Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அழிவு தரும் தெளிவு

Posted on August 20, 2011 by admin

 

 அழிவு தரும் தெளிவு  

மனிதன் எப்போதும் அபாய நேர்வுக்குட்பட்டவன்;. ஆபத்துக்களை எதிர்நோக்கியிருப்பவன். யுத்தங்கள், கலவரங்கள், முதலானவற்றை அவன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இடி, மின்னல், தீ, வெள்ளம், புவி நடுக்கம், எரி மலை, மண்சரிவு, கடல் கெந்தளிப்பு, முதலான இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் நிலையும் அவனுக்கு உருவாவதுண்டு.

கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்களினாலும் மனிதனுக்கு ஆபத்துக்கள் விளைவதுண்டு. பகைமை கொண்டவர்களின் சதிகள், சூழ்ச்சிகள் முதலானவையும் அவனைச் சூழ்ந்துஉள்ளன. இவற்றுக்கு அப்பால் எண்ணிலடங்கா நோய்கள் மனினை குரிவைத்துள்ளன. எல்லா ஆபத்துக்கலிருந்தும் தப்பிப்பிழைக்கும் ஒரு மனிதன் இறுதியில் முதுமை என்ற ஆபத்தை எதிர் கொண்டு மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.

இவ்வாறு ஆபத்துக்கள் நிறைந்த இவ்வுலகில் மனிதன் எப்படி தன்னைக் கப்பாற்றிக் கொள்வது? இக்கேள்விக்கு விடை காண விரும்பாத எவரும் இருக்கமுடியது.

ஒவ்வெரு மனிதனும் தன்னையும் தனது குடுமபத்தையும், சொத்து செல்வம் உட்பட தனது அனைத்து உடைமைகளையும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முழு முயற்சி செய்கிறான். உலகெங்கும் பாதுகாப்பு, பந்தோபஸ்துக்குத்தான் அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கடற்படை, தரைப்படை, விமானப்படை, பொலிஸ்படை, தீயணைப்புப்படை, மெய்ப்பாதுகாலர்கள், முதலுதவி அணிகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவமனைகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், முன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகள், இயந்திரங்கள் என்றும் எங்கும் மனிதர்களை அபாயங்களிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் காப்பதற்கான எற்பாடுகள்தான் எத்தனை? எத்தனை?

மனிதன் செல்மிடமெல்லாம் அதிகம் காண்பது, ‘ஆபத்து’ ‘அபாயம்’ ‘கவனம்’ ‘எச்சரிக்கை’ ‘ஜாக்கிரதை’ ‘நெருங்காதீர்’ ‘நுழைவதுதடை’ ‘உற்பிரவேசிக்க வேண்டம்’ ‘இங்கு நடமாட வேண்டாம்’ முதலான வசனங்களைத் தாங்கிய பலகைகளையும், பதைகளையும்தான்.

ஆயினும் எல்லா தற்காப்பு, முன் எச்சரிக்கை, பாதுகாப்பு. நடவடிக்கைகளையும் மீறி நாளந்தம் மனித உலகில் வேறுபட்ட பெயர்களில் அழிவுகளும் அனர்த்தங்களும் நடந்த வண்ணமே உள்ளன.வெள்ள அனர்த்தம் என்பார்கள்;, மண்சரிவு என்பார்கள், தீ விபத்து என்பார்கள், தொற்று நோய் என்பார்கள், இப்போது சுனாமி என்கிறார்கள். இவற்றை யெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்வதாயின் ‘அழிவு’ எனலாம்.

உண்மையில் இத்தகைய அழிவுகள், ஆபத்துக்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்ககூடிய நம்பகமான ஒரு காவற்ப்படை இருக்கின்றது. அது புலங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு படை. இரவு பகலாக மனிதனைப் பாதுக்க வல்ல மிகவும் சக்திவாய்ந்த ஒரு படை. அதுதான் உலகைப் படைத்து, பரிபாலித்து, இரட்சித்துக் காப்பற்றுகின்ற இறைவனின் படையான வானங்களின (மலக்குகளின்) படையாகும். இப்படையப் பற்றியே அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

”அவனே தன் அடியார்களுக்கு மேல் இருந்து அடக்கி ஆளுகின்றவன். உங்களுக்கு காவலர்க(ளான மலக்குக) ளையும் அவன் அனுபபுகின்றான்” (6:61)’

”நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்” (82:10)

ஸூறா அர்ரஃதின் பின்வரும் வசனத்தைக் கவனியுங்கள்:

”(மனிதர்களில் ஒவ்வொருவருக்கும்) அவருக்கு முன்னும் அவருக்கு பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்)பலர் இருக்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை கொண்டு அவர்களப் பாதுகாக்கின்றனர்” (13:11)

இவ்வசனத்திற்கு இமாம் இப்னு கஸீர் தரும் விளக்கம் கவனத்துக்குரியதாகும்.

”ஒர் அடியானை நோக்கி மாறி மாறி வரும் மலக்குகள் இருக்கின்றனர்.அவரை காவல் புரிய இரவில் ஒரு கூட்டம் வரும். அவர்கள் அவ்வடியானை எல்லா வகையான கெடுதிகள், ஆபத்துக்களிலிந்தும் பாதுகாப்பர். அடியானினால் நல்ல, கெட்ட செயல்களை பதிவு செய்வதற்காகவும் சில மலக்குகள் இரவும், பகலும் மாறி மாறி வருகின்றனர். ஒருவர் வலப்பக்கம் நிற்பர். மற்றவர் இடப்பக்கத்தில் நிற்பர். வலப்பக்கத்தில் நிற்பவர் நன்மைகளை பதிவு செய்வர். இடப்க்கத்தில் உள்ளவர் தீமைகளை பதிவுசெய்வார்;. மேலும் இரு மலக்குகள் அவரை காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பர்.அவர்களில் ஒருவர் முன்னால் இருப்பர், மற்றவர் பின்னால் இருப்பர்;. இவ்வாறு பகலில் நால்வரும் இரவில் நால்வரும் எப்போதும் அடியானோடு இருப்பர். இரண்டு பதிவாளர்கள், இரண்டு காவலர்கள், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைளைக் கொண்டு அவரைப் பாதுகாக்கின்றனர். என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தரும் விளக்கம் வருமாறு:

‘மலக்குகள் முன்னாலும், பின்னாலும் நின்று அவனைக் காக்கின்றனர். அல்லாஹ்வின் நிர்ணயம் (கத்ர்) வந்துவிடும் சந்தர்ப்பத்தில் மட்டும் தூர விலகிச் சென்றுவிடுகின்றனர்.’

முஜஹித் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்:

‘எந்தவோர் அடியானுக்கும் அவனைக் காக்கும் ஒரு மலக்கு நியமிக்கப்பட்டே இருப்பார். அவர் அவ்வடியானை தூக்கத்திலும் விழிப்பிலும் மனிதர்கள், ஜின்கள், விஷஜந்துக்களின் தீங்குகள் அணுகா வண்ணம் பாதுகாப்பார்கள். அம்மனிதனை நாடி எதாவது வந்தாலும் அந்த மலக்கு இதோ உம் பின்னால் இந்த ஆபத்து வருகின்றது எனக் கூறாமல் இருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ்வின் கட்டளைப்படி வருவது மட்டும் அவனைத் தாக்காமல் இருக்காது.’

‘ஒரு முறை ஒரு மனிதர் அலி ரழியால்லாஹூஅன்ஹூ அவர்களிடம் வந்து, ‘எச்சரிக்கையாக இருங்கள் சிலர் உங்களை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.’ என்றனர்;. அதற்கு அன்னார், ‘ஒவ்வொரு மனிதனுடனும் இரு மலக்குகள் இருக்கின்றனர். அல்லாஹ்வின் எற்பாடு சம்பந்தப்பட்டாத விடயங்களில் அம்மனிதனைப் பாதுகாப்பதே அவர்களின் பணியாகும். அல்லாஹ்வின் நிர்ணயம் வந்துவிட்டால் அவர்கள் இருவரும் வழிவிட்டு சென்றுவருகின்றனர். ‘அஜல்’ (மனிதனது வாழ்வு) என்பது பலம் வாய்ந்ததொரு கேடயாகும்’ என்றார்கள்.

இந்த மலக்குகளின் பாதுகாப்பை பெறுவது எப்படி? அதற்கான வழி என்ன? என்ற கேள்வி இப்போது பிறக்கின்றது.

மலக்குகள் துய்மையானவர்கள். அவர்கள் துய்மையானவர்களுடன் உறவு கொள்வார்கள். மலக்குகள் பாவம் செய்யாதவர்கள்;. அவர்கள் பாவங்களில் இடுபாடதவர்களை நேசிப்பர். மலக்குகள் இறைக்கட்டளைகளை அணுவும் பிசகாமல் நிறைவேற்றுபவர்கள். அவர்கள் இறைக்கட்டளையை எற்று, விலக்கலைத் தவிர்த்து நடப்போரையே அணுகுவர். தீமைகள், குற்றசெயல்கள், அநீதிகள் முதலான பாவச்செயல்கள் நடைபெறும் ஷைத்தனியச் சூழலில் அருளை வழங்கும் அருள்மயமான மலக்குகள் இருக்கமாட்டார்கள். எனவே, இத்தகைய சூழலில் இருப்போருக்கு மலக்குகளின் பாதுகாப்புக் கிட்ட வாய்ப்பிருக்காது.

சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து நாட்டின் புறச்சூழல் சுத்தம் செய்யப்படுகின்றது. நாட்டின் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பணி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டின் உடலைக் கட்டியெழுப்புவது போலவே நாட்டின் உத்தமான மனிதர்களும் புனர்நிர்மாணத்திற்குட்படுத்தப்பட வேண்டும். படைத்த இறைவனை நோக்கி மக்கள் மீள வேண்டும். இறைவனது சாபத்திற்கும் கோபத்திறகும் காரணமாக இருக்கின்ற

மது, போதைவஸ்து, விபச்சாரம், விபச்சாரத்தை தூண்டும் ஆபாசப்படங்கள், ஆபாசபாடல்கள், சங்கீதம், விளம்பரம், களியாட்டங்கள், கேளிக்கைகள், ஆடைகள், ஆபரணங்கள் முதலானவற்றை ஒழித்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இறைவனது அருள் இறங்கத் தடையாக அமையும் பகைமை, குரோதம், துவேச மனப்பான்மை முதலான துர்க்குனங்களும் கொலை, கொள்ளை, மோசடி, ஏமாற்று முதலான குற்றச்செயல்களும் நாட்டு மக்கள் மத்தியில் இருந்து நீங்க வழிசெய்தல் வேண்டும். இவ்வாறு வானவர்களின் வருகைக்கான் சூழல் உருவாக்கப்படல் வேண்டும். வீட்டையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப இதுவே மிகச் சரியான வழிமுறையாக அமைய முடியும்.

பதர் யுத்தம் முதலான பல்வேறு சந்தர்ப்பங்களில் மலக்குகள், இறைவிசுவாசிகளுக்கு உதவ பூவுலக்கு இறங்கினர். மக்காவையும், மதீனாவையும் தஜ்ஜாலிருந்து பாதுகக்கவும் விஷேமான மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமும் மேற்குறிப்பிட்ட சூழலை தனிப்பட்ட வாழ்விலும் உருவாக்குவதன் மூலம் மலக்குகளின் உதவியைப் பெறலாம்.

மலக்குகளின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகளையும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லித் தந்துள்ளார்கள். உதாரணமாக, ஒருவர் படுக்கைக்குச் செல்ல முன்னர் ஆயத்துல் குர்ஸியை ஒதினால் அவர்களுக்குப் பின்புறத்திலிருந்து வரும் ஒரு மலக்கு அவரை அடுத்த நாள் காலை வரை காவல் புரிவர். எத்தகைய ஷைத்தானும் அவரை அனுக மாட்டா. (புகாரி)

”ஒருவர் மஃரிபை தொடர்ந்து நான்காம் கலிமாவை பத்துத் தடவை ஓதினால் அடுத்த நாள் கலை வரை அவரை ஷைத்தானிலிருந்து பாதுகாக்கும் ஒரு காவற்படை (அல்லாஹ்வின் பக்கமிருந்து) அனுப்பி வைக்கப்படும்.”

காலை, மாலை உட்பட விஷேட சந்தர்ப்பங்களில் ஓதக்கூடிய அவ்றதுக்களும், துஆக்களும் அல்லாஹ்வின் உதவி மலக்குகள் மூலம் கிட்ட துணைபுரிபவையாகும். உதாரணமாக நபியவர்கள் ஓதிய பின்வரும் துஆவைக் கவனியுங்கள்:

”யா அல்லாஹ்! நான் இடிபாட்டில் (அகப்பட்டு மரணிப்பதில்) இருந்து உன்னிடம் பாதுகப்புத் தேடுகின்றேன். (மலை முதலானவற்றிலிருந்து) விழுவதில் (விழுந்து மரணிப்பதில்) இருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகின்றேன்;;. கவலை, நீரில் மூல்குதல், நெருப்பில் எரிதல், முதுமை ஆகியவற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகப்புத் தேடுகின்றேன். மரண வேளையில் ஷைத்தான் என்னைப் பிடிப்பதிலிருந்தும் பாதுகப்புத் தேடுகின்றேன். (விஷஜந்துக்களால்) தீண்டப்பட்டு நான் மரணத்தைத் தழுவுவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.”

அனர்த்தங்கள், ஆபத்துக்களிருந்து மனிதர்களைக் காப்பாற்றவல்ல ஒரு தெய்வீகப் படை இருப்பது போல ஒரு தெய்வீக ஆயுதமும் உன்டு. அதுவே (துஆ) பிரார்த்தனையாகும். ”பிரார்த்தனை என்பது இறைவிசுவாசியின் ஆயுதாமாகும்” என்ற நபி மொழி இவ்வுன்மையைச் சொல்லி நிற்க்கிறது.

source: http://www.sheikhagar.org/articles/alhadees/36-alivu-tharum-thelivu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

71 + = 73

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb