25, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது!
25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 29-ந்தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது. வரும் புதன்கிழமை முதல் 25 பைசா, 50 பைசா நாணயங்களை யாரும் பயன்படுத்தவும் இயலாது.
யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் 25 பைசா, 50 பைசா நாணயங்களை கொடுத்து பணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ”கூகுள்” – ”Google” கூடுதல் சேவை
வாஷிங்டன்: தமிழ், கன்னடம் உள்ளிட்ட மேலும் 5 இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு தேடுதல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவுப்படுத்தி உள்ளது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி ஆகிய 5 இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்துவது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் அடிப்படையில், புதன்கிழமை முதல் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, கூகுல் நிறுவனத்தின் அறிவியல் ஆய்வு பிரிவு விஞ்ஞானி ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்தார்.
இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இந்த 5 மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 500 மில்லியன் ஆக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2009ம் ஆண்டு 11 மொழிகளில் தொடங்கப்பட்ட கூகுள் தேடுதல் சேவை இப்போது, 63 மொழிகளில் கிடைக்கிறது