மிகச்சிறந்த ஆய்வுகளில் ஒன்று!
[ அல்லாஹ் பாலியல் உணர்வை பற்றும் நெருப்பாகவே படைத்துள்ளான். திருமணம் இன்றேல் அந்நெருப்பு உடலை, உள்ளத்தை, ஏன் சமூகத்தைக் கூட எரித்துவிடும்.
இறைவன் மனிதனுக்கு இரண்டு அடிப்படை உணர்வுகளை கொடுத்துள்ளான். ஒன்று தன்னைப் பாதுகாக்கும் உணர்வு. இவ்வுணர்வே அவனை சாப்பிடத் தூண்டுகிறது. மற்றது அவன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வு. அதுவே அவனை இனவிருத்தி செய்யத்தூண்டுகிறது. இதில் முன்னையது நிறைவேறினால்தான் பின்னையது நிறைவேறும்.
மனிதன் எப்போது சாப்பிட வேண்டும் என்ற கேள்வியை நாம் எழுப்பினால் அவன் எப்போது மனம் முடிக்க வேண்டும் என்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்கலாம். எப்போது சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நீங்கள் பசிவரும்போது என்று கூறுவீர்கள். எனவே இச்சை ஏற்படும் போது மனிதன் திருமணம் முடிக்க வேண்டும் என்று நாம் கூறுவோம்.
பாலியல் பசியுள்ளவனின் நிறைவு அதை அடைவதிலேயே தங்கியுள்ளது. அவன் பெண்ணைப் பார்ப்பதாலும் பேசுவதாலும் அது நிறைவேறுமா! உணவைப் பார்ப்பதாலும் அதை முகர்வதாலும் பசி அடங்கிவிடுமா! அதுபோலத்தான் காதலும். காதலியின் அழகை கண்களால் பருகுவதாலோ அவள் குரலை காதால் கேட்பதாலோ அவன் பசி அடங்காது. அது பூட்டைத் திறப்பதிலேயே அடங்கும். அவ்வாறே காதலன் காதலியின் ஆடைக்காக காதலிக்க முடியாது. ஆடைக்காக காதலித்தால் அது நீங்கியதும் காதல் போய்விடும்.
15 வயதில் ஏற்படும் பாலியல் உணர்வை 30 வயதில் கொண்டுபோய்த் தீர்ப்பது நியாயம்தானா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வயதில் திருமணம் செய்வதை தடுக்கும் சமூகம் இவ்வுணர்வை கொழுந்துவிட்டெரியச் செய்யும் வழிமுறைகளைத் தூண்டியும் விட்டுள்ளது.
நிர்வாணப்படங்களும், ஆண் பெண் கலப்பு விளம்பரங்களும் தொடர்களும் அப்பாவி இளைஞனையும் யுவதியையும் என்ன செய்யும் என்பதை சமூகம் உணர்தல் வேண்டும். பல்கலைக்கழகத்திற்குச் சென்றாலும் அங்கும் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையிலேயே கல்விமுறையும் அமைந்துள்ளது. கற்கை முடியும்வரை இவர்கள் இவ்வுணர்வைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு? படி, படி என்று கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா?]
திருமணம், காதல், டீனேஜ் பருவம் – ஒரு நேர்காணல் (1)
மேற்கு நாடுகளில் பரவியிருக்கும் Boy Friend, Girl Friend கலாச்சாரம் நம்நாட்டிலும் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக நம்மத்தியில் தாய் மொழி அல்லாத ஆங்கிலத்தை கல்வி மொழியாகக் கொள்ளும் மாணவ மாணவியரிடையே இது பரவியும் வருகிறது. உலக காதலர் தினத்தை இலங்கையில் கொண்டாடக்கூடிய நிலையை காணக்கூடியதாகவுள்ளது. கட்டிளமைப் (டீனேஜ்) பருவத்தில் ஏற்படுகின்ற இவ்வெதிர்ப்பால் கவர்ச்சி அல்லது காதல் பற்றி என்ன கருதுகிறீர்கள் ?
காதல் ஒரு மனப்பசி மாத்திரமே. கட்டிளமைப்பருவத்தில் ஏற்படும் இவ்வுணர்வு இளைஞர்களை பல சீர்கேட்டுக்கு இட்டுச்செல்வதோடு சமூகப்பிரச்சினைகளையும் தோற்றுவிக்கிறது.
பாலியல் பசியுள்ளவனின் நிறைவு அதை அடைவதிலேயே தங்கியுள்ளது. அவன் பெண்ணைப் பார்ப்பதாலும் பேசுவதாலும் அது நிறைவேறுமா! உணவைப் பார்ப்பதாலும் அதை முகர்வதாலும் பசி அடங்கிவிடுமா! அதுபோலத்தான் காதலும். காதலியின் அழகை கண்களால் பருகுவதாலோ அவள் குரலை காதால் கேட்பதாலோ அவன் பசி அடங்காது. அது பூட்டைத் திறப்பதிலேயே அடங்கும். அவ்வாறே காதலன் காதலியின் ஆடைக்காக காதலிக்க முடியாது. ஆடைக்காக காதலித்தால் அது நீங்கியதும் காதல் போய்விடும்.
உண்மையில் காதல் என்பது இனக்கவர்ச்சியையே குறிக்கின்றது. அது உடல் இச்சை சார்ந்தது. இச்சை உடலைவிட்டு நீங்கும் போதே காதலும் நீங்கும். மஜ்னூன் லைலாவை முடித்திருந்தால் அவள் ஏனைய பெண்களைப் போல் மாறியிருப்பாள். பசியோடு இருப்பவனின் வயிறு நிரம்பினால் பசி போய்விடுவதைப் போலவே இதுவும் ஒரு தற்காலிக உறவு. உடலுறவின் பின் முடிந்துவிடும். இதனால்தான் இஸ்லாம் திருமணத்தை ஊக்குவிக்கிறது. திருமணம் இவ்வுறவை பலப்படுத்தும் நல்வழிமுறையாகும்.
வெறும் காதலால் மாத்திரம் திருமணத்தை கட்டியெழுப்ப முடியாது. அது ஓடும் நீரில் வீடு கட்டுவது போன்றதாகும். திருமணம் என்பது கருத்தொருமை, உணர்வு பொருத்தப்பாட்டிலேயே தங்கியுள்ளது. பொருளாதார, சமூக தகுதியும் அதற்குத் தேவையாகும்.
கல்வி, பொருளாதாரம் போன்ற காரணங்களால் திருமணம் பிற்போடப்படுவதும் இதனால் சமூகத்தில் முது கன்னியர் தொகை அதிகரிப்பதும் அல்லது அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுவதையும் எவ்வாறு காண்கிறீர்கள்? திருமணத்துக்குப் பொறுத்தமான வயது என்ன என்பதை எவ்வாறு வரையறுப்பது?
திருமணத்துக்குப் பொருத்தமான வயது எது என அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது. சிலர் 30 என்கிறார்கள். வேறுசிலர் 40 என்கிறார்கள். அல்லாஹ் மனிதனையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்துள்ள யதார்த்தத்தின் அடிப்படையில் சிந்திக்கும் போதே இக்கேள்விக்கான விடையை கண்டடைய முடியும்.
இறைவன் மனிதனுக்கு இரண்டு அடிப்படை உணர்வுகளை கொடுத்துள்ளான். ஒன்று தன்னைப் பாதுகாக்கும் உணர்வு. இவ்வுணர்வே அவனை சாப்பிடத் தூண்டுகிறது. மற்றது அவன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வு. அதுவே அவனை இனவிருத்தி செய்யத்தூண்டுகிறது. இதில் முன்னையது நிறைவேறினால்தான் பின்னையது நிறைவேறும். இப்போது மனிதன் எப்போது சாப்பிட வேண்டும் என்ற கேள்வியை நாம் எழுப்பினால் அவன் எப்போது மனம் முடிக்க வேண்டும் என்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்கலாம். எப்போது சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நீங்கள் பசிவரும்போது என்று கூறுவீர்கள். எனவே இச்சை ஏற்படும் போது மனிதன் திருமணம் முடிக்க வேண்டும் என்று நாம் கூறுவோம்.
அதாவது மனிதன் கட்டிளமைப் பருவத்தை அடைகின்ற போது அதாவது 18 வயதில் திருமணம் முடிப்பதை அனுமதிக்க முடியும். இப்பருவத்தில் திருமணத்திற்குத் தேவையான வசதிகள் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கக்கூடும். அதற்கு உணவில்லாதவன் பசியோடு இருக்கும் நிலையில் என்ன செய்வான் என்றால் உணவு கிடைக்கும் வரை காத்திருப்பான் என்று கூறலாம். பசியுள்ளவன் காத்திருக்க முடியாவிட்டால் அவன் என்ன செய்வான்? அதே நேரம் அவனுக்கு முன்னால் உணவு இருந்தால் என்ன செய்வான்? எவ்வாறு நடந்து கொள்வான்? அதை களவில் உண்பான் அல்லது கொள்ளையடிப்பான் என்றால் இந்நேரத்தில் நாம் என்ன செய்யமுடியும்?
சமூகத்தில் பசியோடு இருப்பவர்கள் களவெடுக்காமல் அல்லது கொள்ளையடிக்காமல் இருப்பதற்காக வேண்டி உணவைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகளை உருவாக்கிக் கொடுத்தல் வேண்டும். அவனை சாப்பிட வேண்டாம் என்று தடுப்பது நிர்ப்பந்தத்தினால் ஏற்படும் ஒரு தடுப்பேயாகும். அவன் திருடுவான் எனப்பயந்தால் மக்கள் தங்கள் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு உரிமையும் இருக்கிறது. அவனுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை சமூகமே பெற்றுக் கொடுக்க வேண்டும்.
மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது அவனுக்கு அது உரிமையற்றது. ஏனெனில் தனக்கு உரித்தில்லாததை அவன் திருடிப் பெறுகின்றான். திருமண விடயத்திலும் இக்கருத்தையே நாம் கூற முடியும். திருமணத்திற்குப் பொருத்தமான வயது டீனேஜ் பருவமே. இப்பருவத்தில் அவனோ, அவளோ பாடசாலையில் கற்கின்றனர். அவரிகளின் கையில் பணமோ பொருளோ கிடையாது. ஏறத்தாழ 25 வயதுவரை கல்விக்காக தம்காலத்தை செலவிடுகின்றனர். அதே நேரம் நாம் உருவாக்கிக் கொண்ட சமூக சம்பிரதாய சடங்குகள் இளம் பருவத்தினரின் பால்ய தேவையை பூர்த்தி செய்வதற்கு அனுமதிப்பதாய் இல்லை. இந்நேரத்தில் நாம் என்ன செய்யலாம்?! அவனோ, அவளோ என்ன செய்வார்கள்?! பாலியல் உணர்வு கடுமையாக உந்தப்படும் இப்பருவத்தில் திருமணம் இல்லாவிட்டால் எப்படித் தீர்ப்பது?!
அல்லாஹ் பாலியல் உணர்வை பற்றும் நெருப்பாகவே படைத்துள்ளான். திருமணம் இன்றேல் அந்நெருப்பு உடலை, உள்ளத்தை, ஏன் சமூகத்தைக் கூட எரித்துவிடும். இங்கேதான் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. எனவே இதை ஆராய வேண்டிய தேவை எமக்கு ஏற்படுகிறது. திருமணத்திற்கு பொருத்தமான வயது 30 – 40 என்று கூறுவது முட்டாள்தனமானதாகும். அது இப்பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. கொலைத்தண்டனை கொடுப்பது நீதிபதிக்கு லேசானதொன்றே. ஆனால் அத்தண்டனைக்கு உட்படுபவனின் நிலைதான் பெரும் சோகமானது. இங்கு தண்டிக்கப்படுவது யார்? இளைஞனும் யுவதியும் தான்.
15 வயதில் ஏற்படும் பாலியல் உணர்வை 30 வயதில் கொண்டுபோய்த் தீர்ப்பது நியாயம்தானா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வயதில் திருமணம் செய்வதை தடுக்கும் சமூகம் இவ்வுணர்வை கொழுந்துவிட்டெரியச் செய்யும் வழிமுறைகளைத் தூண்டியும் விட்டுள்ளது. நிர்வாணப்படங்களும், ஆண் பெண் கலப்பு விளம்பரங்களும் தொடர்களும் அப்பாவி இளைஞனையும் யுவதியையும் என்ன செய்யும் என்பதை சமூகம் உணர்தல் வேண்டும். பல்கலைக்கழகத்திற்குச் சென்றாலும் அங்கும் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையிலேயே கல்விமுறையும் அமைந்துள்ளது. கற்கை முடியும்வரை இவர்கள் இவ்வுணர்வைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு? படி, படி என்று கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? இதைவிட 15 ஆண்டுகள் இளைஞர்களை சிறையில் அடைத்துவைப்பது மேலானது என்று தோன்றுகிறது.
இதற்கு என்னசெய்யலாம் என்றால், யதார்த்த வாழ்வுக்கு, மனித இயல்புக்கு, இயற்கையின் தீர்ப்புக்கு நாம் திரும்பிச் செல்வதே பொருத்தமான தீர்வாகும். இயற்கையை எதிர்த்துப் போரிடுவது முடியாத காரியம். அவ்வாறு போரிட்டால் ஈற்றில் இயற்கையே வெற்றிபெரும் என்பது நாம் கண்டுவரும் உண்மையாகும். எமது மூதாதையர்கள் 18 வயதில் திருமணம் முடிக்கவில்லையா? அவர்கள் தம்பிள்ளைகளுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுக்கவில்லையா?
இளமைத் திருமணம் ஏன்? என்பதற்கு கலாநிதி அப்துல் முத்தலிப் பின் அஹ்மத் அல்ஸஃ பின்வருமாறு விளக்குகிறார்.
“மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்கும் அதற்குப் பொருத்தமான பணிகள் உண்டு. திருமணத்திற்கும் ஒரு பொருத்தமான பருவம் உண்டு. அது 18 வயதுக்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட பருவமாகும். இது கட்டிளமைப்பருவம் முடிவடைகின்ற காலப்பிரிவாகும். சமூகத்தை அடிப்படையாக வைத்தும் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டும் சில காரணங்களுக்காக மேலே குறிப்பிட்ட வயதில் சில வித்தியாசங்கள் கூடிக்குறைய முடியும். இதனை ஆரோக்கிய கண்ணோட்டத்தில் நாம் நோக்கினாலும் மனித இயல்புக்கு (ஃபித்ரா) ஏற்ப வாழும்போதுதான் ஆரோக்கியமாக வாழமுடியும்.”
– ஏபிஎம் இத்ரீஸ்
(- இலங்கை வானொலி நேர்காணலின் எழுத்து வடிவம் ஆகும்.)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.