[ அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் டாக்டர்களை நியமிக்காமலும், தேவையான உபகரணங்களை அமைக்காமலும், மருத்துவக் கல்வியை மாணவர்களின் திறமையின் அடிப்படையில் வழங்காமல் அத்துறையை கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தனியார் துறைக்கு விற்று, அதனால் லட்சக்கணக்கில் கல்விக் கட்டணமாகத் தரும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பு என்ற நிலைமையை ஏற்படுத்திவிட்டு, உயிர்காக்கும் உத்தமர்கள்தான் மருத்துவராக வேண்டுமென்று எதிர்பார்ப்பதைப் போல் பைத்தியக்காரத் தனம் கிடையாது.
நமது நாட்டின் அரசியல் நிலைமை இவ்வாறே தொடர்ந்து இருக்குமேயானால் இத்தகைய குற்றங்கள் பெருகுமேயொழியக் குறையாது. நாம் மூலைக்கு மூலை நின்று கூக்கூரலிட்டாலும் நமது ஆயுள் முழுதும் பேசிக்கொண்டிருந்தாலும் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. – அன்புடன், ஆகிரா ]
[ குறுஞ்செய்திகளிலும், மின்னஞ்சல்களிலும், வலைத்தளங்கிலும் அபாரமாக வளர்ந்து வருவதாக சொல்லப்படும் குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களின் அரசுகள் இந்த நூற்றாண்டில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியைக் கூட துவக்கவில்லையா என்று நீங்கள் கேட்டால் ஹி ஹி ஹி என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.]
மருத்துவக்கல்வி : தமிழகமும் இந்தியாவும்
இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வி, சுகாதார வசதிகளும், பிரச்சினை யில்லாத வாழ்வும் இருப்பது தமிழகத்தில்தான். ஒருமுறை வடநாட்டுப் பயணம் சென்று வருவோருக்கே இந்த விவரம் எளிதில் புரிந்துவிடும். ஆனால், ஊடகங்களும், புதிய அறிவு ஜீவிகளும் அங்கே பார், இங்கே பார் என்று போக்குக் காட்டுகிறார்கள். உண்மையில், நம் தமிழ்நாடு வளர்ச்சிப் போக்கில் எப்படி இருக்கிறது என்பதை மருத்துவக் கல்வியை ஒரு கருதுகோளாக எடுத்துக்கொண்டு நாம் பார்ப்போம். இந்தக் கட்டுரை மருத்துவக் கவுன்சலின் தளத்தில் உள்ள விபரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
அந்த விபரங்களில் சில வழுக்கள் உள்ளன (உதாரணம்: ஸ்டான்லி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட வருடம்). இருந்தாலும் அவற்றைத் திருத்தவில்லை. அத்தளத்தில் உள்ள தரவுகளை அப்படியே பயன்படுத்தியுள்ளேன்.
முதலில், ஒவ்வொரு வருடமும் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.
1944 ஆம் வருடம் வரை வருடந்தோறும் ஒன்று அல்லது இரண்டு கல்லூரிகளே துவக்கப்பட்டுள்ளன. 1946ஆம் வருடம் 5 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கூட வருடந்தோறும் பத்திற்கும் குறைவான கல்லூரிகளே துவக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு விதிவிலக்காக 1963ஆம் ஆண்டு மட்டும் பத்துக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
அதன் பிறகு 1998 வரை வருடத்திற்கு பத்திற்கும் குறைவான கல்லூரிகளே துவக்கப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டிற்குப் பின்னரே வருடத்திற்கு பத்திற்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலே நாம் பார்த்தது, பொதுக்கணக்கு. இனி இந்தக் கல்லூரிகள் யாரால் (அரசு, தனியார், டிரஸ்ட்) துவக்கப்பட்டுள்ளன என்பதை இரண்டாவது வரைபடத்தில் பார்க்கலாம்.
இதில் அரசு, மத்திய அரசு (பாதுகாப்பு அமைச்சகம்), மும்பை மாநகராட்சி, சொசைட்டி, டிரஸ்டி, தனியார், பல்கலைக் கழகம் என்று பிரித்துப் பார்த்தால், முதலில், சுதந்திரம் வரை மெதுவான நிதானமான வளர்ச்சி
1970கள் வரை அரசு கல்லூரிகள் அதிகரிப்பு
1970களில் அதே நிலை
அதன் பிறகு அரசு கல்லூரிகளின் வளர்ச்சி குறைவு
1980 வரை பெரும்பாலும் அரசு கல்லூரிகளே துவக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு அதிக அளவில் தனியார் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
1990க்குப் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அசுர வளர்ச்சி.
தற்சமயம் அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகள் அதிகம் துவக்கப்பட்டுள்ளன என்பதையும் அறியலாம்.
இதையே வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
மூன்றாம் வரைபடத்தில் 1ஆம் எண் இடப்பட்டுள்ள கோடு தனியார் கல்லூரிகளைக் குறிக்கிறது. 2ஆம் எண் இடப்பட்டுள்ள கோடு அரசு கல்லூரிகளைக் குறிக்கிறது.
3ஆம் எண் இடப்பட்டுள்ள கோடு மொத்தக் கல்லூரிகளைக் குறிக்கிறது. ஏற்கெனவே பார்த்த அனைத்து விபரங்களையும் 3ஆம் வரைபடத்தின் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம். அது தவிர இதில் இருந்து 2006ஆம் ஆண்டில் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை அரசு கல்லூரி களின் எண்ணிக்கையை விட அதிகரித்து விட்டது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 134 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதில் அரசு கல்லூரிகள் 34 மட்டுமே.
103 கல்லூரிகள் தனியாரால் துவக்கப் பட்டுள்ளன.
2000ஆம் வருடத்திற்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளில்
ஆந்திரப் பிரதேச அரசு நான்கு கல்லூரிகளையும்
அசாம் அரசு ஒரு கல்லூரியையும்
சட்டீஸ்கர் அரசு இரண்டு கல்லூரிகளையும்
டெல்லி அரசு ஒரு கல்லூரியையும்
கருநாடக அரசு ஆறு கல்லூரிகளையும்
மத்தியப் பிரதேச அரசு ஒரு கல்லூரியையும்
மகாராஷ்டிர அரசு மூன்று கல்லூரிகளையும்
மணிப்பூர் அரசு ஒரு கல்லூரியையும்
பாண்டிச்சேரி அரசு ஒரு கல்லூரியையும்
ராஜஸ்தான் அரசு ஒரு கல்லூரியையும்
தமிழ்நாடு அரசு ஏழு கல்லூரிகளையும்
திரிபுரா அரசு ஒரு கல்லூரியையும்
உத்திரப் பிரதேச அரசு ஒரு கல்லூரியையும்
உத்திராஞ்சல் அரசு இரண்டு கல்லூரிகளையும்
மேற்கு வங்க அரசு இரண்டு கல்லூரிகளையும் துவக்கியுள்ளன.
கடந்த பத்தாண்டு களில் அதிக அளவு அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது தமிழ் நாட்டில்தான்.
சொல்லப்போனால் 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆரம் பிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி களில் 20 சதம் (அதா வது அய்ந்தில் ஒன்று) தமிழகத்தில் ஆரம்பிக் கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில் தமிழகம் 7, ஆந்திரா 4, கர்நாடகம் 6, மகாராஷ்ட்ரா 3 என்று 20 கல்லூரிகள் இந்த நான்கு மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும்போது உங்களுக்கு நமது உள்துறை அமைச்சர் கூறியது (P. Chidambaram told U.S. Ambassador Timothy Roemer that India would have registered higher growth rates if the country had comprised only what are now its southern and western parts) நினைவிற்கு வருகிறதா?
பின் குறிப்பு : குறுஞ்செய்திகளிலும், மின்னஞ்சல்களிலும், வலைத்தளங்கிலும் அபாரமாக வளர்ந்து வருவதாக சொல்லப்படும் குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களின் அரசுகள் இந்த நூற்றாண்டில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியைக் கூட துவக்கவில்லையா என்று நீங்கள் கேட்டால் ஹி ஹி ஹி என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.
source: http://www.unmaionline.com/