திருமணம், அன்பு, பாலியல்!
ஓர் ஆரோக்கியமான குடும்பம் அமைவதற்கு மூன்று பிரதான விஷயங்கள் அடிப்படையானது ஆகும். அவை:
1. திருமணம்
2. அன்பு
3. பாலியல்
இந்த மூன்றும் இயற்கையில் இறைவனால் இணைக்கப்பட்டவை. இவற்றை ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கும் போது ஏன் என்ற விளக்கம் தனியே பொலிவு பெறும். இதன் முக்கியத்துவம் தெரிய வரும். வாழ்க்கை பாதையில் இம்முன்றும் பின்னிப்பிணைத்தே இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று கூட அடையப்படாவிட்டால் குடும்ப வாழ்வு குழப்பமடைந்ததாக மாறிவிடும்.
01. திருமணம்
ஓர் ஆணும் ஓர் பெண்ணும் அன்பில் ஒன்றித்து வாழும் சமூக அமைப்பே குடும்பம் ஆகும். மாறி வரும் சமுதாய சூழலில் குடும்பம் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் மணவாழ்வின் அடிப்படை நோக்கம் நிறைவு செய்யப்பட வேண்டும். திருமணத்தின் நோக்கமே தெளிவில்லாத போது நோக்கத்தின் படி வாழ முடியாது. எனவே நான் யார்? என்னுடைய குணநலன்கள் என்ன? என்று அறிந்து கொள்ள வேண்டும். குடும்பம் தான் சமுதாயத்திற்கு அடித்தளம். சமூக கண்ணோக்கில் திருமணம் என்பது ஆண் பெண் இருவர் ஒருமனப்பட்டு ஓரளவிற்காவது ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து உறுதியாக இறுதி வரை இணைந்து வாழ்வோம் என்று சமுதாயத்தில், சமுதாயத்தோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம் மட்டுமல்ல இறைவனோடும் எற்படுத்திக் கொள்ளும் புனித உடன்படிக்கையாக நோக்கப்படுகின்றது.
திருமண சடங்கில் இருமனங்கள் இணைவது மட்டுமன்றி இவ்விருமன ஒன்றிப்பினால் இருபெரும் ஆறுகளாக திகழும் இருவேறு குடும்பங்களும் சங்கமம் ஆகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் இணைந்திருக்க இருவரும் இசைகின்றனர். எனவே இவ்வாறு புனிதத் தன்மை வாய்ந்த திருமணமானது திருமணத்திற்கு முன்னரான பாலியல் தொடர்பினால் களங்கம் அடைவதுடன் அவர்களின் மனதில் பல உளத்தாக்கங்களையும் எற்படுத்துகின்றது. எனவே,
இவ்வாறான தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு திருமணம் பற்றிய அர்த்தத்தை அறிவது இன்றியமையாத ஒன்றே. திருமணம் தொடர்பான விஷயங்களை உள்வாங்குவதன் மூலம் திருமணம் பற்றிய விழிப்புணர்வை நமது இளம் சந்ததியினர் மத்தியில் ஏற்படுத்துவதன் ஊடாக வாழ்வை மேன்மையடையச் செய்ய முடியும்.
02. அன்பு
அனைத்து சமயங்களிலும் அன்பானது முக்கியத்துவப்படுத்துப்பட்டு கூறப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் அன்பு செய்யும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளனர். அன்பு இரு வகையாக பிரிக்கலாம்.
1) ஆளுகின்ற அன்பு
2) ஆட்பட விரும்புகின்ற அன்பு
ஆளுகின்ற அன்பு
ஆளவிரும்புகின்ற அன்பு தன்னலம் மிக்கது, பிறரை தமது நலன்களை அடைய பயன்படுத்தும் அன்பு ஆகும். கட்டிளம்பருவத்தில் ஏற்படக்கூடிய பெரும்பாலான காதல் உறவு இவ்வாறான ஆளுகின்ற அன்பை அடிப்படையாக கொண்டு எழுகின்றது. இது உடற்கவர்ச்சியாலும் பாலுணர்வு உந்தல்களாலும் உருவாகின்ற ஒன்றாகும். இவை இறுதியில் திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பிற்கு இட்டுச் செல்வதுடன் அவர்களின் புனிதமான கற்பை களங்கம் செய்வதாகவும் அமைந்து விடும்.
ஆட்பட விரும்புகின்ற அன்பு
இந்த அன்பு தியாகம் மிக்கதும் பரிவு மிக்கதும் ஒவ்வொருவருடைய உணர்வை மதிப்பதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து திருமண பந்தத்தில் இணைந்து வாழவும் வழி செய்வதுடன் ஒருவரை முழுமையாக்குகின்றது.
அன்பு வெறும் வெளிப்படையான கவர்ச்சி வாழ்க்கையிலோ அல்லது வளர்ச்சியிலோ அல்லது உதட்டளவிலோ “நான் உன்னை அன்பு செய்கின்றேன்” என்று சொல்வதிலோ அன்பு வந்து விடுவதில்லை மாறாக அன்பு என்பது ஒர் உயர்ந்த உறவாகும். இந்த அன்பு என்னும் உறவு கணவன் மனைவியிடையே வளர வேண்டுமாயின் ஒருவர் இன்னொருவர் மீது தன்னலமற்ற ஈடுபாட்டை வெளிப்படையாக மட்டுமன்றி உள்ளுணர்வுடனும் காட்ட வேண்டும். குடும்பத்தில் தாம்பத்திய உறவின் முக்கியத்துவத்தை அன்பு தீர்மானிக்கின்றது.
திருமண அன்பினால் குடும்பத்தில்; அல்லது தாம்பத்திய வாழ்வில் எற்படும் நன்மைகள்
o. தனிமையை போக்குகின்றது.
o. இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கின்ற மனநிலை.
o. ஆழ்ந்த உறவிற்கு நம்மை கொண்டு செல்கின்றது.
o. ஆளுமை வளர்ச்சிக்கு வழி செய்கின்றது.
o. புத்துயிர் கொடுக்கும் அன்பாக மாறுகின்றது.
தீர்வுகள்
திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பு தாம்பத்திய வாழ்வை பாதிக்கின்றது என்பது ஆய்வின் மூலம் தெளிவாகின்றது. பாதிக்கப்பட்டோர் குடும்ப உறவில் அன்பை பொருத்தமான முறையில் வெளிபடுத்த முடியாதவர்களாகவும், அன்பை எற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும்
காணப்படுகின்றனர். இதற்கு காரணம் தாம் தவறு இழைத்து விட்டோமே தமது வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு அவர்களது வாழ்வில் குழப்பத்தை எற்படுத்துகின்றது.
குடும்ப உறவில் அன்பு வலுப்பட
o. ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்து செயற்படல்.
o. ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.
o. தனித்தன்மையை இணைந்த அன்பிலும் இடைவெளிகள் இருக்க வேண்டும். அப்Nபுhது தனித்தன்மை சிறப்பு பெறும்.
o. ஒருவர் கொண்டுள்ள ஈடுபாட்டில் மற்றவர் அக்கறை காட்டி அதில் வெற்றி அடையச் செய்தல்.
o. பாராட்டும் குணத்தை வளர்த்தல.
o. ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபடலும் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்தலும்
03) பாலியல்
அன்பும் பாலியல்பும் நெருங்கிய தொடர்பு உடையன. ஆயினும் இரண்டும் ஒன்றல்ல. ஆனால் நம்மில் பலர் இரண்டு ஒன்று போலத் தான் கருதுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் இல்லற தன்மையையும் இனப்பெருக்கச் செயலையும் இணைத்துப் பார்ப்பது தான். இதற்கு காரணம் நமது பண்பாட்டில் பாலியலை இனப்பெருக்கச் செயலோடு மட்டுமே தொடர்பு படுத்தி வந்திருப்பது தான். இது உண்மைதானா? என்று ஆராயப்பட வேண்டிய ஒன்றே.
செக்ஸ் என்றதுமே சமுதாயத்தில் பலருக்கு குறகிய கண்ணோட்டதில் தான் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் செக்ஸ் என்பது படுக்கையறை பின்ணனியை மட்டும் வைத்து புரிந்து கொள்ள வேண்டிய குறுகிய அர்த்தம் உள்ள சொல் அல்ல. அது மிகவும் பரந்த அர்த்தமுள்ள ஒரு சொல். ஓர் ஆண் பெண்பாலாரோடு பழகினாலோ பேசினாலோ அல்லது ஒரு பெண் ஆண்பாலாரோடு Nபுசினாலோ பழகினாலோ அதுவும் ஓர் பாலியல்பு சார்ந்த செயற்பாடு ஆகும். ஒர் ஆண் பெண்ணை பாசத்தோடும், பரிவோடும், பார்த்தாலும,; பழகினாலும், அது ஒர் பாலியல்பு செயற்பாடு ஆகும். இத்தகைய பாலியல்பு எல்லா நேரமும் இனப்பெருக்க உறுப்புக்களைத்தான் தொடர்புபடுத்துகின்றதா? உறுதியாகவே இல்லை. சிலர் உடல் இன்பத்தையம் பாலியல்பையும் சமனாக கருதுகின்றனர். ஆனால் இவற்றை இரண்டு வகையாக ஆராயலாம்.
