o ஐந்து வேளைத் தொழுகை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கடமையாக்கப்பட்டது என்றாலும், தொழ வேண்டுமென்பது ஆதி நாளிலிருந்தே விதியாக்கப்பட்டு விட்டது.
இஸ்லாத்தில் என்றுமே தொழுகை ஃபர்லாக்கப்படாமலிருந்ததில்லை என்பது வெளிப்படை. திருக்குர்ஆனை அணுகும் முறை கட்டாய அம்சமாகி விட்டதாலும், குர்ஆன் அருளப்பட ஆரம்பித்ததும் அதை மனப்பாடம் செய்யும் மரபையும் முஸ்லிம்கள் மேற்கொண்டனர். குர்ஆனின் திருவசனங்கள் அருளப்பட அருளப்பட முஸ்லிம்கள் அவற்றை மனனம் செய்துகொண்டே வந்தனர். எனவே அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று: அது அருளப்பட்டதும் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எழுதத்தெரிந்த தோழர்களைக் கொண்டு அதனை ஈச்ச இலைகளிலும், எலும்புத்துண்டுகளிலும், மரப்பட்டைகளிலும் எழுதச் செய்தார்கள்.
இரண்டு: குர்ஆன் அருளப்பட்டதும் பத்து, இருபது பேர் மட்டுமல்ல; நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏன், இலட்சக் கணக்கான மக்கள் தம் இதயங்களில் அதனைப் பதிய வைத்துக் கொண்டனர். அத்திருவசனங்களை இதயத்தில் செதுக்கி வைத்ததுபோல் மனப்பாடம் பண்ணிக் கொண்டனர். எந்த விஷமியும் எள்ளளவும் இதில் மாற்றம் செய்யவோ, அழிக்கவோ இயலாத வகையில் திருக்குர்ஆன் முழுக்க முழுக்கப் பாதுகாக்கப்பட்டது.
நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூவுலகைவிட்டுப் பிரிந்த பின்னர் “இர்த்திதாத்’ கொள்கை மாறுபாட்டில் இறங்கி மார்க்கத்தை மீறும் விஷயம் தலை தூக்கிற்று. இதனைத் தடுத்து நிறுத்தும் பணியில் அண்ணலாரின் தோழர்கள் கடினமான போர்கள் புரிய வேண்டியதாயிற்று. பெருமானாரின் அன்புத் தோழர்களாக இருந்த “ஹாஃபிள்கள்’ (குர்ஆனை மனனம் செய்தவர்கள்) பலர் ஷஹீதாகிவிட்டனர். இந்த நிலையைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனின் பாதுகாப்பு குறித்துப் பெரிதும் கவலை கொண்டார்கள். குர்ஆன் பாதுகாப்பாயிருப்பதற்கு அதனை மனனம் செய்யும் ஒரே வழியை நம்பியிருப்பது மட்டும் சரியல்ல; அதனைச் சரிவர சுவடிகளிலும் பாதுகாப்பாகப் பதித்து வைப்பதற்கு ஒழுங்கான ஏற்பாடுகள் செய்தாக வேண்டும் எனும் எண்ணமும் அவர்களுக்கு உண்டாயிற்று.
இதன் முக்கியத்துவத்தை அவர்கள் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு விளக்கினார்கள். இப்பிரச்னையில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு சற்றுத் தயங்கினார்கள். ஆனால் அதன் பல அம்சங்களையும் நல்ல முறையில் சிந்தித்த பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இப்பணிக்காக, நபிகள் பெருமானாரின் உதவியாளராக செயலாற்றி வந்த ஜைத்பின் ஃதாபித் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நியமித்தார்கள். இதற்கு விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. முதலாவதாக, நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுச் சென்றிருந்த சுவடிகளையெல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும். இரண்டாவதாக, கண்ணியம் வாய்ந்த ஸஹாபி (அண்ணலாரின் தோழர்)களிடம் முழுமையாகவோ, பகுதியாகவோ, * எழுதப்பட்டிருந்த குர்ஆனின் சுவடிகளும் திரட்டப்பட வேண்டும். பின்னர் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்திருந்த ஹாஃபிள்களிடமிருந்தும் உதவி பெறவேண்டும். இம்மூன்று வகைகளில் ஒருங்கிணைந்த சான்றுகளை ஆய்ந்து குர்ஆனின் வசனங்கள், அதன் ஒவ்வொரு வார்த்தையின் அமைப்புமுறை ஆகியன முழுக்க முழுக்கச் சரியாக இருக்கின்றன எனும் தெளிவும், திருப்தியும் பெற்றபின் ஆதாரப்பூர்வமாகக் குர்ஆனுடைய ஒவ்வொரு வார்த்தையும் பதிவு செய்து வைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் குர்ஆன் ஷரீஃபின் ஒரு பிரதி தொகுக்கப்பட்டு, உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டது. மக்களனைவரும் இந்த ஆதாரப் பூர்வமான தொகுப்பிலிருந்து குர்ஆனை நகல் எடுத்துக்கொள்ள
o ஆதாரமான அறிவிப்புகளிலிருந்து, நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்நாளிலேயே ஸஹாபாக்களில் சிலர் குர்ஆன் முழுவதையுமோ அதன் பகுதிகளையோ எழுதி வைத்திருந்தார்கள் என்றும்; அவர்களில் உஸ்மான், அலீ, அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊது, அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ், ஸாலிம் மௌலா ஹுதை ஃபா, ஜைத்பின் ஃதாபித், முஆத்பின் ஜபல், உபை பின் கஅப், அபூஜைத் கைஸ்பின் ஸகன் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்றும் தெரியவருகிறது.திருக் குர்ஆனை அணுகும் முறை வேண்டும் அல்லது தங்களிடம் உள்ள சுவடிகளை இதனோடு ஒப்புநோக்கிக் கொள்ள வேண்டுமென்று பொது அறிவிப்பும் விடுக்கப்பட்டது.
நம் நாட்டில் உர்தூ, பஞ்சாபி, வங்காளி மற்றும் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவை ஒவ்வொன்றும் நகரத்துக்கு நகரம் மாவட்டத்திற்கு மாவட்டம் பேச்சு வழக்கில் மாறுபட்டிருப்பதை நாம் காண்கிறோம். இதுபோலவே அரபுநாடு முழுவதும் அரபி மொழி பேசப்பட்டு வந்தபோதிலும், அதன் பல குலங்களிலும் பல பகுதிகளிலும் பேச்சு வழக்கு மாறுபட்டிருந்தது. திருக்குர்ஆன் மக்கா நகரில் குறைஷிகள் கையாண்ட அரபியில்தான் அருளப்பட்டது. ஆனால், பல்வேறு திசையைச்சார்ந்தவர்களும், பல்வேறு குலத்தாரும் சிரமமின்றி இதனை ஓத உதவும் பொருட்டு அவரவர் பாணியில் திருமறையை ஓதலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு படிப்பதினால் குர்ஆனுடைய வாக்கிலும், பொருளிலும் எந்தவித மாறுதலும் ஏற்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் பரவப் பரவ, அரபு மக்கள் தங்கள் பாலைப்பெரு வெளிகளிலிருந்து கிளம்பி, அன்றைய உலகில் பெரும் பகுதியை வெற்றி கொள்ளவும், அங்கு பிற இன, சமுதாய மக்கள் இஸ்லாமிய அணியில் சேரவுமான நிலை ஏற்பட்டதும், அரபியர் அரபியரல்லாத மக்களிடையே பெரிய அளவில் உறவும் தொடர்புகளும் உண்டாயின. இதன் காரணமாக அரபி மொழியிலும் பாதிப்புகள் ஏற்பட்டன.
எனவே ஆங்காங்கேயுள்ள வட்டார மொழிகளின்படி திருக்குர்ஆன் ஓதுவது மேலும் அனுமதிக்கப்பட்டு வந்தால், அதனால் விதவிதமான குழப்பங்களும், சர்ச்சைகளும் தலைதூக்கும் எனும் அச்சம் எழுந்தது. உதாரணமாக, ஒருவர் தம்முடைய வட்டாரப் பாணியில் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பாணியைக் கேட்டிராத மற்றொருவர் இதைச் செவியேற்கும்போது முந்தியவர் குர்ஆனில் வேண்டுமென்றே தஹ்ரீஃப் (வாசக மாற்றம்) செய்கிறார் எனும் தவறான எண்ணத்தில் சிக்கி விடுவார். அதனால் பல பிணக்குகள் தோன்றக்கூடும். அல்லது அரபுகள் அரபு அல்லாதாருடைய உறவினால் யாருடைய மொழி பாதிக்கப்பட்டதோ அந்தப் பாதிக்கப்பட்ட மொழிக்கு ஏற்ப, குர்ஆனை ஓத முற்படும்போது அதனுடைய அழகும் இனிமையும் பாதிக்கப்படக் கூடுமெனும் அச்சமும் ஏற்பட்டது. இக்காரணங்களினால் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபிகளுடன் கலந்தாலோசித்து, இஸ்லாமிய ஆட்சியிலுள்ள எல்லா நாடுகளிலும், அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆணையால் ஒன்றுசேர்க்கப்பட்ட மூலத்தின்படிதான் பிரதிகள் எழுதப்பட வேண்டும்; வேறு வகைகளிலும், வட்டார வழக்குகளுக்கொப்பவும் நடப்பிலிருந்த எல்லாப் பிரதிகளையும் தடை செய்ய வேண்டும் என்று முடிவு கட்டினார்கள்.
அப்பழுக்கற்ற தூய இறைமறை இன்று நம்முடைய கரங்களிலே இருக்கும் திருக்குர்ஆனின் பிரதிகள் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதிக்கொப்ப உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமிய உலகின் பல பகுதிகளுக்கும் அன்று அனுப்பிய பிரதிகளுக்கு முற்றிலும் சரியான நகலேயாகும். இன்றும்கூட உலகின் பல்வேறு பகுதிகளில் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுப்பி வைத்த பிரதிகள்தாம் இருக்கின்றன. திருக்குர்ஆன் அன்றிலிருந்து இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது என்பதைச் சோதிக்க வேண்டுமானால் ஒருவர் மேற்கு ஆஃப்ரிக்காவின் ஏதாவது ஒரு புத்தகக் கடையில் திருக்குர்ஆனின் பிரதி ஒன்றை வாங்கிக் கொள்ளட்டும்; அதை எடுத்துக்கொண்டு ஜாவா நாட்டுக்கு வந்து, அங்கிருக்கும் குர்ஆனை மனனம் செய்த (ஹாஃபிள்) ஒருவரிடம் குர்ஆன் முழுமையையும் ஓதக்கேட்டுத் தம் கையிலிருக்கும் பிரதியுடன் ஒப்புநோக்கிப் பார்க்கட்டும்! இரண்டும் எழுத்து மாறாமல் சரியாக இருப்பதை அவர் உறுதியாகக் கண்டு கொள்வார். அதன்பின் உலகின் மிகப் பெரிய நூல்நிலையங்களில் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு கரங்களால் நகல் செய்யப்பட்ட
குர்ஆனின் பிரதிகள் எத்தனை உண்டோ அவை அனைத்தையும் தம் கையிலிருக்கும் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்க்கட்டும்! இதில் ஏதாவது வேற்றுமை காண முடியுமானால் தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான கண்டுபிடிப்பை உலகம் முழுமைக்கும் எடுத்துரைக்கட்டும்! எத்தகைய தெளிவான விஷயங்களிலும் சந்தேகிப்பவர் உண்டு. அவர்கள் திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வாக்குத்தானா என்ற சந்தேகத்தில் உழலலாம்; ஆனால் நம் கையில் இன்று இருக்கும் குர்ஆனின் பிரதி உலகத்தின் முன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமர்ப்பித்த குர்ஆனுக்கு முழுக்க முழுக்கச் சரியாக இருக்கிறது. அதில் எந்த விதத்திலும் கூடுதலும் குறைவும் இல்லை எனும் விஷயத்தில் சந்தேகம் கொள்ள முடியாது. இது வரலாற்று ஆதாரமுடைய பேருண்மையாகும். இதுபற்றி எள்ளளவும் சந்தேகப்படுவதற்கு இடமில்லை. மனித வரலாற்றில் இவ்வளவு ஆதாரப்பூர்வமானதை வேறெங்கும் காணமுடியாது. இத்தனை உறுதிப்பாடுகளுக்குப் பிறகும் ஒருவர் இதுபற்றிச் சந்தேகப்படுவாராயின், அவர் “ரோமப் பேரரசு என ஒன்று உலகிலே ஆட்சி செலுத்திற்றா? முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்டார்களா? நெப்போலியன் எனும் ஒருவர் இருந்தாரா?’ என்றெல்லாம் ஐயப்படக்கூடும். இத்தகைய வரலாற்று ஆதாரமுடைய உண்மைகளைப் பற்றிச் சந்தேகங்கொள்வது அறிவையும், ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக, அது அவருடைய அறியாமையை அடிப்படையாகக்கொண்டதே ஆகும்.
