Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நெஞ்சை நெருடும் நெருஞ்சி முட்கள்!

Posted on September 4, 2011 by admin

    S. ரஜபு நிஸா, திருநாகேஸ்வரம்    

தவ்ஹீதை ஏற்ற பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் நெஞ்சை நெருடும் நெறிஞ்சி முட்களாக பல தவறுகள் நம்மிடையே காணப்படுகின்றன. அல்லாஹுதஆலா தன்னுடைய திருமறையில் நீங்கள் செய்யாததை பிறருக்குச் சொல்லாதீர்கள் என்று குறிப்பிடுகிறான். ஆனால் இன்று நாம் நிறைய விசயங்களை பிறருக்கு ஏவுகின்றோம். ஆனால் நமக்கு என்று வரும் போது நாம் செய்வதில்லை. அப்படி நாம் செய்யாமல் இருந்தால் அல்லாஹ்விடம் பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிப்பட்டவர்களின் தண்டனையைப் பற்றி கூறும் போது நரகத்தில் தன் குடலை கையில் ஏந்தி கழுதை சுற்றி வருவதைப் போன்று சுற்றி வருவான் எனக் கூறுகின்றார்கள். இந்த நிலைமை நமக்கு வந்து விடாமல் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

வரதரட்சணை வாங்குவது நேரடியாக நம்மிடையே இல்லாவிட்டாலும் மறைமுகமாக வாங்கும் பழக்கம் நம்மிடையே பரவலாக காணப்படுகின்றது. நேரடியாக வாய் திறந்து கேட்பது தான் வரதட்சணை. ஆனால் நாம் கேட்கவில்லை. அவர்களாகவே தருகிறார்கள். நாங்கள் வாங்குகிறோம் என்கிறது ஒரு கூட்டம்.

மற்றொரு கூட்டமோ எந்த வீட்டில் கேட்காமலே நகை, சீர் வரிசை செய்வார்களோ அந்த வீட்டில் பெண் எடுக்கின்றனர். மேலும், கருப்பு நிற பெண்களை ஒதுக்கி விட்டு வெள்ளை நிறப் பெண்களையே அனைவரும் மணமுடிக்க விரும்புகின்றனர். இப்படி மணமுடிப்பது அல்லாஹ்வின் படைப்பில் குறைகாண்பது போல் ஆகி விடுகின்றது.

இப்படி அனைவரும் வெள்ளை நிறப் பெண்களையே மணமுடித்தால் கருப்பு நிறப் பெண்களை யார் மணமுடிப்பது. தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு அதை வாழ்க்கையில் செயல்படுத்தும் நம்மிடம் இந்த மனப்பக்குவம் வரவில்லையென்றால் வேறு யாருக்கு வரும் சிந்திக்க வேண்டாமா?

இன்று ஆலிமா பட்டம் பெற்ற பெண்களையே மணமுடிக்க விரும்புகின்றனர். எப்படி படிப்பு எல்லாம் ஏழைகளுக்கு எட்டாத கனியோ அது போல் இன்று ஆலிமா படிப்பும் ஆகி விட்டது. ஆலிமா பட்டம் பெறாமலேயே எத்தனை தவ்ஹீத் சிந்தனை உடைய பெண்கள் இருக்கின்றனர். நாம் அனைவரும் ஆலிமா பட்டம் பெற்ற பெண்களையே கேட்டால் மற்ற தவ்ஹீத் சிந்தனை உடைய பெண்களின் நிலை தவ்ஹீத் சிந்தனையை விட்டு மாற்றப்படுகின்றத. இதை நாம் சிந்தித்து உணர வேண்டாமா?

அடுத்து வட்டி. இந்த வட்டி உடைய கொடுமையை பற்றி நாம் முழுமையாக தெரிந்து இருந்தாலும் நாம் வட்டியை விட்டு விலகவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்? என்பார்கள். அதுபோல் நாமும் வாங்கக் கூடிய பணம் வட்டிப் பணம் எனத் தெரிந்தும் வாயைப் பிளந்து வாங்கிக் கொண்டு அல்லாஹ் அதை மன்னித்து விடுவான் என எண்ணிக் கொண்டு இருக்கின்றோமோ இது நம் நெஞ்சை நெருடும் நெறிஞ்சி முட்கள் அல்லவா?

ஸதகா, ஸகாத் உடைய நன்மையைப் பற்றி நாம் தெரிந்து கொண்டு அதை முழுமையாக கொடுப்பதில்லை. கொடுக்கின்றோம். ஆனால் மனப்பூர்வமாகக் கொடுப்பதில்லை.

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களைப் பார்த்து ஸதகா கொடுங்கள் என்று கூறுவார்கள். நாங்கள் ஓடிச் செல்வோம். நீர் இறைப்போம். ஒரு வாளி நீர் இறைத்தால் ஒரு பேரீத்தம் பழம் கிடைக்கும். அன்று முழுவதும் நீர் இறைத்தால் 10 அல்லது 15 பேரீத்தம் பழம் கிடைக்கும். அதைக் கொண்டு எங்கள் வீட்டுக்குக் கூட போக மாட்டோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தர்மம் செய்வதற்காக செல்வோம் என்று கூறுகிறார்கள். எந்த அளவு தர்மம் செய்து உள்ளார்கள் பாருங்கள். இந்த அளவு அல்லாஹ் கஷ்டத்தை நமக்குத் தரவில்லை. அந்த அளவு நாம் தர்மம் செய்யாவிட்டாலும் தினமும் செய்யும் செலவோடு ஐந்து ரூபாய் இன்று தர்மத்திற்கு என்று ஒதுக்கினால் அல்லாஹ் அந்த ஐந்து ரூபாயை மறுமையில் பல கோடியாகத் தரக் காத்திருக்கின்றான். இன்ஷா அல்லாஹ் இதை நாம் வாழ்வில் செயல்படுத்துவோம்.

ஹிஜாப் உடைய அவசியம் நமக்கு தெரிந்து இருந்தாலும் நாம் பேணுவதில்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாரிடம் ஹிஜாப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்களோ அவர்களிடம் தவிர மற்றவர்களிடம் ஹிஜாபைப் பேண வேண்டும். அந்நியர்களிடம் பெண்கள் பேசுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் ஹிஜாபை பேணச் சொல்கிறது. ஹிஜாப் என்றால் பர்தா என்று நினைப்பது தவறு. முழுமையான துணியால் மூடுவதே போதுமானது. இன்று பெரும்பாலும் கூட்டுக் குடும்பத்தில் இதை பேண முடிவதில்லை. இதில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு எக்காரணத்தைக் கொண்டும் இணை வைக்க மாட்டோம் என்று சொல்லுகின்ற நாம் சின்னச் சின்ன விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றோம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சின்ன வாhத்தையில் கூட இறைவனுக்கு இணை வைத்து விடுவதை எச்சரித்துள்ளார்கள். நாம் பேசும் வார்த்தை அல்லாஹ்வுக்கு இணை வைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி நம்மிடம் நெஞ்சை நெருடும் நெருஞ்சி முட்கள் இருக்கின்றனவா என ஆராய்ந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். நம் அனைவரையும் அல்லாஹ் தூய்மையான சிந்தனையுடனும் பூரணமான இஸ்லாமிய உணர்வோடும் வாழ வைப்பானாக!

source: http://www.a1realism.com/muslim_penmani/may2003/Readers%20Notes.HTM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 − = 18

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb