மனசாட்சியே இல்லாமல் சிசரியனுக்கு பரிந்துரை!
[ சிசேரியன் மூலமா பிறக்கற குழந்தைகள் நார்மலா பிறக்கற குழந்தைகள விட கொஞ்சம் சூட்டிப்பு, புத்திசாலிதனதுல கொஞ்சம் கம்மியா இருப்பாங்கன்னு ஒரு ஆய்வுல சொல்றாங்க.
நம்ம பாட்டி, அம்மா காலத்துல எல்லாம் அரை டஜன், ஒரு டஜன்னு வீட்ல தான் பிரசவம் பார்த்தாங்க, ஆனா இப்ப ஒரு குழந்தை பெத்துகறதுக்குள்ள அப்ப்பபான்னு ஆயிடுது,]
முன்னெல்லாம் ஸ்வீட் கொடுத்து “குழந்தை பிறந்திருக்கு” ன்னு யாரவது சொன்னா பையனா? பொண்ணான்னு கேட்கறது வழக்கம். ஆனா இப்ப நார்மலா, ”சிசேரியனா”ன்னு கேட்கற அளவுக்கு சிசேரியன் ரேட் அதிகமாயிடுச்சு.
WHO (WORLD HEALTH ORGANISATION) னோட கணக்கு படி ஒரு நாட்டில சிசேரியன் ரேட் 15 % க்கு மேல இருக்க கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா சீனால இந்த விகிதம் 46 %, ஆசியா நாடுகள்ல 25 % ம் அதிகமாயிடுச்சு.
நார்மல் டெலிவரிய விட 4 மடங்கு அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கு இந்த சிசரியன்ல. ஆனா இந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்ச சில மருத்துவர்களே கூடுதலா 20 ஆயிரம் கிடைக்கறதுக்காக மனசாட்சியே இல்லாம சிசரியனுக்கு பரிந்துரை செய்யறது தான் இதுல வேதனையான விஷயம், தலை திரும்பல, தண்ணி பத்தலைன்னு பல காரணங்கள். அதோட அவங்களுக்கும் பொறுமை இல்ல, சிசரியனா 30 to 45 நிமிட வேலை, முடிஞ்சுதா அடுத்த பேஷன்ட்….!
பார்க்க போகலாம், நார்மல்னா எப்ப வலி வந்து, எப்ப பிரசவம் பார்த்துன்னு அலுத்துக்கறாங்க…
சில இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே உபயோக படுத்த வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு சில பெண்களும் , சில மணி நேர வலிய தாங்க முடியாம நேரமும், காலமும் சரியா இருக்கனும்கறதுக்காக தப்பா உபயோக படுத்தறாங்க.
சிசேரியன் மூலமா பிறக்கற குழந்தைகள் நார்மலா பிறக்கற குழந்தைகள விட கொஞ்சம் சூட்டிப்பு, புத்திசாலிதனதுல கொஞ்சம் கம்மியா இருப்பாங்கன்னு ஒரு ஆய்வுல சொல்றாங்க.
நம்ம பாட்டி, அம்மா காலத்துல எல்லாம் அரை டஜன், ஒரு டஜன்னு வீட்ல தான் பிரசவம் பார்த்தாங்க, ஆனா இப்ப ஒரு குழந்தை பெத்துகறதுக்குள்ள அப்ப்பபான்னு ஆயிடுது,
நவீன உணவு முறைகளும், நவீன சாதனங்கள் வரவும் இதுக்கு ஒரு காரணம்னு சொல்லலாம், அதோட ரிஸ்க் எடுக்க யாருக்கும் நேரம் இல்லாததும் ஒரு காரணம்,
இந்த நிலை மாறினால் சந்தோஷம் தான். இயற்கையோடு இணைந்த வாழ்வு என்றும் சுகமே!