Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தலைக்கு முடி அழகு!

Posted on July 24, 2011 by admin

முடிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்

`உரோமம்’ எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சுவழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடியது.

உயிரினங்களில் பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் முடி, கதகதப்பை அளிக்கிறது, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது, ஈரப்பதத்தைக் காக்கிறது. நமது உடலமைப்பில் உள்ள திசுக்கள், எலும்புகள், உறுப்புகளுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றது, முடி.

பொடுகு – `செபோரிக் டெர்மட்டைட்டிஸ்’ எனப்படுகிறது. தலை தோலின் மேல் அடுக்கில் காணப்படும். செதில் போல் லேசாக உதிரும்.

முடி உதிரக் காரணங்கள்…

முடி இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது `அலோபேசி யா’ எனப்படுகிறது. (கிரேக்க மொழியில் `அலோபெக்ஸ்’ என்றால், நரி.) இதன் இறுதிநிலை, வழுக்கையாகும். ஹார்மோன் சிக்கல்கள், மருந்துகள், மன அழுத்தம், பாரம்பரியம் போன்றவை `வழுக்கை’க்குக் காரணமாகின் றன.

புரதம், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் முடியை அடர்த்தியாக்கி, வளப்படுத்தும் தன்மை கொண்டவை. முடி உதிர்வு, சத்துப் பற்றாக்குறையையும் குறிக்கும். மனிதர்களுக்கு முடி குட்டையாகவும், மென்மையாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கிறது. இதேபோல ஆப்பிரிக்கவாழ் பாலூட்டிகளான யானைகளுக்கும், நீர்யானைகளுக்கும் 2 ரோம அமைப்பு உள்ளது.

காக்கும் முடிகள்

புருவ முடிகளும், இமை முடிகளும் கண்களைக் காக்கின்றன. மூக்குத் துவாரங்களிலும், காதுகளுக்குள்ளும் காணப்படும் நுண் முடிகள், அவற்றுக்குள் நுண்ணுயிரிகள், தூசி தும்புகள் நுழையாமல் தடுக்கின்றன. தோலுக்கு மேலாக உள்ள முடியை நீக்குவது `டெபிலேஷன்’ எனப்படுகிறது.

மயிர்க்கூச்செரிதல்

குளிரில் நமக்குப் பற்கள் கிடுகிடுக்கும்போது வேர்க்கால்களை ஒட்டிய `அரெக்டார் பைலி’ தசைகள் நிமிர்கின்றன. அதனால், முடியும் குத்திட்டு நிற்கிறது. இதன் விளைவாக, முடி அடுக்கு, வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. நாம் இதை `மயிர்க்கூச்செரிதல்’ என்கிறோம். மருத்துவரீதியாக இது `பைலோஎரெக்ஷன்’ எனப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது, முடி அப்படியே தோலோடு ஒட்டிக்கொள்கிறது. எனவே வெப்பம் தக்க வைக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.

முடியை அகற்றும் முறைகள்

முடியை நீக்கும் `கிரீம்கள்’- இவற்றை முடி மீது பூச வேண்டும். அகற்றப்படும் முடிகள் 2- 5 நாட்களில் மீண்டும் வளர்ந்துவிடும்.

சவரம் – ரேசர் பிளேடை பயன்படுத்திச் செய்வது. சில மணி நேரத்தில் முடி வளரத் தொடங்கிவிடும்.

வாக்சிங் – ஒட்டக்கூடிய சூடான மெழுகையும், ஒரு துண்டுக் காகிதம் அல்லது துணியையும் பயன்படுத்தி மேற்கொள்வது. நான்கு முதல் ஒன்பது வாரங்களில் முடி மறுபடி வளரும்.

த்ரெட்டிங் – முடிச்சிட்ட நூலால் முடியை அகற்றுவது.

எலக்ட்ரோலிசிஸ் – சிறுபரப்புகளுக்குப் பயனுள்ளது. நிரந்தரமாக முடியகற்ற உதவுகிறது.

எபிலேட்டர் – முடியை வேர்ப்பையுடன் முழுமையாக அகற்றுகிறது.

லேசர் – கரிய, கரடுமுரடான முடி, `என்டி- ஓய்ஏஜி’ லேசரை ஈர்த்து உதிர்கிறது. இதன்மூலம் 80- 90 சதவீத முடியை அகற்றலாம்.

நமக்கு `வேகம்’ அதிகம்!

ஆசியக் கண்டத்தினரான நமது முடி வேகமாக வளர்கிறது. அதாவது, மாதம் 1.3 செ.மீ. என்ற அளவுக்கு. ஆனால் நமது முடியின் அடர்த்தி குறைவு, மெல்லியதாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தினரின் முடிதான் மெதுவாக வளர்வது. மாதத்துக்கு 0.9 செ.மீ. ஆனால் அது, ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் முடியை விட அடர்த்தியானது. தலை தோலை ஒட்டியே வளரும் இது, சுருண்டுகொள்கிறது. காகேசிய இனத்தவரின் முடிதான் உலகிலேயே அடர்த்தியானது. அது, மாதத்துக்கு 1.2 செ.மீ. நீளம் வளர்கிறது.

1. வேர்ப்பை – முடியில் உயிருள்ள ஒரே பகுதி. முடி வேரின் அடிப்பகுதி, குமிழ் எனப்படுகிறது.

2. செபேசியஸ் சுரப்பிகள்- முடிக்கு எண்ணெய்ப் பளபளப்பை அளிக்கின்றன.

3. டெர்மிஸ்- எபிடெர்மிஸுக்கு கீழ் உள்ள தோல் அடுக்கு. இங்குதான் முடியின் வேர்ப்பை புதைந்துள்ளது.

4. மெடுல்லா- உள்ளார்ந்த பகுதி. அனைத்து முடிகளிலும் காணப்படுவதில்லை.

5. கார்ட்டெக்ஸ்- முடியின் நடு அடுக்கு. முடியின் பலத்துக்கான அடிப்படை ஆதாரம். முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் `மெலனினை’ கொண்டிருக்கிறது. முடியின் வடிவத்தைத் தீர்மானிப்பது இதுதான்.

6. கியூட்டிக்கிள் – முடியின் வெளிப்புற அடுக்கு.

o தினசரி 100- 150 முடிகள் உதிர்வது இயல்பானது.

o 100 முடி இழைகளால் 10 கிலோ எடையைத் தூக்க முடியும்.

o இங்கிலாந்தில் 55 சதவீதக் குழந்தைகள் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

o புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் முழுவதும் நுண்ணிய `வெல்லஸ்’ முடிகளால் மூடப்பட்டுள்ளது.

o மாவீரன் நெப்போலியனின் முடியில் `ஆர்சனிக்’ விஷம் காணப்பட்டது. எனவே அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

o தலைமுடியானது அகச்சிவப்புக் கதிர்வீச்சில் இருந்து உடலைக் காக்கிறது. பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.

o ஒரு முடிக் கற்றையால் அதன் எடையைப் போல் 30 சதவீத தண்ணீரைக் கிரகித்துக் கொள்ள முடியும்.

பாலிக்யூலிட்டீஸ் – வேர்ப்பையில் ஏற்படும் வீக்கம். முடியை அகற்றும்போது மோசமான சுகாதாரத்தால் இது ஏற்படக்கூடும்.

ஹிருசுட்டிசம் – அதிகமாக முடியடர்ந்து காணப்படுவது. குறிப்பாக, முகத்திலும், உடம்பிலும். ஹார்மோன்களின் சமச்சீரற்ற நிலை, மருந்துகளின் பக்கவிளைவுகளால் இந்நிலை ஏற்படலாம்.

பேன் – ரத்தம் குடிக்கும் சிறு பூச்சியினம். முடியின் அடிப்பகுதியை இறுகப் பற்றிக்கொள்ளும் இவை, முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. மருந்து சேர்த்த ஷாம்புகள், லோஷன்கள், நெருக்கமான பற்கள் கொண்ட சீப்புகள் மூலம் பேன்களை அகற்றலாம். ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பேன் பரவுவது, `பெடிகுலோசிஸ்’ எனப்படுகிறது. சீப்புகள், தொப்பிகள், துண்டுகள், தலையணைகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வது, அருகாமை போன்றவற்றால் பேன்கள் பரவலாம்.

அழகான நீண்ட கூந்தலுக்கு!

அழகான நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் இல்லை. கேசத்தைப் பற்றி கவலைப்படாத ஆண்களும் இருக்க முடியாது.

ஆனால் இன்றைய நவநாகரீக கால கட்டத்தில் நீண்ட கூந்தல் வளர்ப்பது இயலாத காரியமாக உள்ளது. ஒரு சில பெண்களின் நீண்ட கூந்தலைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

ஆரோக்கியமற்ற இரும்புச் சத்து குறைந்த உணவு.

மன உளைச்சல், கோபம், படபடப்பு

கூந்தலுக்கு செய்கின்ற ரசாயன வண்ணப் பூச்சுகள், மற்றும் ரசாயனம் கலந்து ஷாம்புக்கள்.

உணவு முறை மாறுபாடு

அளவுக்கதிகமான உப்புக் காற்று, அதிக வெயில், குளோரின் கலந்த நீர், மற்றும் புறச் சூழ்நிலை, மாசுக்கள்,

கூரிய முனை கொண்ட சீப்புகளினால் தலை சீவுவது,

போன்றவையால் பலருக்கு கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பலருக்கு முடிஉதிர்தல், பொடுகு என மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

இன்னும் பலருக்கு சிறு வயதிலேயே நரைமுடி தோன்றி தீராத மன உளைச்சலை உண்டாக்குகிறது.

இயற்கையான மூலிகைகளை பயன்படுத்துதல்

இத்தகைய சூழலில் இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம்

தான்றிக்காய் பொடி – 10 கிராம்

வேப்பிலைப் பொடி – 10 கிராம்

கறிவேப்பிலைப் பொடி – 10 கிராம்

மருதாணிப் பொடி – 10 கிராம்

கரிசலாங்கண்ணிப் பொடி – 10 கிராம்

செம்பருத்திப் பூ காய்ந்த பொடி – 10 கிராம்

வெட்டி வேர் – 10 கிராம்

ரோஜா இதழ் – 10 கிராம்

சந்தனப் பொடி – 10 கிராம்

இந்த பொடிகளை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் 5 நாட்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால், கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். புழுவெட்டு நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரை மாறும்.

பெண்கள் என்றால் அவர்களிடம் மிகவும் அழகானது கூந்தல்தான்!

தலை உடலின் தலையாய பாகம். தலைக்கு அழகு முடி. கூந்தலை அழகாக வைத்துக் கொள்வதுதான் உண்மையில் நம்மை அழகாக வைத்துக் கொள்வதற்குச் சமம். இக்காலத்தில் அருகருகே அழகு நிலையங்களைப் பார்க்கலாம். இயற்கையில் அழகானவர்கள் பெண்கள் என்றால் அவர்களிடம் மிகவும் அழகானது கூந்தல்தான். அதனால்தான் அவர்கள் கூந்தல் அலங்காரத்தில் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள். ஆனால் அழகிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் கூந்தலுக்கு நிறையவே தொடர்பு உண்டு.

உண்மையில் தலைமுடி அழகிற்கான படைப்பு அல்ல. உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி தலைக்கு பாதுகாப்பை அளிப்பதே கூந்தலின் பணி. எண்ணைப்பசை தலைமுடி, வறண்ட தலைமுடி, எண்ணைப் பிசுக்குடன் கூடிய வறண்ட தலைமுடி என முடியில் சில வகைகள் உள்ளன.

பளபளப்பாக காட்சி தருவது ஆரோக்கியமான கூந்தல். பளபளப்பை இழந்திருப்பது வறண்ட தலைமுடி. அதிக அளவு வைட்டமின் பி மற்றும் புரதச் சத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலைப் போலவே கூந்தலும் நலமாக இருக்கும்.

ஒரு மனிதனுக்கு தலையில் ஒரு லட்சம் முடிகள் வரை இருக்கும். தினமும் 80 முடிகள் வரை கொட்டும். குளித்துவிட்டு தலைதுவட்டும்போது கொத்துக் கொத்தாக முடி உதிர்ந்தால் உடனே கவனிக்க வேண்டும்.

வளரும் நிலையில் 80 முதல் 90 சதவீத முடிகள் இருக்கும். மற்றவை ஓய்வுநிலை, உதிரும் நிலையில் இருக்கும். தினமும் உதிரும் 80 முடிகள் தான் உதிரும் முடிகள் கணக்கில் சேரும். கெரட்டீன் என்ற புரதத்தால் ஆனது தலைமுடி. அதன் வளர்ச்சிக்கு புரதம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாதுக்கள் தேவை. இல்லாவிட்டால் முடி உதிரும்.

பச்சைக் காய்கறி மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவற்றில் இருக்கும் இரும்பு மற்றும் செம்பு போன்ற தாதுக்களும் கூந்தலுக்கு நல்லது. நம் தோலில் சீபம் என்ற எண்ணைப் பசை சுரக்கும். இதன் அளவு குறைந்தாலும் தலைமுடி வறண்டு போகும்.

எண்ணைப் பிசுக்கான கூந்தல் உள்ளவர்கள் கொழுப்புச் சத்துள்ள பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறண்ட கூந்தல் உள்ளவர்கள் உணவில் சற்றே அதிக அளவில் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

கூந்தலைப் பராமரிக்க பொதுவான சில வழிகள் உண்டு. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அந்த ஆவியில் கூந்தலைக் காட்டலாம். அல்லது கொதிக்கும் நீரில் துண்டை நனைத்துப் பிழிந்து தலையில் சுமார் 10 நிமிடம் வரை சுற்றிக்கொண்ட பின்பு தரமான ஷாம்பு அல்லது சீயக்காய் பொடியால் தலைமுடியை நன்றாக அலசிக் காயவிட்டால் தலைமுடி மென்மையாகும். எலுமிச்சம் பழச்சாறில் வினிகர் கலந்து தலைமுடியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் முடி வறட்சி குறையும்.

அதிகம் முடி கொட்டுவதைத் தடுக்க ஹேர்பேக் செய்ய வேண்டும். இதற்கு நெல்லிக்காய், வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி, செம்பருத்திப் பொடி, வல்லாரைப்பொடி, கரிசாலைப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராமும், வேப்பிலைப் பொடி 5 கிராமும் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கெட்டியான கரைசல் தயாரிக்க வேண்டும்.

தலையில் சிறிது எண்ணை தடவிக் கொண்ட பிறகு இந்தக் கலவையை முடியில் தேய்த்து `ஹேர்பேக்’ செய்ய வேண்டும். அரைமணி நேரம் கழித்து அரிசி வடித்த கஞ்சியில் சீயக்காய் பொடியை கலந்து தேய்த்துக் குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். கூந்தலுக்கு பளபளப்பும் கிடைக்கும்.

கூந்தலின் எதிரி ஈரம்

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

குறப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

குளிக்கும்போது

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதைம் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும்.

தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளபாகவும் இருக்கும்.

மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.

குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வைங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிபாகத்தைவிட வேர்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைம் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

சீப்பு

உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சப்பை பயன்படுத்துவது நல்லது.

சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோபு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளபை மங்கச் செய்துவிடும்.

மசாஜ்

உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்கு பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இயற்கை தரும் அழகு

நன்றாக மசித்த வாழைப்பழத்தை முடியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்க்கவும்.

source: http://senthilvayal.wordpress.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb