தண்ணீர் இல்லையென்றால்.. .
தயம்மும்! சில விளக்கங்கள் ஆதாரத்துடன் தேவை. தயமும் செய்ய இறைவன் சொன்ன சந்தர்பங்கள் எவை?
பல மவ்லவிகள்(!) ”புழுதி உள்ள மண்ணில்தான் கைகளை அடித்து தயம்மும் செய்ய வேண்டும்” என்று அடித்து சொல்லித் தந்துள்ளனர். ஆனால் இதை விரிவாக சிந்தித்தால், நடை முறை சாத்தியம் இல்லை என்பது தெரியும்.
ஒரு நடை முறை சாத்தியம் இல்லாத ஒற்றை நிச்சயம் இறைவன் கட்டளையாக மனிதர்களுக்கு ஒருக்காலும் சொல்ல மாட்டான். இதை அனுபவித்தில் கண்டிருக்ககேன். தயமும் வசனங்கள் மொழி பெயர்த்தது பிழையாக இருக்கும் என சந்தேகம் எனக்கு உள்ளது..
கீழ் வரும் கேள்விகளுக்கு பதில் தாருங்கள், குர்ஆன், ஆதார ஹதீஸ்களுடன்.
உதாரணம்; தண்ணீர் முகத்தில் பயன்படுத்தேவே முடியாத வருத்தம்! அதே நேரம் திடீர் என பயங்கர அடை மழை! தொடர்ந்து வெள்ளம்! புழுதியை விடுங்கள், மண்ணே தெரியாதுள்ளது! வெள்ளத்தில் இப்படி பல முறை நடக்கிறது, நடந்துள்ளது! இப்போது அவர் தொழ தயம்மும் செய்வது எப்படி?
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்
சகோதரரே தயம்மும் என்பது ஒரு பகுதியில் தண்ணீர் இல்லாத போது அல்லது நோயாள் பதிக்கப்பட்டவர் ஒலு அல்லது குளிப்பை செய்யும் போது நிறைவேற்றும் போது தூய்மையான மண்ணை பயன் படுத்துவதாகும்.
நீங்கள் நோயாளிகளாவோ, அல்லது பயணத்திலோ இருந்து, மலம் ஜலம் கழித்தோ, அல்லது நீங்கள் தாம்பத்தியோ உறவு கொண்ட பின்போ, தண்ணிரை பெறாவிட்டால் சுத்தமான மண்ணை நாடுங்கள், (அம்மண்ணை கொண்டு)உங்களது முகத்தையும், உங்களது கைகளையும் தடவி கொள்ளுவும், நிச்சியமாக இறைவன் பிழைகளை பொறுப்பவனாகவும், பாவங்களை மன்னிப்பனாகவும் இருக்கிறான் (அல்குர்ஆன் 4:43)
எனக்கும் என் உம்மத்தினவர்களுக்கும் பூமியில் அனைத்துப் பகுதியும் தொழுமிடமாகவும், சுத்தம் செய்ய உபயோகிக்கும் சாதனமாகவும் ஆக்கப்படுள்ளது. என் உம்மத்தவர்களில் எவருக்கேனும் அவர் எங்கிருந்த போதிலும் தொழுகை நேரம் வந்துவிட்டால் அவருக்கு அங்கியே சுத்தம் செய்யும் சாதனம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபீஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: அஹ்மது)
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம் அப்போது மக்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்ம் அது சமயம் ஒரு மனிதர் தொழாது ஒதுங்கி இருந்தார். உன்னை தொழுகையிலிருந்து தடுத்தது எது? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் ஸ்கலிதமான நிலையில் இருக்கிறேன் என்றார், அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணை பற்றி பிடித்து தயம்மம் செய்து கொள் அதுவே உனக்கு போதுமானது என்றார்கள் என இம்ரான் பின் ஹீசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம், புகாரி)
தண்ணீர் பத்து ஆண்டுகள் வரை ஒரு மனிதனுக்கு கிடைக்கவிட்டாலும், நிச்சியமாக மண்ணே (அவருக்கு) சுத்தம் செய்யும் சாதனாமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் திர்மதி, நஸயி, அபூதாவுத், இப்னுமஜா)
தண்ணீர் இருந்தும் நோயாளிகளாகவோ, அல்லது உடல் தீங்கு ஏற்படும் என்று இருந்தால் அவரும் தயம்மம் செய்து கொள்ளலாம்.
ஒரு பயணத்தில் நாங்கள் இருந்தோம், எங்களில் ஒரு மனிதருக்கு கல் பட்டதால், காயம் ஏற்பட்டு விட்டது. அந்நிலையில் அவருக்கு ஸ்லலிதம் ஏற்பட்டு விட்டது. தன்னுடன் இருந்தவரை பார்த்து, எனக்கு ஏதேனும் தயம்மும் செய்து கொள்ளும் சலுகை உண்டா? எனக் கேட்டார். அதற்கு தண்ணிரை உபயோகிக்க சக்தி இருக்க நீ தயம்மும் செய்ய நாங்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றனர். அவரும் வேறுவழியின்றி குளித்தார். குளித்ததின் காரணமாக இறந்துவிட்டார்.
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்வந்த போது இது விசயமாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.அப்போது அவர்கள் அவரை கொன்றுவிட்டனர். அல்லாஹ் அவர்களை கொன்றுவிடுவனாக அவர்களுக்கு தெரியவிட்டால் அவர்கள் கேட்க வேண்டமா? மடமை நீக்குவதற்கு நிவராணம் கேட்பதேயாம். அவருக்கு போது மான தெல்லாம் தயம்மும் செய்துவிட்டு அவரது காயத்தின் மீது ஒரு துணியை சுற்றி கொண்டு அதன் மீது தடவிக்கொண்டு உடலின் மற்ற பகுதிகளை கழுவி கொள்ள வேண்டும் எனக் கூறினார்கள் என ஜாஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் அபுதாவுத், தாரகுத்னி, இப்னுமஜா)
கடுங்குளிர் போது தயம்மும் செய்யும் முறை
கடுங்குளிர் நிறைந்த ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டுவிட்டது அக்கடுங்குளிர் குளித்தால் என்னை நான் அழித்து கொள்வேனோ என நான் பயந்தேன் அந்நிலையில் அந்நிலையில் தயம்மும் செய்து கொண்டு எனது தோழர்களுக்கு சுப்ஹீ தொழுகையை நடத்தி கொடுத்தேன் அதன்பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; அம்ருவே! நீ ஜனாபத்து உடையவே இருக்க, உன் தோழர்களுக்கு தொழுகை நடத்தினீரா?” எனக்கேட்டார்கள் அதற்கு அம்ருபின் அல ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உங்களை ”நீங்களே அழித்து கொள்ளாதீர்கள் நிச்சியமாக அல்லாஹ் அருள் செய்யக் கூடியவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 4:49) என்ற இந்த கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாவின் கூற்றை நினைவுபடுத்திகொண்டு தயம்மும் செய்து தொழுது கொண்டேன் என நான் கூறினேன் அதை கேட்ட அல்லாவின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துவிட்டு மவுனமாகிவிட்டனர் என்று அம்ரு பின் அல ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் (நூல் அஹ்மத், அபுதாவுத், இப்னுஹிப்பான், ஹாகிம், தாரகுத்னி)
(1) மற்றும் (3)
தண்ணீர் இல்லாத போது தான் அவருக்கு தயம்மும் அனுமதிக்கப்படுகிறது. அவர் குளிப்பு அல்லது ஒலு செய்பவராக இருந்தால் அதனால் அவர் தண்ணீர் இருந்தால் ஒலு மற்றும் குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நோயாளிகளாக இருந்தால் குளிர் பிரதேசத்தில் வீட்டில் இருக்கும் போது குளிப்பு கடமையானால் குளிர் பிரதேசத்தில் தண்ணீர் குழுமையாக இருந்தால் அதை விதுவிதுப்பாக சூடு செய்து பின்பு ஒலு செய்யலாம் அதற்கு வசதி இல்லை என்றால் சுத்தமான வீடு சுவற்றை அடித்து தயம்மும் செய்யலாம்.
நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம். எங்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பீர்ஜமல் என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள் என்று அபூ ஜுஹைம் ரளியல்லாஹு அன்ஹு கூறினார் என உமைர் என்பவர் அறிவித்தார். (நூல்: புகாரி)
எதையும் முளைக்க செய்யாத உப்பு தரையில் தொழுவதும் அதில் தயம்மும் செய்வதும் ஆகுமானது என்று யஹ்ய இப்னு ஸயது கூறினார்கள் (புகாரி, மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி)
(2) சுவர் பலகையாக இருந்தால் அல்லது பயணத்தில் ஒலு அல்லது குளிப்பு கடமையாக இருந்தால்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்” என அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி)
தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்” (அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு, நுல்: அஹ்மத்)
ஒருவர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்? என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன்.
இந்நிகழ்ச்சியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா? என்று கேட்டார்கள்” என அப்துர்ரஹ்மான் அப்ஸா (ரலி) கூறினார். அத்துடன் ‘ஷுஅபா’ என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெருக்கி (ஊதிவிட்டு) பின்னர் தம் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவினார்” என்று குறிப்பிட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது (புகாரி)
மவ்லவிகள் யாரும் சுயமாக கற்று தரவில்லை, அல்லாஹ்வும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அழகான முறையில் நமக்கு கற்று தந்து இருக்கின்றனர். மார்க்கம் மிகவும் எளிதானது.
எந்த ஒரு அத்மாவுக்கும் அது தாங்கி கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை(அல்குர்ஆன்)
– ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
source: http://tamilmuslimgroup.blogspot.com