Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதன் பிறந்தது எதற்காக?

Posted on July 4, 2011 by admin

 ஃபாத்திமா ஷஹானா (கொழும்பு)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ

”ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56)

இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்ககூடிய அதிகமான மக்கள் தாம் எதற்காக வேண்டி பிறந்தோம்? என்ற அடிப்படையான விஷயத்தை மறந்து வாழ்ந்து கொண்டு இருக்கறார்கள்.

தாம் பிறந்ததின் நோக்கம் இந்த அற்பமான உலகத்தில் பொருளாதாரத்தை திறட்டுவதற்கு என்று நினைத்து கொண்டு வாழ்கிறார்கள்.

எவ்வளவு பொருளாதாரத்தை சேகரித்தாலும் அதன் மேல் உள்ள மோகம் போகாமல் அதிகமானவர்கள் அதன் பின்னாலேயே சொன்று கொண்டு இருக்கிறார்கள்.

இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் போது…

ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். (புகாரி 6436)

இன்று அதிகமானவர்கள் எவ்வளவு பொருளாதாரத்தை திறட்டினாலும் திருப்தி அடையாமல் பேராசை படக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர நாம் எதற்காக வேண்டி படைக்கப்பட்டோம் என்பதை சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)

இந்த குர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ்வை வணங்குவதற்காகவே ஜின்களும், மனிதர்களும் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது

வணக்கம் என்றால் என்ன?

அல்லாஹ்வை வணங்குவது என்பது அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதலையே குறிக்கும். அதாவது அவன் ஏவிய கட்டளைகளை ஏற்று நடந்து அவன் தடுத்த அனைத்தையும் விட்டு விலகி வாழ்தலே அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலாகும்.

ஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம்

ஒருவர் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என அல்லாஹ்விடம் ஒப்பந்தம் (கலிமா) செய்து முஸ்லிமாக அல்லாஹ்வின் அடியானாக இஸ்லாத்தில் நுழைந்துள்ளார். எனவே வாழ்க்கையின் எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் தன் எஜமானான அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யக்கூடியவர் அந்த நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளுக்கு அல்லது விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒரு முகாமையயளருக்குக் கீழ் தன்னால் தன் நிறுவனத்திற்கோ அல்லது தன் வேலைக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. என்ற எண்ணத்தில் அந்த நிறுவனத்தின் வேலையை செய்யக்கூடியவராக இருப்பார். தன் குடும்ப சந்தோஷத்தை விட வேலையே முக்கியம் என்ற நிலை அவரிடம் காணப்படும்.

ஆனால், அல்லாஹ்விடம் கலிமா என்ற ஒப்பந்தத்தை செய்து கொண்ட நாம் எந்த விதத்தில் நம் எஜமானாகிய அல்லாஹ்விடம் ஒரு அடிமை என்ற ரீதியில் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழிக்கு அமைய நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழியில் முதலாவதாக “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்பதாகும் ஆனால் சில முஸ்லிம்கள் “முஸ்லிம்” என்ற பெயர் தாங்கிகளாக மட்டும் வாழக்கூடியவர்களாக உள்ளனர்.

சிலர் அல்லாஹ்வை வணங்குவதோடு சில மனிதர்களுக்கும், மரணித்தவர்களுக்கும், வேறு சில பொருட்களுக்கும் (தாயத்து, தகடு….) அல்லாஹ்விற்கு மட்டும் உரித்தான பண்புகளை இணையாக்குகின்றனர். தங்கள்மார்கள்இ ஷேகுமார்கள் என சில மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு அவர்கள் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்களாக உள்ளனர்.

மரணித்த மனிதர்களிடம் சென்று அவர்களிடம் தம் தேவைகளைப் பிரார்த்திக்கக் கூடியவர்களாக சமாதி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தாயத்து, தட்டு வீடுகளில் தொங்க விடப்பட்டிருக்கும் அரபு எழுத்துக்களால் ஏதோ எழுதப்பட்டிருக்கும் பலகைகள், போத்தல்கள், இஸ்ம் ஆகியவற்றிற்கு தம் தேவைகளை நிறைவேற்றும், தம் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை உள்ளது என நம்பி அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முதல் ஒப்பந்தத்தை மீறி இஸ்லாத்திலிருந்து தங்களை அறியாமல் வெளியேறக்கூடியவர்களாக உள்ளனர். அல்லாஹ் நம் அனைவரையும் இந்த நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

 அல்லாஹ் கூறுகின்றான்

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்.” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. (அல்குர்ஆன் 6:151)

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)

அடுத்ததாக அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் அவனை மட்டும் வணங்கக்கூடியவர்களான சில முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இரண்டாவது ஒப்பந்தத்தை மீறக்கூடியவர்களாக உள்ளனர்.

