Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே!

Posted on July 6, 2011 by admin

ஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவர்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்.

   RASMIN M.I.Sc   

இன்றைய நவீன உலகை ஆளும் தகுதி படைத்த ஒரே வார்த்தை இஸ்லாம் மாத்திரமே!

எந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு.

இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களை கூட தன் தூய கருத்தினால், உண்மை செய்திகளினால் உள்ளிழுத்து நேர்வழியின் பக்கம் அவர்களை கொண்டு வந்த சத்திய மார்க்கம் தான் இந்த இஸ்லாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை இஸ்லாத்தை எத்தனையோ சக்திகள் அழிக்க நினைத்த போதும்,இறுதியில் இஸ்லாமே வெற்றிவாகை சூடியுள்ளது.

இன்று வல்லரசுகள் என்று தங்களை மார் தட்டிக் கொள்ளக் கூடிய எத்தனையோ நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக காய் நகர்த்தினாலும் அந்த நாடுகளில் இஸ்லாம் கிளை விடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. 

  இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.  

கடந்த காலங்களை விட தற்போது இஸ்லாத்தின் பக்கம் வருபவா்களின் எண்ணிக்கை பண்மடங்காக உயர்ந்துள்ளது.

அதே போல இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களை தட்டிக் கேட்கும் மனப்பாங்கும் மக்கள் மத்தியில் துளிர் விட்டுள்ளது.

பிரித்தானியா போன்ற நாடுகளில் இதுவரை எந்த மதமும் பெறாத அபார வளர்ச்சியையும் வரவேற்பையும் இஸ்லாம் கண்டுள்ளது.

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தில் நுழைந்த மேற்கத்தைய மக்கள் தற்போது லட்சத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

கிருத்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ ( LOSSERVATOR ROMMANO ) என்ற பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக சனத்தொகையில் 4ல் ஒருவா் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லீம்களும் 24 சதவீதம் கத்தோலிக்கர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லீம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிருத்தவா்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) குறிப்பிடுகிறது.

அதேபோல் வல்லரவு நாடுகளில் பொதுவாக வருடத்திற்கு 15 புதிய பள்ளிவாயல்கள் கட்டப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

  கருப்பின மக்களை அதிகம் கவரும் இஸ்லாம்  

ஜாதி,மொழி,நிறம் என்று பாகுபாடு காட்டும் மதங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பலா் இன்று தூய கொள்கையின் பால் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளி்ல் கருப்பினத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு காட்டப் படுவதின் மூலம் மனதுடைந்து , வாழ்கையையே வெருக்கும் அளவுக்கு தள்ளப் பட்ட மக்களுக்கு உண்மையான தெளிவை இஸ்லாம் கொடுத்து மனிதனை மனிதனாக வாழ வைப்பதே இதற்கான காரணமாகும்.

ஐரோப்பா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் அதிகமாக இளம் வயதினரே இஸ்லாத்தை தழுகிறார்கள் என்ற செய்தி அந்நாட்டு கிருத்தவத் தலைவர்களின் வயிறுகளில் புளியைக் கரைத்துள்ளது.

இளம் வயதிலேயே இஸ்லாத்தினால் ஈர்க்கப் படும் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பெண்கள் தாங்கள் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப் பட்டதற்கான காரணமாக ஹிஜாபைத் தான் தெரிவிக்கிறார்கள்.

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் கல்லூரிகளில் கல்வி கற்கும் இஸ்லாமியப் பெண்களுக்கு ஹிஜாப் அணிய தடை விதித்து சட்டம் இயற்றியதும் அதை எதிர்த்து அவா்கள் குரல் கொடுத்ததும் அணைவரும் அறிந்ததே!

ஹிஜாப் அணிய வேண்டி நீதிமன்றம் சென்று வழக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லீம் சகோதரி சபீனா

ஹிஜாப் அணிய தடை விதித்தற்காக நீதி மன்றங்கள் வரை சென்று வழக்கில் வெற்றி பெற்று கொண்ட கொள்கையை நிலை நிறுத்திய சகோதரிகளும் இந்நாடுகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தாலி போன்ற நாடுகளில் பல சகோதரர்கள் குடும்பமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அங்குள்ள அரச குடும்பத்தை சேர்ந்தவர்களே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதும் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தை சிந்திக்க வைத்துள்ளது.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனையோ தடைகளை விதித்தும், அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி இஸ்லாம் வீறு நடை போடுவது தமக்கு வியப்பை ஏற்படுத்துவதாக ரோமன் கத்தோலிக்க முன்னனி அறிஞரான விக்டோரியா பார்மன்டி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  மூடப்படும் தேவாலயங்களும், திறக்கப் படும் பள்ளிவாயல்களும்  

வட அமேரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் நாளாந்தம் பல தேவாலங்கள் மூடப்படுகின்றன.

அதில் அநேகமானவைகள் இரவு நேர கலியாட்ட நிலையங்களாகவும், பார்களாகவும் மாற்றப் பட்டுள்ளன.

சில தேவாலயங்களை முஸ்லீம்களே முழு நேர வாடகைக்கு வாங்கி பள்ளிகளாக அவற்றை பயன்படுத்தி வருகின்றனா். இங்கிலாந்தின் மின் செஸ்டர் ஜும்மா பள்ளியும் ஏற்கனவே தேவாலயமாக இயங்கிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து உருவாக்கப்பட்டதே.

  கடந்தாண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிக முக்கியமானவர்கள்.

இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து பள்ளிவாயல்களின் மினாராக்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தவருமான சுவிஸ் நாட்டை சேர்ந்த டேனியல் ஸ்ட்ரீக் கடந்தாண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் முழு சுவிஸ் மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அணைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதே நேரம் நான்கு பள்ளிகள் மாத்திரமே இருந்த சுவிஸ் நாட்டில் ஐந்தாவது பள்ளியாக தனது சொந்த செலவில் ஒரு பள்ளியை நிர்மானிக்க ஆரம்பித்தார்.ஐரோப்பாவிலேயே மிகவும் அழகான பள்ளியாக அதனை கட்டி முடிப்பதே அவரின் லட்சியம் என்றும் அவா் தெரிவித்திருந்தார்.

அதே போன்று பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் டோனி பிலேயரின் மணைவியின் தங்கையான இன்லா அவா்கள் இஸ்லாத்தை தழுவியது பலரை ஆச்சரியத்தைில் ஆழ்த்தியது

லண்டனில் 1967 ஆம் ஆண்டு பிறந்த லாஉரன் பூத் ( Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். இவர் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் வைத்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.

source: http://rasminmisc.blogspot.com/2011/01/blog-post_23.html 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

59 − 51 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb