“அந்த” பசிக்கு ஏன் மூன்றாவது நபர்?
why do you looking third person for ”that” matter?
குடும்பங்கள் தொடர்பாக பிரச்சினைகளை ஆய்வுசெய்கின்ற போது ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கக்கூடிய, அதிக சிக்கல்களை தரக்கூடிய ஒரு பிரச்சினைதான் தன் கணவர் or மனைவி இருக்கும் போது பிற பெண்ணை or ஆணை தேடுவதும் தொடுவதுமாகும்.
ஒரு கணவன் ஒரு பெண்ணை தனது மனைவியாக ஏற்று வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் போது அந்த கணவன் தனது “அந்த” இல்லற உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேறு ஒரு பெண்ணை அல்லது வேறு ஒரு தடுக்கப்பட்ட முறையை நாடுகிறான், இது நமது சமூகத்தில் ஒரு தொட்டுநோயாக பரவி சமூக சீரழிவுக்கு வித்திட்டிருக்கிறது.
உண்மையில் எமது சமுகத்தில் இந்தத் தொட்டுநோய் பரவுவதற்கு சில காரணங்கள் இருப்பது தெரியவருகிறது:
1) பல நாற்களாக, பல வருடங்களாக ஒரே பெண்ணை (தனது மனைவியை) ருசிப்பதை கீழ்த்தரமாக நினைத்து வேறு, புதிய ஒரு பெண்ணை நாடுவது (getting bore by living with same wife or husband for long).
2) ஆண்மை தொடர்பான பிரச்சினை,
3) மனைவி மலடித்தன்மை உள்ளவள் என்பது தெரியவருதல்,
4) எதிர்பாராத விதமாக கனவனுக்கும் மனைவிக்கும் சண்டை அல்லது கருத்து முரண்பாடு ஏற்பட்டு அந்த பிரச்சினை தீரும் வரை தற்காளிகமாக இருவரும் கதைக்காமல் அல்லது பிரிந்திருத்தல் (going mother’s home for a temparery issue).
5) ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் மனைவி மாதவிடாயாக இருப்பது,
6) மனைவி கர்ப்பினியாதல்
7) மனைவி தனது அதிகமான நேரங்களை தனது (கைக்) குழந்தைகளுடன் கடத்துவது
8) மனைவி உடலுறவின் இரகசியங்களை புரிந்து கொள்வதில் தாமதம் (no enough knowledge or idea about sex),
9) மனைவி உடலுறவு பற்றி தப்பபிப்பிராயம் கொள்வது (wife’s misunderstood about sexual intercourse),
10) மனைவியோ கணவனோ (தொழில், கல்வி அல்லது வேரு காரணங்கள் மூலம்) தூரமாதல் (wife or husband got far),
11) கெட்ட நண்பர்களின் தூண்டுதல்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் மயங்கி முதல் அனுபவம் பெற சென்று மொத்த அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளல்,
12) கட்டாய, அல்லது விருப்பமில்லாத திருமண வாழ்க்கை (forced or unhappy marrage),
13) மனைவியிடத்தில் உள்ள சில விருப்பமற்ற பழக்க வழக்கங்கள் (bad habits),
14) திருமணத்திற்கு முன் தடுக்கப்பட்ட முறையில் பழக்கப்பட்டு அந்த பழக்க வழக்கங்களைத் தொடர எத்தனித்தல் (got familiear with prohibited issues),
1. வழக்கரங்களுக்கு அடிமையாதல் (sick with masturbation),
2. ஓரினச் சேர்க்கை (sick with oral sex)
3. விபச்சாரத்திற்கு அடிமையாதல்,
4. விலைமாதர்களை ருசித்தல் (got interested with hired persons)
சில ஆண்கள் இரண்டாவது பெண்ணை அல்லது தடுக்கப்பட்ட வழி முறையை தேடுவது போல சில பெண்களும் இரண்டாவது ஆணை அல்லது வழிமுறையைத் தேடுகிறார்கள்.
அதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன;
1) தொடராக ஒரே ஆணின் இன்பத்தை சுவைப்பதை விரும்பாமை,
2) ஆண் மலடன் என்ற நிலையை அறிதல்,
3) குடும்ப பிரச்சினை நிமித்தம் பெண் தனிமையாதல் அல்லது தற்காளிகமாக கணவனை பிரிந்திருத்தல்,
4) காம வெறிபிடித்த ஆண்களின் வற்புறுத்தல் காரணமாக கற்பை இழந்த பெண்கள் அதில் ருசிபட்டு தொடராக வித்தியாசமான ஆண்களை நாடுதல்,
5) கணவன் உடலுறவு தொடர்பாக போதிய அறிவற்றிருத்தல்,
6) கணவனைப் பிரிந்து தொலை தூரத்தில் வாழுதல், வெளிநாட்டு மோகம்,
7) கெட்ட நண்பர்களை பின் தொடர்ந்தமை (bad friendship),
8) கணவனிடத்திலுள்ள வெறுக்கத்தக்க பழக்க வழக்கங்கள் (கணவன் போதைக்கு அடுமையாதல், தீராத புகை பிடித்தல், வேளைத்தள வியர்வையுடன் படுக்கையறைக்குள் செல்லல்),
9) கட்டாய, விருப்பமற்ற ஆணை திருமணம் செய்தல்,
10) திருமணத்திற்கு முன், அனுமதியற்ற முறையில் காம உணர்வுகளை இன்பித்து வழக்கப்பட்டமை,
1. செயற்கை ஆண் குறியை அல்லது அது போன்ற ஏதாவதொன்றை உபயோகித்தல்,
2. வலது கரத்திற்கு அடிமையாதல்,
3. ஓரினச் சேர்க்கை,
4. திருமணத்திற்கு முன், பின் ஆண் நண்பர் (Boy Friends) களின் எல்லையற்ற தொடர்பு
ஒரு ஆணோ ஒரு பெண்ணோ இப்படிப்பட்ட அனுமதியற்ற முறைகளுக்கு உள்வாங்கப்பட்டால் தனது மொத்த குடும்ப வாழ்க்கையையும் இழப்பது மட்டுமின்றி அல்லாஹ்வின் தண்டனைக்கும் உள்ளாகுவர் என்பது நிச்சயம்.
இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ள காரணங்களை அடையாளம் கண்டுகொண்டு இந்த பிரச்சினையிலிருந்து தூரமாகவேண்டும்.
இந்த சிக்கல்களில் மாட்டிவிடுவோம் என்ற அபாயத்தை உணர்பவர்கள் உடனே அதற்கான பரிகாரத்தை நாட முன்வர வேண்டும்.
தன் மனைவி அல்லது கணவன் தொடர்பான உடல் உளரியாக மாற்றங்களை உணர்பவர்கள், சந்தேகம் கொள்பவர்கள் அவசர, அவசியாமாக தேவையான வைத்தியரை, உளவியல் தொடர்பான ஆலோசகர்களை நாடவேண்டும்.
தாம் எதிர்நோக்கும் பிரச்சினை என்ன என்பதை தெரிந்துகொண்டதும் அதிலிருந்து வெளியாகி தனக்குக் கிடைத்திருக்கின்ற ஹலால் துணையுடன் முழு சம்மதத்துடனும் சந்தோக்ஷமாகவும் வாழ முன்வரவேண்டும்.
இதையும் தாண்டி தீராத பிரச்சினை இருப்பதாக நினைப்பவர்கள், தனது துணையை மாற்றியே ஆக வேண்டும் என்ற நிலையை அடையும் போது அது தொடர்பனவர்களை உடன் அனுக வேண்டும்.
“மேலும் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதிர்கள்! திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது’ (அல் குர்ஆன் 7:32)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“முஹம்மதின் சமுதாயமே! தன் அடியார்களில் ஆணோ, பெண்ணொ யார் விபச்சாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும், அல்லாஹ்வை விட கடுமையான ரோஷம் கொள்ளுபவர் வேறு எவரும் இல்லை.” (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி)
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இந்த பிரச்சினை வராமல் இருக்க ஒவ்வொரு தனிமனிதர்களும் முயற்சிக்க வேண்டும்.
source: http://changesdo.blogspot.com/2011/07/why-do-you-looking-third-person-for.html