில் உடனடியாக ஈடுபட்டு இந்தியாவின் கடற்படை நடமாட்டம், வல்லமை மற்றும் தளங்களை இந்த பிராந்தியத்தில் அதிகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாட்டை மேலோங்கச் செய்யவேண்டும்.
எனவே, இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திக்கதிலும், பொருளாதார மற்றும் தொழில் முன்னேற்றத்திலும் பேரபாயமாக தொன்றிய்ள்ள இந்த விடயத்தில் அசட்டைகாட்டுவது, இந்திய அயலுறவு, பொருளாதார மற்றும் அறிவியல் கொள்கைவகுப்பாளர்களின் மிகப்பெரும் தோல்வியாக கருதப்பட்டு, நமது எதிர்கால சந்ததியர், நம்மை மன்னிக்கவே மன்னிக்காத ‘பெரும்’ தவறாக ஆகிவிட நேரலாம். விழித்துக்கொள்ளுமா இந்தியா?
source: http://tamil.unitymedianews.com/