Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
[ கோவையிலே 1998ஆம் ஆண்டு ஒரு போலீஸ் ஏட்டு வாய்த்தகராறில் கொலை செய்யப்பட்டு அதன் பின்பு 19 முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டு காவி மதவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களை அப்போது இருந்த ஆளும் கட்சியின் கைலி கட்டாத முஸ்லிம் என அடிக்கடி சொல்லும் பெரியவர் இந்து தீவிரவாதிகள் என சொல்லவில்லை.. மாறாக அங்கே குண்டுகள் வெடித்தபோது அதனைச் செய்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றார்.
அதே போன்று தான் அப்பாவி முஸ்லிம்கள் ஆண்கள், பெண்கள் எனப் பாராது பலரை சிறையில் அடைத்து வேடிக்கைப் பார்த்தார். அப்போது அவர்கள் படும் கஷ்டத்தினை பலர் எடுத்துச் சொல்லியும் அவர் ‘…காதில் சங்கு ஊதுவது போல’ தெரியவில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தன் மகள் சிறையில் வாடுகின்றாளே என நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.
ஒரு முஸ்லிம் உயர் அதிகாரியான என்னை ஓரு வழக்கில் சம்பந்தப்படுத்தி, அந்தப் பெரியவரைக் கைது செய்தபோது அதற்கு பரிகாரமாக மைனாரிட்டி அதிகாரியான என்னை மூன்று மாதம் சிறையில் அடைக்க வழிவகை செய்த கூட்டம் தான் இன்று திகார் சிறை வெயிலாக இருக்கின்றது என்றும், ஊடகங்கள் தங்களுக்கு எதிராக சதி செய்கின்றன என்றும், நீதிபதிகள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் பிதற்றுகின்றார்கள்.
ஆனால் அன்று அப்பாவியான குணங்குடி ஹனீஃபா போன்று பல ஆண்டு சிறையில் வாடிய முஸ்லிம்களுக்கு அவர்கள் எப்பவாவது நீலிக்கண்ணீர் வடித்தது உண்டா? ஏன் அவர்களை வரவழைத்து நோன்புக்கஞ்சிக் குடிக்க அழைக்கும் சமயத்திலாவது வருந்தியதுண்டா? மனம் வராது, ஏனென்றால் முஸ்லிம்கள் வோட்டு வங்கி தன் சட்டைப்பாக் கெட்டில் இருப்பதாக நினைத்ததால் தானே! தக்க நேரத்தில் முஸ்லிம்கள் சரியான பாடம் புகட்டினார்கள் என்றால் மிகையாகுமா?]
மனித உரிமை காக்கும் தீனோரையும், சுதந்திர தியாக செம்மல்களையும் திரையிட்டு மறைத்து விட்டு, இஸ்லாமியர் ஒரு தீவிரவாதக் கும்பல் என்றும், அவர்கள் மக்களின் மனித உரிமைகளை காக்கத் தவறுவர்கள் என்றும் தவறான வாதங்களை உலக வல்லரசு நாடுகளும், இந்துத்துவ தலைவர்களும், அவர்களுக்கு துதி பாடும் பத்திரிக்கை ஊடகங்களும் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் வாதம் அத்தனையும் பொய்யும், புரட்டுகளும் அடங்கியது என்றும் அவர்கள் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்கள் என்ற கேள்வியுடன் இந்தக் கட்டுரை வரையப் படுகிறது.
முதலாம் யுத்தக் காலங்களில் தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை கறுப்பின மக்களுக்கு வெள்ளையரால் மறுக்கப் பட்டது அனைவருக்கும் தெரியும். அங்கே இந்திய வம்சா வழியினர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்து அடிமை போல நடத்தப் படுவதினை அறிந்த மகாத்மா காந்தி அவர்கள் நிற வெறியினை எதிர்த்தும், மனித உரிமைகளுக்காக போராடினார்கள். அவருக்கு உறுதுணையாக இருந்தது முஸ்லிம்கள் என்று பலருக்கு தெரிந்திராது. ‘ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்’ என்ற பழமொழிக்கிணங்க ஒரு சம்பவத்தினை மட்டும் சொல்;லலாம் என நினைக்கின்றேன்.
மகாத்மா காந்தி; வாம்பாத் என்ற இடத்தில் அறப்போராட்டம நடத்திய போது அவருக்கு அருகில் அவரது நண்பர் முகம்மது எசாப் நக்டீ என்பவர் இருந்தார். காந்தியினை வெள்ளை நிற போலீஸ்காரர் ஒருவர் தன் பெல்ட்டினைக் கலட்டி அவரை அடிக்கப் பாய்ந்தார். அந்த பெல்ட்டின் அடியினைத காந்தி மீது படாமல் தன் மேல் அடி விழுவதினையும் பொறுத்துக் கொண்டு, பெல்ட் அடியினை தாங்கிப் பிடித்து அந்தப் பெல்ட்டினையும் அந்த போலீஸிடம் இருந்து பறித்து விட்டார். அந்த பெல்ட் நக்டீயின் மகனிடம் அதனை ஞாபகார்த்தமாக கொடுத்தார். அதன் பின்பு அது அவருடைய பேரன் பாபு நக்டீயின் கைக்கு வந்தது. அந்த பெல்டினை தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிலிப்டன் நகரில் நடந்த விழாவில் பாபு நக்டீ அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்காவின் மகாத்மா நெல்சன் மண்டோலாவிடம் சமீபத்தில் வழங்கினார்.
அந்தப் பெல்ட்டினைப் பார்த்து வியந்த மண்டேலா தான் ஒரு தனி மனிதனிடம்; இருப்பதினை விட ஒடுக்கப் பட்ட மக்களினை அடிக்க நினைத்த நிறவெறி ஆட்சியாளர்களை எதிர்த்து, மனித உரிமையினைக் காத்த ஒரு முஸ்லிம், முகம்மது எசாப் நக்டீயின் புகழினை அனைத்துலக மக்களும் அறியும் வண்ணம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பார்க்கிலுள்ள அகமது கத்ராடா பவுண்டேஷன் மியூசியத்தில் காட்சியாக உள்ளது. ஆகவே தேசப் பிதா என அழைக்கப்படும் அவரை மேலை நாட்டில் காப்பாற்றியவர் ஒரு முஸ்லிம். ஆனால் அவரின் சிலையினை சேதப்படுத்தும் இந்தியர் சிலர் இருக்கும் போது நக்டீ போன்றவர் எவ்வளவோ மேலாக நன்றியள்ள நெஞ்சங்கள் நினைக்க வேண்டாமா?
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ந்தேதி இராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி கொண்டாடுவதினைப் பார்த்திருப்பீர்கள். அந்த சமயத்தில் கலவரம் ஏற்படாமல் தடுப்பதிற்காக ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப் படுவார்கள். நானும் 1998ஆம் ஆண்டு அங்கே பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அங்கு தேவர் நேதாஜி அவர்களின் தேசிய விடுதலைப் போரில் பங்கு பெற்றிருந்தபோது, அந்தப் படைக்கு ஆட்கள் மற்றும் பண உதவி பெறுவதிற்காக பர்மா சென்றிருந்தபோது எண்ணற்ற முஸ்லிம் மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தினையும், தங்க ஆபரணங்களையும் அவரிடம் மலைபோல் குவித்த காட்சியினை ஒரு குறும் படமாக காட்டினார்கள்;;. அதனைப் பார்த்தவர்கள் இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் எந்தளவிற்கு பங்காற்றினார்கள் என்பது புரிந்திருக்கும்.
ஆனால் நான் 1991ஆம் ஆண்டு வட சென்னை சட்டம் ஒழுங்கு டி.சியாக பணியாற்றிய போது ஒரு சம்பவத்தினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கின்றேன். ஒரு காலை நேரத்தில் நான் எழும்பூர் அலுவலகத்தில் இருந்தபோது ஒரு முதியவர் வெள்ளாடை அணிந்து தலையில் கதர் குல்லா அணிந்து மெலிந்த உருவத்துடன் பார்க்க வந்திருந்தார். அவர் ஒரு மனுதார் என நினைத்து என்ன வேண்டும் என வினவினேன். அதற்கு அவர் தன்னை அமீர் ஹம்சா என்றும் நேதாஜி, தேவர் போன்றவர்களோடு இணைந்து முன்னணி வீரராக ஐ.என்ஏவில் பணியாற்றி தன் செல்வங்களை நாட்டு விடுதலைப் போருக்காக பர்மாவில் செலவழித்த போட்டோக்களைக் காட்டியபோது நான் வியப்பில் ஆழ்ந்தேன்.
அவருக்கு தேநீர் வரவழைத்துக் கொடுத்து விட்டு என்னால் அவருக்கு உதவி ஏதும் வேண்டுமா என வினவினேன். அதற்கு அவர் தான் வாடகை வீட்டில் ஏழுகிணறு பகுதியில் குடியிருப்பதாகவும் தான் பல தடவை மனுப் போட்டும் அரசு வீடு கிடைக்க வில்லை என்றார். அவருடைய கோரிக்கையினை நான் பரிந்துரையும் செய்தேன். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் சுதந்திரப் போராட்டத்தியாகி என்று பலர் பல சலுகைகளைப் பெறும் போதும், கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்க மும்பையில் அடுக்கு மாடி வீடு கட்டியதில் வீரர்கள் அல்லாத அரசியல் வாதிகள் பலன் பெற்ற நிலையில், அரசு நிலங்களை தன் மகன், மகள், உறவினர்களுக்குத் தாரை வார்த்த கர்னாடகா பி.ஜே.பி அரசின் முதல்வர் எத்தியூரப்பா இருக்கும் நிலையில,; உண்மையான முஸ்லிம் சுதந்திர தியாகிகளை மதிப்பதிற்க பலருக்கு மனமில்லை. பாகிஸ்தான் பிரிந்த பின்பும், இந்தியா தான் தன் தாய் நாடு என்ற முஸ்லிம்கள் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தப் படுவது ஏன் என்ற கேள்வி உங்களுக்கு எழாமல் இருந்திருக்காது.
சமீபத்தில் மும்யையில் தேவ் என்ற பத்திரிக்கை நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனே மும்பையினைச் சார்ந்த சிவ சேனையும், பி.ஜே.பியும,; அவர்களுக்கு வால் பிடிக்கும் பத்திரிக்கைகளும் அவரைக் கொன்றது முஸ்லிம் தீவிரவாதிகள் என்றனர். ஆனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தேவைக் கொன்றது சிவசேனையினரால் ஆதரிக்கப் படுகின்ற தீவிர வாதி சோட்டா ராஜன் கூட்டாளிகள் என தெரிந்து 8பேர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதே போன்று தான் கோவையிலே 1998ஆம் ஆண்டு ஒரு போலீஸ் ஏட்டு வாய்த்தகராறில் கொலை செய்யப்பட்டு அதன் பின்பு 19 முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டு காவி மதவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களை அப்போது இருந்த ஆளும் கட்சியின் கைலி கட்டாத முஸ்லிம் என அடிக்கடி சொல்லும் பெரியவர் இந்து தீவிரவாதிகள் என சொல்லவில்லை.. மாறாக அங்கே குண்டுகள் வெடித்தபோது அதனைச் செய்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றார். அதே போன்று தான் அப்பாவி முஸ்லிம்கள் ஆண்கள், பெண்கள் எனப் பாராது பலரை சிறையில் அடைத்து வேடிக்கைப் பார்த்தார். அப்போது அவர்கள் படும் கஷ்டத்தினை பலர் எடுத்துச் சொல்லியும் அவர் ‘காதில் சங்கு ஊதுவது போல’ தெரியவில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடிகளை விழுங்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தன் மகள் சிறையில் வாடுகின்றாளே என நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.
ஒரு முஸ்லிம் உயர் அதிகாரியான என்னை ஓரு வழக்கில் சம்பந்தப்படுத்தி, அந்தப் பெரியவரைக் கைது செய்தபோது அதற்கு பரிகாரமாக மைனாரிட்டி அதிகாரியான என்னை மூன்று மாதம் சிறையில் அடைக்க வழிவகை செய்த கூட்டம் தான் இன்று திகார் சிறை வெயிலாக இருக்கின்றது என்றும், ஊடகங்கள் தங்களுக்கு எதிராக சதி செய்கின்றன என்றும,; நீதிபதிகள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் பிதற்றுகின்றார்கள். ஆனால் அன்று அப்பாவியான குணங்குடி ஹனீஃபா போன்று பல ஆண்டு சிறையில் வாடிய முஸ்லிம்களுக்கு அவர்கள் எப்பவாவது நீலிக்கண்ணீர் வடித்தது உண்டா? ஏன் அவர்களை வரவழைத்து நோன்புக்கஞ்சிக் குடிக்க அழைக்கும் சமயத்திலாவது வருந்தியதுண்டா? மனம் வராது, ஏனென்றால் முஸ்லிம்கள் வோட்டு வங்கி தன் சட்டைப்பாக் கெட்டில் இருப்பதாக நினைத்ததால் தானே! தக்க நேரத்தில் முஸ்லிம்கள் சரியான பாடம் புகட்டினார்கள் என்றால் மிகையாகுமா?
பாகிஸ்தான் பிரிந்தபோது கொல்கத்தாவினை விட்டு இடம் பெயர்ந்த ஒரு முஸ்லிம் தான் வசித்த 54ஏ, லோயர் சர்குலர் ரோடு, ஆசார்யா ஜனதீட் சந்தபோஸ் ரோடில் உள்ள வீட்டினை அன்னை தெராசாவிற்கு அனாதை இல்லம் அமைக்க தாரை வார்த்தார். அதுவே இப்போதுள்ள அன்னை தெராசா இல்லமாகும். அது போல யாரும் தாரை வார்த்ததுண்டா?
இந்தோநேசியாவினை பிரித்து கிறித்துவர்கள் உள்ள ஜாவா நாட்டினை கொண்ட தனி நாடாக ஆஸ்திரேலியா உள்பட நாடுகள் அறிவித்தன. அதனால் இந்தோநேசியாவில் உள்ள கிறித்துவர்களை அங்குள்ள முஸ்லிம்கள் கொடுமைப் படுத்தவில்லை. அதே போன்று இன்று கிறித்துவர்களைக் கொண்ட தனி நாடாக தெற்கு சூடான் அறிவிக்கப் பட்டாலும் அதனை வட சூடானில் உள்ள முஸ்லிம்கள் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இங்கே சுதந்திரம் அடைந்து 64ஆண்டுகள் ஆனாலும் முஸ்லிம்களும் இந்த நாட்டு குடி மக்கள் எனக் கருதாது குஜராத்தில் முஸ்லிம்களின் மீது இந்துத்துவா படையினரால் கட்டவிழ்த்தப் பட்ட கொடுமைகள் போன்று நடந்து கொண்டுதான் உள்ளது மறுக்க முடியாது..
ஏன் இஸ்லாமியர்கள் இந்த நாட்டு குடிமக்களில்லையா? ஏன் முஸ்லிம்கள் இந்திய சுதந்திர வரலாற்றில் பங்கு பெற்று மேலே கூறப்பட்டது போன்ற தியாகங்கள் செய்யவில்லையா? ஏன் சுதந்திரமடைந்த பின்பு வலுவான இந்தியாவினை உருவாக்க மவுலானா அப்துல் கலாம் ஆசாத், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்கள் உழைக்க வில்லையா? பின் ஏன் இந்த பாகுபாடு இந்துத்துவா பாவிகள் மனதில்? நெஞ்சம் பொறுக்க வில்லையே என் சொந்தங்களே அந்த நிலைகொட்ட மாந்தர்களை நினைக்கும்போது என்றால் சரியாகுமா?
மேலை நாட்டினரால் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் நடத்தப்படும் தாக்குதலால் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் அப்பாவி மக்கள் இறந்து விட்டார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஈராக்கில் அமெரிக்கா படை நுழைந்தபோது தலை மறைவாக அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மாவீரன் சதாம் ஹ_சைன் தன் மறைவிடத்திலிருந்து அனுப்பிய செய்த்pயில் என்ன சொன்னார் தெரியமா?
“ஈராக்கில் போர் தொடுத்திருக்கும் அமெரிக்க படைகள் மீது எந்த தாக்குதலிலும் ஈடுபடாதீர்கள். மக்கள் சுன்னி, ஷியா என்ற வேறுபாடு கொண்டு ஒருவொருக்கொருவர் தாக்கிக் கொண்டு மடியாமல் ஒற்றுமையுடன் வாழுங்கள் என்றார்” இது எதனைக் காட்டுகின்றது என்றால் இஸ்லாம் போதித்த அகிம்சை, சகோதரத்துவம் போன்றவைகளை அவர் ஆட்சி செய்து மக்களை நல்வழி படுத்தியதோடு மட்டுமல்லாமல் எதிரி படை தன் நாட்டினை பிடித்தாலும் அவர்களை தாக்க வேண்டாம் என ஆணையிடவில்லையா? ஆனால் லிபியாவில் முஸ்லிம்களுக்குள்ளே போராட ஒரு பிரிவினரை ஏவிவிட்டு அவர்களுக்கு சுதந்திர வீரர் உமர் முக்தார் போன்றவர்களை தூக்கிலிட்ட இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆயுதங்கள், பண உதவி செய்வதேன்? இதுதான் மேலை நாடுகள் போதிக்கும் மனித உரிமையா? அல்லது மேலை நாடுகள் மீறும் மனித உரிமையா?
ஆகவே இஸ்லாமியர்களின் தியாக வரலாறு, மனித உரிமை காத்தல், சமூக ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தல், ஜனநாயக மரபுகள் பின்பற்றல், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு மற்றவர்களுக்கு சலைத்தவர்களல்லர் என சமுதாய இயக்கங்கள் மூலம் பறை சாற்றுவோமா?