பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜம் ஜம் கிணறு
ஜம் ஜம் கிணறு. இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.
அதற்கிடையே அல்லாஹ், குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான்.எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தோண்டுகின்ற இடமெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் தோன்றுகின்ற இந்தப் பாலைவன மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம். நாள் தோறும் வருகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும், ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம் அனுதினமும் நீர் வெளியேற்றப்படுகிறது.
அள்ள அள்ளக் குறையாத இப்பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவன் பேராற்றலுடையவன்.
இந்த ஜம்ஜம் கிணறு இருக்கும் பகுதியும், பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.
வெற்றியின் இரகசியம்
ஆயிரம் அடிகள் தோண்டிய போதும்
அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் !
தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம்
தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ?
கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை )
கலங்கி ஓடிய சோதனைக் காண்டம்
வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் !
வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் !
பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம்
பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை !
பஞ்சம் நீங்கிடப் பொங்கிய தண்ணீர்
படைத்தவன் அல்லாஹ் அருளின் எல்லை !
பாலையில் பொங்கிய நீரும் அதிசயம் !
பொங்கிய நீரோ நின்றதும் அதிசயம் !
பாலையைப் பெருக்கிப் பாரினில் புகுந்தால்…
பூமியின் உலகே அழிந்திடும் அவசியம் ?
ஆயிரம் (இ)லட்சம் அருவிகள் இருந்தும்
அகிலம் முழுவதும் அந்நீர் இல்லை !
சேயும் தாயும் தோண்டிய ( ? ) தண்ணீர்
சேரா நாடுகள் உலகில் இல்லை
இத்தனை ஆண்டுகள் கடந்தன பாரீர் !
இதுவரை கலங்கல் கிருமிகள் இல்லை !
சொத்தென நினைத்து வைத்தவர் எல்லாம்
சுகந்தரும் மருந்தாய் அம்ருந்துதல் உண்மை !
–முதுவைக் கவிஞர் அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