கல்விக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்
இஸ்லாத்தின் மூல வேத நூலான புனித மிகு அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டது. ஒன்றே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்குகின்றது. கல்வியை அரசியலை ஆய்வியலை வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான அல்குர்ஆன் வசனங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக அல்குர்ஆனின் 39:09, 17:85 27:52, 29:43, 35:28, 20:114ம் இலக்க வசனங்கள் அல்குர்ஆன் கல்விக்கு அறிவியலுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அவ்வாறே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
o “கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்” (அல்- ஹதீஸ், புகாரி)
o ” ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
o “மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர” (ஹதீஸ்) இவ்வாறு அறிவின், அறிஞர்களின் சிறப்பை வலியுறுத்தும் நூற்றுக் கணக்கான நபி மொழிகள் பாபுல் இல்ம் என்ற ஹதீஸ் பிரிவில் காணப்படுகின்றன.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் கிலாபத் ஆட்சி செய்த நாற்பெரும் கலீபாக்களும், அதன் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமையாக்கள், அப்பாஸிகள், உதுமானிய ஆட்சியாளர்கள் அனைவரும் இஸ்லாம் வலியுறுத்திய கல்விக்கு தமது அரசாங்க செயற்பாடு களினூ டாக உரிய அந்தஸ்தையும், கெளரவத்தையும் வழங்கி வந்தார்கள். முக்கியமாக முஸ்லிம்கள் அனைவ ருமே குர்ஆனை ஒதவும் விளங்கவும் செயற்படுத்தவும் தூண்டப்பட்டார்கள்.
அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக் கள் கலிபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக ‘தாருல் உலூம்’ (அறிவியல் கூடம்) தாருல் ஹிக்மா, பைதுல் ஹிக்மா என்பன போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். இக்கல்வி நிறுவனங்கள், விவசாய, இரசாயனவியல், உயிரியல், புவிவியில், தர்க்கவியல்,கணக்கி யல், மருத்துவம், தத்துவவியல், மிருக வியல் போன்ற “உலூமுல் அக்லிய்யா” என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.
இஸ்லாமிய கல்விநிலையங்களுக்கும் (மத்ரஸாக்கள் தாராளமான நிதி வசதிகளையும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி, புலமைப் பரிசில் களையும் தொடர்ந்து வழங்கி வந்தன. இதன் காரணாக இஸ்லாமிய உலகம் அதன் பொற்காலம் என்ற அறிவியல், அரசியல், பொருளாதார, சமூக மேம் பாட்டு வளர்ச்சியைக் கண்டு உலகில் தன்னிகரில்லாத கெளரவத்தை உலக அரங்கில் பெற்றிருந்தது.
இஸ்லாத்தை உச்சநிலைக்கு கொண்டு வந்ததற்கு, இஸ்லாமும் கலிஃபாக்களும் முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வியலுக்கும் கொடுத்த கெளரவமே காரணம் என நாம் கூறலாம். எப்போது கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய உலகம் படிப்படியாக கைவிடத் தொடங்கியதோ அன்றிலிருந்தே முஸ்லிம் உலகின் அனைத்து துறைகளிலுமான பின்னேற்றம் ஆரம்பமாகிவிட்டதென பிரபல ஆய்வாளர் கலாநிதி உமர் சப்றா குறிப்பிடுகிறார்.
பிரித்தானியாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகள் பூர்வீகத்தை உடையதாகும். பிரபல வரலாற்று ஆய்வாளர் (கி. பி. 817) முகம்மது இப்னு மூஸா அல் கவ்ஸாமி தனது ‘சூறத்துல் அர்ழ்’ எனும் உலகப் படத்தில் ஐக்கிய இரா ச்சியத்திலுள்ள பல இடங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலம், அவர் போன்ற பல முஸ்லிம் ஆய்வா ளர்கள் இந்நாட்டுக்கு 9ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விஜயம் செய்துள்ளமை தெளிவாகின்றது.
அவ்வாறே ஐரோப்பிய நாடுகளுடன் முஸ்லிம்கள் கொண்டிருந்த தொடர்பை நிரூபிக்கும் பல வரலாற்றுத் தகவல்கள் எமக்கு இன்றும் கிடைக்கக் கூடியதாக உள்ளன. உதாரணமாக அங்லோ- செக்சன் மன்னர் ஒப்பா என்பவர் (கி. பி. 796இல் மரணம்) தனது நாட்டு நாணயக் குற்றியில் அல்லாவன்றி வேறு எந்த வணக் கத்துக்குரியவனும் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்ற இஸ்லாத்தின் மூலக மந்திரத்தை பொறித்து வெளி யிட்டதாக பேராசிரியர் றிச்சட்டேவெக்ஸ் குறிப்பிடுகிறார்.
மேலும் ஐக்கிய இராச்சிய மொழிகளில் கலந்துள்ள 600 க்கும் மேற்பட்ட அறபுச் சொற்களையும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஐக்கிய இராச்சியத்தில் முதலாவதாக (1477ல்) அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட கொக்டன் என்பவரது (THE DICTES AND SAYING OF THE PHILOSOPHER) என்ற நூல் அறபு நாட்டில் அறபு மொழியில் அபுல்வபா முபாஸிர் என்பவரால் ‘முக்தாருல் ஹிகம் வ மஹா ஸினுல் கலிம்’ என்ற நூலின் மொழி பெயர்ப்பே என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல ஆதாரங்கள் அறபு நாட்டு முஸ்லிம்களுடனான ஐக்கிய இராச்சியத்தின் தொடர்பை உறுதி செய்கின்றன.
இன்று பிரித்தானியாவில் 58.8 மில்லியன் மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 2 மில்லியன் மக்கள் முஸ்லிம்களாகும். இது மொத்த சனத் தொகையில் 3 வீதமாகும். பிரித்தானியா வில் வதியும் ஏனைய மத, இனத்தவரை விட முஸ்லிம்களின் இளைஞர் ஜனத் தொகை (1/3) (பதினாறு வயதிற்குட்பட்ட) மிக அதிகமானதாகும். 1500 பள்ளி வாயல்கள் ஐக்கிய ராச்சியத்தில் உள்ளன.
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களை பற்றிய நிச் சயமாக கணக்கெடுப்பு எம்மிடம் இல்லா விட்டாலும் சுமார் 3000 குடு ம்பங்களும், 15000க்கு மேற்பட்ட இல ங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ் வதாக (நிச்சயமற்ற) தகவலொன்று கிடைத்துள்ளது.
இந்நாட்டில் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்தே வசித்து வருகின்ற போதும் மிக அதிகமான குடிபெயர்வு 1975ம் ஆண்டிலிருந்தே ஆரம்பமாகியுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சாதாரண காரணங்களே இவ்வதிகரிப்புக்கு காரணமாகும்.
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து 2002ம் ஆண்டில் லண்டன்- ஹரோ நகரத்தில் நிர்மாணித்த மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயிலும், கலாசார நிலை யமும் இலங்கை முஸ்லிம்கள் பரிணாம வளர்ச்சியையும் ஒரு ஒழுங்கமைப்புக்குள் இணைவதையும் காட்டுகின்றன.
இன்று பொதுவாக உலகில் மத சார்பான கல்வி முறைகளும், மதச்சார்பற்ற கல்வி முறைகளும் காணப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இவ்விரண்டையும் இணைத்த கல்வி முறைமை ஒன்றே இஸ்லாத்தின் வழிகாட்டலும், இன்றைய அவசியத் தேவையுமாகும்.
