வரம்பு மீறும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!
RASMIN M.I.Sc
[”அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.” (அல்குர்ஆன் 12:106)]
முஸ்லீம்களின் அரசியல் உரிமைகளைக் காப்பதற்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் எத்தனையோ அரசியல் தலைவர்களை (?) நாம் கண்முன் கண்டு வருகிறோம்.
இவர்கள் அனைவரும் வெளிப்படையாக முஸ்லீம்களின் நலனுக்காகப் போராடுவதாகவும், இஸ்லாமிய சட்டங்களுக்கு உற்பட்டு நடப்பதாகவும் காட்டிக் கொள்பவர்கள். ஆனால் இவர்களின் உண்மையான உள் நோக்கத்தை பார்க்கும் போது இதில் உள்ள சூட்சுமம் நமக்குத் தெரிய வருகிறது.
அரசியல் என்ற சாக்கடையில் ஊரிப்போயுள்ள இந்த மட்டைகள். பெரும்பான்மை அரசியல்வாதிகளிடமும், பெரும்பான்மை சமுதாய தலைவர்களிடமும் தங்களுக்குள்ள கவுரவத்தை(?) தக்கவைத்துக் கொள்வதற்காக எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இப்படிப் பட்ட பச்சோந்திகளை நாம் அடிக்கடி இணங்காட்டி மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தாவிடில் இவர்களுக்குப் பின் ஜால்ரா அடிக்கும் கூட்டம் விழிப்படையாது.
மக்களே சிந்தியுங்கள் தலை வணக்கத்திற்கும், சாமியார்களுக்கு கும்பிடு போடுவதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் தொடர்புண்டா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் இப்படிப் பட்ட நடைமுறைகளுக்கு வழிகாட்டுதல் உண்டா?
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்
”தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.” (திருக்குர்ஆன் 4:48)
”தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ்நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில்விழுந்து விட்டார்.” (திருக்குர்ஆன் 4:116)
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ”என் அருமை மகனே!அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்”என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன் 31:13)
இணைவைத்தல் என்பது இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகும். கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு ஆகிய எந்தப்பாவத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றை விட மிககடுமையான பாவமாகஇணைவைத்தலைத்தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இந்த இணைவைத்தலுக்கு எதிரான ஏகத்துவக் கொள்கையை அதாவது ஓரிறைக்கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்ந்துகொள்ளலாம். பின்வரும் ஹதீஸ்கள் இணைவைத்தல் எவ்வளவு கடுமையான குற்றம்என்பதற்கு தெளிவான சான்றுகளாகும்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியதுஎது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கஅவனுக்கு நீ இணைகற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், ”நிச்சயமாக அது மிகப்பெரிய குற்றம்தான்” என்று சொல்லிவிட்டு ”பிறகு எது?” என்று கேட்டேன். ”உன்குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சிஅதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், ”பிறகு எது?” என்று கேட்க, அவர்கள்இ ”உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்றுசொன்னார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 4477)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலைசெய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்றுகூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2653)
இணைகற்பித்தால் நல்லறங்கள் அனைத்தும் அழிந்து விடும்
இணைகற்பித்தல் என்பது மனிதனின் உடலில் புகுந்த விஷத்திற்குச்சமமாகும். ஒருவன் உளூ இல்லாமல் ஆயிரம் ரக்அத்துகள் தொழுதாலும், ஆயிரம் வருடங்கள் தொழுதாலும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. அதுபோல் ஒருவன், இணைவைத்துக் கொண்டு எவ்வளவு தொழுதாலும், நோன்பு வைத்தாலும், ஹஜ்செய்தாலும், தான தர்மங்கள் செய்தாலும் அவனுடைய எந்த நல்லறமும் நன்மையாகமாறாது. அவையனைத்தும் அழிந்து போய் விடும். நாம் செய்யும் நல்லறங்கள்நன்மையாக மாறுவதற்காவது நாம் ஓரிறைக் கொள்கையையும், அதற்கு எதிரான இணைகற்பிக்கும் காரியங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். திருக்குர்ஆன் 6:88
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர்.மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்திஅறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன் 39:65,66)
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும்நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள்செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 9:17)
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரகநெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களேபடைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக்குர்ஆன் 98:6)
இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்குஇணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக்குர்ஆன் 4:48)
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ்நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்குஇணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணைவைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. ‘இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்!’ என்று சொல்லப்படும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 4653)
இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்குதங்கத்தைத் கொடுத்தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைபின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின்முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். ”உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீஎன்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ”ஆம்” என்றுகூறுவான். ”இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணைகற்பிக்காதே என்று)தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் நீ அதனைச் செய்து நிரந்தர நரகத்தில்வீழ்ந்து விட்டாய்)” என்று அவனுக்கு கூறப்படும். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6538)
இணைவைப்போரை புறக்கணித்தல்
”நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால்அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்றநண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். ”உங்கள் பெற்றோரும், உங்கள்பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள்அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிகவிருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும்வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்”என்று கூறுவீராக!” (அல்குர்ஆன் 9:23, 24)
”(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர்பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணைகற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!” (அல்குர்ஆன் 6:106)
”உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!” (அல்குர்ஆன் 15:94)
இன்றைய முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களைநம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ்செய்கிறார்கள், ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படிமுஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால்தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்துவிடுகின்றார்கள்.
”அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.” (அல்குர்ஆன் 12:106)
அன்பின் சகோதரர்களே! பொது மக்களே! இனிமேலும் இவர்களை நம்பத்தான் போகிறீர்களா? இவர்களின் சுயரூபம் இப்போது விளங்கியதா? மக்கள் மன்றில் இவா்கள் பேசும் பேச்சுக்கும் இவா்களின் நடைமுறைக்கும் உள்ள தொடர்பு தெரிகிறதா?
இனி அடுத்த தேர்தல் வருகிறது. தங்களை ஒரு சிறந்த முஸ்லிமாகக் காட்டுவதற்கு பெரும் சிறத்தை எடுப்பார்கள். மேடை குழுங்க பேசுவார்கள் இனிமேலும் இவர்களை நம்புவது கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுவதைப் போன்றாகும்.
source: http://rasminmisc.blogspot.com/