இன்பம் அங்கே கொடிகட்டிப்பறக்க…
[ பெண் என்பவள் இன்பத்தின் சொரூபம். ஆண் என்பவன் ஒரு பெண்ணை இன்பத்தில் திருப்திபடுத்தவே படைக்கப்பட்டிருக்கிறான். அதன் பிறகே, அவனது சம்பாத்தியம், கவுரவம், திறமை எல்லாமே!
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் எப்படி மயக்குவது என்பதை எவரும் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்பதில்லை. இந்த விஷயத்தில் ”மீன் குஞ்சுக்கு கற்றுத்தர வேண்டுமா?” எனும் பழ்மொழி கணக்கச்சிதாமகப் பொருந்துகிறது. ஏனெனில் ஆணின் மீது பெண்ணுக்கு ஈர்ப்பும் பெண்ணின் மீது ஆனுக்கு ஈர்ப்பும் இறைவன் படைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான அருட்கொடை எனலாம்.
கணவன் மனைவியிடத்தில், ”நீ ஒருத்தி எனக்கு மனைவியாக இருப்பது நூறு மனைவி எனக்கு இருப்பதற்குச் சமம்….! எனக்கு இன்னுமொரு முறை இளமை வழங்கப்படுமெனில்.., உன்னையல்லாள் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்” என்று என்று சொல்லிப்பாருங்கள்! நிச்சயமாக, அவளும் இது போன்றதொரு காதல் வரிகளை பதிலாகத் தரக் கூடியவளாக இருப்பாள்.
”ஆண் பெண்ணுக்கு ஆடை, பெண் ஆணுக்கு ஆடை” எனும் இறைமொழி அங்கு ”ஆண் பெண்ணுக்கு அடிமை, பெண் ஆணுக்கு அடிமை” என்று பரிணாமம் பெற்றால் -நடைமுறைப்படுத்தப்படுமானால் தாம்பத்தியத்திற்கான அஸ்திவாரம் அங்கு பலமாகிவிடும் என்பதை சொல்லாமலேயே காணலாம்]
இன்பம் அங்கே கொடிகட்டிப்பறக்க சில ரொமான்ஸ் ரகசியங்கள்…
கணவன் மனைவி உறவு இன்ப சுகத்திலிருந்தே ஆரம்பமாகிறது. இதில் கணவன் மனைவியை படுக்கையில் திருப்திபடுத்தவேண்டும். மனைவிக்கு திருப்தி கிடைக்க படுக்கையில் கணவனது ஆசைகளை மனைவி நிறைவேற்ற வேண்டும். அதாவது, படுக்கையில் மனைவியானவள் கணவனுக்கு அடிமையாக நடந்து கொள்ளவேண்டும். அதுபோன்று படுக்கையறையில் கணவனும் மனைவிக்கு அடிமையாக நடந்து கொண்டால் இன்பம் அங்கே கொடிகட்டிப்பறக்கும்.
”ஆண் பெண்ணுக்கு ஆடை, பெண் ஆணுக்கு ஆடை” எனும் இறைமொழி அங்கு ”ஆண் பெண்ணுக்கு அடிமை, பெண் ஆணுக்கு அடிமை” என்று பரிணாமம் பெற்றால் -நடைமுறைப்படுத்தப்படுமானால் தாம்பத்தியத்திற்கான அஸ்திவாரம் அங்கு பலமாகிவிடும் என்பதை சொல்லாமலேயே காணலாம்.
பெண் என்பவள் இன்பத்தின் சொரூபம். ஆண் என்பவன் ஒரு பெண்ணை இன்பத்தில் திருப்திபடுத்தவே படைக்கப்பட்டிருக்கிறான். அதன் பிறகே, அவனது சம்பாத்தியம், கவுரவம், திறமை எல்லாமே!
ஆனால் இன்று திருமணம் ஆணின் சம்பளம் மற்றும் பெண்ணின் வரதட்சணை இவற்றைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆணின் திருமண வயதைவிட பெண்ணின் திருமணவயது குறைந்தது 3 வருடங்கள் குறைவாக இருப்பது மிக நல்லது. அதிக பட்சம் 8 வருடங்கள் குறைவாக இருக்கலாம். அதைவிட அதிகமாக இருப்பது விரும்பத்தக்கது அல்ல. பொதுவாக 10 வருடம், 12 வருடம், 14 வருடம் வித்தியாசம் கொஞ்சம் சிரமம்தான்.
தன்னைவிட மூத்த பெண்ணை ஒருவன் உறவு கொண்டால் அவனது முகத்தில் கிழத்தன்மை வந்துவிடும். அதே சமயம் அந்த மூத்த பெண்ணிற்கு இளமைத்தன்மை வந்துவிடும். அதுபோன்று இளம்பெண்ணை மணம் முடித்துள்ள சில வயதானவர்களைப் பார்க்கும்போது அவர்கள் ஒரு இளைஞனைப்போல் உலா வருவதை காணலாம். ஏன் இப்படி வருகிறது?
ஒவ்வொரு ஆணின் பிறப்புறுப்பு வழியாக சுக்கிலம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது. ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக சுரோணிதம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது. இந்த திரவங்கள் அவரவரது உடல்வாகு, வயது, வலிமையைப் பொருத்து மாறுபடுகிறது. ஒரு ஆணின் சுக்கிலம் நீண்டகாலமாக ஒரே பெண்ணின் உடலுக்குள்ளும், ஒரு பெண்ணின் சுரோணிதம் ஒரே ஆணின் உடலுக்குள்ளும் பாய்ந்தால் இருவரின் உடலும் முழு ஆரோக்கியமாக இருக்கும்.
மனைவியை விட்டுவிட்டு பலருடன் உடலுறவு கொள்ளும்போது உடல் சமநிலை பாதிக்கப்படும். மிகுந்த ”இச்சை” உள்ளவர்கள் வசதி வாய்ப்பு இருந்தால் இன்னொரு மனைவியை கட்டிக்கொள்ளலாம். (இஸ்லாம் நான்கு மனைவிகள் வரை திருமணம் முடித்துக்கொள்ள அணுமதியளிக்கும் அதே வேளையில் அதற்கான கண்டிஷனையும் தெளிவுபடுத்துகிறது.). ஆனால் அதுதான் எல்லை. இந்த எல்லையை மீறும்போது ஒரு குடும்பம் சிதைகிறது.
திருமணமான தம்பதிகள் ஒவ்வொரு முறையும் உறவு கொள்ளும்போதும் வித்தியாசமாக உறவு கொண்டால் ”கிக்” அதிகமாகும். இல்லாவிட்டால், வாழ்க்கைத் துணை மீது ‘அந்த’ மயக்கம் வராது. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் எப்படி மயக்குவது என்பதை எவரும் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்பதில்லை. இந்த விஷயத்தில் ”மீன் குஞ்சுக்கு கற்றுத்தர வேண்டுமா?” எனும் பழ்மொழி கணக்கச்சிதாமகப் பொருந்துகிறது. ஏனெனில் ஆணின் மீது பெண்ணுக்கு ஈர்ப்பும் பெண்ணின் மீது ஆனுக்கு ஈர்ப்பும் இறைவன் படைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான அருட்கொடை எனலாம்.
தம்பதிகளுக்கு திருமணமான 7ஆம் வருடம் செவன் இயர் இட்ச் ( 7 years hitch ) என்ற ஒன்று உருவாகிறது என மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளனர்.
7-ஆம் வருடம் தனது இல்லற வாழ்வில் ஒருவித சோர்வு உண்டாகிறது. சிலருக்கு இது 7ஆம் வருடம் உண்டாகாமல் 9 அல்லது 10 அல்லது 12 ஆம் வருடம் உண்டாகிறது.
இந்த சமயத்தில்தான், மூன்றாம் ஆள் உள்ளே நுழைந்து கள்ளக்காதல் பிறக்கிறது. இதை சரிசெய்ய, அந்த வருடங்களில் 7,9,10,12 ஆம் வருடங்களில் 10 நாட்களுக்கு ஏதாவது கடலோரம் அல்லது மலையோரம் உள்ள சுற்றுலா ஸ்தலம் ஒன்றிற்குச் சென்று அங்கே ஜாலியாக இருந்துவிட்டு வர வேண்டும். குழந்தைகளை உடன் அழைக்காமல் சென்றால் நல்லது.
கணவன் மனைவியிடத்தில், ”நீ ஒருத்தி எனக்கு மனைவியாக இருப்பது நூறு மனைவி எனக்கு இருப்பதற்குச் சமம்….! எனக்கு இன்னுமொரு முறை இளமை வழங்கப்படுமெனில்.., உன்னையல்லாள் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்”” என்று என்று சொல்லிப்பாருங்கள்! நிச்சயமாக, அவளும் இது போன்றதொரு காதல் வரிகளை பதிலாகத் தரக் கூடியவளாக இருப்பாள்.
நீங்கள் அன்பாக உதிர்க்கும் ஒவ்வொரு துளி வார்த்தையும், உறவுக்கு உரம் போடுபவைகளாகும். குறிப்பாக பெண்களிடத்தில் இனிப்பாகப் பேசும் பொழுது, அவர்களது இதயங்கள் கிளர்ச்சி அடைகின்றன.
கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு சிறு சிறு விஷயங்களில் கூட உதவிகரமாக இருக்க வேண்டும். ஒரு கணவர் வீட்டிற்குள் நுழைகின்ற பொழுது மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றாள் எனில், விலகி நிற்கும் போர்வையை அவளுக்குப் போர்த்தி விடுவது கூட அன்பின் வெளிப்பாடு தான்.
வார்த்தைகளால் ஒருவரை மகிழ்ச்சிபடுத்தவோ, வருத்தபடுத்தவோ முடியும். ஓர் உறவை மலரச் செய்யவோ, கருகச் செய்யவோ இயலும். ‘ஆண்களும் தன்மையான வார்த்தைகளும்’ என்பது அபூர்வமான கூட்டணி. அதிலும் கணவன்மார்கள் மனைவியிடம் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.
உயிரில் பாதியாக இருந்தவர், இன்னொருவருடன் சென்று விட்டால் நெஞ்சம் நொறுங்கிப் போகும் அல்லவா… உஷார்…! மறுபடியும் நினைவு படுத்திகிறோம்; பெண் என்பவள் இன்பத்தின் சொரூபம். ஆண் என்பவன் ஒரு பெண்ணை இன்பத்தில் திருப்திபடுத்தவே படைக்கப்பட்டிருக்கிறான். அதன் பிறகே, அவனது சம்பாத்தியம், கவுரவம், திறமை எல்லாமே!