திருக்குர்ஆன் ஆய்வுமுறை உலகில் எண்ணற்ற மனிதர்கள் எண்ணற்ற நோக்கங்களைக் கொண்டும் கருத்துகளைக் கொண்டும், குர்ஆனை அணுகுகிறார்கள். எனவே இவர்கள் அனைவருடைய தேவைகளையும், நோக்கங்களையும் முன் வைத்து அதைப் பற்றி ஆலோசனை கூறுவது சாத்தியமானதல்ல. குர்ஆனை ஆய்ந்து படிக்கும் முறைகள் பற்றிச் சில ஆலோசனைகள் கூற விரும்புகிறேன். அத்தகைய ஆய்வில் பொதுவாக ஏற்படும் சில சிக்கல்களுக்கு தீர்வுகாணும் முறை பற்றியும் சில விளக்கங்கள் தர விரும்புகிறேன். இந்தத் திருமறையை உண்மையிலேயே நன்கறிந்து கொள்ள வேண்டுமெனும் ஆர்வமுள்ளவர்கள் அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் சரி ; இல்லாவிட்டாலும் சரி முதன்முதலில் ஏற்கனவே தம் உள்ளங்களில் நிலைப்பெற்றுவிட்ட இந்நூலைப்பற்றிய கருத்துகளையும் எண்ணங்களையும் விருப்பு வெறுப்புகளையும் இயன்ற அளவு அகற்றிவிட வேண்டும்; பிறகு இதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனும் ஒரே நோக்கத்தோடு, திறந்த மனதோடு இதனைப் படிக்கத் துவங்க வேண்டும். அவ்வாறில்லாமல் இந்நூலைப்பற்றி ஏற்கனவே சில கருத்துகளை உள்ளத்தில் புகுத்திக் கொண்டு இதனைப் படிக்க முற்படுவோர் குர்ஆனின் வரிகளுக்கிடையே தம் கருத்துகளையே படித்துக் கொண்டு போகிறார்களே யொழிய குர்ஆனின் கருத்துகளை அவர்கள் அறிந்து கொள்வதில்லை! பொதுவாக எந்த ஒரு நூலையும் இவ்வாறு படிப்பது சரியான வழியாகாது. அதிலும் குறிப்பாக திருக்குர்ஆனைப் பொறுத்தமட்டில் இம்முறை சிறிதும் பயன்தராது. இவ்வாறு படிப்பவருக்கு குர்ஆன் தன் கருத்துகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதேயில்லை!
திருக்குர்ஆனின் உள்ளடக்கத்தைப் பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புவோர்க்கு அதனை ஒருமுறை படித்தாலே போதுமானது. ஆனால் திருமறையின் ஆழ்ந்த பொருள்களை உணர விரும்புவோர்க்கு ஐந்து அல்லது ஆறு முறை அதனைப் படிப்பது கூடப் போதுமானதாகாது. மாறாக, அவர்கள் அதனைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்; அதிலும் ஒவ்வொரு தடவையும் அதனை ஒரு புதுக் கோணத்திலிருந்து நோக்க வேண்டும். ஒரு மாணவனைப்போல் பேனாவையும், தாளையும் வைத்துக்கொண்டு ஆங்காங்கே அவசியமான இடங்களில் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறாகப் படிக்க விரும்புவோர், சிந்தனை செயல் ஆகிய இரு கூறுகளையும் பற்றி இத்திருமறை வகுத்துத் தந்துள்ள அமைப்பை ஒரே கண்ணோட்டத்தில் முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டுக் குறைந்தபட்சம் இருமுறையாவது திருமறையைப் படிக்க வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் படிக்கத் துவங்கும்போது திருக்குர்ஆன் காட்டிடும் பல்வேறு பகுதிகள் மீது ஒட்டுமொத்தமாக ஒரு பார்வையைச் செலுத்த வேண்டும்.
மேலும் இத்திருமறை எந்த அடிப்படைக் கருத்தோட்டங்களை எடுத்துரைக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது எத்தகைய வாழ்க்கை அமைப்பை நிர்மாணிக்க வலியுறுத்துகிறது எனக் கவனித்துக்கொண்டே போக வேண்டும். இப்படிக் கவனிக்கும்போது எந்த இடத்திலாவது சந்தேகமோ, கேள்வியோ எழுமானால் அவை பற்றி உடனே முடிவு கட்டிவிடாமல், அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு மேலே தொடர்ந்து படித்துணர முற்பட வேண்டும். இந்த முறையைக் கையாண்டால், அத்தகைய வினாக்களுக்குப் பின்வரும் பகுதிகளில் விடை கிடைத்துவிடும். சந்தேகங்களுக்கும் விடை கிடைத்துவிடும். அப்படி விடை கிடைத்ததும் தாம் குறித்து வைத்திருந்த வினாக்களுடன் இந்தப் பதிலையும் இணைத்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் முதல் தடவை இதனைப் படிக்கும்போது, ஏதேனும் கேள்விக்கு விடை கிடைக்கவில்லையென்றால், பொறுமையுடன் மீண்டும் ஒரு தடவை ஆராய வேண்டும். என்னுடைய சொந்த அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன்.
இப்படி இரண்டாவது தடவை பார்வையிடும் போது, பெரும்பாலும் எந்தக் கேள்விக்கும் விடை கிடைக்காமல் போவதில்லை. இப்படித் திருக்குர்ஆன் மீது ஒருங்கிணைந்த கண்ணோட்டம் செலுத்திய பிறகு, விரிவாக ஆய்வைத் துவங்க வேண்டும். இப்போது குர்ஆனை ஆய்ந்து பார்ப்பவர் அதனுடைய அறிவுரைகளின் ஒவ்வோர் அம்சத்தையும் சிந்தையிலிருத்தி வைத்துக்கொள்வதோடு எழுதியும் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, எத்தகைய பண்புகளைக் குர்ஆன் விரும்புகிறது, எத்தகைய தன்மைகளை அது வெறுக்கிறது என்பதை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ள விரும்பினால் அவர் தம்முடைய நோட்டுப் புத்தகத்தில் இரண்டு பத்திகள் போட்டுக்கொண்டு. “”விரும்பத்தக்க பண்புகள்” என்று முதல் பத்தியின் தலைப்பிலும், “”வெறுக்கத்தக்க தீயகுணங்கள்” என்று இரண்டாம் பத்தியின் தலைப்பிலும் எழுதிக்கொள்ள வேண்டும். பிறகு குர்ஆனில் எங்கெங்கு இவை பற்றிக் கூறப்பட்டிருக்கிறதோ அவற்றை அதனதன் பத்திகளில் குறித்துக் கொள்ள வேண்டும். பிறிதோர் உதாரணம்: குர்ஆனின் நோக்கில் மனிதனுக்கு வெற்றியும் மீட்சியும் தருவது எதைப் பொறுத்திருக்கிறது;
எவை மனிதனுக்குக் கேட்டையும், இழப்பையும், அழிவையும் தருபவை என்பனவற்றை விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ள விரும்புவோர் கடைப்பிடிக்கச் சரியான வழி:
குர்ஆனை ஓதுகையில் தம் நோட்டுப் புத்தகத்தில் வெற்றியும், ஈடேற்றமும் தருபவை யாவை என்று எதிரெதிரே எழுதிக் கொள்ளுதல்; பின்னர் திருக்குர்ஆனைப் படிக்கும் போது அன்றாடம் இந்த இரண்டு தலைப்புகளைப் பற்றியும் கூறப்பட்டிருப்பதை குறித்துக் கொண்டே போதல் ஆகும். இந்த முறையிலேயே கொள்கை கோட்பாடுகள், உரிமைகள், கடமைகள், பண்பாடு, ஒழுக்கவியல், அரசியல், சட்டங்கள், இயக்கக் கட்டுப்பாடு, போர், சமாதானம் இன்னும் இதர வாழ்க்கைப் பிரச்னைகள் பற்றி ஒருவர் குர்ஆனின் அறிவுரையைத் தெளிவாக அறிந்து கொள்ள விரும்புவாராயின், அவற்றில் ஒவ்வொன்றையும் தனித் தனித் தலைப்புகளாக எழுதிக்கொள்ள வேண்டும். பிறகு குர்ஆனிலிருந்து இந்தத் தலைப்புகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும் கருத்துகளை அதற்குரிய பக்கங்களில் குறித்துக்கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறு தொகுக்கப்பட்டதிலிருந்து வாழ்வின் ஒவ்வொரு துறையும் எந்த வடிவத்தில் அமைகிறது என்று பார்க்க வேண்டும். பிறகு இந்த வடிவங்கள் அனைத்தும் ஒன்று சேர்வதால் முழு வாழ்க்கை அமைப்பு எந்தத் தோற்றத்தில் அமைகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
பின்னர், குறிப்பிட்ட ஒரு வாழ்க்கைப் பிரச்னை பற்றிய குர்ஆனின் கண்ணோட்டம் என்னவென்று ஆழ்ந்து ஆராய விரும்பினால், அதற்குரிய சிறந்த வழி: முதலில் இந்தக் குறிப்பிட்ட பிரச்னை பற்றி பண்டைய, தற்கால நூல்கள், இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என ஆய்ந்தறிந்து கொள்ளுதல், பிரச்னையிலுள்ள அடிப்படைத் தன்மைகள் யாவை, அவற்றைப் பற்றி இதுவரை மனிதன் எவ்வாறெல்லாம் சிந்தித்திருக்கிறான்; என்னவெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறான்; மேலும் இப்பிரச்னையின் எந்தத் தன்மைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. மனிதனின் அறிவும் சிந்தனையும் எந்த இடத்தில் பிரமித்து நின்று விட்டிருக்கின்றன என்பனவற்றையெல்லாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல். பிறகு இந்தத் தீராத பிரச்னைகளை மனதிற் கொண்டு திருக்குர்ஆனை ஆராய்தல் ஆகும்.ஒருவர் பிரச்னைகளை இவ்வாறாக அலசி ஆராயும் முறையைக் கடைப்பிடிப்பதால், அவை பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தை தெளிவாகவும், எளிதாகவும் புரிந்துகொள்ள முடியும்.
தாம் இதற்கு முன் பல தடவை படித்திருந்த குர்ஆனின் திருவசனங்களிலேயே இந்தப் பிரச்னைகளுக்கான பதில் மறைந்துகிடப்பதை அவர் காண்பார். மேலும், “”சிக்கலான பிரச்னைகளுக்கெல்லாம் எளிதான தீர்வு தரும் இத்தகைய கருத்துகள் இவற்றில் பொதிந்து கிடக்கின்றனவே! பன்முறை இவற்றைப் படித்திருந்தும்கூட இது வரை என் சிந்தனைக்கு அது எட்டவில்லையே!” என்று அவர் வியப்படைவார். இதை என் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். செயற்படுத்தாதவரை ஆனால் திருக்குர்ஆனை உணர்ந்து கொள்வதற்குரிய வழிமுறைகள் அனைத்தையும் ஒருவர் மேற்கொண்டபோதிலும் குர்ஆன் என்ன பணிக்காக அருளப்பட்டதோ, அப்பணிக்கு ஆவனவற்றை நடைமுறையில் செய்துகாட்டும் முயற்சியில் அவர் ஈடுபடாதவரை அவருக்கு குர்ஆனுடைய உயிரோட்டத்துடனும், உள்ளக் கிடக்கையுடனும் நெருக்கமும், ஈடுபாடும் ஒருபோதும் ஏற்படாது. கோட்பாடுகளையும், கருத்தோட்டங்களையும் எடுத்துக்கூறும் ஒரு நூலல்ல இது. சாவகாசமாகப் படித்து அறிந்து கொள்ளக்கூடிய வேதமுமல்ல இது.
பொதுவாக மதத்தைப்பற்றி இன்று உலகம் கொண்டுள்ள கருத்தின்படியுள்ள ஒரு மத நூலன்று இது; சமயப்பள்ளியிலோ, துறவு மடத்திலோ இருந்து படித்து அதன் கருத்துகளையும், இரகசியங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய நூலுமன்று இது. மாறாக முன்பக்கங்களில் சுட்டிக்காட்டியதுபோல் ஓர் இயக்கத்தை உருவாக்க வந்த வேதமாகும் இது. ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க வந்த நூலாகும் இது. இவ்வேத நூல் வந்ததுமே சாந்தகுணமும் இனிய இயல்பும் கொண்ட ஒருவரை, தனிமையிலிருந்து வெளிக்கொணர்ந்து இறைவனை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்த உலகுக்கு எதிராக நிறுத்திற்று. எல்லாவித அசத்தியத்திற்கும் எதிராகப் போர்க்குரல் எழுப்புமாறு அவரைத் தூண்டிற்று. அன்று தீமைக்கும், வழிகேட்டுக்கும், இறைநிராகரிப்பு (குஃப்ரு)க்கும் தலைமை தாங்கியோருடன் அவரை மோதச் செய்தது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இனிய பண்பும், நல்லொழுக்கமும் உடைய ஒவ்வொருவரையும் ஈர்த்து, சத்தியத்தின்பால் அழைப்பு விடுத்துவந்த அவருடைய கொடியின் கீழ் ஒன்று சேர்த்து நிறுத்தியது. ஒவ்வொரு திசையிலிருந்தும் விஷமிகளையும் குழப்பம் விளைவிப்பவர்களையும் பொங்கி எழச்செய்து, அவர்களைச் சத்தியச்சீலர்களோடு மோதவிட்டது. ஒரு மனிதர் எழுப்பிய குரலோடு தன் திருப்பணியைத் தொடங்கி “கிலாஃபத்தே இலாஹியா’ இறையாட்சி நிலைபெறும்வரை சத்தியத்துக்கும், அசத்தியத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான போராட்டத்தில் இந்த மாபெரும் இயக்கத்துக்கு வழிகாட்டியாக இருந்தது. இந்த நீண்ட பயங்கரமான காலத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நிலையிலும் அசத்தியத்தை எவ்வாறு தகர்த்தெறிவது, சத்தியத்தை எப்படி நிலைநாட்டுவது என்று எடுத்துரைத்தது. இறுதியாக இஸ்லாமிய வாழ்க்கை அமைப்பை நிலைநாட்டுவதில் அந்த இயக்கத்தை வெற்றி காணச்செய்து விட்டது!
எனவே இறைநெறிக்கும் இறைநிராகரிப்புக்கும்; இஸ்லாத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் இடையே நடக்கும் கடும் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளாமலும், இப்போராட்டத்தின் எந்த ஒரு கட்டத்தினூடேயும் கடந்து செல்லாமலும் நீங்கள் இருந்தால், திருக்குர்ஆனின் சொற்களை மட்டும் திரும்பத் திரும்பப் படித்து விடுவதினாலேயே அதனுள் பொதிந்து கிடக்கும் பேருண்மைகளை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதனுடைய உயிரோட்டத்துடன் நெருக்கமும், ஈடுபாடும் கொள்ள வேண்டுமென்றால் யாவற்றுக்கும் முன்பாக இந்த மறையை எடுத்துக்கொண்டு இறைவனின் பால் உலகை அழைக்கும்திருக் குர்ஆனை அணுகும்முறை பணியைத் துவக்க வேண்டும். மேலும் அதன் வழிகாட்டுதலின்படி இந்தப் பாதையில் நடந்து செல்ல நீங்கள் முற்பட வேண்டும். அப்பொழுது திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அதனை ஏற்றுக்கொண்டோருக்கு நேர்ந்த அனுபவங்கள் உங்கள் முன்னே காட்சிதரும்!
மக்கா, தாயிஃப், அபிஸீனியா (ஹபஸ்) முதலிய கட்டங்களையும் நீங்கள் காண்பீர்கள்: பத்ரு, உஹது முதல் ஹுனைன், தபூக் வரையுள்ள கட்டங்களும் உங்கள் முன் காட்சிதரும்! அபூஜஹ்லும் அபூலஹபும் உங்கள் எதிரில் வருவார்கள்! நயவஞ்சகர்களும் யூதர்களும் உங்களைக் கடந்து செல்வார்கள்! ஈமான் நம்பிக்கை கொண்டோரில் முதன்மை யானவர்களான “ஸாபிக்கூனல் அவ்வலூன்’ எனும் திருக்கூட்டத்திலிருந்து, இஸ்லாத்தினைக் கனிவோடு நோக்கி அதனோடு பின்னர் இணைந்து கொண்ட மக்கள் வரை ஒவ்வொரு வகையான மனிதர்களின் முன்மாதிரிகளையும் நீங்கள் காண்பீர்கள். இது ஓர் அற்புதமான அனுபவமாகும். இதனை நான் “ஸுலூகே குர்ஆனி’ குர்ஆனிய அனுபவம் என்று குறிப்பிடுவதுண்டு.
இதன் சிறப்பு என்னவென்றால், நீங்கள் எந்தெந்தக்கட்டத்தைக் கடந்து செல்கின்றீர்களோ அந்தந்தக் கட்டத்தில் குர்ஆனின் சில வசனங்களோ அத்தியாயங்களோ தாமாகவேஉங்கள் முன் நிற்கும். இந்தக் கட்டத்திற்காகவே, தான் அருளப்பட்டதாகவும், இன்ன இன்ன வழிகாட்டுதலையே தான் கொண்டுவந்திருப்பதாகவும் உங்களுக்கு அறிவுறுத்திக்கொண்டே போகும். அப்பொழுது குர்ஆனுடைய மொழியாற்றலும், இலக்கண நுட்பமும் ஒருக்கால் உங்கள் கண்ணுக்குப் புலப்படாமல் போகலாம். ஆனால் அதனுடைய இலக்கும், உயிரோட்டமும் உங்களுக்குப் புலப்படாமல் போகா!
அதுபோலவே, திருக்குர்ஆனின் கட்டளைகள், அதன் ஒழுக்கநெறிகள், பொருளாதார விதிமுறைகள், வாழ்வியல் பற்றிய அறிவுரைகள், வாழ்க்கையின் பல்வேறு துறைகள் குறித்து அது அருளியுள்ள நெறிமுறைகள், வகுத்துள்ள சட்ட திட்டங்கள் ஆகியவற்றை நீங்கள் நடைமுறையில் மேற்கொள்ளாதவரை அவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. தன் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை இவ்வேதத்திற்குப் புறம்பாக அமைத்துக் கொண்டிருக்கும் தனி மனிதனும் இதனை அறிய மாட்டான்; சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இவ்வேதம் காட்டும் வழிமுறைக்கு முரணாக நடத்திச் செல்லும் சமுதாயமும் இதனைச் சரிவரப் புரிந்து கொள்ளாது. உலகளாவிய இயக்கத்துக்கு ஏற்ற உயர்மறை மனிதகுலம் அனைத்துக்கும் வழிகாட்டவே தான் அருளப்பட்டதாகக் குர்ஆன் வாதிடுகிறது என்பதை யாவரும் நன்கறிவர்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.