Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நீங்கள் ஆன்லைன் பிரபலமா?

Posted on June 2, 2011 by admin

நீங்கள் ஆன்லைன் பிரபலமா?

‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘

நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் அல்லது ஆர்குட் மெம்பரா? ஆம் என்றால் இதுபோன்ற பெருமை கலந்த புலம்பல்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக நாம் அனைவருமே நம் மேல் ஒரு ஸ்பாட் லைட் விழுவதை விரும்புபவர்கள். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கு சென்றாலும் நம்மை மற்றவர்கள் கவனிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டாவது விரும்புவோம். ஆனால் பிரபலங்களுக்கு கிடைக்கின்ற அந்த கவன ஈர்ப்பு, சாமானியர்களான நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் ஆன்லைன் தளங்களில் மெம்பரான சில நாட்களிலேயே அடடா… நாமே ஒரு வி.ஐ.பிதான் என்ற எண்ணம் எழுகிறது. சதா யாராவது வந்து ஹலோ சொல்கிறார்கள். ஆண்களும், பெண்களும் சர்வசாதாரணமாக நண்பராகிறார்கள். குட்மார்னிங் சொன்னால் கூட, என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா என்று உருகுகிறார்கள். நாமே நிராகரித்த நமது கவிதைகளை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள். அடடா… நீ இவ்வளவு அழகா என்று கசங்கிய உடையில் எடுத்த போட்டோவை புகழ்கிறார்கள். காலையில் எல்.கே.ஜி படிக்கும் சுட்டியிடம் எரிந்து விழுந்தது தெரியாமல், சே… உன்னைப் போல அன்பான மனிதனை இது வரை சந்தித்ததே இல்லை என்று ஆரத் தழுவுகிறார்கள்.

இது சிலரை ஒரு மாயையில் தள்ளிவிடுகிறதாக நான் நினைக்கிறேன். நம்மை யாராவது கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு பிரபலம். நமது ஹலோவுக்காக ஒரு நண்பர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்ற பெருமை கலந்த பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் பிரதிபலிப்புதான் அந்த வாசகம்.

‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘

உற்றுக் கவனித்தால் எக்கச்சக்கமான அழைப்புகள் என்பதில் ஒரு தற்பெருமையும், நான் பிரபலம் என்கிற எண்ணமும் ஒளிந்திருப்பதை கவனிக்கலாம். அழைப்புகளை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதில் இந்த ஆன்லைன் பிரபல்யம் நிரந்தரம் என்ற நம்பிக்கை இருப்பதையும் கவனிக்கலாம்.

தற்போது நான் ஆர்குட்டில் அமைதியாகி, டிவிட்டரில் அவ்வப்போது எட்டிப்பார்த்து, ஃபேஸ்புக்கில் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் ஆன்லைன் பிரபலம் என்பதும், நம்மை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதும் வெறும் பிரமை. ஒரு மாதம் ஆன்லைன் பக்கம் போகாமல் இருந்து பாருங்கள். ஒரு வாரத்திற்கு எங்கே காணோம் என்று வருகிற மெசேஜ்கள் குறைந்து, இனிமே அவன் வரமாட்டான்யா என்று இரண்டாவது வாரத்தில் மறைந்து போவதை கவனிக்கலாம். ஆன்லைன் அழைப்புகளும். தற்காலிகமானதுதான். அவற்றை ஏற்பதாலும், நிராகரிப்பதாலும் எண்ணிக்கை மாற்றம் ஏற்படுமே தவிர, எண்ணங்களோ, வாழ்க்கையோ மாறப் போவதில்லை.

source: http://selvaspeaking.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 8 = 15

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb