எல்லாப் பெண்களும் மகாராணிகளே!
[ ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?”
முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?”
அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே….!”
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.’ எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.”]
அந்நியப் பெண்ணுடன் ஆண் – அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது கிறந்ததாகும்.” (நூல்:- தபரானி)
மேற்கூறப்பட்ட நபி மொழியை உற்றுநோக்கும்போது முஸ்லிம் சமூகத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர் மார்க்கக் கட்டளையை புறக்கணித்து விட்டு மேல்நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றனர்.
சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன்மகள், சகோரனின் மனைவி, சாச்சி, மாமி, போன்றோருடன் கைக்குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் தவிர்ந்துகொள்வது நன்று. இது கையின் விபசாரங்களில் ஒன்றாகும்.
பின்வரும் ஹதிஸ்களை சற்று கவனித்தல் நன்று.
”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. இரு கைகளும் விபசாரம் செய்கின்றன. இரு கால்களும் விபசாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபசாரம் செய்கிறது.” (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: ”நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாபஹா செய்ய கைகுலுக்க மாட்டேன்.” (அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)
மேலும்: ”நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.” (நூல்: தபரானி)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட பொன்மொழிகள் “நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிடுவேன் என மிரட்டும் கணவன்மார்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.
ஒரு ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அந்நிய ஆணுடனோ முஸபாஹாச் செய்வது ஹராமாகும். அது கை உறை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாபஹாச் செய்தாலும் சரியே!
ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி அதை தடுக்கின்றீர்கள்?”
முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?”
அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே….!”
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும். எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.”
கேள்விகேட்ட ஆங்கிலேயர்; அந்த முஸ்லிமின் பதிலைக்கேட்டு விக்கித்துப் போனார் என்று சொல்லவும் வேண்டுமோ!