மெனோபாஸ் என்பது பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளியா?
[ மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்திற்கானதல்ல. மெனோபாஸக்குப் பிறகு முன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு.
40 வயதுகளில் உள்ள பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள், சிறந்த செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேசமயம், தங்களது செக்ஸ் வாழ்க்கை குறித்த இளம்வயதினர் சற்று கேலியாக பார்ப்பதாக அவர்கள் வருத்தப்படவும் செய்கின்றனர். செக்ஸ் வாழ்க்கையின் சிறப்பை இளம் வயதினர் சரிவர புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம் என்பது அவர்களின் கருத்து.
ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறுகையில், குழந்தைகள் வளர்ந்து பெரிதான நிலையில் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி நிம்மதியான, அவசரம் இல்லாத உறவுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்களுக்கு மனதளவில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. எனவேதான் முன்பை விட சிறப்பான செக்ஸ் உறவில் அவர்களால் ஈடுபட முடிகிறது.]
பெண்களின் உடல்நிலையில் பருவ வயதை எட்டியதில் இருந்து நாற்பது வயதுவரை எந்த பிரச்சினையும் இன்றி சகஜமாக தெளிந்த நீரோடை போல போய்க்கொண்டிருக்கும். திடீரென நாற்பது வயதுக்கு மேல், பெண்ணின் கருப்பையில் செயல்பாடு குறைந்து, மாதவிடாய் முறையற்றதாகி, கடைசியாக ஐம்பது வயதில் மாத விடாய் முற்றிலும் நின்று விடும். இதற்கு மெனோபாஸ் என்று பெயர். ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இது தேவையில்லாத பயம்.
குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் நம்மில் பலருக்கு மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது…. ஏன் மாதவிடாய் நிற்கிறது? என்ற விவரங்கள் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதில்லை.
இரண்டுவகைப் பிரச்சினைகள்
மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் இரண்டு வித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, தாம்பத்யத்தின் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். உடல் உறவின் மேல் அச்சம் கொண்டவர்கள் மெனோபாஸ் பருவத்தை தங்களின் விடுதலை காலமாக நினைக்கத் தொடங்குகின்றனர். இதையே சாக்காக வைத்து கணவரிடம் இருந்து விலகத் தொடங்குகின்றனர். இவர்களுக்கு தக்க மருத்துவ ஆலோசனை மூலம் சந்தோஷத்தை உணரச் செய்ய முடியும்.
இன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல வருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தியம் இருப்பதால் போரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். இத்தகையவர்களை வருடம் ஒருமுறை வெளியூருக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துவதன் மூலம் கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடச் செய்யலாம்.
வறட்சியினால் பாதிப்பு
மெனோபாஸ் காரணமாக பெண்ணுறுப்பு வறண்டு போவதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று பயங்கர வலி ஏற்படும். இதனால் எழும் அச்ச உணர்வு, உறவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். கை வலி, கால் வலி என்றால் மருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெறுவதில் தவறில்லை.
ஆர்காஸ்மிக் டிஸ்ஃபங்ஷன் எனப்படும் பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஏற்படுவதுதான். இதனை தவிர்க்க வறட்சியினால் சோர்வுற்றிருக்கும் பெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ வேண்டும். சுயமருத்துவம் செய்ய வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
வலிகளால் ஆர்வமின்மை
உடல் வலி, மூட்டு வலி என்று சிரமப்படுகிறவர்களுக்கு மனதில்ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு, நினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
தாம்பத்தியத்திற்கு முற்றுப்புள்ளியா?
மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்திற்கானதல்ல. மெனோபாஸக்குப் பிறகு முன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு.
நடைப் பயிற்சி, முறையான யோகா, சரிவிகித உணவு சாப்பிடுவதுபோன்றவை உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். தவிர எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடலுக்குமுக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது என கடைசி வரையிலும் இயல்பாக இருப்பதே சந்தோஷமான தாம்பத்திற்கான வழிமுறைகள் என்கின்றனர் மருத்துவர்கள்.
நாற்பது வயதில்தான் செக்ஸ் வாழ்க்கை இனிக்கிறது என்கிறது ஒரு சர்வே சர்வே!
நாற்பது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்று சொல்வார்கள். அது உணமைதான். குறிப்பாக செக்ஸ் வாழ்க்கையில் இந்த வார்த்தை மிகமிக பொருத்தானது என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.
நாற்பது வயதில் இருக்கும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி செக்ஸ் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கிறதாம். குறிப்பாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கை நாற்பது வயதில்தான் படு பிரமாதமாக இருக்குமாம்.
இதற்காக 40 வயதுகளை எட்டிய ஆண் மற்றும் பெண்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் பெரும்பாலான ஆண், பெண்களின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருப்பது தெரிய வந்ததாம்.
மொத்தம் 2000 பெண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் உடல் அழகு குறித்து அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம், செக்ஸ் வாழ்க்கையில் இவர்களுக்கு நிறைய ஆர்வம் இருக்கிறதாம்.
இவர்களில் 80 சதவீதம் பேர், தாங்கள் இளம் வயதில் அனுபவித்த செக்ஸ் வாழ்க்கையை விட தற்போது மிகச் சிறந்த முறையில் அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
60 சதவீதம் பேர் முன்பை விட தற்போது தங்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் நல்ல அனுபவம் இருப்பதாகவும், சிறப்பாக செய்ய முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் கூறுகையில், 40 வயதில்தான் செக்ஸ் வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு உச்ச நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த வயதில்தான் செக்ஸ் ஆர்வம் உச்சத்தில் இருக்கும். கல்யாணமான புதிதில் இருந்ததை விட இந்த வயதில் நிறைந்த ஆர்வத்துடனும், வேகத்துடனும் அவர்கள் இருப்பார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், திருமணமான இளம் வயதில் செக்ஸ் குறித்த கூச்சம், வெட்கம் பலருக்கு இருக்கிறது. முழுமையான தெளிவும் பலருக்கு இருப்பதில்லை. இதனால் அப்போது முழுமையான அனுபவத்தை அவர்களால் அடைய முடிவதில்லை. ஆனால் 40 வயதுகளைத் தொட்ட அல்லது தாண்டிய பெண்களுக்கு இது முற்றிலும் நீங்கி விடுகிறது. தங்களது கணவர்களிடம் அல்லது பார்ட்னர்களிடம் செக்ஸ் குறித்துப் பேச அவர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் தங்களுக்குப் ‘பிடித்தமானதை’ கேட்டு வாங்கும் பக்குவமும் அவர்களுக்குக் கை கூடி விடுகிறது என்கின்றனர்.
அதேசமயம், 30 வயதுக்குட்பட்ட பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு படுக்கை அறையில் பெரிய அளவில் திருப்தி ஏற்படுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
40 வயதைத் தாண்டிய பெண்களில் 68 சதவீதம் பேருக்கு எந்த ‘டெக்னிக்’கைக் கையாண்டால் அதிக சுகம் கிடைக்கும் என்ற விவரம் தெளிவாக தெரிந்திருக்கிறதாம். எப்படி செயல்பட்டால் அதிக இன்பம் கிடைக்கும், எந்த முறையில் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதிலும் இவர்கள் கில்லாடிகளாக இருக்கிறார்களாம்.
58 சதவீதம் பெண்கள் கூறுகையில், திரு்மணமான புதிதில் தாங்கள் செக்ஸில் சிறப்பாக ஈடுபட்டபோதிலும், தற்போது மிகுந்த நிபுணத்துவத்துடன் இன்னும் சிறப்பாக, முழுமையாக செயல்பட முடிவதாக தெரிவித்துள்ளனர்.
திருமணமான புதிதில், குழந்தை பிறந்த பின்னர் தாங்கள் செக்ஸ் வாழ்க்கையி்ல் மும்முரமாக ஈடுபட வாய்ப்புகள் கிடைப்பதில்லை, எனவே தற்போது ரிலாக்ஸ்டாக அதில் ஈடுபட முடிவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறுகையில், குழந்தைகள் வளர்ந்து பெரிதான நிலையில் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி நிம்மதியான, அவசரம் இல்லாத உறவுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்களுக்கு மனதளவில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. எனவேதான் முன்பை விட சிறப்பான செக்ஸ் உறவில் அவர்களால் ஈடுபட முடிகிறது.
எங்களது ஆய்வைப் பொறுத்தவரை, 40 வயதுகளில் உள்ள பெண்கள், குறிப்பாக திருமணமான பெண்கள், சிறந்த செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேசமயம், தங்களது செக்ஸ் வாழ்க்கை குறித்த இளம்வயதினர் சற்று கேலியாக பார்ப்பதாக அவர்கள் வருத்தப்படவும் செய்கின்றனர். செக்ஸ் வாழ்க்கையின் சிறப்பை இளம் வயதினர் சரிவர புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம் என்பது அவர்களின் கருத்து என்கிறார்.
நாற்பதில்தான் வாழ்க்கை தொடங்குகிறது என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு என்ற போதிலும், நாற்பதில் நாய்க்குணம் என்ற பழமொழியும் நம்மூர் பக்கம் உண்டு. அதாவது நாற்பது வயதானால் முறைகேடான பாதைகளில் செல்லத் துடிக்கும் மனது என்பதை சுட்டிக் காட்ட இந்த பழமொழி வந்தது. எதையும் முறையாக, சரியாக, முழு மனதோடு செய்தால் நிச்சயம் அது சிறப்பாகவே இருக்கும் என்பதை மனதில் கொண்டால் இந்த வயதுதான் என்றில்லாமல் எந்த வயதிலும் இன்பமாக இருக்கலாம்.