Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

Posted on July 28, 2011 by admin

 

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

o டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

o மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

o தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

o வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

o தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

o சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீஇரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

o வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

o காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

o குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

o நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்இணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

o சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

o வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

o பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

o வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

o தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்இரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

o இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

o வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

o ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

o கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

o வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீஇர் வராது.

o பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

o ஒரு பாத்திரத்தில் தண்இர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

o இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

o காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

o கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

o தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

o முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

o உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

 

இல்லத்தரசிகளுக்கு அட்டகாசமான வீட்டுக்குறிப்புகள்!

பாதுகாப்பு:

o அந்துப் பூச்சி வராமலிருக்க நெல் மூட்டையைச் சுற்றிலும், அதன் இடுக்குகளிலும் புங்கை இலை, வேப்ப இலைகளை பறித்துப் போட்டு வைக்கவும்.

o பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.

o புளியை நீண்ட நாட்கள் வைத்துக் கொள்ள பானையில் போட்டு வைக்கவும். பானையின் அடியில், புளியைப் போட்டு அதன் மேல் கொஞ்சம் உப்பைத் தூவினால் புளி கெடாமல் இருப்பதோடு, காய்ந்து போகாமலும் இருக்கும்.

o மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமாயின் நறுக்கி, வெயிலில் காய வைத்து வற்றல் போல் உலர்த்திக் கொள்ளவும். பின் எப்போது ஊறுகாய் வேண்டுமோ அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம்.

o தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைப் போட்டு வைப்பதால், பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

சமையல்:

o காலிப்ளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காளிப்ளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்து விடும்.

o தோசைக்கு, இட்லிக்கு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் தோசை, இட்லி பூவாயிருக்கும்.

o சாதம் மிஞ்சி விட்டால், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். சாதம் கொதிக்கும் போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வேக வைக்கலாம்.

o காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போலாகி விடும்.

o போளி தட்டும் வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

o கொதிக்கும் பாலை உடனே உறை ஊத்த வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர் ஊற்றவும். குளிர் நேரத்தில் தயிர் உறையாது. எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மீது பாத்திரத்தை வைத்தால் தயிர் விரைவில் உறைந்து விடும்.

o தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.

o உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால், முட்டைக்குப் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.

o கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.

o வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும். வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.

o வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டால் பாகு முற்றாது.

o வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்இரில் போட்டு உரிக்கவும். கண்ணும் கரிக்காது.

o புளித்த தயிரை தலையில் தேய்த்துக் கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

o தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.

o தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.

o வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

o சமையலுக்குப் பின் எஞ்சியிருக்கும் இஞ்சியை மண்ணில் புதைத்து வைத்தால் வேண்டும் போது எடுத்துக் கொள்ளலாம்.

o குளிர் சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் கருவேப்பிலை, கொத்தமல்லிகளை பாட்டில்களில் போட்டு வைக்கலாம்.

o சமையலறையின் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருந்தால் தேவையான பொருட்களை குறித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

o கேக் அல்லது பிஸ்கட் செய்து முடித்த பின் ஓவன் சூடாகவே இருக்கும். அப்போது சிறிது பழைய பிஸ்கட், முறுக்கு போன்றவற்றை உள்ளே வைத்தால் புதிது போல் முரமுரப்பாக இருக்கும்.

துணிமணிகள்:

o துணிகளுக்கு நீலம் போடும் சமயம் சிறு முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்தால் நீலம் ஒன்று போல் தண்இரில் பரவும்.

o நீலம் கலந்த நீரில் பாத்திரம், கண்ணாடி, பாட்டில் முதலியவற்றைக் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

o வெள்ளை நிற சட்டைகளை, நீல நிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

o பட்டுப் புடவைகளை துவைக்கும் போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் சாயம் போகாமலும் பூச்சி வெட்டாமலுமிருக்கும்.

o டீக்கரையைப் போக்க சீனியை உபயோகிக்கலாம். வெள்ளைத் துணிகளில் உள்ள கரையைப் போக்க தண்இரில் ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உபயோகிக்கலாம்.

o டாய்லெட் சோப் மேலுரைகளை துணி அலமாரிகளில் போட்டு வைத்தால் மணமாக இருக்கும்.

o எண்ணெய் கறையை போக்க துணியின் மேலும் கீழும் ப்ளாடிங் பேப்பரை வைத்து அயர்ன் பண்ண வேண்டும்.

o ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

o பழைய துணிகளையும் நன்கு சலவை செய்து, மடிப்புக் கலையாமல் அலமாரிகளில் அடுக்கி வையுங்கள். அல்லது பழைய சூட்கேஸ், பிரயாணப் பைகளில் சேமித்து வைக்கவும்.

source: http://senthilvayal.wordpress.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb