பகுத்தறிவுக்கு வேலை இல்லை! .
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தான். அவற்றை அவர்கள் முழுமையாக நிறைவேற்றினார்கள். மனிதர்களுக்கு ஒரு தலைவராக உம்மை ஆக்குகிறேன் என்று அவன் கூறினான். என்னுடைய சந்ததியிலிருந்தும் என்று அவர் கேட்டார். எனது வாக்குறுதி அநியாயக்காரர்களைச் சேராது அவன் கூறினான். குர்ஆனில் நபி இபுறாகிம் அலைஹிஸ்ஸலாம் பெயர் குறிப்பிட்ட அதன் தொடர்ச்சியாக 54 வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் தத்துவம் உரைப்பது, அல்லாஹ் எதைச் சொன்னாலும் சிரம் மேல் கொண்டு செய்து முடிக்கணும். கஷ்டத்தை வெளிக்கூறவோ, காட்டவோ கூடாது. தான் இல்லாமல் எதுவும் நடக்காது. தாம்தான் மனைவி குழந்தைகளைக் காப்பாற்றுகிறோம் எண்ணமும் தவறானது. மனிதப் படைப்பில் ‘‘கைர உம்மத்’’ சிறந்த சமூகமாக உங்களைப் படைத்திருக்கிறேன். அல்லாஹ் கூறும் போது எந்நேரமும் சம்பாதித்தல், கார், வீடு, மனை, நகை வாங்கிக் குவித்தல், குடும்பத்தோடு பொழுது போக்குதல் வாழ்வை அல்லாஹ் ரசிக்கமாட்டான். ஒரு நாள் கைவிடுவான். அதாள பாதளத்தில் விழும்போது ஒருவரும் தூக்க முன்வரமாட்டார்கள். வாழ்வு இப்படியே தொடரும் எனக் கருதிக் கொள்வதும் தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதல்.
வயது கரைகிறது. மௌத் நெருங்குகிறது. குறை காலத்தையாவது சமூக முன்னேற்றத்துக்கு செலவிடத் தயாராக வேண்டும். அல்லாஹ் சொன்னவுடன் நபி இபுறாகீம் நடு பாலைவனத்தில் மனைவி, குழந்தையை தனியே விட்டு கிளம்பிச் சென்றார்கள். நடுக்காட்டில் மனைவியும், குழந்தையும் என்ன செய்வார்கள்-? உணவுக்கு எங்கு செல்வார்கள் எதிர்க்கேள்வி கேட்கவில்லை. நபித் துணைவியாரும் கூப்பாடு போடவில்லை. தங்களுக்கென்று சுயவிருப்பம் எதுவுமில்லை. அல்லாஹ்வின் விருப்பமே தம் விருப்பம் அப்படியே ஏற்றனர்.
முஸ்லிமாக வாழ விரும்புவோர் நபி இபுறாகிம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி நடக்க முயற்சிக்கணும். தந்தையும், மகனும் கல்லும் மண்ணும் தலையில் சுமந்து தமது கரங்களால் காபத்துல்லாவைக் கட்டினர். பாலைவனத்தை சோலை வனமாக்கினர். கபாத்துல்லா திரைச் சீலை பிடித்து இன்று துஆ கேட்கப்படுகிறது. திரைச் சீலைக்குப் பின்புலத்தியாகம் உணரப்படவில்லை.
5,000 வருடத்திற்கு முந்தைய நிகழ்வுகள் அதிசயம், அற்புதம் எனக்கூறி முஸ்லிம் சமூகம் விலக்கி வைத்து விதி விலக்காகப் பார்க்கிறது. தப்பியோடுகிறது. செய்கையில் தன்னை இபுறாகிம் நபியாக, தமது மகனை இஸ்மாயில் நபியாக, மனைவியை அன்னை ஹாஜராவாக மடைமாற்ற, உருமாற்றத் தயாரில்லை. பகுத்தறிவு பேசி இஸ்லாத்தை விஞ்ஞானப்பூர்வமாகக் கூறுகிறோம் எனச் சொல்ல ஆரம்பித்து இடத்தை காலி செய்து ஓடி மறைந்தது மிச்சம்.
இங்கு ஈமானைவிட எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் செய்தி தன்னையாரும் முரட்டு சாயபு, முட்டாள் முஸ்லிம் என்று கூறக்கூடாது அதனால் இஸ்லாத்தை பகுத்தறிவு பூர்வமாக அலச ஆரம்பித்தனர். நோன்பு வைத்தால் கொழுப்பு குறையும். ஒளு செய்தால் கண் சுத்தம் ஆகும். கண்டுபிடிக்கின்றனர். அபுஹ§ரைரா கொலைப் பட்டினி கிடந்தார். தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்யலாம். அஸர் 4 ரக்அத். மஹ்ரிபு 3 ரக்அத் விளக்கம் கூறமுடியாது.
பகுத்தறிவுக்கு இஸ்லாத்தில் வேலையில்லை. பகுத்தறிவு பேசினால் அவர் முஸ்லிமல்ல. அல்லாஹ் எதைச் சொல்லியிருந்தாலும் செய்யணும். அப்படியே நம்பணும். அப்படி நம்பியதால் அல்லாஹ் இபுறாகீம் நபியை தனது நண்பர் என்றான். முஸ்லிம் சமூகத்தில் சில பேராவது சில நாட்களுக்கு குடும்பத்தை விலக்கி வைத்து சமூகத்திற்கு வழிகாட்டி உயர்த்த வரணும். அல்லாஹ் வழங்கிய பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு அனைத்திலிமிருந்து வழங்கணும். ஒவ்வொரு சமூகமும் அறிவுத்தளத்தில் 10 பேரை இறக்கிவிட்டுக் கொண்டேயிருக்கிறது. அவர்கள் தமது சமூகத்துக்காக போராடுகின்றனர்.அந்த நிலை முஸ்லிம் சமூகத்தில் இல்லை. ஏற்படவேண்டும் என்பதே எண்ணம்.
– ஜெ.ஜெ
மே 2011 முஸ்லிம் முரசு
source: http://jahangeer.in/?paged=2