Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உண்டுப் புசித்து உடுத்திக் கிழித்ததுப் போக…

Posted on August 23, 2011 by admin

உண்டுப் புசித்து உடுத்திக் கிழித்ததுப் போக…

இவ்வுலகில் பொருளீட்டுபவர் ஒவ்வொரு வருடைய சிந்தனையிலும் இது என் முயற்சியால் ஈட்டியது அதனால் இது எனக்குரியது என்றேத் தோன்றும்.

ஒரு சொத்தை வாங்கிப் பத்திரம் முடித்தப்பின் அதை எவ்வாறு வாங்கினேன் என்பதை விவரிக்கும் பொழுதும், நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தப் பிறகு இன்டர்வியூவில் எப்படி திறமையாக பதிலளித்தேன் என்பதை விவரிக்கும் பொழுதும், மக்கள் அதிகம் கூடும் பிரபலமான மால் ஒன்றில் கடைப் பிடித்தப் பின் எப்படி அந்த மாலில் கடை பிடித்தேன் என்பதை விவரிக்கும் பொழுதும் தனது திறமையை விலாவாரியாக வர்ணிப்பார் தனது திறமையினால் மட்டுமே அதை அடைந்து கொண்டதாக கருதுவார்.

ஆனால் மேற்காணும் எதாவது ஒன்றில் ஃபைலியர் ஆகி விட்டால் நானும் நடையாய் நடந்து கால் நரம்பெல்லாம் தேய்ந்து விட்டது, பேச வேண்டிய அளவுப் பேசியதில் தாடை எலும்பெல்லாம் வலி கண்டு விட்டது ஆனால் என்னவோத் தெரிய வில்லை ஒர்க் அவுட் ஆகவில்லை என்றுப் புலம்புவார்.

அந்த என்னவோத் தெரியவிலலை என்பது தான் அல்லாஹ்வின் நாட்டமாகும். அல்லாஹ் யாருக்கு அந்த சொத்தை நாடினானோ, யாருக்கு அந்த கம்பெனியில் வேலையை நாடினானோ, யாருக்கு அந்த மாலில் கடையை நாடினானோ அவருக்குத்தான் அது சரியாகப் போய்சேரும்.

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 7:30, இன்னும் அல்குர்ஆன் 2:61, 3:27, 3:73, 5:64, 5:114, 6:14, 24:38 போன்ற வசனங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலும் காணலாம்.

அல்லாஹ் யாருக்கு அதை நாடினானோ அவரிடம் அது உனக்கு மட்டும் உரியதல்ல என்னுடையது என்று ஒதுக்கிக் கொள்ளாதே அதிலிருந்து நீ உண்பதற்கும், உடுத்துவதற்கும் தேவையானதை எடுத்துக்கொண்டு அதிலிருந்து ஏழைகளுக்கு தர்மம் செய்து உதவு என்று இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவன் தனது தூதர் மூலம் கூறுகிறான்.

‘ஆதமின் மகன் (மனிதன்) எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். 5665 அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக இறைவன் எப்பொழுது எதை உத்தரவிடுவான் அதை இப்பொழுதே செய்து முடிக்க வேண்டும் என்று ராணுவத்தை விட துரிதமாக தயார் நிலையில் அன்றைய மக்கள் காத்திருப்பார்கள். தாங்கள் உண்ணுவது போலவே, தாங்கள் உடுத்துவது போலவே தங்களின் கீழ் நிலையிலுள்ள மக்களை உண்ணச்செய்து உடுத்தச்செய்து மேற்காணும் இறை உத்தரவை செய்து மகிழ்ந்தனர்.

மேற்காணும் நபிமொழியின் பிரகாரம் இன்று உலகில் எவரிடமெல்லாம் உண்டுப் புசித்து, உடுத்திக் கிழித்ததுப் போக தர்மம் செய்யாமல் பதுக்கிக்கொண்டனரோ அதில் ஏழைகளின் பங்கு இருக்கிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.