1) உணர்வார்ந்த பாலியல்பு.
2) உடலுறவு பாலியல்பு.
உணர்வார்ந்த பாலியல்பு
உணர்வார்ந்த பாலியல்பு என்பது விரிவாக நோக்கப்பட வேண்டிய ஒன்று. மனிதர்களின் எல்லா வகையான உறவு முறைகளில் எல்லாவிதமான வாழ்வு நிலையிலும் இது செயற்படத்தான் செய்யும். ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும் போது ஒரு வித கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். அது போலவே ஒரு பெண் ஒரு ஆண்ணைப் பார்க்கும் போது ஒருவித ஈர்ப்பை உணரலாம் இது தவறல்ல. ஆனால் அந்த ஈர்ப்பை சுற்றி எந்த விதமான மனப்போக்கை நோக்கத்தை எண்ண ஓட்டத்தை அனுமதிக்கின்றோமோ அதற்கேற்ப இயல்பாக எழுந்த உணர்வு வெவ்வேறு வடிவத்தைப் பெறும் இது அன்பின் பரிமானமாக பரிமளிக்கின்றதா? காதல் உறவில் ஈடுபடுவோர்களுக்கிடையே எற்படுகின்ற ஈர்ப்பானது அவர்களில் எற்படும்; எண்ணம், மனப்போக்கு உணர்வு, நோக்கம் போன்றவை திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பை தீர்மானிக்கின்றது.
உடலுறவுப் பாலியல்
உணர்வார்ந்த பாலியல்பு பலவகைப் பரிமானங்களை கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்றுதான் உடலுறவு பாலியல்பு ஆகும். இவை திருமணம் என்கின்ற கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். இங்கு ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பிறக்கின்ற பிள்ளையை பேணிப் பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும். திருமணத்திற்கு முன்பு உடலுறவு பாலியல்பிற்கு இடமளிப்பதனால் திருமணத்தின் பின்னரான அன்புறவில் சிக்கலை ஏற்படுத்துவதனால் அவர்களின் குடும்ப வாழ்வு குழப்பமடைகின்றது.
திருமண உறவு என்பது உடலுறவு கொள்வதன் நோக்கமல்ல. அன்புறவில் இருவர் ஐக்கியத்தால் ஒருவர் ஆவதே இதன் நோக்கமாகும்.
உடலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முன்பான பாலியல் தொடர்பானது அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இளவயது கர்ப்பம், கருச்சிதைவு, போன்றவற்றுடன் பாலியல் தொற்று நோய்களும் ஏற்பட வாய்புண்டு. அவ்வாறான நிலைமைகளில் அவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்களது இரகசியத்தன்மையும் பேணப்படவேண்டும். எனவே யாழ் போதனா வைத்தியசாலையானது பொருத்தமான வைத்தியசாலையாகும்;. பாலியல் தொற்று நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் தென்படின்
o. பாலுறுப்பக்களில் இருந்து மஞ்சள், வெள்ளை பாயம் வெளியேறல்.
o. சிறு நீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி அடிவயிற்றில நோ பாலுறுப்புக்களில் கொப்பளங்கள் காணப்படல்.
உளவியல் தொடர்பான பிரச்சினைகள்
திருமணத்திற்தகு முன்பான பாலியல் தொடர்பானது உளவியல் ரீதியில் பல்வேறு பட்ட உள சமூக தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. வேலையின்மை, வேலை ஸ்தலத்தில் மற்றும் குடும்பத்தில் மதிப்பிழப்பு அன்புக்குரியவரின் இழப்பு போன்றவற்றால் மற்றவர்களுடனான உறவில பிரச்சினைகள் எற்படுகின்றது. மதுவிற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படுகின்றது. உள சமூகப் பிரச்சினைகளை பின்வருமாறு கையாளலாம்.(உள ஆற்றுப்படுத்தல்)
o. அவர்களின் கதையை செவிமடுத்தல்
o. சாந்த வழிமுறைகளை கற்பித்தல்
o. குடும்ப சமுதாய ஆதரவுகளை திர்ட்டல்
o. சமுதாய வளங்களைப்பயன்படுத்தல் இவற்றுடன் குழுச் சிகிச்சை நடத்தை சிகிச்சை முறை மூலமும் அரச அரச சார்பற்ற நிறுவனங்ளின் மூலமும்
நெருக்கீட்டை கையாளும் முறை
பாதிப்பான சம்பவங்களையும் அதனூடக வருகின்ற உடல் உள குடும்ப, சமூக விளைவுகளையும் தாம் இலகுவாக தாங்கிக் கொள்ளவும் அவற்றை சாதகமாக கையாளக்கூடிய வழிமுறைகளை தாங்கிக் கொள்ளலாம். சாதாரண மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட இடர்பாடுகளினால் எங்களில் நெருக்கீடு ஏற்படலாம் என்பதனையும், அதன் காரணமாக மேலே பார்த்த சில – பல விளைவுகள் ஏற்படலாம் என்பதனை அறிந்துணர்ந்து ஏற்றுக் கொள்வதே மிகப் பயனுடைய முதற்படியாக இருக்கும். ஆகவே இவ்வாறான அறிவை தகவலை சரியான முறையில் வழங்குவதே உளக் கல்வியூட்டலின் முக்கிய பங்காக அமைந்திருக்கும்.
நெருக்கீடுகளை கையாளும பொழுது பொதுவாகப் பாவிக்கப்படுகின்ற, பாவிக்கப்படக்கூடிய சில நடைமுறைகளைப் பார்ப்போம்.
உணர்வு மரத்துப் போதல்
இந்நிலையில் நடந்து போன சம்பவங்கள் மனதால் உணரப்படுவது தாமதமாகும். மனம் விறைத்து போய் உணர்ச்சியற்றதாய் இருக்கும்;;. நடந்து முடிந்த சம்பவங்கள் உண்மையற்ற கனவு போன்ற ஒன்றாக தோற்றமளிகக்கும் அதிர்சச்pயான சம்பவங்களை ஆரம்பத்தில மனம் தாங்ககுவதற்குத இது உதவி செய்யும். எனவே இவ்வாறான நேரங்களில் அவசரப்பட்டு நடந்து சம்பவங்கள் பற்றி விபரிக்குமாறு அவரை கேட்காது விடலாம்.
அதீத செயற்பாடு
ஓர் இடத்தில் ஓய்வாக இருக்காமல் குடியாட்டமாக இருக்கும் நிலையாக இது இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் ஒருவர் திருப்தியை அனுபவிக்கலாம். எனினும் அதிக துடியாட்டங்கள் சில வேளைகளில் உண்மையான தேவைகளை விட வேறு அலுவல்களில ஈடுபடவும் வைக்கலாம்.
உணர்வு மரத்த நிலை, அதிகரித்த செயற்பாடுகள் என்பன அளவுக்கதிகமாக இருக்கின்ற போது நெருக்கீட்டின் பாதிப்பபுக்ளில் இருநக்து குணமடைவது தாமதம ஆகலாம். எனவே பொருததமான வேளைகளில இவை எல்லை மீறாது பார்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல்
படிப்படியாக உண்மை நிலையை ஏற்றுக கொள்ள பழக வேண்டும். நடந்த சம்பவங்களை நண்பர்கள், உறவினர்களுடன் கதைத்தல், மனதை அசுவாசப்படுத்தி உண்மை நிலை சம்பந்தமான ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்கு உதவி செய்யும்.
மீள நினைந்திடுதல்
நடந்த சம்பவங்களும் நெருக்கீடுகளும் ஒருவரது மனதை பாதிப்பதனால் அந்த சந்தர்ப்பங்களைப் பற்றி திரும்பத்திரும்ப கதைப்பது நினைப்பது மற்றும் கனவு காண்பது என்பன ஏற்படலாம். மீளமீள வெளிப்படுத்துவதன் ஊடாக மெல்ல மெல்ல ஒருவரது மனம் பாதிப்பான சம்பவங்களை ஏற்றுக் கொள்ள தொடங்குவர்.
ஆதரவான சூழல்
இது மிகவும் முக்கியமானது மற்றவர்களின் சரீர, மன ஆதரவுகளை ஏற்றுக் கொள்ளுதல் ஒருவருக்கு மன அமைதியை தரக் கூடியது. அவர்களைப் போலவே பாதிப்படைந்தவர்களுடன் அளவளாவுவதும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் நன்மை பகிர்க்கும். இதன் மூலம் மனதின் பாரங்கள் குறைவதுடன் குழு ஆதரவும் நெருங்கிய உறவுகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
தனிமையும் ஓய்வும்
ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளை கையாண்டு அதிலிருந்து மீள்வதற்கு அவருக்கு போதியளவு ஓய்வு தேவைப்படும். சில வேளைகளில் சிலர் தேறுவதற்கு தனிமையான ஒரு சூழலில் இருப்பது அல்லது நெருக்கமான ஒருவருடன் இருப்பது உதவி புரியலாம்.
சாந்த வழிமுறைகள்
ஒருவரில் எற்படுகின்ற உடல் உள சிக்கல்கள் பலவற்றில இருந்து விடுபடுவதற்கு சாந்த வழிமுறைகள் துணைபுரிகின்றன. சுவாசத்தை ஒழுங்காக வயிற்றுத்தசைகளை பாவித்து எடுத்து விடுதல் உடலின் உறுப்புக்களை படிப்படியாக தளர விடுதல் என்பனவும், இயற்கையை இரசித்தல், இனிய நினைவுகளில ஆழ்ந்திருத்தல் போன்றன மனதை சாந்தப்படுத்த உதவி செய்யும்.
வளமைக்கு திரும்புதல்
ஆரம்பத்தில ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு பல்வேறுபட்ட உணர்ச்சி கலவைகளுக்குள் ஆளாகின்ற வேளையிலும் மெல்ல மெல்ல வழமையான பணிகளை ஆரம்பித்தல் பிரியோசனம் உடையதாகும்.
பொறுப்புக்களை ஏற்றல்
தான் வகிக்க வேண்டிய பாகங்களுடைய பொறுப்பை ஏற்று செயற்படத் தொடங்குதல் அவசியமானதாகும்.* மனம் ஆறுதல்
மனதின் காயங்களினால் ஏற்படுகின்ற நோவை மாற்றுவதுடன் அவரை முன்னரை விட உறுதியானவராக ஆக்கி விட உதவுகின்றது. ஆனால் சிலவேளைகளில் நெருக்கீட்டின் தாக்கங்கள் மனதின் வடுக்களாக மாறி விடுகின்றன. அத்துடன் அவர்களின் ஆளுமையில் செல்வாக்கும் செலுத்தக் கூடும்.
நெருக்கீட்டை சமூக மட்டத்தில் கையாளுதல்
பாதிக்கப்பட்டவர்களின் நெருக்கீடுகளை கையாளுவதில் சமூக ரீதியிலான பல செயற்பாடுகள் உதவி செய்கின்றன. சமூக நடவடிக்கைகளில் காணப்படும் மக்களின் ஒன்று சேர்கின்ற மகிழ்ந்திருக்கின்ற தங்கள் அனுபவங்களை பகிர்கின்ற போது ஏனையவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்ற என்பதை புரிந்து கொள்ளுகின்ற மற்றவர்களின் ஆறுதலை, அனுதாபத்தை பெறுகின்ற தன்மைகள் சமூக அணுகுமுறையில் பிரதான பங்கு வகிக்கின்றன. அவையாவன
1. பாரம்பரியமான நிகழ்வுகள்
2. விளையாட்டுக்கள்
செய்ய வேண்டியவையும் செய்ய வேண்டாதவையும்
o. உணர்ச்சிகளை அடக்கக் கூடாது அவற்றை வெளிப்படுத்தி விடுதல் நன்று
o. நடந்த விஷயங்களைப் பற்றி கதைப்பதை தவிர்க்க முயல வேண்டாம்
o. தங்கள் பிரச்சினைகளையும் மன உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டாம். பொருத்தமான நேரத்தில அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி அதனை ஊக்குவித்து அதற்கான ஆதரவையும் ஓத்துணர்வையும் வழங்கலாம்.
o. சம்பவஙக்ள் பற்றிய நினைவுக்ள நீங்கி விடும் என்று எதிர் பார்க்க வேண்டாம். எங்களின் உணர்வுக்ள எங்களுடன் நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடியவை.
o. நித்திரை, ஓய்வு, சிந்தித்தல், சார்ந்த வழிமுறைகள் போன்றவற்றிற்கு போதியளவு நேரம் ஒதுக்குதல் நல்லது.
o. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போதியளவு நேரத்தை ஒதுக்குதல் நல்லது.
o. சடுதியாகவே எற்பட்ட மாறுதல்களுக்கு பிறகு மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் திரும்புதல் நல்லது இல்லையேல் படிப்படியாக தங்கி வாழும் நிலை ஏற்படும்.
o. நம்பிக்கை இழத்தலை தவிர்த்தல் வேண்டும். சிறிய இலக்குகளை வெற்றி கொள்ளுதல், தன்னம்பிக்கையை வளர்க்கும்
o. மது, மருந்து துர்பாவனைக்குத அடிமையாகாதவாற இருத்தல் வேண்டும் ஓய்வு நேரங்களில பயனள்ளவாறு கழித்தல் வேண்டும்.
o. உளப்பாதிப்புக்கள் இருந்தால் மறைக்க வேண்டாம் தகுந்த உள ஆற்றுப்படுத்துனரை நாடவும்
நன்றி: இளையநிலா இணையம்