டாக்டர் ஜாகிர் நாயக்
o இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
o இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
o சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது,குற்றவியல் சட்டங்களிலும் முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?.
கேள்வி எண்: 7. இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்: 1. ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்: அருள்மறை குர்ஆனின் 35வது அத்தியாயம்ஸுரத்துல் ஃபா(த்)திரின் 24வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகிறது:
“..அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை..(அல்குர்ஆன் – 35:24)
அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம்ஸுரத்துல் ரஃதுவின் 07வது வசனமும் கீழ்கண்டவாறு கூறுகிறது:
”..மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டி உண்டு..” (அல்குர்ஆன் – 13:7)
2. ஒரு சில இறைத்தூதர்களின் வரலாறு மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது:
அ. அருள்மறை குர்ஆனின் 4வது அத்தியாயம் ஸுரத்துன்னிஷாவின் 164வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்: இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்: ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை.” (அல்குர்ஆன் – 4:164)
ஆ. அருள்மறை குர்ஆனின் 40வது அத்தியாயம்ஸுரத்துல் முஃமின் – னின் 78வது வசனமும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்: இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்..(அல்குர்ஆன் – 40:78)
3. இருபத்து ஐந்து இறைத்தூதர்கள் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில்
நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம், நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம், நபி இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இறைத்தூதர்களின் பெயர்கள் உட்பட இருபத்து ஐந்து இறைத்தூதர்களின் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் இறைத்தூதர்கள்: முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றுப்படி இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட மொத்த இறைத்தூதர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் ஆகும்.(1,24,000)
5. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும், அவர்களின் காலத்தில் உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஆவார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும், அவர்களின் காலத்தில் உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் பின்பற்றப் படக்கூடியவர்களாக அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம்ஸுரத்துல் ஆல இம்ரானின் 49வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“..இஸ்ராயீலின் சந்ததியினருக்கு தூதராகவும் அவரை ஆக்குவான்.. (அல்குர்ஆன் – 3:49) 6. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறுதியான இறைத்தூதர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறுதியான இறைத்தூதர் ஆவார்கள். இது பற்றி அருள்மறை குர்ஆனின் 33வது அத்தியாயம்ஸுரத்துல் அஹ்ஜாப் – ன் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்: மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் – 33:40)
7. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதால், அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மாத்திரமோ அல்லது அரேபியர்களுக்கு மாத்திரமோ அனுப்பட்ட இறைத்தூதர் அல்ல. முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஆவார்கள். இது பற்றி அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம்ஸுரத்துல் அன்பியாவின் 107வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ‘ரஹ்மத்”தாக அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்குர்ஆன் – 21:107)
மேற்படி போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 34வது அத்தியாயம்ஸுரத்துஸ் ஸபாவின் 28 வசனத்தின் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாறாயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாறும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.” (அல்குர்ஆன் – 34:28)
அ”ஒவ்வொரு இறைத்தூதரும் அவர்களுடைய சமுதாயத்திற்கு மாத்திரம் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் முழு மனித சமுதாயத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்,” என்கிற செய்தியை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக ஜாபிர் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் ஹதீஸ் புத்தகத்தின் – முதலாம் பாகத்தில் – 56வது அத்தியாயமான தொழுகை என்னும் தலைப்பின் கீழ் 429 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆ. இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?. என்கிற கேள்வியை எடுத்துக் கொண்டால் – இந்தியாவுக்கு என்று அனுப்பப்பட்ட இறைத்தூதர் பற்றி அருள்மறை குர்ஆனிலோ, அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவிப்புகளிலோ சொல்லப்படவில்லை. ராமருடைய பெயரும், கிருஷ்ணருடைய பெயரும் – குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எங்குமே குறிப்பிடப் படவில்லை என்பதால் – அவர்கள் இறைத்தூதர்களா?. இல்லையா என்பதை பற்றி யாரும் நிச்சயமாக சொல்ல முடியாது. சில இஸ்லாமியர்கள் – குறிப்பாக சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் இந்துக்களை திருப்திபடுத்த வேண்டி ராம் (அலை) என்று (அல்லாஹ் – ராமர் மீது அருள் புரியட்டும்) சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறாகும். ராமர் இறைத்தூதர் என்பதற்கு அருள்மறை குர்ஆனிலிருந்தோ அல்லது ஹதீஸிலிருந்தோ சரியான ஆதாரம் எதுவும் இல்லை. ஒருவேளை அவர்கள் இறைத்தூதராக இருக்கலாம் என்று யாராவது ஒருவர் சொன்னாலும், சொல்லலாம்.
9. ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதராக இருந்திருந்தால் கூட, இன்றைக்கு நாம் இறைத்தூதராக ஏற்று பின்பற்றி நடக்கக் கூடியவர் இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான். ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதராக இருந்திருந்தால், அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் உள்ளவர்கள் மாத்திரம்தான், அவர்களை தூதர்களாக எண்ணி பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் இன்று, இந்தியாவில் உள்ளவர்கள் உட்பட உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தான் தூதராக ஏற்று நடக்க வேண்டும்.
கேள்வி எண்: 8. இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்: 1. ஒவ்வொரு காலகட்டத்திலும், இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுள்ளது: அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம்ஸுரத்துர் ரஃதுவின் 38வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘..ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது..” (அல்குர்ஆன் – 13:38)
2. அருள்மறை குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இறை வேதங்கள் நான்கு: தௌராத் – ஷபூர் – இன்ஜில் – மற்றும் குர்ஆன் என நான்கு இறை வேதங்களின் பெயர்கள் மாத்திரம் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. தௌராத் வேதம் நபி மூஸா (அலை) அவர்களுக்கும், “ஜபூர் வேதம் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், இன்ஜில் வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், இறுதிவேதமான அருள்மறை குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அருளப்பட்ட வேதங்களாகும்.
3. அருள்மறை குர்ஆனுக்கு முன்னால் அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்தும் – அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக அனுப்பப்பட்டதாகும். அருள்மறை குர்ஆனுக்கு முன்னால் அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்தும் – அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்காக, அவர்களுக்குரிய காலத்தில் பின்பற்றப் படுவதற்காக மாத்திரம் அனுப்பப்பட்டதாகும்.
4. அருள்மறை குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைவேதமாகும். அருள்மறை குர்ஆன், இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி வேதம் என்பதால், அது முஸ்லிம் சமுதாயத்திற்கு மாத்திரமோ அல்லது அரேபியர்களுக்கு மாத்திரமோ அனுப்பப்பட்ட இறைவேதம் அல்ல. இவ்வுலகில் உள்ள முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைவேதம்தான் அருள்மறை குர்ஆன்.
அ. இதைப் பற்றிய செய்தியை அருள்மறை குர்ஆனின் 14வது அத்தியாயம்ஸுரத்துல் இபுறாஹீம் – ன் முதலாவது வசனம் கீழ்கண்டவாறு அறிவிக்கிறது:
“அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும். மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்ஸ(அல்குர்ஆன் – 13:38)
ஆ. இதே போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 14வது அத்தியாயம்ஸுரத்துல் இபுறாஹீம் – ன் 52 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும், (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். ..(அல்குர்ஆன் – 13:38)
இ. அருள்மறை குர்ஆனின் 02வது அத்தியாயம்ஸுரத்துல் பகராவின் 185 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான)வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளை கொண்டதாகவும்: (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டதுஸ. (அல்குர்ஆன் –2:185)
ஈ. மேற்படி போன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 41 வது வசனத்திலும் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்..”(அல்குர்ஆன் –39:41)
5. எந்த இறைவேதம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது?. இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?. என்கிற கேள்வியை பொருத்தமட்டில் – அருள்மறை குர்ஆனிலோ அல்லது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவிப்புகளிலோ இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆகவே அருள்மறை குர்ஆனிலோ அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவிப்புகளிலோ இந்து வேதங்களை பற்றியோ அல்லது மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்கள் பற்றியோ குறிப்பிடப்படாததால், அவைகள் இறைவேதம்தான் என்று நிச்சயமாக யாரும் சொல்ல முடியாது. அவைகள் இறைவேதங்களாக இருந்தாலும் இருக்கலாம். அல்லது இறைவேதங்களாக இல்லாமலும் இருக்கலாம்.
6. இந்து வேதங்கள் இறைவேதங்களாக இருந்திருந்தாலும், இன்று நீங்கள் இறைவேதமாக ஏற்று, பின்பற்ற வேண்டியது அருள்மறை குர்ஆனைத்தான்.
இந்து வேதப் புத்தகங்களோ அல்லது வேறு வேதப்புத்தகங்களோ, இறைவேதமாக இருந்திருந்தால், அந்த வேதங்கள் அந்த காலத்தில் வாழ்ந்திருந்த மக்களுக்காக- அவர்கள் வாழ்ந்திருந்த அந்த குறிப்பிட்ட காலத்தில் மாத்திரம் பின்பற்றப்படுவதற்காக அனுப்பப்பட்டதாகும். இன்று, இந்தியா உட்பட உலகத்தில் உள்ள மனித குலம் முழுவதும் இறைவனின் இறுதி வேதமாம் அருள்மறை குர்ஆனை மாத்திரமே பின்பற்ற வேண்டும். அதோடு இல்லாமல் – அருள்மறை குர்ஆனுக்கு முந்தைய எல்லா வேதங்களும் நிலையாக பின்பற்றப் படக்கூடாது என்கிற காரணத்திலோ என்னவோ – வல்லோன் அல்லாஹ் – அவ்வேதங்களை அவை இறக்கியருளப்பட்ட அவைகளின் உண்மையான வடிவிலே பாதுக்காக்கவில்லை போலும். அருள்மறை குர்ஆனைத் தவிர, உலகில் உள்ள முக்கிய மதங்களின் இறைவேதங்கள் என்று சொல்லப்படுகின்ற எதுவும், மாற்றப்படாமலோ, கலப்படம் செய்யப்படாமலோ, இடைச் செருகல்கள் செருகப்படாமலோ இல்லை. அருள்மறை குர்ஆன் நிலையாக பின்பற்றப் படவேண்டும் என்கிற காரணத்தினால் அருள்மறை குர்ஆன், அதன் உண்மையான வடிவம் அழியாமல் இருக்கவும், எவ்வித தீங்கும் நேராமல் இருக்கவும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருக்கிறான். அருள்மறை குர்ஆனின் 15வது அத்தியாயம் ஸ_ரத்துல் ஹிஜ்ரின் 09வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்: நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்..” (அல்குர்ஆன் –15:9)
கேள்வி எண்: 9. சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது, குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)
பதில்: 1. இஸ்லாமிய தனியார் சட்டம்: தனியார்சட்டம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருக்கும், அவருக்கு நெருங்கிய பந்தம் உடையவர்களுக்கும் – இடையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும். உதாரணத்திற்கு திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், விவாகரத்து சம்பந்தப்பட்ட சட்டங்கள், சொத்து விவகாரங்கள் போன்றவை. மேற்படி சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேற்படி சட்டங்கள் முழு சமுதாயத்தையும் நேரடியாக பாதிக்கக் கூடிய செயலாகவோ அல்லது குற்றவியல் சம்பந்தப் பட்டதாகவோ இருக்கக் கூடாது.
2. இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு. எந்த ஒரு நாடானாலும், தனியார் சட்டம் என்பது, ஒவ்வொரு சமுதாய மக்களுக்கிடையேயும், ஒவ்வொரு குழுவுக்கும் இடையேயும் வேறுபடலாம். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பதால் – ஒவ்வொரு சமுதாயமும் – அவர்கள் விரும்பும் பட்சத்தில் – அவர்கள் விரும்பும் தனியார் சட்டத்தை பின்பற்ற – இந்தியாவின் சிவில் உரிமைச் சட்டம் அனுமதியளித்துள்ளது.
3. இஸ்லாமிய தனியார் சட்டமே மிகச் சிறந்த தனியார் சட்டம்: உலகத்தில் உள்ள விதவிதமான தனியார் சட்டங்களில் – மிகச் சிறந்ததும், பலனைத் தரக்கூடியதுமான தனியார் சட்டம் – இஸ்லாமிய தனியார் சட்டமே என்கிற நம்பிக்கை இஸலாமியர்களிடையே உள்ளது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் – இஸ்லாமிய தனியார் சட்டத்தை பின்பற்றுவதற்கு, அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் காரணமாகும்.
4. குற்றவியல் சட்டம்: குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடிய ஒரு செயல் அல்லது குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும். உதாரணத்திற்கு கொலை, கொள்ளை, வல்லுறவு (கற்பழிப்பு) போன்றவையாகும்.
5. குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எந்த நாடாக இருந்தாலும், குற்றவியல் சட்டமானது, வித்தியாசமான பல சமுதாயத்திற்கு பல விதமான சட்டம் என்னும் தனியார் சட்டம் போலில்லாமல், எந்த சமுதாயமாக இருந்தாலும் அல்லது சமுதாயத்தின் எந்த குழுவாக இருந்தாலும் குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மனிதன் திருடினால் அவனது கையை வெட்டுமாறு பணிக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம். ஆனால் மேற்படி சட்டம் இந்து குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. உதாரணத்திற்கு சமுதாயத்தில் உள்ள ஒரு இந்து, ஒரு இஸ்லாமியரிடம் திருடி விட்டார் எனில், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை என்ன?. இஸ்லாமியர் இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி திருடியவரின் கை வெட்டப்பட வேண்டும் என்பதை விரும்புகிறார் எனில், இந்து குற்றவியல் சட்டம் அதை அனுமதிப்பதில்லை.
6. இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை உட்படுத்தாமல், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம், தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பின்பற்ற முடியாது.
ஒரு முஸ்ஸிம் அவரைப் பொருத்த மட்டில், அவர் செய்துவிட்ட குற்றத்திற்கு தண்டனையாக – இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி, தண்டனை பெற விரும்புவார் எனில் – அது நடைமுறையில் சாத்தியக் கூறானதல்ல. ஒரு முஸ்லிம் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டுப்படுவார் எனில் – அந்த குற்றச்சாட்டின் சாட்சி முஸ்லிம் அல்லாதவராக இருப்பார் எனில், முஸ்லிமும், முஸ்லிம் அல்லாதவரும், தத்தம் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த விரும்பினார்கள் எனில் – இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் படி பொய் சாட்சியம் சொன்னவருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இந்திய குற்றவியல் சட்டப்படி பொய் சாட்சி சொல்பவர் தண்டனையிலிருந்து எளிதாக தப்பிவிட முடியும்.
இவ்வாறாக ஒரு முஸ்லிமும் – ஒரு முஸ்லிம் அல்லாதவரும் தத்தம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் – முஸ்லிம் அல்லாத ஒருவர் – குற்றம் செய்யாத முஸ்லிம் ஒருவரை, எளிதாக குற்றவாளி ஆக்கிவிட முடியும். எப்படி இருப்பினும், இரண்டு பேருமே இந்திய குற்றவியல் சட்டத்தை பின்பற்றுவார்கள் எனில் – இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கொள்ளை அடிப்பவருக்கும், பொய்சாட்சியம் சொல்பவருக்கும் தண்டனை அத்தனை கடுமையானதாக இல்லை. இவ்வாறு கடுமையான தண்டனை இல்லாத சட்டம் கொள்ளை அடிப்பவனை தங்களது சுய லாபத்திற்காக மேலும் கொள்ளை அடிக்கச் செய்யத் தூண்டவும், பொய் சாட்சியம் சொல்பவனை மேலும் பொய்சாட்சியம் சொல்ல வைக்கவும் காரணமாக அமைந்துள்ளது.
7. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவர் மீதும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் விரும்புவார்கள். முஸ்லிம்கள் என்கிற முறையில் இந்தியாவிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் – திருடினால் கையை வெட்டுவது என்கிற இஸ்லாமிய குற்றவியல் சட்டம் – கண்டிப்பாக திருட்டின் சதவீதத்தை குறைக்கும். அதுபோல பொய் சாட்சியம் சொல்பவருக்கு 80 கசையடிகள் என்கிற சட்டம் – ஒரு மனிதன் பொய் சாட்சியம் சொல்வதை கண்டிப்பாக தடுக்கும்.
8. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு மிகவும் எனிதானது: இஸ்லாம் ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல், அந்த குற்றம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் காட்டித் தருகிறது. உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது, வல்லுறவு கொள்பவனுக்கு மரண தண்டனை போன்றவை, அதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகிறது. அதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்பவனை – பல நூறுமுறை – சிந்திக்க வைக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.
இவ்வாறு இந்தியாவில் குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று எண்ணிணால் -இந்தியாவில் பொது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை – நடைமுறை படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.
தமிழாக்கம்: அபூ இஸாரா
source: http://www.readislam.net