இதே நிலையில் அவர மரணித்து விட்டால் அவரது மறுமை நிலை பரிதாபத்திற்குரியதாகும். காரணம் கியாமத் நாள் வருவதற்கு முன் நான் கொடுத்ததிலிருந்து தர்மம் செய்து விடுங்கள் என்று இறைவன் தன் திருமறையில் சொல்லி விட்டதால் அவரால் அங்கு அறவே தப்பிக்க முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிரிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 2:254)

ஏழைகளுக்குப் போய் சேர வேண்டியதை முறையாகக் கொடுக்காமல் வாரிசுகளுக்காக அனைத்ததையும் எவர் விட்டுச் சென்றாரோ அவரை அந்த வாரிசகளால் மறுமையில் காப்பாற்ற முடியாது.

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். (அல்குர்ஆன் 80: 33-36)

விரும்பியதிலிருந்தும் கொடுத்தல்

ஒருமுறை அல்குர்ஆன் 3:92 வது இறைவசனம் இறங்கியதை செவியுற்ற நபித்தோழர் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னலார் அவர்களிடம் ஓடோடி வந்து கீழ்காணுமாறுக் கூறி நற்செயல் புரிந்ததை உலகம் முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றி ஒழுகினால் குறைந்தது குடும்பத்தார் தலையில் துணியைப்போட்டுக்கொண்டு அடுத்த ஊரில் பிச்சை எடுக்கும் அவல நிலையாவது தடுக்கப்பட்டு விடும்.

”நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது” (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் வேதத்தில், ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது’ என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது ‘பைருஹா’ (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் – எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! (அப்படியாயின்) அது (மறுமையில் உங்களுக்கு) லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2758. அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)

தனக்கு விரும்பிய உயர்வான செல்வத்தை விட்டுக் கொடுக்கவோ அல்லது அதிலிருந்து சிறிதையேனும் கொடுக்கவோ மனமில்லாத இன்றைய சமுதாயத்தவர்களுக்கு அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்காணும் இறைதிருப்தியைப் பெறும் நற்செயல் மிகச்சிறந்த நல்லுதாரணமாகும்.

அல்குர்ஆனின் 3:92வது வசனம் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும் அருளப்பட வில்லை, இறைததூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு மட்டும் அருளப்பட வில்லை. அல்குர்ஆனின் 3:92வது வசனம் உலக மாந்தர் அனைவருக்கும் அருளப்பட்டதாகும் 3:92வது வசனத்தை ஓதும் ஒவ்வொருவரும் அந்த வசனம் தனக்கு கூறப்படுவதாக உணர்ந்து அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப்போல நற்செயல் புரிய முன்வர வேண்டும். .

இறையருளால்…

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்பதால் சட்டை சோப்பிலிருந்து எடுக்க எடுக்க குறைவது போல் ஆக்காமல் பறிக்கப் பறிக்க மீண்டும் மீண்டும் காய்க்கும் கனிகளைப் போல் தானியமணிகளைப்போல் ஆக்குகிறான் சர்வ வல்லமைப் பொருந்திய இறைவன்.

இறைச்செய்தி இறங்கும் காலத்தில் வாழ்ந்த மக்கள் தாராளமாகக் கொடுத்து உதவக் கூடியவர்களாக பலர் இருந்தனர் அதனால் அவர்களது செல்வம் பெருகிக் கொண்டே சென்றதேத் தவிரக் குறையவில்லை. அவர்கள் அறியாத வகையில் தன் புறத்திலிருந்து அவர்களின் செல்வத்தை இறைவன் பெருகச் செய்தான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:261)

அல்லாஹ்வின் பாதை என்று மேற்காணும் வசனத்தில் அல்லாஹ் கூறுவது தேவையுடையோருக்கு கொடுத்து உதவுவதுடன் நிருத்திக்கொள்ளாமல் அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் மேலோங்குவதற்காக குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் மக்களை அழைப்பவர்களுக்கு அதற்கான செலவினங்களுக்காகவும் தங்களால் இயன்ற அளவு பொருளதவி செய்ய முன் வர வேண்டும்.

– அதிரை ஃபாரூக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

75 + = 82

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb