o “உங்களில் எவரும் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று புஹாரியில் இடம் பெற்றுள்ளது.
o “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ர்கள் கூறினார்கள், குளிப்புகடமையாக இருக்கும் நிலையில் உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் (இறங்கி) குளிக்க வேண்டாம்” (நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத்)
o “கணவனால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் மனைவியும், மனைவியால் மீதம் வைக்க்கப்பட்ட தண்ணீரில் கணவனும் குளிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். (தேவை ஏற்பட்டால்) இருவரும் சேர்ந்து அள்ளி அள்ளி குளித்துக் கொள்ளலாம்” நபி தோழர்களில் ஒருவர் அறிவிக்கின்றார் (நூல்கள்: அபூ தாவூத், நஸயீ) (ஹதிஸ் தரம்: இது ஆதரபூர்வமான ஹதிஸ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டது)
o “(உம்முல் முஃமினீன்) மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்தார்கள்” என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவியரில் ஒருவர், ஒருபெரிய பாத்திரத்தில் குளித்தார். அப்போது அங்கு வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் குளிக்க விரும்பியபோது, “நான் நிச்சயமாக குளிப்பு கடமையானவளாக இருந்தேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவி கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,” (இதன் காரணமாக)தண்ணீர் ஒருபோதும் அசுத்தமாகாது” என்று கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா, திர்மிதி) (ஹதீஸ் தரம்: இதை திர்மிதீ, இப்னு குஸைமா ஆகியோர் ஆதாரப்பூர்வமான ஹதிஸ் என்று குறிப்பிடுகின்றனர்)
o “உங்களுடைய பாத்திரத்தில் நாய் வைத்துவிட்டால், அதை(சுத்தப் படுத்துவதற்காக) ஏழு முறை கழுவுங்கள். அதில் முதல் முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்” ” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்) (ஹதிஸ் தரம்: முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், அதிலுள்ளதை கொட்டிவிடுங்கள் என்று உள்ளது. திர்மிதியின் மற்றோர் அறிவிப்பில், முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால் கழுவுங்கள் என்று உள்ளது)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்ப் பூனையை பற்றி கூறும் போது, “அது அசுத்தமானதல்ல, உங்களிடையே சுற்றி வரக்கூடியதுதான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ கதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)
o ஒரு நாட்டுபுறத்தார் பள்ளிக்கு வந்து பள்ளியின் ஒரு பகுதில் சிறுநீர் கழித்துவிட்டார். மக்கள் அவரை அதட்டினார்கள்.அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்து அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளை இட்டார்கள். அது அதன் மீது ஊற்றப்பட்டது.என்று அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், புகாரி)
o “செத்தவை இரண்டும், இரத்தம் இரண்டும் நமக்கு உண்ண(ஹலால்) அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் செத்தவை வெட்டுகிளி மற்றும் மீனாகும்.. அந்த இரத்தம், ஈரல் மற்றும் கல்லீரல் ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா)
o “உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு பின்னர் வெளியில் எறிந்து விடவும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, அபூதாவூத்) (ஹதீஸ் தரம்: நிச்சயமாக அது நோயிருக்கும் தன்னுடைய இறைக்கியின் மூலம் தன்னை பாதுகாத்து கொள்கிறது என்று அபுதாவூத் இமாம் அதிகமாக அறிவித்துள்ளார்)
o “கால்நடைகள் உயிரோடு இருக்க அவற்றிலிருந்து வெட்டப்பட்ட உறுப்புகள் செத்தவையாக கருதப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூவாஹித் அல்லைஸி ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்) (ஹதீஸ் தரம் : இந்த ஹதீஸை இமாம் திர்மிதீ அவர்கள் ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்கள், இங்கு திர்மிதியின் வாசகம் இடம் பெற்றுள்ளது)