‘வரலாறு திரும்பும், இஸ்லாம் மீண்டும் எழுச்சி பெறும்!’
மெல்போர்ன் என்று சொன்னாலே நமக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற ஒரு நகரமும் அதில் நடந்த கிரிக்கெட் போட்டிகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால் லார்ட் மெல்போர்ன் என்கிற பிரிட்டிஷ் அரசியல்வாதியின் நினைவாகத்தான் அந்த நகரத்துக்கு மெல்போர்ன் எனப் பெயர் சூட்டப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இங்கிலாந்தின் பிரதமராகக் கோலோச்சியவர் தான் லார்ட் மெல்போர்ன் (1779-1848). அவரை பிரிட்டிஷ் பிரதமர்களில் பத்தோடு பதினொன்றாகச் சொல்லிவிட முடியாது. விஷய ஞானம் நிறைந்தவர்; உலக நாடுகளின் வரலாறுகளைக் கரைத்துக் குடித்தவர்; பண்பாடுகளையும் மதங்களையும் ஆழ்ந்து படித்தவர்; கடின உழைப்பாளி; ஒழுக்கசீலர் எனப் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் அவர்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னமாக முத்திரை பதித்த ராணி விக்டோரியாவுடன் (1819-1901) நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் மெல்போர்ன்.
பதின்பருவத்து இளம் பெண்ணாக இருந்த ராணி விக்டோரியாவுக்கு உலக வரலாறு, அரசியல், மதங்கள் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்தவர் மெல்போர்ன் தான்.
ராணி விக்டோரியாவுக்கு மெல்போர்ன் அளித்த பதில்:
ஒரு முறை ராணி விக்டோரியா மெல்போர்னிடம் கேட்டார்: “”நீங்கள் உலக வரலாற்றை ஆழ்ந்து வாசித்துள்ளீர்கள். வரலாற்றில் மற்றெல்லாவற்றையும் விட மிக அதிகமாக வியப் பிலாழ்த்திய நிகழ்வு எது எனச் சொல்ல முடியுமா”?
சற்றும் தாமதிக்காமல் மெல்போர்ன் சொன்ன பதில்: “”இஸ்லாத்தின் எழுச்சி”.
விக்டோரியா விடவில்லை. “”இஸ்லாம் எழுச்சியடைந்ததற்கான காரணங்களைக் குறித்தும் ஆராய்ந்திருக்கின்றீர்களா?” எனக் கேட்டார்.
மெல்போர்ன் சொன்னார்: “”என்னைப் பொருத்தவரை இஸ்லாத்தின் எழுச்சிக்கு ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அவர்களின் இறைத்தூதர் அவர்களுக்கு வழிகாட்டுதல்களைக் கொண்ட நூல் ஒன்றைக் கொடுத்திருந்தார். அவர்கள் அந்த நூலைப் பின்பற்றி நடந்த வரை அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கதவுகள் அவர்களுக்காகத் திறந்தே இருந்தன. காலம் செல்லச் செல்ல அவர்கள் அந்த நூலிலிருந்து தங்களுடைய கவனத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அந்த அலட்சியம் வளர வளர அவர்களின் வீழ்ச்சியும் அதிகமாகிக் கொண்டே போயிற்று”.
மெல்போர்ன் மேலும் சொன்னார் :
“”இனி வருங்காலத்தில் வரலாறு எப்போதாவது மீண்டும் தானாகத் திரும்பினால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் குர்ஆனை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்வார்களேயானால், தங்களுடைய தனிப்பட்ட வாழ்வையும் கூட்டு வாழ்வையும் குர்ஆனின் அடிப்படையில் அமைத்துக் கொள்வார்களேயானால் இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ன, ஒட்டுமொத்த உலகமே அவர்களின் ஆளுகையின் கீழ் வந்துவிடும்.” நன்றி: சமரசம் 1-15 நவம்பர் 2010
விஷய ஞானம் நிறைந்த அறிஞர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் “”முஸ்லிம்கள் அல்குர்ஆனி லிருந்து தங்களுடைய கவனத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அந்த அலட்சியம் வளர வளர அவர்களின் வீழ்ச்சியும் அதிகமாகிக் கொண்டே போயிற்று” என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை. 25:30ல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முறையிடுவது போல் முஸ்லிம்கள் குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள் என்பதே 100% உண்மை. ஆனால் இன்றைய முஸ்லிம் மதகுருமார்களிலிருந்து அறிவு ஜீவிகள் வரை இதை ஏற்பார்களா? ஏற்கமாட்டார்கள். முஸ்லிம்கள் அல்குர்ஆனின் போதனைப்படி, அதன் வழிகாட்டல்படிதான் நடக்கிறார்கள் என்றே வாதிடுவார்கள்!
அல்குர்ஆன் ஒரு புள்ளியும் மாற்றமில்லாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் கோடிக்கணக்கான பிரதிகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு அச்சடிக்கப்பட்டு உலகின் அனைத்து நாட்டு மக்களிடமும் இருக்கிறது. லட்சக்கணக்கான ஹாபிழ்கள் அல்குர்ஆனை மனனமிட்டுள்ளனர். அன்றாட ஐங்கால தொழுகைகளிலும், ரமழான் இரவுத் தொழுகைகளிலும் அல்குர்ஆன் முழுமையாக ஓதப்பட்டு வருகிறது. குர்ஆனை காதுக் கினிமையாக ஓதும் காரிகள் எண்ணற்றோர் இருக்கின்றனர். முஸ்லிம்கள் குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கின்றனர் என்றே கூறுவர்.
முன் சென்றவர்களை சிலைகளாக வடித்தும், அவை போதாதென்று கற்பனைச் சிலைகளை வடித்தும் அவற்றை இந்துக்கள் வணங்குவது போல், முன் சென்றவர்களை சமாதிகளாக (கபுரு-தர்கா) வடித்தும், அவை போதாதென்று கற்பனைச் சமாதிகளை வடித்தும் அவற்றை வணங்கும் ஜமாலி போன்றவர்களும் நாங்கள் குர்ஆனைத் தான் பின்பற்றுகிறோம். பைபிளையோ, தோராவையோ அல்ல என்றே வாதிடுவர்.
ஷிஆ, சுன்னத் வல்ஜமாஅத், மத்ஹபுகளின் பெயரால் ஹனபி, ஷாபி, மாலிக்கி, ஹன்பலி, தரீக்காக்களின் பெயரால் காதிரியா, ஷாதுலியா, நக்இபந்தியா, மஸ்லக்கின் பெயரால் அஹ்ல ஹதீஸ், முஜாஹித், இயக்கங்களின் பெயரால் ஜமாஅத்தே இஸ்லாமி, ஜாக், தமுமுக, ததஜ, Pய்ணூ, றீம்P, னிமூலு இன்னும் இவை போல் எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரிந்து முஸ்லிம் சமுதாயத் தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அனைவருமே அல்குர்ஆனைப் பின்பற்றி நடப்பதாகத் தான் முழக்கமிட்டுக் கூட்டம் சேர்க்கிறார்கள்.
உண்மையிலேயே குர்ஆனைப் பின்பற்றி நடந்தால் முஸ்லிம்கள் இத்தனைப் பிரிவாகப் பிரிந்து சீரழிய முடியுமா? நிச்சயமாக முடியாது. அப்படி யானால் இந்த அனைத்து வழிகேட்டுப் பிரிவின ரிடமும் காணப்படும் பெருந்தவறு என்ன?
ஆம்! அல்குர்ஆனின் போதனைப்படிதான் நடக்கிறோம் என்று கூறிக்கொண்டு, ஒவ்வொரு பிரிவாரும் தங்கள் மனம்போல் அல்குர்ஆனுக்கு சுயவிளக்கம் கொடுப்பதுதான்; அதன்படி நடப்பதுதான் வழிகேட்டிற்குரிய காரணமாகும். ஆனால் அல்குர்ஆனின் 7:3, 33:21,36,66,67,68, 59:7 இறைவாக்குகளை நடு நிலையோடு படித்து விளங்குகிறவர்கள் அல்குர் ஆனுக்கு, குறிப்பாகச் செயல்பாட்டுக்குரிய முஹ்க்கமாத் வசனங்களுக்கு சரியான மொழி பெயர்ப்பு செய்ய அனுமதி உண்டே அல்லாமல் சுய விளக்கம் கொடுக்க அனுமதி அணுவளவும் இல்லை என்பதைத் திட்டமாக அறியமுடியும். அல்குர் ஆனுக்கு விளக்கம் கொடுக்க அனுமதி பெற்றவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே என்பதை அல்குர்ஆன் 2:213, 16:44,64 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறுவ தோடு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னர் யார் மேல் விளக்கம் கொடுத்தாலும் அவர்களும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களும் ஷைத்தா னைப் பின்பற்றி நரகம் புகுகிறவர்களே என்பதை 6:68, 40:35, 33:36,66,67,68, இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த இறைவாக்குகளை நிராகரித்து காஃபிராகாமல் அப்படியே அடிபணிந்து முஹ்க்க மாத் இறைவாக்குகள் கூறும் நேரடிக் கருத்துகளை அப்படியே உள்ளது உள்ளபடி ஏற்று அதன் படி நடக்க அனைத்துப் பிரிவுகளின் முஸ்லிம்களும் 3:103 இறைக் கட்டளைப்படி முறையாக நடக்க முன்வந்தால் அறிஞர் மெல்போர்ன் சொன்னது போல், அமெரிக்க, பிரிட்டிஷ், பிரான்ஸ் சாம்ராஜ்யங்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகமே முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்துவிடும் என்பதில் சந்தேகம் இருக்குமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்.
அந்நஜாத் மாத இதழ் அதற்குள்ள முயற்சியையே தொடர்ந்து அயராது செய்து வருகிறது. அந்நஜாத்தை மக்களிடையே பரப்ப முன் வாருங்கள்!
source: http://annajaath.com/