ஜெ. ஜஹாங்கீர்
[ எந்த ஒரு உழைப்பும், உதவியும் தராமல் ”அல்லாஹ் மன்னிப்பான்” என்று கூறி அல்லாஹ்வின் பெயரால் உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. கொச்சைப்படுத்தப்படுகிறது.
ஏழுவருடம் ஈரான் – ஈராக்கில் முஸ்லிம்களுக்குள்ளாகக் கொடூரமாகச் சண்டை போட்டனர். முஸ்லிம் நாடுகளில் மஸ்ஜித்களுக்குள் குண்டுவைக்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள், குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். எல்லாவித தவறுகளையும் மனம் விரும்பி செய்து அல்லாஹ் மன்னிப்பான் என்றால், நிச்சயம் மன்னிக்கமாட்டான்.
தண்டனைகள் கடுமையாகக் காத்திருக்கின்றன. விலகுதல், தவிர்த்தல், முகம் திருப்புதல், தள்ளி அமர்தல், தனித்திருத்தல், சாதியக் கட்டமைத்தல், சாதிகளுக்குள்ளாக நிக்காஹ் வைத்தல், கூடிக் கொள்ளுதல்.சாதியினருக்குள்ளாக மாநாடு போடுதல் அனைத்துமிருக்கிறது.]
‘ஹப்லுல்லாஹ்’ அல்லாஹ்வின் கயிறு பிடியுங்கள் கூறப்படுவதன் உட்பொருள் குடும்பத்தில் பற்றற்று விலகியிருத்தல். அல்லாஹ்வை ஆதாரமாக வைத்து ஒருங்கிணையும் தத்துவம் ஏற்கப்பட்டால் லாபம் தரும். சுயஆதாயம் கருதி பேச்சுத் திறமையால் ஒற்றுமை என்பதும், ஒருங்கிணைப்பு கூறுவதும் ருஹ§களைப் பிடித்து மடைமாற்றம் செய்ய உதவாது.
டாக்டர், இன்ஜீனியர், பேராசிரியர் படித்த பட்டங்களை முன் நிறுத்துதல். ஒற்றுமை பெயரில் பேனர் பெயர்கள், அமைப்புப் பெயர்களை முன்வைத்தல் நடக்கிறது. சிதறிவிடாதிருக்க அல்லாஹ்வின் பெயர் முன் வைக்கப்படுவதில்லை. ஒற்றுமை பேசுவோர் நாவிலிருந்து அல்லாஹ் விலகிச் செல்கிறான்.
அல்லாஹ்வுக்கு எதுவுமில்லை. அரூபீ! மறைவானவற்றை நம்புவதன் மூலம் மனிதனுக்கு அறிவு ஏற்படுகிறது. அல்லாஹ் ரஸ்ஸாக் & உணவளிப்பவன். அர்த்தம். பசித்தோருக்கு உணவளிப்பவனாக நீ மாறு என்பதாகும். கப்பார் – Gaffaar – மன்னிக்கக் கூடியவன். நீ மன்னிக்கக் கூடியவனாக இரு.
குத்தூஸ் – தூய்மையாளன். உன்னை எவரும் குறைகாண வண்ணம் நீ தூய்மையாளனாக இரு.
ஹக்கீம் – நுண்ணறிவாளன். மற்றவரை விட மேம்பட்ட அறிவாளனாக நீ மாறு.
முத்தஃதீர் – ஆதிக்கம் பெற்றவன். உனக்கான ஆதிக்கம் பெற பாடுபடு.
காஸீம் – பங்கீட்டாளன். உன்னிடமுள்ள 10 வீடுகளை பங்கு பிரித்து வசதியற்ற உன் உறவுகளுக்குக் குடு.
ஷஃபிஉ – பரிந்துரைப்பவன். உன் செல்வாக்கால் மற்றவருக்கு பரிந்துரைசெய்.
ஹாதி – நேர்வழி செலுத்துபவன். தீமைகளைத் தடுத்து நன்மை ஏவும் நேர்மையாளனாக உன்னை அமைத்துக்கொள்.
நதீக் – எச்சரிக்கையாளன். சமூகம், உன் உறவுகள் வழி தவறும் போது நீ எச்சரிக்கை செய்.
ஷகூர் – நன்றி பாராட்டுபவன். சமூகத்துக்கு நன்மை செய்வோரைத் தெரிந்தெடுத்து நன்றி பாராட்டு.
அல்லாஹ்வை தனித்துவிட்டு நாம் தனியாக நின்று பார்க்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ்வை நமக்குள் வைத்துப் பார்க்கணும். நம்மால் செய்யக்கூடிய நன்மை, தீமை, பாவம், தியாகம் மட்டுமே நிற்க கூடியவை. அல்லாஹ் மன்னிப்பான். எளிதாக அல்லாஹ்வின் தலையில் போட்டு தப்பி ஓடக்கூடாது.
எந்த ஒரு உழைப்பும், உதவியும் தராமல் அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறி அல்லாஹ்வின் பெயரால் உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. கொச்சைப்படுத்தப்படுகிறது.
ஏழுவருடம் ஈரான் – ஈராக்கில் முஸ்லிம்களுக்குள்ளாகக் கொடூரமாகச் சண்டை போட்டனர். முஸ்லிம் நாடுகளில் மஸ்ஜித்களுக்குள் குண்டுவைக்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள், குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். எல்லாவித தவறுகளையும் மனம் விரும்பி செய்து அல்லாஹ் மன்னிப்பான் என்றால், நிச்சயம் மன்னிக்கமாட்டான்.
தண்டனைகள் கடுமையாகக் காத்திருக்கின்றன. விலகுதல், தவிர்த்தல், முகம் திருப்புதல், தள்ளி அமர்தல், தனித்திருத்தல், சாதியக் கட்டமைத்தல், சாதிகளுக்குள்ளாக நிக்காஹ் வைத்தல், கூடிக் கொள்ளுதல்.சாதியினருக்குள்ளாக மாநாடு போடுதல் அனைத்துமிருக்கிறது. அல்லாஹ் என்ற ஒன்றைச் சொல்லில் ஒருங்கிணையும் போது இஸ்லாம் பலப்படும். முஸ்லிம்களிடம் ஒட்டுமொத்த முன்னேற்றம் ஏற்படும்.
ஆகஸ்ட் 2011 முஸ்லிம் முரசு
source: http://jahangeer.in/?paged=3