கெட்ட அழைப்பாளர்கள் மற்றும் தங்களின் கற்பனைகள், தந்திரங்கள், சதித்திட்டங்கள் போன்றவற்றை நாகரீகம் என்று கருதக்கூடிய அழைப்பாளர்கள் பலதரப்பட்ட வழிகளிலும் சாதனங்களையும் பயன்படுத்தி முஸ்லிம் பெண்களை வழிகெடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு, நாணம், பத்தினித்தன்மை போன்றவற்றிலிருந்தும் அவர்களை வெளியேற்றி தங்களின் அழகை வெளிப்படுத்தித்திரியக் கூடிவர்களாக ஆக்கிவிடுகின்றார்கள். எனவே அவர்களின் பேச்சுக்களை கேட்டு ஏமாந்து அவர்களின் மாயவலையில் விழுந்துவிடாமல் உன்னை பாதுகாப்பதுடன், உனது ஏனைய சகோதரிகளையும் அதைவிட்டும் எச்சரிப்பாயாக!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எவர் நேர்வழியின்பால் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றுபவர்களுடைய நற்கூலிகள் போன்றவை உண்டு. அவர்களின் நற்கூலிகளில் எதுவும் குறையாது. எவர் தீய வழியின்பால் அழைக்கின்றாரோ அவருக்கு அத்தீய வழியை பின்பற்றுபவர்களின் பாவங்கள் போன்றவை உண்டு. அதனால் அவர்களின் பாவங்களில் எதுவும் குறைவதில்லை. (ஆதாரம்: முஸ்லிம்)
42. அன்புச்சகோதரியே! .
உனது மார்க்கத்தை கொண்டுபெருமைப்படக் கூடியவளாகவும், உனது கொள்கையை கொண்டு உயர்வடையக் கூடியவளாகவும் இருந்துகொள்!
அல்லாஹ் கூறுகின்றான்:
(விசுவாசிகளே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம்,கவலையும் படவேண்டாம். (உண்மையாவே) நீங்கள் விசுவாசம்கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மிக்க மேலானவர்கள். (ஆலு இம்ரான்- 3 : 139)
மேலும் உன்மார்க்கத்திற்குரிய அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவதையும் அவைகளை கேலிசெய்வதையும் உன்னை நான் எச்சரிக்கின்றேன்.
43. அன்புச்சகோதரியே! .
இஸ்லாமிய சொற்பொழிவுகளை கேட்டல், பயனுள்ள மநாடுகளில் கலந்து கொள்வதின்மூலம் உனது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு உரமிடுவாயாக! அது ஆடியோ கெஸட்டுக்களாக இருந்தாலும் சரி. மேலும் பயனுள்ள இஸ்லாமிய சஞ்சிகைகளை வாசிப்பதற்கு ஆர்வங்கொள்!
முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரின் கரத்தை பிடித்துக்கொண்டு ஓ முஆதே! அல்லாஹ்வின்மீது ஆணையாக நான் உன்னை நேசிக்கின்றேன் எனக் கூறினார்கள். பின்னர் ஓ முஆதே! உனக்கு நான் நல்லுபதேசம் செய்கின்றேன். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இறைவா! உன்னை நினைவு கூறுவதற்கும், உனக்கு நன்றிசெலுத்துவதற்கும், அழகிய வணக்கங்களை நிறைவேற்றுவதற்கும் எனக்கு நீ உதவிசெய்வாயாக! என்று கூறுவதை நீ விட்டுவிட வேண்டாம் எனக்கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
44. அன்புச்சகோதரியே! .
நன்மைகளையும், சிறப்பான அம்சங்களையும், அழகிய குணங்களையும், பயனுள்ள கல்வியையும் உனது வீட்டிலும், பாடசாலையிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியிலும் பரப்புவதற்கு உதவி செய்வாயாக!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எவர் யாதேனும் நன்மையை பிறருக்கு அறிவித்து கொடுக்கின்றாரோ அவருக்கு அதை செய்பவரின் நன்மை போன்று உண்டு. (ஆதாரம்: முஸ்லிம்)
45. அன்புச்சகோதரியே! .
வீட்டு வேலைகளில் உனது தாய்க்கு உதவியாக இரு! ஏனெனில் அது (தாய்க்கு நன்மை செய்வதாகவும் அவள் செய்த நன்மைகள் சிலவற்றிற்கு பகரமாகவும் இருக்கும். மேலும் அல்லாஹ்வின் உதவியால் உனது எதிர்கால வாழ்க்கை வெற்றியடைவதற்கு பயிற்சியாகவும் இருக்கும். பாடங்களை மீட்டுதல், பாடசாலை வேலைகளை செய்தல் போன்றவற்றின் பெயரால் ஓய்வு நேரத்தை ஓய்வெடுப்பதிலும், சோம்பலிலும் கழித்துவிடாதே!
46. அன்புச்சகோதரியே! .
நீ எப்போதும் புன்முறுவலுடன் இருந்துகொள்! இதனால் நீ அல்லஹ்விடத்தில் நன்மையை பெற்றுக்கொள்வதுடன் மற்றவர்களின் அன்பையும் பெற்றுக்கொள்வாய்!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நீ உனது சகோதரனைப்பார்த்து புண்முறுவல் பூப்பதும் உனக்கு தர்மமாகும். (ஆதாரம்: திர்மிதி)
47. அன்புச்சகோதரியே! .
கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவதை விட்டும் உன்னை நான் எச்சரிக்கின்றேன்.
ஒரு மனிதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் எனக்கூறினார். அதற்கு அவர்கள் கோபப்படாதீர் என்று கூறினார்கள். மீண்டும் மீண்டும் அதை அவர் கேட்க கோபப்படாதீர் என்றே கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
அறிந்துகொள்! நிச்சயமாக கோபம் ஷைத்தானில் உள்ளதாகும்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக கோபம் ஷைத்தானில் உள்ளதாகும். ஷைத்தான் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளான். தண்ணீரினால் நெருப்பை அணைக்கமுடியும். எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர் வுழு செய்து கொள்ளவும். (ஆதாரம்: அஹ்மத்)
கோபப்படக்கூயவன் தன்னை அமைதிப்படுத்தக்கூய எவரையும் பெற்றுக்கொள்ளமாட்டான். எனவே நீ உன்னை அமைதியைக்கொண்டு அழகுபடுத்திக்கொள்! அவர்கள் செய்யும் தவறுகள், குறைகள் போன்றவற்றை பொறுமையுடன் சகித்துக்கொள்!
48. அன்புச்சகோதரியே! .
இறை நிராகரிப்பாளர்களாகிய காபிர்களை பின்பற்றுவதில் எச்சரிக்ககையாக இருந்துகொள்! பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், அவர்களின் உண்ணுதல், பருகுதல், உடையணிதல் போன்றவற்றிலும் இவை தவிர்ந்த ஏனைய அம்சங்களிலும் அவர்களின் வழியை பின்பற்றுவதை விட்டும் எச்சரிக்கையாக இரு!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எவர் எக்கூட்டத்திற்கு ஒப்பாகுகின்றாரோ அவர் அக்கூட்டத்தை சேர்ந்தவராவார். (ஆதாரம்: அபூதாவூத்)
49. அன்புச்சகோதரியே! .
பெண்களில் அதிகமானோர் தொழுகை விஷயத்தில் பொடுபோக்காக இருக்கின்றனர். தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது பிற்படுத்துகின்றனர். காரணம் அவர்கள் தங்கள் வேலையில் மூழ்கியிருப்பது அல்லது மற்றப்பெண்களிடம் வீணான பேச்சுக்களை பேசி ஓய்வுநேரத்தை வீணாக்குவதும், குறிப்பாக விருந்து வைபவங்களில் தொழுகையை நிறைவேற்றாது அதனை வீணாக்குகின்றனர். எனவே நீங்கள் இவ்வகையை சேர்ந்த பெண்களாக இருக்காது தொழுகையை உரியநேரத்தில் பேணி தொழக்கூயவர்களாக இருந்துகொள்ளுங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
தொழுகைகைளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள். (அல் பகரா- 2 : 37)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமல்களில் மிக மேலான அமல் எது? எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுகையை அதன்நேரத்தில் தொழுவது எனக் கூறினார்கள். பிறகு எது எனக்கேட்டேன். பெற்றோருக்கு நன்மை செய்தல் எனக் கூறினார்கள். பிறகு எது? எனக்கேட்டேன். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது எனக் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
50. அன்புச்சகோதரியே! .
நோன்பு நோற்பதற்கு உயர்ந்த அந்ததும், மகத்தான கூலியம் உண்டு. மேலும் அது உள்ளத்தை தூய்மைப்படுத்தி அதனை சீராக்குகின்றது. மாதத்தில் மூன்று நாட்களும், ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்களுமாக ஸுன்னத்தான இந்நோன்புகளை பிடிப்பதற்கு நீ உன்னை பழக்கிக்கொண்டால் உனக்கு சுபசோபனம் உண்டாகட்டும். அல்லாஹ் ஈருலகிலும் சுபீட்சத்தை தருவானாக!
அல்லாஹ் கூறுகின்றான்:
விசுவாசிகளே! உங்களுக்குமுன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்ட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் பயபக்தியுடையோராகலாம். (அல் பகரா- 2 : 183)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
எவர் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும்போது ஒரு நாள் நோன்புவைக்கின்றாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்கு பகரமாக அல்லாஹ் அவரின் முகத்தை எழுபது ஆண்டுகள் நரகநெருப்பை விட்டும் துஸரமாக்குகின்றான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஆசிரியரின் கூற்று
பொருத்தமாக கண்டபோது சல இடங்களில் பல ஹதீஸ்களை மேலதிகமாக சேர்த்துள்ளேன்.
மேலும் தமிழ் மொழியில் உள்ள இரசனையை பேணி சில இடங்களில் அறபு மொழியின் வடிவத்திலிருந்து விலகியிருக்கின்றேன்.
மேலும் அறபு மொழியின் அழகாம் ஒரு கருத்தை தரும் பல சொற் குவிப்பிலிருந்து சில இடங்களில் தளர்ந்திருக்கின்றேன்.
அறபு மொழியின் நீளத்திற்கேற்ப தமிழ் மொழி பெயர்ப்பு செய்தால் அப்பந்தியின் இரசனையை மொழிபெயர்ப்பு இழந்துவிடும் என்பதற்காக தமிழ் மொழிபெயரப்பில் சில இடங்களில் சுருக்கம் பேணியிருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
அறபு மொழியில்: அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் முக்பில்.
தமிழில்: ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம், அழைப்பாளர் அல் ஜுபைல் அழைப்பகம், ஸவூதி அரேபியா.