கேள்வி: அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?
பதில்: முக்கிய காரணம் தென்னிந்தியர்கள் புத்திசாலிகள். வெற்றுக்கூச்சலுக்கு நேரத்தை ஒதுக்குவதற்கு அவர்கள் தயாரில்லை. அன்னா ஹஜாரே எப்பொழுது மோடியை ஆதரித்துப்பேசினாரோ அப்பொழுதே அவரது முகமூடி கிழிந்து போய்விட்டது. சில ஊடகங்கள் மட்டுமே தங்களது நேரத்தை கடத்துவதற்காக புஸ்வானமாகிக்கொண்டுவரும் அவரது போராட்டத்தை ஊதி ஊதி பெரிதாகிக் காட்டுகின்றன. சில ஆயிரம் பேர்கூட கலந்துகொள்ளாத ஒரு கூட்டத்தை வரலாறு காணாத போராட்டமாக சித்தரிப்பது ஊடகங்களுக்கு கேவலாமகப் படாததுதான் ஆச்சரியம்.
காந்திஜியின் சேவைக்கு முன்னால் ஒரு தூசிகூட பொருமானமில்லாத இவரது நாடகத்தை தென்னிந்தியர்கள் நம்பாதது ஒன்றும் ஆச்சரியமே அல்ல. காரணம் முதலில் குறிப்பிடப்பட்டது போல் அவர்கள் புத்திசாலிகள்.
மத்திய அமைச்சர்கபில்சிபில் சொல்வதைப்போல் இந்தியாவில் அதிகாரபீடம் பாராளுமன்றமே தவிர தனி நபரின் வெற்றுக்கூச்சலல்ல. ஏற்கனவே ஒரு சாமியார் இவருக்கு போட்டியாக களத்தில் குதித்து ஸ்டண்ட் அடித்து அட்ரஸ் இல்லாமல் போனதுபோல் இவரும் அட்ரஸ் இல்லாமல் போகத்தான் போகிறார். அன்னா ஹஜாரேயின் பழைய வரலாற்றை புரட்டிப்பார்த்து அவரது உண்மை முகத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இப்படி கூறுவதால் நாம் ஊழலை ஆதரிப்பவர்கள் என்று அர்த்தமல்ல.
அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. அன்னாவின் போராட்டம் டெல்லியில் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறியது அமெரிக்கா. இதற்கு இந்தியா கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிப்பது தேவையற்ற வேலை என்று இந்தியா கூறியிருந்தது.
தற்போது அன்னாவின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாமோ என்ற சந்தேகத்தை காங்கிரஸ் கிளப்பியுள்ளது. அமெரிக்கா எதற்காக இந்தியாவில் நடக்கும் ஒரு போராட்டத்திற்கு ஆதரவாகப் பேச வேண்டும். அப்படி என்றால் இதற்கு பின் அமெரிக்கா இருக்கிறதோ என்று காங்கிரஸ் சந்தேகிக்கிறது.
இந்தியாவை சீர்குலைக்க சதி செய்யும் மறைமுக சக்தி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா என்று வெளிப்படையாகத் தெரிவிக்காமல் சூசகமாகத் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.
நாடாளுமன்றத்தில் வரைவு லோக்பால் மசோதாவை திணிப்பதன் மூலம் அன்னா குழுவினர் அரசையே பிளாக்மெயில் செய்கின்றனர். நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.