பொதுவாக இன்றைய மேற்குலகக் கல்வி சட்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியாக வகுக்கப்பட்டுள்ளன. மேற்குலகக் கல்வியின் இன்றைய குறிக்கோள், தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டுள்ளது. அது மதசார்பான, சமூக ஒழுக்கவியல் சார்பான எதையும் அக்கறையோடு நோக்குவதில்லை. சர்வதேச ரீதியாக கல்வியை இன்று விருத்தி செய்ய முற்பட்டுள்ள உலக வங்கியும இக்குறிக்கோளையே கல்விப்பணியில் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வியில் நோக்கத்தை அது பின்வருமாறு வரையறுக்கின்றது.
1. ஒழுக்க மேம்பாடு
2. இஸ்லாமிய தனித்துவத்தை- தலைமைத்துவத்தை உருவாக்குதலும் விருத்தி செய்தலும்
3. எம்மைப் படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு பொறுப்புக் கூறல்.
அண்மையில் நடைபெற்ற உலக முஸ்லிம்களின் முதலாவது கல்வி மாநாடு கல்வியின் நோக்கம் பற்றிய மேற்கண்ட குறிக்கோள்களை உறுதிப்படுத் தியுள்ளன. எனவே இஸ்லாமியக் கல்வி என்பது அல்-குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டலில் இறைவனுக்கு மட்டும் அடிபணியும், நாம் இறைவனின் பிரதிநிதி (கலிஃபா) என்ற அடிப்படையில் நிறுவப்பட வேண்டும்.
பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு முஸ்லிம்களும் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலமும் பற்றிய ஒரு நிச்சயமற்ற போக்கிலும் தடுமாற்றத்திலும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக அந்நியர்களின் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் தமது பெண் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் பற்றி அவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
இக்கல்விக் கூடங்களில் காணப்படும் ஒழுக்க சீர்கேடு, பாலியல் துஷ்பிரயோகம் சமய நம்பிக்கையின்மை, கலாசார பாதிப்புகளைப் பற்றி அவர்கள் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இன்று எமது பிள்ளைகள் எதிர்நோக்கும் பாடசாலை சவால்களாவன
1. குற்றம், துப்பாக்கி, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்கள்
2. போதைப் பொருள் பாவனையும் தடை செய்யப்பட்ட ஆண் பெண் உறவுகளும்
3. ஓரினச் சேர்க்கை
4. வறுமை
5. விவாகரத்து
6. குடும்ப பிளவுகளும், ஒரு பெற்றோர் குடும்பமும்
7. இளம்வயது கர்ப்பம் தரித்தல்
8. பாலியல் துஷ்பிரயோகம்
9. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
எனவே ஒவ்வொரு இஸ்லாமிய பெற்றோரும் தமது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர் காலத்துக்காகவும், இஸ்லாமிய இலட்சியத்துடனான அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பின் வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. அதிகாலையில் சுபஹுத் தொழுகையோடு கண்விழித்து பிள்ளைகளைத் தொழப் பழக்குதல்.
2. செளகரியமான சந்தோஷமான குடும்ப வாழ்வுக்கு முயலல்.
3. பிள்ளைகளுக்கு வேண்டிய சகல வசதிகளையும், வாழ்க்கை அமைப்பையும் செய்து கொடுத்தல்.
4. நல்ல கல்வியை ஊட்டுதல்
5. தினமும் பிள்ளைகளோடு சேர்ந்து குர்ஆனை ஓதுதல், அவர்களோடு அதிகமாக காலத்தை செலவிடல்.
6. சிறந்த இஸ்லாமிய வழிகாட்டல் அமைந்த இலக்ரோனிக் சாதனங் களை ஏற்படுத்தி அவற்றை கண் காணித்தல்.
7. இஸ்லாமிய உரைகளை, நிகழ்ச் சியை பார்க்கும், கேட்கும் வசதிகளை செய்து கொடுத்தல்.
இவ்வாறான பல முயற்சிகளை இங்குள்ள பெற்றோர்கள் உடனடியாக மேற்கொள்ளாவிடில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே. நீங்களும் இறைவனிடத்தில் மறுமையில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தொகுப்பு எஸ்.எம். பதியுதீன் (எம்.ஏ) லண்டன்
source: http://dawahworld.com/?p=1238