பெண் என்பவள் யார்?
பெண் என்பவள் யார்?
அவளின் குணாதிசயங்கள் யாவை?
அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?
அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
– ஏன்? பெண் என்பவன் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகிறான்.
‘கடலின் ஆழத்தைவிட ஆழமானது பெண்ணின் மனம்’ என்பார்கள். உலகில், எழுதப்பட்ட இலக்கியங்களில் பெரும்பங்கு – பெண்’ என்ற புதிரைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் எழுதப்பட்டவைதாம். கொஞ்சம் பெரிய சைஸ் காக்கையைப் போல் இருக்கும்.
அழகே இல்லாத ஒரு பெண் மயிலைக் கவர, கம்பீரமான, வானவில்லைப் பல் வண்ணங்களைக் கொண்ட தோகையை உடைய அழகிய ஆண் மயில் ஏன் ஆடிப்பாட வேண்டும்? ஏதோ முட்டையிட்டோம். குஞ்சுபொரித்தோம். இனி அதுவாயிற்று அதன் வாழ்க்கையாயிற்று என்று ‘தேமேய யென சும்மா இராமல் ஒரு தாய்ப் பருந்து ஒருமீனைக் கொன்று ஏன் குஞ்சுக்கு ஊட்ட வேண்டும்? காடும் மேடும் திரிந்து, புல்லும் சருகும் சேர்த்து ஏன் ஒரு கூட்டைக் கட்ட வேண்டும்? இதற்கெல்லாம் விடை ‘அன்பு’ என்பீர்கள்.
அன்பு என்பது என்ன? அது ஒரு இரசாயன மாற்றமா, ஹார்மோன் சுரப்பா, இல்லை வேறு ஏதாவதா? பசிக்கும்போது சாப்பிடுவதைப்போல அன்பு என்பது ஒரு உடலின் தேவையா, இல்லை அதைவிட மேலானதா? சைனாவின் ‘யின் – யாங்’ தத்துவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். “யின்” என்பது பெண் தத்துவம். “யாங்” என்பது ஆண் தத்துவம். யின் என்பது பெண்மை, பூமி, இருள், செயலுக்கு உள்ளாவது. யாங் என்பது ஆண்மை, வானம், வெளிச்சம், செயல்படுவது, ஊடுருவுவது.
பூமியைப் போன்றவள் பெண்: பொறுமைக்காக மட்டுமல்ல “Down to eartt” என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல, பெண் மிகவும் லௌகினமானவள் Very practical. ஷேக்ஸ்பியரைப் பற்றியோ, குண்டலினியைப் பற்றியோ, பைசாவிற்கு லாயக்கற்ற தத்துவங்களைப் பற்றியோ அவளுக்கு அக்கறையில்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் அவள் வீடு, அவள் கணவன், அவள் குழந்தைகள்.இதைச் “சுயநலம்” என்று சொல்வது மிகவும் தவறான கருத்து.
பெண் மட்டும் இப்படி சுயநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமான பல ஆண்களின் தாராள மனத்தினால் பல வீடுகள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டிருக்கும்.”Charity begins at home” இரக்கம் இல்லறத்தில் ஆரம்பிக்கிறது என்பார்கள். தனக்கு மிஞ்சினால்தான் தானம். தனக்காகவும், தன் கணவனுக்காகவும எப்போதும் ஓயாமல் சிந்திப்பவள் பெண்.
ஒரு முட்டையில் கருவின் எதிர்காலத்திற்குத் தேவையான அனைத்து ஊட்டப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைப் போல, பெண் தன் குழந்தையின் எதிர்காலத்திற்காக அக்கறையோடு சேமித்து வைக்கிறாள்.விதை வளர்வதறகுத் தேவையான நீர், ஆக்ஸிஜன், நைட்ரஜன், தாதுப்பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் நிலமானது சேமித்து வைத்திருக்கிறது. வானம் பொய்த்தாலும், பூமி பொய்ப்பதில்ல. மழையைத் தராமல் வானம் வறண்ட பாலைவனத்தில் கூட எங்கோ ஒரு மூலையில் சோலை இருப்பதைப்போல, பெண் என்பவள் அன்பு என்ற நீரூற்றை உடைய பூமி.
இருளைப் போன்றவன் பெண் வானவெளியில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இருள் பூமியில் பாதி வெளிச்சம் மறுபாதி இருள். வெளிச்சத்தில், பகல் வேளையில் உழைத்துக் களைத்த உயிரினங்கள் இளைப்பாற வீடு திரும்புவது இருளில்.ஓய்வெடுக்கும் உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஆனந்தமாகக் காதல் செய்வதும் இருளில். காதல் செய்த உயிரினங்கள் களைத்துப் போய் தன்னை மறந்து உறங்குவதும் இருளில். எனவே, இருள் என்பது ஓய்வு, இனப்பெருக்கம், அமைதி.இருள் என்பதற்கு இப்படி பல நற்குணங்கள் இருந்தாலும், அதற்கு சில எதிர்மறை குணங்களும் உண்டு. இருள் என்பது யாரிடமாவது அடைக்கலம். தேடும் தன்மை. பெண்களிடம் காணப்படும் எல்லாவிதமான பயங்களும்,
சகலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஒருங்கே உருவெடுத்த ஒரு வடிவம் பெண். அன்பு என்ற நீரூற்று தனக்குள்ளேயே இருந்தாலும் உண்டு. இருள் என்பது பயம். இருள் என்பது பாதுகாப்பற்ற தன்மை. இருள் என்பது யாரிடமாவது அடைக்கலம் தேடும் தன்மை. இருளின் இந்த எதிரிடையான குணங்களும் பெண்களிடம் காணப்படும். எல்லா விதமான பயங்களும், சகலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஒருங்கே உருவெடுத்த ஒரு வடிவம் பெண். தன் திறமையைத் தானே உணராத இனம். அன்பு என்ற நீரூற்று தனக்குள்ளேயே இருந்தாலும், எப்போதும் அதை வெளியே யாரிடமாவது தேடி அலைபவள் பெண்.
இளம் வயதில் பெற்றோரிடம், பருவத்தில் காதலனிடம், திருமணத்திற்குப் பிறகு கணவனிடம், தாயான பிறகு குழந்தைகளிடம் என்று எப்போதும் யாரையாவது அண்டியே இருப்பவள் பெண். அவளால் தன் காலில் தானே நிறக முடியாது என்று பிறர் குறை கூறுவது உண்டு. ஆனால், இது குறையல்ல. இதுதான் நிறை. பிறரிடம் எப்போதும் எதிர்பார்த்து, அதை அவர்கள் தந்தாலும், தராவிட்டாலும் பெண் எப்போதும் தந்து கொண்டேதானிருக்கிறாள். எனவே, அண்டி வாழ்வது பெண்ணிற்கு குறையல்ல நிறை. பெற்றோரைச் சார்ந்து வாழும் குழந்தை அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைக்கிறது.
காதல் வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் பெண்ணின் இந்த அண்டிவாழும் குணம்தான். கணவன் – மனைவி இணை பிரியாமல் இருப்பதற்கு காரணமும் இக்குணம் தான் சார்ந்து வாழ்தல், இயல்பானது. ஆரோக்கியமானது.செயலுக்கு உள்ளாவது பெண் ஆங்கிலத்தில் “Passive” என்பார்கள். இதன் பொருள் செயல்படாமல் இருப்பது. செயல்படாமல் இருப்பது என்பதற்கு பொருள் செயலுக்கு உள்ளாவது என்பது பொருள். செயலுக்கு உள்ளாவது என்றால் வேறு ஏதோ செயல்படுகிறது என்றுதானே பொருள்? ஆம். ஆணைச் செயல்பட வைத்து அந்த செயலுக்கு உள்ளாவது பெண்.ஒன்றும் தெரியாத அப்பாவி ஆணை, தன் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி ‘அடப்பாவி’ ஆணாக்குபவள் பெண்.
ஒன்றும் தெரியாதது போல் ஒரு பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழி, ஒரு ஆண் அறிவாளியாக மாறித்தானே தீர வேண்டும்? “என்னங்க இதைத் திறந்து குடுங்க’ என்று மூடியைத் திறக்க முடியாதது போல் பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழுவது இயல்புதானே? துருப்பிடித்த மூடியைத்திருகி, கையெல்லாம் சிவந்திருந்தாலும் தன் ஆண்மை வெளிப்பட ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததற்காக ஒரு ஆண் பெண்ணிற்கு நன்றி செலத்துகிறான். அடிமையாகிறான். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது இப்படித்தான் தூண்டி விடுபவள் பெண். தூண்டப்படுவது ஆண். செயல்பட வைப்பவள் பெண். செயலைச் செய்வத ஆண். இதைத்தான் நாகரீகமாக ‘செயலுக்கு உள்ளாவது’ என்கிறார்கள். செயல்படாமல் இருப்பது என்ற அர்த்தத்தில் அல்ல.ஹிந்துஸ்தான் லீவர் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தன் சோப்புப்
பொருட்களை இந்தியாவில் ‘விற்பனை செய்யத் திட்டமிட்டபோது ஒரு சர்வே நடத்தியது. Who is the decision maker தீர்மானம் செய்வது யார்? ஆணா, பெண்ணா? என்பதுதான் கேள்வி.ஒவ்வொரு வீடாகப் புகுந்து இதே கேள்வியைக் கேட்டார்கள். ‘உங்க, வீட்டில யாருங்க ‘தீர்மானம் பண்றது?’
‘எங்க வீட்டில எல்லாமே அவருதாங்க.”
வந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆஹா, என்ன ஒரு அடக்கம்! பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியாவை இதனால்தான் தாய்நாடு, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து அந்த அதிகாரிகள் எதற்கும் கேட்டுப் பார்க்கலாமே என்று ஆண்களிடம் அதே கேள்வியைக் கேட்டார்கள்.
‘தீர்மானம் எடுக்கறதெல்லாம் நான்தாங்க. ஆனா, அவ என்ன தீர்மானம் எடுக்கச் சொல்றாளோ அதைதாங்க நான் செய்வேன்.’
இது ஒரு நகைச்சுவைப் போலிருந்தாலும், இதுதான் உண்மை. செயல்படுவது ஆண். செயல்பட வைப்பது பெண்..
இன்னும் சில ஆண்கள் கொஞ்சம் கௌரமாய் சொல்வார்கள். “முக்கியமான விஷயங்களைப் பத்தி நான் யோசிப்பேன். தேவையில்லாத சாதாரண விஷயங்களை அவள் தீர்மானிப்பாள்”.
“அப்படியா…?”
“ஆம்.. நான் எந்த வேலைக்குப் போக வேண்டும். எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும், வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் போன்ற சாதாரண விஷயங்களையெல்லாம் அவள் தீர்மானிப்பாள். ஜார்ஜ் புஷ் செய்வது சரியா? இந்திய அரசியல் எப்போது மாறும்? போன்ற தீவிரமான விஷயங்களைப் பற்றி நான்தான் யோசிப்பேன். விளையாட்டல்ல. நிறைய ஆண்களின் நிலை இதுதான்.கிரகிப்பது பெண் எல்லாவற்றையும் கிரகித்து உறிஞ்சி விடுவது பெண்ணின் குணம். ஆண் என்ன தப்பு செய்தாலும், பொய் சொன்னாலும் உடனே பெண் புரிந்து கொண்டு விடுவாள் என்றும் இதற்கு அர்த்தம் சொல்லலாம்.
சாணம், குப்பை ன்று தப்போட்டாலும் அதை மூடி மறைத்து, கிரகித்து எருவாக மாற்றக்கூடிய குணம் என்ற பொருளிலும் கூறலாம்.இந்த “யின் – யாங்” சின்னத்தை கூர்ந்து கவனித்தால், இன்னொரு உண்மை புலப்படும். இருட்டு, வெளிச்சம், இரண்டும் பின்னப பிணைந்து காணப்படுகிறது. இருட்டில் ஒரு சிறிய வட்டமாக வெளிச்சம் காணப்படுகிறது. வெளிச்சத்தில் ஒரு சிறிய வட்டமாக இருள் காணப்படுகிறது.
ஆம், இருட்டில் வெளிச்சத்தின் விதை இருக்கிறது. ஒரு பெண்ணில், ஆணின் விதை இருக்கிறது. ஒரு ஆணில், பெண்ணின் விதை இருக்கிறது. எவ்வளவு தோல்வியிலும் ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷத்திலும் அட்டா இன்னும் கிடைச்சிருக்கலாமே என்ற வருத்தம் இருக்கிறது. ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷம்தான் ஒருவனைத் தொடர்ந்து ஊக்குவித்து மேலும் மேலும் செயல்பட வைக்கிறது. அடடா இன்னும் கிடைச்சிருக்கலாமே என்ற வருத்தம்தான் சந்தோஷத்தால் திமிராகி மேற்கொண்டு எதையும் செய்யாமல் இருத்தலைத் தவிர்த்து முடங்கிப் போகாமல் தொடர்ந்து மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வைக்கிறது.
தோல்வியில் வெற்றியின் விதை இருக்கிறது. வெற்றியில் தோல்வியின் விதை இருக்கிறது. வெற்றியும், தோல்வியும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. ஒன்றில்லாமல் வேறில்லை. ‘நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை’ என்று ஆணும் பெண்ணும் பின்னிப் பிணைந்து வாழ்வதற்கும் காரணம் இந்த விதைதான். இந்த கொக்கிதான் (The Hook) பொம்மலாட்டக் கயிறு போன்றது. இது பொம்மைகள் ஆடலாம், பாடலாம். ஆனால் பொம்மை ஆடுவதற்குக் காரணம் அதற்குப் பின்னாலிருந்து இயக்கும் சூத்ரதாரி.ஷாஜஹானைப் போல் ஒரு ஆண் ஒரு பெரிய அழகிய உன்னதமான தாஜ்மஹாலையே கட்டிவிடலாம். ஆனால், அந்த தாஜ்மகஹாலை உற்றுக் கவனியுங்கள். அந்த அழகிய வெண்மையான கற்களை ஊடுருவிப் பாருங்கள். கயிறுகள் தெரியும். அந்தக் கயிறுகள் மும்தாஜின் கையில் போய் முடிவடைகின்றன.
நன்றி: விநோத் நியூஸ்