பூவையருக்கு….
(ஒரு முஸ்லிம் பெண்மணியின் சரித்திரம்)
எனதன்பிற்குரிய முஸ்லிம் சகோதரிகளே!
அவள் இறையச்சமுள்ள ஒரு பெண். நன்மையை விரும்பி அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருப்பவள். அவள் தனது நாவிலிருந்து எந்த தீய வார்த்தையையும் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டாள். அவள் நரகத்தை நனைத்தால் அச்சத்தால்நடுங்கிவிடுவாள். அந்நரகைவிட்டும்தன்னை காப்பாற்ற அவளது இரு கரங்களும் அல்லாஹ்வின்பால் உயர்ந்துவிடும்.
அவள் சுவர்க்கத்தை நினைத்தால் அதில் விருப்பம் ஏற்பட்டுவிடும். அந்த இன்பம் நிறைந்த சுவர்க்கத்தில் தானும் ஒருவளாக ஆகிவிடுவதற்காக பிரார்த்தனை செய்வாள். அவள் மனிதர்களோடு நல்லமுறையில் பழககக்கூடியவளாக இருந்தாள். அவள் மனிதர்களை விரும்புவாள். மனிதர்களும் அவளுடன் அவ்வாறே பழகக்கூடியவர்களாக இருந்தனர்.
இச்சிறந்த பண்புகளைக்கொண்ட இப்பெண்ணுக்கு திடீரென ஒருநாள் தனது காலில் கடுமையான நோவை உணர்ந்தாள். அதற்காக எண்ணெய் மற்றும் அதுபோன்ற மருந்துகளை பயன்படுத்தினாள். எனினும் நோவு அதிகரித்துக் கொண்டே சென்றது. பல வைத்தியசாலைகளுக்கு சென்றும் நோயை குணப்படுத்த முடியவில்லை.
பின்பு தனது கணவருடன் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனுக்குச் சென்று அங்குள்ள உயர்தரமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குப்பின் இரத்தத்தில் மாற்றம் இருப்பதாக வைத்தியர்கள் கண்டு பிடித்து அதற்கான அடிப்படைக்காரணம் என்ன வென்பதை ஆராய்ந்த போது அவளுடைய கால் புற்று நோயால் தாக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்கள். அந்நோய் உடலின் எல்லா பாகங்களிலும் பரவாமல் இருப்பதற்காக காலில் பெரும்பகுதி முழுமையாக நீக்கப்படவேண்டுமென தீர்மானித்தனர்.
சத்திர சிகிச்சை அறையில் அப்பெண்மணி அல்லாஹ்வின் விதியை ஏற்றுக்கொண்டு, அவளது நாவு அல்லாஹ்வை ஞாபகப்படுத்தி உள்ளச்சத்துடன் அவனிடம் கெஞ்சி பிரார்த்தித்துக் கொண்டிருந்தது.
இதோ வைத்தியர்கள் வருகின்றனர். தீர்மானித்தபடி காலை களட்டுவதற்கு ஆயத்தமாகின்றனர். இதோ! ஆங்கோர் அதிசயம்! அல்லாஹ்வின் அருள் அங்கு விரைகின்றது. காலை களட்டுவதற்காக பயன்படுத்துவதற்காக எடுத்த கருவி திடீரென உடைகின்றது. வைத்தியர்கள் அதிர்ச்சியடைகின்றனர். மீண்டும் புதிய கருவியை எடுக்கின்றார்கள். அதுவும் உடைகின்றது. ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம்! இது அந்த வைத்திய சாலை வரலாற்றில் நடந்த முதல் நிகழ்வாகும். வைத்தியர்களின் முகங்களில் பதட்டம் தென்படவே அவர்களில் பெரியவர் அவர்களை அழைத்து சற்று தூரமாகி காலை களட்டாமல் நோவு உள்ள இடத்தில் மாத்திரம் சத்திர சிகிச்சை செய்வதென முடிவு செய்கின்றனர்.
சத்திர சிகரிச்சை செய்யும்போது அங்கும் ஓர் அதிசயம்! அதாவது காலினுள் துர்நாற்றமுள்ள சிறிய பஞ்சை வைத்தியர்கள் நிதர்சனமாக காண்கின்றனர். சிறிய சத்திர சிகிச்சையின் பின் அவ்விடத்தை சுத்தம் செய்து அவர்களின் வேலையை முடித்துக் கொண்டனர். அப்பெண்மணி பூரணமாக குணமடைகின்றாள். அதன்பின் அப்பெண்மணி எவ்வித நோவையும் உணரவில்லை. ஆச்சரியம் நீங்காத நிலையிலிருக்கும் அவ்வைத்தியர்கள் அப்பெண்மணியின் கணவரை அழைத்து அவளது கணவரிடம் உங்கள் மனைவிக்கு ஏற்கெனவே ஏதாவது சத்திர சிகிச்சை குறிப்பிட்ட இடத்தில் நடந்ததா? எனக்கேட்டனர். அதற்கு அவர் நீண்டநாட்களுக்கு முன் ஒரு சிறிய வீதி விபத்திற்குள்ளாகி அவ்விடத்தில் பெரிய காயம் ஏற்பட்டது என்று கூறினார். இதனை அறிந்த அவ்வைத்தியர்கள் நிச்சயமாக இது இறைவனுடைய விஷேச கருணை என ஒருமித்துக் கூறினர்.
அல்லாஹ்வின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்த அப்பெண்மணி சந்தோஷம் நிறைந்தவளாகவும், அல்லாஹ்வை புகழ்தவளாகவும் (தன் கணவருடன் நாடு) திரும்பினாள்
என் இனிய இஸ்லாமிய சகோதரிகளே!
இறையச்சமுள்ள இப்பெண்மணியின் சம்பவம் ஒரு முன்மாதிரியாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை பற்றிப்பிடித்து ஏனையவர்களின் திருப்தியைவிட அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் நாடக்கூடிய அவனது நேசர்களுக்குரிய மட்டில்லா நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
அவர்களின் உள்ளங்கள் அவனது நேசத்தால் நிறைந்திருக்கும். அதனால் அல்லாஹ்வையே அவர்கள் இடைவிடாது ஞபகப்படுத்திக் கொண்டிருப்பர். இறைநினைவு அவர்களது இதய கீதமாகிவிடும். அவர்களின் நாவு அவனை துதிப்பதிலிருந்து சோர்வடையாது. முற்றாக அதுவே அவர்கள் இன்பம் காணுவார்கள். அவனுடைய கட்டளைகளை ஆசையுடன் வரவேற்பார்கள். அவனது சட்டதிட்டங்களை மிகவும் பிரியத்துடன் நிறைவேற்றுவார்கள். இவர்களை அல்லாஹ் என்றும் கைவிடுவதில்லை. எனினும் இவர்களுக்கு அவன் உதவியையும், பாதுகாப்பையும் வழங்குகின்றான். இவர்களுக்கு ஏற்படுகின்ற தீங்குகளை அவனது வல்லமையினால் தடுத்துவிடுகின்றான். மேலும் அவர்களுக்கு அவனது பொருத்தத்தை அருளி அவனது சுவர்க்கத்தையும் அருளுகின்றான்.
நேசத்திற்குரிய என் இனிய முஸ்லிம் சகோதரியே!
இவ்வுலக வாழ்வில் மனிதன் தன் உடல் பலத்தினாலும், அழிந்துவிடும் செல்வத்தினாலும் அகம்பாவம் கொண்டு தன்னை மனிதர்களிளெல்லாம் மிகவும் பலசாலியாகவும், துணிவுள்ளவனாகவும், பிறரிடம் தேவையற்றவனாகவும், தானே பெரிய கொடை வள்ளளாகவும் எண்ணிக் கொண்டிருக்கின்றான். எனினும் கால ஓட்டத்தில் சிக்குண்டு அவன் செல்வம் குறைந்து, அதிகாரம் நீங்கி, மரியாதை இழந்து, உடல் நலம் குன்றி, கஸ்டம் ஏற்படுகின்றபோது சிறு குழந்தை தனது தந்தையை தேடுவதுபோல் அவன் மனிதனின் உதவியை தேடி, அவர்களது அன்பை பெற நாடுகின்றான்.
நிச்சயமாக மனிதன் அல்லாஹ்வின்பால் சாராமல், அவன் பக்கம் சேராமல் அவன்பால் தங்கசமடையாமல் மனிதனாக முடியாது. மிருகமாகவே வாழ்கின்றான். தன்னுடைய மனோ இச்சையை பின்பற்றி மனம்போன போக்கில் வாழ்கின்றான். ஆனால் உண்மையான ஒரு முஸ்லிம் இதற்கு மாற்றமாக உயர்வான மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டு தன் காரியங்களை முன்னெடுத்துச் செல்கின்றான். இதனால் மனிதர்களுக்கு நன்மையை விரும்புகின்றான், தீமையை வெறுக்கின்றான், இல்லார்க்கு இரங்குவதில் முந்திக்கொள்கின்றான், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிபுரிவதற்கு தன்னையே அற்பணிக்கின்றான்.
நேசமுள்ள என் இனிய சகோதரியே!
அல்லாஹ்வுடன் தனது உள்ளத்தை தொடர்புபடுத்தி அவனுடைய கட்டளையை தனது வாழ்க்கையில் நறைமுறைப் படுத்துவதுடன், அவனது கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிமான ஆண், பெண் இருவருக்கும் கிடைக்கின்ற சிறப்பம்சம் என்னவெனில் உளச்சாந்தியும், மன நிம்மதியுமாகும். எச்சந்தர்ப்பத்திலும் அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாகவே இருப்பர். ஏதேனும் அவர்களுக்கு நன்மை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மதிமயங்கி விட மாட்டார்கள். அவர்கள் எதையேனும் இழந்துவிட்டால்அதற்காக அவர்கள் கலங்கவும் மாட்டார்கள். சில நேரங்க ளில் நலவிற்குப்பின் இழப்பு வரலாம். சிலவேளை இழப்பிற்குப்பின் நலவு வரலாம் என்று தங்களது மனதை தேற்றிக்கொள்வார்கள். இதைத்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம். ஆனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம். ஆனால் அது உங்களுக்கு தீமையாக இருக்கும். இவற்றையெல்லாம் அல்லாஹ் அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள். (அல் பகறா- 2 : 216)
இவ்வுலகத்தின் ஆசாபாசங்கள் அவர்களை மயக்கிவிடாது. ஆவர்கள் உலக இன்பங்களில் அளவு கடந்து மூழ்கிவிட மாட்டார்கள். அளவோடு நின்றுகொள்வார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் உனக்கு கொடுத்த செல்வத்திலிருந்து மறுமை வீட்டை தேடிக்கொள்! எனினும் இவ்வுலகத்தில் உனக்கு விதித்திருப்பதை மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதை செய்திருப்பதை போல் நீயும் நல்லதை செய்! பூமியில் குழப்பம் செய்யவிரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல் கஸஸ்- 28 : 77)
நிச்சயமாக இவ்வுலகம் நிரந்தரமற்றது, அழியக் கூடியது. அதில் கஸ்டங்களும், நஸ்டங்களும் நிறைந்திருக்கின்றது. இதில் ஒன்றை மனிதன் இழப்பதனால் துக்கமடையவோ, சந்தோஷமடையவோ தேவையில்லை. ஏனெனில் இவ்வுலகம் மறுவுலகத்தோடு ஒப்பிட முடியாத ஒன்றாக இருக்கின்றது. காரணம்: மறுவுலக வாழ்வு நிரந்தரமானதும், சுபீட்சமானதுமாகும். அதில் எந்த கண்களும் கண்டிராத, எந்த காதுகளும் கேட்டிராத, எந்த இதயத்தாலும் உணரமுடியாத இன்பங்கள், உண்மையான இறையச்சமுள்ள விசுவாசிகளான ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிரந்தரமாக உள்ளது என்று அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.
என் பாசத்திற்குரிய சகோதரியே!
இவ்வுலக வாழ்வு கஷ்ட நஷ்டங்களிலிருந்து தெளிந்து எவ்வித பிரச்சினையும் அற்றதாக உள்ளது. ஒருவாதத்திற்கு வைத்துக்கொள்வோம் ஆனால் மரணம் ஒன்று இருக்கின்றதல்லவா அதனை ஞாபகப்படுத்துவது ஒரு சிரமம். அது இவ்வுலக இன்பத்தை கசப்பாக மாற்றிவிடுகின்றது. அதன் நீளத்தை சுருக்கமாக ஆக்கி விடுகின்றது அதன் தெளிவை கலக்கமாக மாற்றிவிடுகின்றது. இவையெல்லாம் ஒரு மனிதனுக்கு நீண்டஆயுள் ஒன்று இருக்கின்றதென்று வைத்துக் கொண்டால்தான் ஆனால் நிலமை அவ்வாறில்லையே. காலையில் விழித்த மனிதன் மாலைவரை இருப்பான் என்பது நிச்சயமில்லை மாலையை அடைந்த மனிதன் மாலையில் விழிப்பான் என்பது நிச்சயமில்லை.
உறவினர்களின் இழப்பு நண்பர்களின் இழப்பு உடலில் நோய் உறுப்புகளில் ஆபத்து உள்ளத்தில் கடுந்துடிப்பு ருசியான உணவைக்கூட உண்பதற்கு மறுப்பு மரணம் வந்துவிட்டதோ என்றஅச்சம் மேலும் அச்சத்தால் நோய்அதிகரிப்பு ஈற்றில் வெருட்சி குடிகொண்டநிலை போன்ற நிகழ்வுகள் கூடிகலையும் மேகம்போல் காட்சியளிக்கின்றது. மனிதனின் பலவீனத்திற்கு ஆச்சரியப்படாமலிருக்க முடியாது இவன் எவ்வளவு அற்பமான படைப்பு! நேற்றுத்தான் உடலுறுதி துளிர்விடும்அழகு பலம் நிறைந்தமேனி ஆகிய தோற்றத்தையுடைய வாலிபனாக இருந்தான்.
காலத்தின்கோலம் இவனை ஆட்டிப் படைக்கின்றது கூனி மடிகின்றான். முகமும் சுருங்கிவிடுகின்றது ஒருசிறிய சிரமமும் அவனை களைத்து விடச்செய்கின்றது ஒருஅற்ப வேலைகூட அவனை ஆட்டிப் படைக்கின்றது. மேலும் நேற்று அவனை உயர்ந்தமாடியில் வாழும் செல்வந்தனாகக் காண்கிறாய் ஆடம்பரமான காரில் ஏறிப்பறக்கின்றான். பெறுமதிவாய்ந்த விரிப்புகளில் அமர்கின்றான் ஆனால் காலம் மாறுகின்றது நாட்கள் பல கழிகின்றன எந்த குடிசையில் இருக்க மறுத்தனோ அக்குடிசையிலேயே இருக்க நேருகின்றது. எந்தவாகனத்தை இழிவாகக் கருதினானோ அந்தவாகனத்தில் ஏறிப்பிரயாணம் செய்ய நேருகின்றது உண்ணமுடியாததை உண்ணவும் உடுக்கமுடியாததை உடுக்கவும் நிலமை இவனை நிர்ப்பந்திக்கின்றது. எனவேதான் வாழ்க்கையின் இன்பமும் அதன் அழகும் சுபீட்சத்தின் உச்சகட்டமும் அதன் உயர்வும் அல்லாஹ்வை வழிப்படுவதிலேயே தங்கியுள்ளது.
இதனை ஏற்படுத்திக் கொள்வதற்கு எவ்வத செலவோ கஷ்டமோ தேவையில்லை அல்லாஹ்வின் கட்டளைகளை கடைபிடித்து அதன்மீது உறுதியாக இருப்பதனாலும் அது நிறைவேறுகின்றது. இதனால் ஒருமனிதன் தனதுவாழ்வில உளஅமைதி பெற்றவனாகவும் மனநிம்மதி அடைந்தவனாகவும் முகமலர்ச்சியுடையவனாகவும் தனக்கு அநீதியிழைத்தவனுக்குக் கூட அன்புக்கரம் நீட்டக்கூடியவனாகவும் அவர்களது அத்தவறை மன்னிக்கக்கூடியவனாகவும் சிறியோருக்கு இரங்கக்கூடியவனாகவும் பெரியோருக்கு மரியாதை செய்பவனாகவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் விருப்பமுள்ளவனாகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதில் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருப்பான்.
மேலும் அவன் அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒரு சிறு விஷயத்தில் கூட அலட்சியம் இல்லாமல் எல்லா விஷயத்தையும் ஆசையுடன் சரிவர நிறைவேற்றக் கூடியவனாக இருப்பான். வாழ்க்கையில் ஏதேனும் விரும்பத்தகாதகாரியங்கள் நிகழுமிடத்து அதனை பொறுமையுடனும் மனப்பொருத்தத்துடனும் தாராளமாக ஏற்றுக்கொள்வான் மரணத்தைகூட உலகத்தின் கஷ்டங்களிலிருந்து விடுதலையடைந்து நித்திய வீட்டைநோக்கிபயணம் செய்வதற்கு அரிய சந்தர்ப்பமாகக் கருதுவான்.
எனதினிய அன்புச்சகோதரியே!
இப்புத்தகத்தில் சில அறிவுரைகளை வைத்திருக்கின்றேன். அவற்றை நீர் கடைப்பிடிக்கும்போது உனது இவ்வுலக வாழ்வு கஸ்டத்திலிருந்து நிம்மதியின்பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின்பாலும் மாறிவிடும். அது மட்டுமல்ல. உனது வாழ்க்கைக்கு ஒரு புற்றுணர்வாக அவற்றை நீர் காண்பாய்! இப்புத்தகத்தை சீர்திருத்தத்திலே எனக்கு ஏற்பட்ட ஆசையும், அதற்காக கொடுக்கப்படும் நற்கூலியில் எனக்கு ஏற்பட்ட பேராசையும் இப்புத்தகத்தை எழுதுவதற்கு என்னை தூண்டியது. இதோ அப்பூக்கொத்துக்களை என் முன் வைக்கின்றேன். அதைப் படிப்பதற்கும், அதன்வழி நடப்பதற்கும் அல்லாஹ் உனக்கு நல்லருள் புரிவானாக!
அறபு மொழியில்: அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் முக்பில்.
தமிழில்: ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம், அழைப்பாளர் அல் ஜுபைல் அழைப்பகம், ஸவூதி அரேபியா.