அதாவது “முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்பது. அல்லாஹ்வின் தூதரின் அளப்பரிய பணி அல்லாஹ்வின் தூதுத்துவத்தை மக்களிடம் எத்தி வைப்பது. அவன் கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையை முன்மாதிரியாகக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய சில முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ளாமல் தம் வாழ்க்கையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் காட்டித் தராத புதிதாகப் புகுத்தப்பட்ட “பித்அத்” ஆன நடவடிக்கைகளை மேற்கொண்டு நரகத்திற்கே கொண்டு செல்லும் வழிகேட்டை மேற்கொள்கின்றனர்.

”செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதம். மிகவும் அழகிய வழி முஹம்மது அவர்களின் வழியாகும்.காரியங்களில் மிகவும் கெட்டது (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.(மார்கத்தில்)புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். அனைத்து பித்அத்களும் அனைத்து வழிகேடும் நரகத்திலே கொண்டு போய் விடும்.” (புகாரி 1560)

எனவே இத்தகைய காரியங்களில் ஈடுபடாமல் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களை நம் வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய உண்மை முஸ்லிம்களாக நாம் மாற வேண்டும்.

 இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை மூலம் படிப்பினை பெற வேண்டும்.

நாம் அனைவரும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுள்ளோமா என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தனி நபராக இருந்து சிலை வணங்கியான தன் தந்தையையும், அந்த சமூகத்தையும்,

தன் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த அளவிற்கு ஏகத்துவத்திற்காக போராடினார்கள்.

”சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்” என்று இப்றாஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!”  (அல்குர்ஆன் 6:74)

”இப்றாஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.” (அல்குர்ஆன் 16:120)

”இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர்”. (அல்குர்ஆன் 37:97)

குழந்தைச் செல்வம் இல்லாமல் தள்ளாத வயதில் குழந்தைப் பாக்கியத்தைப் பெற்று பின் அந்தக் குழந்தை வளர்ந்து பருவ வயதடைந்த பின் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு இணங்க அந்த மகனைக் கூட அறுத்துப் பலியிடத் துணிந்தார்கள்.

”இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்”. (அல்குர்ஆன் 14:39)

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.

”இருவரும் கீழப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்றாஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை.” (அல்குர்ஆன் 37:102-106)

அல்லாஹ் குறிப்பிடுகின்றான் இது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மகத்தான சோதனை என்று. நாம் சிந்தித்துப் பார்த்தால் நம்மில் யாருக்கும் அல்லாஹ் இந்த மாதிரி சோதனையை ஒரு போதும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் நாமோ நம்மால் தாங்கிக் கொள்ளக்கூடிய, முழுமையாக அல்லாஹ்விற்காக நிறைவேற்றக்கூடிய, வெற்றி பெறக்கூடிய சோதனைகள் அனைத்தையும் நிறைவேற்றாது தோல்வி பெறக்கூடியவர்களாக நம் மனோ இச்சைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளோம். ஒரு முஸ்லிமான அடியானுக்கு இவ்வுலக வாழ்க்கை ஒரு சோதனைக் களம்.

 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

”யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்” இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5645)

நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வா? கணவனா? அல்லது அல்லாஹ்வா? மனைவியா? அல்லது அல்லாஹ்வா? நம் பிள்ளைகளா? அல்லது அல்லாஹ்வா? நம் பெற்றோரா? அல்லது அல்லாஹ்வா? நமக்கு விருப்பமானவர்களா? என்று வரும் நிலையில் அல்லாஹ் தான் என்ற முடிவுக்கு சிறிதும் தயக்கமின்றி துணிவுடன் செயல்படக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

”என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு  அவரது தந்தையையும் அவரது பிள்ளையை யும்விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராகமாட்டார்.” இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 14)

எனவே நம் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டஇ முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்கக்கூடிய, அல்லாஹ்வுக்காக நம் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தஇ நன்மையை ஏவி தீமையை தடுத்து வாழக்கூடிய நன்மக்களாக மாறி அல்லாஹ்வுக்காகவே வாழ்ந்து, அல்லாஹ்வுக்காகவே மரணிக்கக்கூடிவர்களாக நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக

source: http://rasminmisc.blogspot.com/2010/12/blog-post_4399.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

43 − = 34

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb