Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மகளிருக்கான குறிப்புகள் (1)

Posted on June 22, 2011 by admin

o  சலவைக்குப் பின் துணி வெண்மையாக இருக்க வேண்டுமா?

இளம் சூடான நீரில் சோடா உப்பு பொடியைப் போட்டுத் துணிகளை ஊறவைத்து துவைக்கவும். துணிகள் “பளிச்” என்று இருக்கும்.

o  சட்டைக் காலரில் உள்ள அழுக்குப் போகவில்லையா?

சிறிது ஷாம்பு எடுத்து காலர் அழுக்கில் தேய்த்து ஊறவைத்து துவைத்துப் பாருங்கள். அழுக்கு அம்பேல்.

o  சலவை சோப்புகளினால் ரவிக்கை நிறம் மங்குகிறதா?

குளிக்கும் சோப்பினால் துவைத்து நிழலில் உலர்த்துங்கள் நிறம் மாறாது.

o  மழைச் சேறு பட்டு உடை கறையாகி விட்டதா?

உருளைக் கிழங்கை அரிந்து எடுத்து அதன் மீது தேய்த்தால் கறை காணாமல் போகும்.

o  பாத்திரங்கள் பளபளக்க வேண்டுமா?

தவிடு, அரப்பு, உபயோகித்த காபி பொடி ஆகியவற்றைக் கலந்து பாத்திரங்களை தேயுங்கள். முகம் பார்க்கும் அளவுக்கு அவை பளிச்சிடும்.

o  பட்டுப் புடவையில் துர்நாற்றம் வருகிறதா?

லேசான வெள்ளைத் துணியில் மிளகை வைத்து சிறு சிறு பொட்டலமாகக் கட்டி பட்டுப் புடவைகளுக்கு இடையே வையுங்கள். வாடை அறவே வராது.

o  வாங்கிய தக்காளி அழுகிப் போகிறதே என்ற கவலையா?

வாங்கியதும் உப்பு நீரில் போட்டு வைத்தால் கெடாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்.

o  பாட்டில் மூடி இறுகி திறக்கவில்லையா?

வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு திறந்து பாருங்கள் உடனே திறந்துவிடும்.

o  சாம்பார் வெங்காயத்தை உரிக்கச் சிரமமாக உள்ளதா?

உரிப்பதற்கு முன் 10 நிமிடத்துக்குத் தண்ணீரில் ஊற வையுங்கள். தோல் சுலபமாக வரும்.

o  அரிசி மாவு, ரவை போன்றவை சீக்கிரம் கெட்டுப் போகிறதா?

அவற்றைச் சலித்து வறுத்து வையுங்கள். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

o  சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா?

வெந்நீரைச் சேர்க்காதீர்கள். உருளைக்கிழங்கு மெலிதாக நறுக்கிப் போட்டால் உவர்ப்புத் தன்மை குறைந்து விடும்.

o  தயிர் புளிக்க வேண்டுமா?

அதில் தேங்காய் பத்தைகளைப் போட்டுப் பாருங்கள். சீக்கிரம் புளித்துவிடும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

60 + = 61

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb