இஸ்லாமிய சமூக அமைப்புச் சட்டம் எப்படி இருக்கும்?
சமூக அமைப்புப்பற்றியன இஸ்லாமிய சட்டத்தை, ஒரு சிறந்த முஜிதஹித் அரபியில் எழுதியதை, நம் சகோதரர் ஒருவர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். இன்ஷா அல்லாஹ் வருகிற கிலாஃபாவுடைய சமூக அமைப்பு சட்டம் பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும்.
சமூக அமைப்பு – Social system – Nidaam ul Ijtimaayee:
விதி 108: சமூக வாழ்வில் பெண்ணின் பிரதான பங்களிப்பு அவள் தாயாகவும் மனைவியாகவும் கடமையாற்றுவதுதான். அவள் சமூகத்தின் கவுரமாக இருக்கிறாள் எனவே அவளை பாதுகாக்கவேண்டியது அவசியமாகும்.
விதி 109: அடிப்படையிலேயே ஆணும் பெண்ணும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிரித்து வைக்கப்பட்டிருப்பார்கள். ஷரியா அனுமதித்த தேவையின் பொருட்டே தவிர அவர்கள் சந்தித்துக் கொள்ளக்கூடாது. வணிகம், ஹஜ்யாத்திரை போன்ற ஷரியா அனுமதித்த தேவையின் அடிப்படையில் மட்டும்தான் சந்திப்பு அனுமதிக்கப்படும்.
விதி 110: ஷரியா தலீலில் (shari’a daleel) குறிப்பிடப்பட்டுள்ள இருபாலருக்கும் உள்ள தனித்தன்மையான விஷயங்களைத் தவிர்த்து ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையிலும் உரிமையிலும் சமத்துவம் உண்டு. ஆகவே வணிகம், விவசாயம், தொழிற்சாலை ஆகியவற்றின் பணிகளில் ஈடுபடுவது ஒப்பந்தங்களில் பங்கு கொள்வது கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுவது அனைத்துவிதமான சொத்துக்களையும் அடைந்துகொள்வது சுயமாக தன்னிடமுள்ள பணத்தை முதலீடுசெய்வது அல்லது மற்றவர்கள் மூலமாக முதலீடுசெய்வது மற்றும் வாழ்வின் அனைத்து வகையான விவகாரங்களையும் கையாண்டுகொள்வது ஆகிய விஷயங்களில் ஆணைப்போலவே பெண்ணுக்கும் சமஉரிமை உண்டு.
விதி 111: தேர்தல் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டு கலீஃபாவை தேர்ந்தெடுக்கவும் அவருக்கு பையாத்கொடுக்கவும் மஜ்லிஸ்அல்உம்மாவின் உறுப்பினராக இருக்கவும் பெண்ணுக்கு உரிமையுண்டு. ஆட்சித்துறை அல்லாத தவ்லாவின் பதவிகளில் அலுவலராக (officer) இருப்பதற்கும் பெண்ணுக்கு உரிமையுண்டு.
விதி 112: ஆட்சியாளர் பொறுப்புக்கு பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகவே கலீஃபா, கலீஃபாவின் உதவியாளர், வாலி, ஆமில் ஆகிய பதவிகளை வகிக்கவும் ஆட்சித்துறை நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவும் பெண்களால் முடியாது. தலைமைநீதிபதி (qaadi al qudaa) மாஹ்குகமாத் மதாளிம ; அமீருல்ஜிஹாது ஆகிய பதவிகளை வகிப்பதற்கும் பெண்களுக்கு அனுமதியில்லை.
விதி 113: பெண்கள் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருக்கின்றார்கள். அவர்களுடைய பொது வாழ்க்கையில் மற்ற பெண்களுடனும் நிக்காஹ் செய்வதற்கு தடை செய்யப்பட்ட ஆண்களுடனும்(மஹ்ரமான ஆண்கள்) வாழ்ந்துகொள்வதற்கு அனுமதியுண்டு. அந்நிய ஆண்களை(நிக்காஹ் செய்வதற்கு ஆகுமான ஆண்கள்) சந்திக்கும்போது ஹிஜாப் அணிந்கிருக்க வேண்டும். அதாவது முகம் கைகள் தவிர (மணிக்கட்டு மட்டும்) மற்ற உடலின் பாகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆடைகள் அவர்களுடைய அழகை வெளிப்படுத்தாதவாறு இருக்கும் நிலையில் அந்நிய ஆண்களை அவர்கள் சந்திக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களோடும் மஹரமான ஆண்களோடும் மட்டும்தான் பெண்கள் வாழமுடியும். அந்நிய ஆண்களோடு வாழ்வதற்கு அனுமதி இல்லை. இந்த இரண்டு நிலைகளிலும் பெண்கள் ஷரியா சட்டங்களுக்கு ஏற்ப தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
விதி 114: நிக்காஹ் செய்துகொள்ள ஆகுமான எந்த ஆண்களுடனும் தனிப்பட்ட முறையில் வாழ்வதற்கு பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். மறைக்கவேண்டிய உடல்பகுதியை (aurah) வெளிப்படையாகக் காண்பிப்பதற்கும் அந்நிய ஆண்கள் முன்னிலையில் உடல்அழகை வெளிப்படுத்துவதற்கும் பெண்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர்.
விதி 115: ஒழுக்கசீலங்களுக்கு (akhlaaq) பங்கம் ஏற்படுத்தும் விதமாக ஆண்களும் பெண்களும் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது அல்லது சமூக மாண்பிற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளக்கூடாது.
விதி 116: இல்லற வாழ்க்கைதான் மனஅமைதி ஏற்படுத்துவதற்கும் துணையுடன் வாழ்வதற்கும் ஏற்றதாகும். மனைவியை பொறுத்து கணவனின் பொறுப்பு அவளை பாதுகாப்பதுதானேதவிர ஆதிக்கம் செய்வதல்ல. அவள் கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டவள். அவளுடைய வாழ்க்கைத் தேவைகளை முறையாக நிறைவேற்ற கணவன் கடமைப்பட்டவன்.
விதி 117: நிக்காஹ் முடித்த தம்பதிகள் குடும்ப கடமைகளை நிறைவேற்றுவதில் ஒருவருக்கொருவர் முழுமையாக உதவி செய்துகொள்ளவேண்டும். வீட்டுக்கு வெளியிலுள்ள இயல்பான பணிகளை சீரிய முறையில் கணவன் மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில் வீட்டுக்குள் இருக்கும் இயல்பான பணிகளை மனைவி சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். வீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் போது மனைவிக்கு சிரமம் ஏற்பட்டால் கணவன் உதவி செய்யவேண்டும்.
விதி 118: குழந்தைகளை பாதுகாப்பது தாயின் கடமையாகவும் உரிமையாகவும் இருக்கின்றன அவள் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியே. குழந்தைக்கு தாயின் கவனிப்பு தேவைப்படும் வரையில் தாய் அதனை பேணிப் பாதுகாக்க வேண்டும். ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அதற்கு தாயின் கவனிப்பு தேவையில்லை என்றநிலை வரும்போது பெற்றோர்களில் தாங்கள் விரும்பும் நபரோடு அவர்கள் சேர்ந்து வாழ்ந்து கொள்ளலாம். பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம் பெற்றோருடன் வாழ்வதை தவிர குழந்தைக்கு வேறு வழியில்லை.
جزاك اللهُ خيراً – வரிசை முஹம்மது