11. அன்புச்சகோதரிகளே!
நீங்கள் எதையாவது பேசினால் சிந்தித்து பேசுங்கள்! மேலும் நீங்கள் பேசக்கூடிய வார்த்தை நன்மையானதாகவும், அல்லாஹ்வுடைய கோபத்தின்பால் இட்டுச்செல்லக்கூடிய தீமையான விடயங்களிலிருந்து தூரமானதாகவும், இருப்பது அவசியமாகும். எனவே நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு மகத்தான நன்மை உள்ளது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஒரு வார்த்தை இறைதிருப்தியில் எவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்றுத்தரும் என்பதை அறியாமலேயே ஒரு அடியான் அவ்வார்த்தையை பேசுகின்றான். இவ்வார்த்தையின் காரணமாக அல்லாஹ் அவனது அந்தஸ்தை உயர்த்துகின்றான். மேலும் ஒரு வார்த்தையால் எந்தளவு அதிருப்தி ஏற்படும் என அறியாமலேயே பேசுகின்றான். அவ்வார்த்தையின் காரணமாக அவன் நரகத்தை அடைகின்றான். (புகாரி)
நிச்சயமாக அடியான் சிலநேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களின் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகின்றான். (எனினும்) அல்லாஹ் அதற்காக அவனது அந்த ஸ்த்துக்களை உயர்த்துகின்றான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசுகின்றான். அதனால் அவன் நரகில் வீழ்கின்றான். (புகாரி)
நான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் என்னை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகை விட்டுத் தூரமாக்கும் ஒரு அமலை எனக்கு சொல்லித்தாருங்கள் என்றேன். அதற்கவர்கள் நீர் மாபெரும் விஷயத்தை கேட்டுவிட்டீர். எவருக்கு அதை அல்லாஹ் இலேசாக்கி வைக்கின்றானோ அவருக்கு அது இலகுவாகும். அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு எப்பொருளையும் இணையாக்காதிருப்பாயாக!, தொழுகையை நிலைநாட்டுவீராக! ஸகாத்தை வழங்குவீராக! ரமழானில் நோன்பு நோற்பீராக! இறையில்லமான கஃபாவை ஹஜ் செய்வீராக! எனக்கூறி,
பின்னர் கூறினார்கள: நன்மைகளின் வாயில்களை உங்களுக்கு நான் அறிவித்து தரட்டுமா? நோன்பு பாவங்களை தடுக்கும் கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பதுபோல் அது பாவத்தை போக்கிவிடும். நடு இரவில் தஹஜ்ஜத் தொழுவதுமாகும். பின்னர் ததஜா பாஜினூபுஹும் என்று தொடங்கும் வசனத்திலிருந்து யஃமலூன் வரை ஓதினார்கள். பின்னர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருமங்களில் தலையானதையும், அதன் தூணையும், அதன் உச்சியையும் உமக்கு நாம் அறிவித்து தரட்டுமா? எனக்கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன்.
அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கருமங்களில் தலையானது இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதன் உச்சி ஜிஹாதாகும். பின்னர் கூறினார்கள்: இவை அனைத்தையும் (ஒன்று சேர்த்துக் கொள்ளக்கூடிய) உறுதியான ஒரு விஷயத்தை உமக்கு அறிவிக்கட்டுமா? அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்று கூறினேன். அப்போது தங்கள் நாவை பிடித்து இதனை தடுத்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். நாங்கள் பேசுவதைக் கொண்டும் பிடிக்கப்படுவோமா? எனக்கேட்டேன். அதற்கவர்கள் என்தாய் உன்னை இழக்கட்டுமாக! மக்களை முகங்குப்புற நரகில் வீழ்த்துவது அவர்களின் நாவின் விபரீதமாகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி)
12. அன்புச்சகோதரிகளே!
உங்களது நாவு அல்லாஹ் உனக்களித்த மாபெரும் அருட்கொடையாகும். நன்மையை ஏவி, தீமையை தடுத்தல், நன்மையின்பால் மக்களை அழைத்தல் போன்ற நல்ல விஷயங்களுக்காக அதனை பயன்படுத்திக்கொள்!
அல்லாஹ் கூறுகின்றான்:
தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்துவதுபற்றி அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அந்நிஸா- 4 : 114)
13. அன்புச்சகோதரிகளே!
கல்வியை கற்றுக்கொள்வது சிறப்பான கண்ணியமான பாதையாகும். ஷிபா பிந்த் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருக்கும்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் ருகையாவிற்கு எழுதுவதற்கு கற்றுக் கொடுக்கவில்லையா? எனக்கேட்டார்கள். (அஹ்மத்)
14. அன்புச்சகோதரிகளே!
கற்றுக்கொள்வது என்பது சான்றிதழ்களை பெறுவதும், பதவிகளை அடைவதும், தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதென்பதுமல்ல. மாறாக மார்க்க விஷயங்களை அறிவதும் அதிலிருந்து சட்டங்களை பெறுவதும், திருக்குர்ஆனை அழகாக, திருத்தமாக ஓதிப்பழகுவதுமாகும். எதுவரையெனில் தனது நாயனை பேணுதலாக வணங்கும் வரையிலாகும். மேலும் கல்வியை கற்றுக்கொள்வதற்கான நோக்கங்கள் சீரான பயிற்சிக்கான வழிகளை பெற்றுக் கொள்வதும், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும், அவர்களது அருமை தோழர்கள், மற்றும் இச்சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்த முன்வாழ்ந்த ஸஹாபாக்கள் போன்றவர்களுடைய வாழ்க்கையை வாழ்வில் முன்மாதிரியாக கொள்வதுமாகும். இதனால் பெண்கள் மகழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழமுடியும்.
15. அன்பின் சகோதரிகளே!
உங்களின் சகோதரிகளில் எவரையாவது பரிகாசம் செய்தல், எள்ளி நகையாடுதல், இழிவாக கருதுதல் போன்ற தீய குணங்களைவிட்டும் உன்னை துஸரமாக்கிக்கொள்! கல்வியை கற்றுக்கொள்வதில் உன்னை உயர்வாகவும், மற்றவர்களை தாழ்வாகவும் எண்ணிவிடாதே! கல்வியை தேடும்போது பணிவாக நடந்துகொண்டால் கல்விப்படிகளில் நீ மேலும் முன்னேறுவாய். இவ்வாறில்லாமல் நீ தற்பெருமை கொள்வாயாயின் உனது கல்வி உனக்கு அழிவைத்தான் தேடித்தரும்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அறிஞர்களிடம் தர்க்கம் செய்வதற்காகவோ, மடையர்களிடம் பெருமை அடிப்பதற்காகவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்புவதற்காகவோ யாரேனும் கல்வி கற்றால் அவரை அல்லாஹ் நரகில் நுழைவிப்பான். (திர்மிதி)
16. அன்பின் சகோதரிகளே!
இசையுடன் கலந்த பாடல்கள், தீய பேச்சுக்கள் போன்றவற்றை விட்டும் உனது செவியை துய்மைப்படுத்திக்கொள்!
17. அன்பின் சகோதரிகளே!
நீங்கள் எல்லோரும் இஸ்லாமிய சகோதரிகள். எனவே உங்களின் ஆடை மார்க்கம் அனுமதித்த முறையில் மேனி வெளியே தெரியாதளவிற்கு தடிப்பமானதாக இருப்பது அவசியமாகும்.
18. அன்பின் சகோதரிகளே!
பெண்கள் வெளியில் செல்லும்போதும், வீடு திரும்பும் போதும், வாகனத்தில் ஏறும்போதும், அதிலிருந்து வெளியேறும் போதும் மணிக்கட்டு, முகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய ஆடைகளை அணியவேண்டும்.
19. அன்புச்சகோதரிகளே!
ஆண்கள், பெண்கள் கலந்திருக்கக்கூடிய சபைகளுக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருந்துகொள்! மேலும் நல்ல விஷயங்கள், மற்றும் மார்க்க சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய சபைகளில் கலந்துகொள்! அல்லாஹ் உன்னை பேணிப் பாதுகாப்பானாக!
20. அன்புச்சகோதரிகளே!
நீங்கள் தனிமையில் அல்லது உனது தோழிகளுடன் இருக்கும்போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொள்! இதன்மூலம் அல்லாஹ்விடத்தில் நீங்கள் நன்மையையும், நற்வுலியையும் பெற்றுக்கொள்வீர்கள்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வை நினைவுகூறப்படாத சபையில் எவர் அமர்கின்றாரோ அவருக்கு (மறுமைநாளில்) அல்லாஹ்விடம் கைசேதமுள்ளது. மேலும் எவர் அல்லாஹ்வை நினைவு கூறாது சாய்ந்திருக்கக்கூடிய சபையில் சாய்ந்திருக்கின்றாரோ அவருக்கும் அல்லாஹ்விடத்தில் கைசேதமுள்ளது. (திர்மிதி)
நீங்கள் சபையை விட்டு வெளியேறும்போது ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக என்று கூறுவதற்கு மறந்து விடாதே! (திர்மிதி)
காரணம்: அச்சபையில் நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான்.
இன்ஷா அல்லாஹ் அறிவுரைகள் தொடரும்