ரகசிய டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இணைப்பகம்-இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்:
டெல்லி: தனது வீட்டில் ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தது தொடர்பாக வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகைக்கு ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்.
ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார்.
இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது,
இதுதொடர்பாக ”தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:
இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.
ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.
இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.
என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.
தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.
இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.
இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.
வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.
சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
வக்கீல் நோட்டீஸ்
இந்த செய்தியைத் தொடர்ந்து தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாநிதி மாறன்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
source: http://thatstamil.oneindia.in/news/
கேடி சகோதரர்களின் முடிவின் ஆரம்பம் ?
எழுத்தாளர் சவுக்கு
கருணாநிதியை விட தீய சக்தி இந்த கேடி சகோதரர்கள் (கலாநிதி மற்றும் தயாநிதி) என்று சவுக்கு,”கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது?” என்று ஏப்ரல் 10ம் தேதி எழுதியிருந்தது.
அந்தக் கட்டுரையில் முக்கியமான சில விஷயங்கள் விட்டுப் போய் இருந்ததை பாண்டியன் என்ற ஒரு அன்பு வாசகர் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த விடுபட்டுப் போன விஷயங்களை இந்தக் கட்டுரையில் சேர்த்துப் படிப்பது பொருத்தமே.
பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக , பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள்.
வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், ‘வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ‘ என எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம நடந்தேறியது.
அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.
‘சன்’ சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது .
1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் , அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந் தார். கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்க ள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக் கு பணிபுரியும் படி கட்டாயப்படுத்தி னர். பிரகாசிக்கமுடியாத ‘சன்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத- விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள் கிளப்பிக் கொண்டிருந்தது. மாறன் சகோதர்களுக்கு படைப்பாற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.
*அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி*
மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார்.
அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக்காட்சிக் கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது, ‘சுமங்கலி கேபிள் விஷன்’ என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின் 60 சதவிகித்தை ‘ஹாத்வே’ என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40 சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப்பட்டனர் . சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!
‘ஹாத்வே’யின் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.
இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை.
தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம் கட்டப்பட்டன. கேரளாவில் பிரபலமான ‘ஏசியாநெட்’ தொலைக்காட்சி தமிழில் ‘பாரதி’ தொலைக்காட்சியை த்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந் து வெளிவரும் ‘ஆஜ்தக்’சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது ‘ஆஜ்தக்’. இதனால் உடனே ‘ஆஜ்தக்’ சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்தமானது.
இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது ”இந்தியாடுடே”. (ஆக ”இந்தியாடுடே”யும் விலை போகும் ஒரு சுயநலக் கும்பல்தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது)
ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிரு ந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O (Hell Freezes Over) எனப்படும் இரவு நேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர்.
அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் போதே ‘காபினெட்’ அந்தஸ்த்து அமைச்சரானார்.
ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700 கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு
சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதா ன் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண் டார்.1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால் எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ….. தெரியவில்லை. சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குத்தான் விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு உடன் படாத திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் ‘டாப் 10 மூவிஸ்’ திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரளும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகி விடுகின்றனர்
போட்கிளப்பில் 36 கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர் மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு சொர்க்கபுரியில் இருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப்படமெடுத்து, ‘ஏழைபங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா….? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது.
சுமார் 40,000 கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40 கோடியை இன்று வரை திருப்பித் தர மனமில்லாதவராய் இருக்கிறார்
இதுதான் தோழர் பாண்டியன் தெரிவித்த விபரங்கள்.
விக்கிலீக்ஸ் கேபிளைப் பார்த்தவுடன், கருணாநிதியே இதை ஏற்றுக் கொள்வார். இப்போது என்ன, அவர் எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டதனால் தான், அவர்களோடு சமரசமாகப் போய்க் கொண்டு இருக்கிறார்.
இந்த தேர்தல் முடிவுகள், திமுகவை சுனாமியில் சிக்கிய சுள்ளிக்காடாக மாற்றி அலங்கோலப்படுத்தியிருந்தாலும், இன்னும் இந்த சுனாமியில் தப்பித்து எதையாவது பிடித்து கரையேறத் துடிப்பவர்கள் கேடி சகோதரர்கள்.
ஏற்கனவே கேடி சகோதரர்கள், திமுக காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்ளும் சூழலில், திமுக எம்பிக்களை கட்சித் தாவ வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து, திமுகவை உடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், கேடி சகோதரர்களின் முடிவு தொடங்கியிருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றன. இது தமிழ் கூறும் நல்லுலகிற்கு மகிழ்ச்சியான செய்தியேயன்றி வேறில்லை.
2ஜி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்தபிறகு சூடு பிடித்த விசாரணையை உச்ச நீதிமன்றம் வழிநடத்தியது. உச்ச நீதிமன்றம் 1999 முதல், 2008 வரை உள்ள காலத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்ட ஸ்பெக்ட்ரம் பற்றிய விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டது.
1999 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் 4 பேர். முதலாமவர் பிரமோத் மஹாஜன். அவர் இறந்து விட்டார். இரண்டாமவர் அருண் ஷோரி. அவரை சிபிஐ விசாரித்து விட்டது. நான்காவது நபர், திஹாரில் இருக்கிறார். மூன்றாவது நபரான தயாநிதி மாறனை சிபிஐ இன்னும் விசாரிக்கவில்லையே என்ற ஐயம் இருக்கவே செய்தது. ஆனால் ஐயப்படத் தேவையில்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று, சிபிஐ வட்டாரங்கள் கூறுவதாக, நேற்று வெளியான எகனாமிக் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
தயாநிதி மாறனின் தில்லுமுல்லுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
டிசம்பர் 2006ல் ஏர்செல் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனம் டிஷ்நெட் வயர்லெஸ்ஸுக்கு தயாநிதி 14 புதிய லைசென்சுகளை ஒதுக்குகிறார். ஸ்பெக்ட்ரம் வேண்டிய ஏர்செல்லின் விண்ணப்பத்தை நெடுநாட்களுக்கு தயாநிதி மாறன் நிலுவையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்காமல் வைத்திருந்தார். இந்த நேரத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரனுக்கு, அவரது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸுக்கு விற்க வேண்டுமென தயாநிதி கடும் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. விற்காவிட்டால் தொழிலே நடத்த முடியாது என்ற நெருக்கடியில் சிவசங்கரனும் தனது நிறுவனத்தை விற்று விட்டார். இதற்குப் பிறகு, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் படுகையில், ஐடியா மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படாமல் நிலுவையில் இருந்தன என்பது குறிப்பிடத்தகந்தது.
இதற்கு நான்கு மாதங்கள் கழித்து, மேக்சிஸ் நிறுவனம், மொரிஷியஸைச் சேர்ந்த தனது துணை நிறுவனம் ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் மூலமாக கேடி சகோதரர்களுக்குச் சொந்தமான சன் டைரெக்ட் நிறுவனத்தில் 830 கோடியை முதலீடு செய்கிறது.
சன் டைரெக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்யும் நேரத்தைப் பார்க்க வேண்டும். ஏப்ரல் 2007ல் 830 கோடியை முதலீடு செய்கையில் சன் டைரெக்ட் தனது பணிகளைத் துவக்கவேயில்லை. மேலும், சன் டைரெக்ட் தொடங்கி முதல் 5 ஆண்டுகளுக்கு நஷ்டம் என்றும், 6வது ஆண்டு முதல் தான் லாபம் கிடைக்கும் என்றும், சன் குழுமத்தாலேயே தீர்மானிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் தான், ஆஸ்ட்ரோ நிறுவனம் 830 கோடியை முதலீடு செய்கிறது. சன் டைரெக்ட் நிறுவனத்தின் ஒரு பங்கை 70 ரூபாய் ப்ரீமியம் கொடுத்து வாங்குகிறது. இந்த 830 கோடி ரூபாய் வெறும் 20 சதவிகித பங்குகளுக்கானது என்பது குறிப்பிடத் தகுந்தது. மீதம் உள்ள 80 சதவிகிதத்தை கலாநிதி மற்றும் காவேரி கலாநிதி வைத்திருக்கின்றனர்.
வாங்குகையில் சன் டைரெக்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்று, 3320 கோடி தொகையை நிர்ணயம் செய்கிறது ஆஸ்ட்ரோ. இந்த டீல் முடிந்த மறு நாள், ஸீ குழுமத்தின் டிடிஎச் நிறுவனமான டிஷ் நெட்டின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் 61.25. டிஷ் நெட்டின் மொத்த மதிப்பு 2622 கோடி. இந்த மதிப்பு டிஷ் நெட் தனது சேவையை தொடங்கிய பிறகு நிர்ணயம் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிலையில் எதற்காக ஆஸ்ட்ரோ நிறுவனம் இவ்வளவு அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டும் ? இது என்ன மாம்பலம் மார்க்கெட்டில் கத்திரிக்காய் வாங்குவதா ? இந்த மர்மத்தைத் தான் சிபிஐ விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
இது மட்டுமல்லாமல், ஆஸ்ட்ரோவின் ஆனந்த கிருஷ்ணன், கேடி சகோதரர்களுக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்எம் என்ற நிறுவனத்தில் ஆகஸ்ட் 2009ல் 20 சதவிகித பங்குகளுக்கு ஈடான தொகையாக 450 கோடியை முதலீடு செய்கிறார். இந்தியாவில் 45 நகரங்களில் எப்எம் சேவையை நடத்திக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் எப்எம் நிறுவனத்தின் மொத்த மதிப்பீடே 300 கோடி என்று இருக்கையில், 20 சதவிகித பங்குகளுக்கு எதற்காக 450 கோடி ரூபாயை ஆஸ்ட்ரோ நிறுவனம் கேடி சகோதரர்களுக்கு வழங்க வேண்டும் ?
இந்த விவகாரத்தில் சிக்கும் மற்றொரு பெருந்தலை அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி. பிரதாப் ரெட்டியின் மருமகன் ஏர்செல் நிறுவனத்தில் 25 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். எகனாமிக் டைம்ஸ் நாளேடு, அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போது, மறுத்திருக்கிறார்கள். இந்த பணக்காரர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது போலிருக்கிறதேஸ..
இந்த அத்தனை விவகாரங்களையும் சிபிஐ விசாரித்து வருகிறது. இது குறித்து முதல் தகவல் அறிக்கை ஜுலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப் படும் என்று தகவல்கள் கூறுகின்றன. தாக்கல் செய்யப் பட்டால், திஹார் சிறையில் தள்ளப்படும் நான்காவது எம்.பியாக தயாநிதி மாறன் இருப்பார்.
கேடி சகோதரர்களுக்கு அடுத்த பெரிய அடியாக வந்தது விக்கிலீக்ஸ் கேபிள்கள். எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்கும் மனிதர்கள் இருக்கத் தானே செய்வார்கள். இந்து ராம், இதிலும் ஆதாயம் பார்த்திருக்கிறார். விக்கி லீக்ஸ் கேபிள்கள், ராமிடத்தில் வந்து இரண்டு மாதங்கள் ஆனாலும், தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்து, இப்போது அதை வெளியிட்டு, ஜெயலலிதாவிடம் நல்லபிள்ளை பெயர் வாங்கியிருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக, ராம், கருணாநிதிக்கு அடித்த ஜால்ரா சத்தம் காதைக் கிழித்ததை ஜெயலலிதாவும் அறிவார். ஆனாலும், இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக நீடிக்க வேண்டும் என்ற வெறி, ராமை, சுயமரியாதையை கஸ்தூரி அன்ட் சன்ஸ் வாசலிலேயே கழற்றி வைத்து விட்டு, ஜெயலலிதாவை இன்று சந்திக்க வைத்துள்ளது. பணமும் அதிகார போதையும் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது பாருங்கள்.
இந்த விக்கிலீக்ஸ் கேபிளில், அமேரிக்க துணைத் தூதரக அதிகாரி, டேவிட் டி.ஹுப்பர் என்பவரிடம் உரையாடிய போது தயாநிதி மாறன் தெரிவித்ததாக சில கருத்துகளை அவர் அமேரிக்க அரசாங்கத்துக்கு உளவு அறிக்கையாக அனுப்பியுள்ளார். இந்த உரையாடல் நடைபெற்றது 23 பிப்ரவரி 2008ல்.
அந்த உரையாடலின் போது, தயாநிதி மாறன், “இப்போது உள்ள நிலை தொடர்ந்தால், திமுக இப்போது உள்ள எம்பிக்களில் பாதியை மீண்டும் பெறுவதே கடினம். அதிகாரம் கைக்கு வந்தவுடன், அரசியலில் பணம் பண்ணுவதே குறிக்கோள் என்று செயல்படுகிறார்கள். இலவசங்கள் கொடுப்பதால் எந்தப் பலனும் இல்லை. கொடுத்ததை வாங்கி, மறந்து விட்டு, தேர்தல் நேரத்தில் இப்போது என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள்.” என்று கூறியிருக்கிறார் மாறன். அந்த அமெரிக்க அதிகாரி, அந்த கேபிளிலேயே, மாறனின் பதவி பறிக்கப் பட்டதாலும், திமுக தலைவருடனான உறவு முறிந்து விட்டதாலும், “ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற அடிப்படையிலேயே மாறன் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும், இதற்கு முன்பு மாறனும் இலவச டிவி விழாக்களில் பங்கெடுத்தவர் தான் என்றும் குறிப்பிடுகிறார்.
இதையடுத்து ராகுல் காந்தி ஒரு பிரபலமான தலைவர் என்றும், அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது என்றும் மாறன் கூறியதாக குறிப்பிடும், அமேரிக்க துணைத் தூதர், ராகுல் காந்தி வட இந்தியாவில் ஆனது போல, தானும் தென்னிந்தியாவில் ஆகலாம் என்ற அபிலாஷையின் அடிப்படையிலேயே தயாநிதி மாறன் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும் கூறுகிறார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், முன்ன பின்ன தெரியாத வெள்ளைக்காரனிடம் உண்மைகளை பட்டவர்த்தனமாக பேசும் இந்த அயோக்கியர்கள், தங்களுக்கு வாக்களிக்கும் பாமர மக்களிடம் பொய்யைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை என்பதுதான். இந்த அயோக்கியர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தை அளிக்கும் பாமர மக்களிடம் பொய்யையும் புனைசுருட்டையும், நேரிலும், தொலைக் காட்சி மூலம் அவிழ்த்து விடும் இவர்களைப் பற்றி அந்த அமேரிக்கர்கள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வார்களா ?
அடுத்த விவகாரம், மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களைப் பற்றி விக்கிலீக்ஸ் கேபிள்கள் வெளியான போது, மகிழ்ச்சியோடு அதை செய்தியாக வெளியிட்ட சன் டிவி, மாறனின் உண்மைகள் அம்பலமான போது அமைதி காத்தது குறிப்பிடத் தகுந்தது.
எக்கனாமிக் டைம்ஸுக்கும், விக்கிலீக்ஸ் கேபிளை வெளியிட்டதற்காக இந்து நாளேட்டுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள். இந்த கேடி சகோதரர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஊடகங்களை மிரட்டுவதை ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறார்கள்.
பெரும் பொருட்செலவில் எடுக்கப் பட்ட எந்திரன் படம் காலியாக ஓடுகிறது என்று டெக்கான் க்ரோனிக்கிள் நாளேடும், தினமணி நாளேடும் செய்தி வெளியிட்டன. இதையடுத்து இந்த இரண்டு நாளேடுகளுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள். தினமணி நாளேடு, இணைய தளத்தில் கிடைக்கும் எந்திரம் திரைப்படம் என்று பதிலுக்கு செய்தி வெளியிட்டதும் வாயை மூடிக் கொண்டு அமைதியானார்கள்.
ஊர் உலகத்தில் இவர்களுக்கு மட்டும் தான் வக்கீல்களைத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா ? மற்றவர்கள் யாருக்கும் வக்கீலையே தெரியாதா? இவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சரியான முட்டாள்களாக இருக்கிறார்களே.. ? எக்கனாமிக் டைம்ஸ் நாளேடு, இவர்களின் கருத்து என்ன என்பதை கேட்டறிய மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்ட போது ஏன் பதில் கூறவில்லை ? சரி, செய்தி வெளியிட்டதற்காக எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே கேடி சகோதரர்களேஸ. உங்களைப் பற்றி விசாரிக்கிறார்கள் என்று, சிபிஐ ஐப் பற்றி ஒரு தகவல் வந்துள்ளதேஸ ஏன் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பவில்லைஸ ? டவுசரை கழற்றி விடுவார்கள் என்பதால் தானேஸ ? நீங்கள் நோட்டீஸ் அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும் டவுசரை கழற்றத் தான் போகிறார்கள்.
அப்படி சிபிஐ தனது கடமையைச் செய்யத் தவறினாலும், கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் திறந்ததும், பிரசாந்த் பூஷண் உங்களுக்காக ஒரு சிறப்பு மனுவை தாக்கல் செய்வார். கவலைப் படாதீர்கள். உங்களின் முடிவு ஆரம்பமாகி விட்டது. உங்களின் ஆக்சிஜனாக இருக்கும் கேபிளை அறுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்க இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறீர்களாஸ இல்லை காலில் விழுகிறீர்களா என்பதைப் பார்ப்போம்
http://savukku.net/home/878-2011-05-24-19-40-29.html
கவிழக் காரணம் கருணாநிதியே!
[ தனக்கு இயற்கையாக அமைந்த வாதத் திறமையையும் தமிழ் வளத்தையும், சுயநலனுக்காக மட்டுமே என்று சுருக்கினார். இது தொடர்பான கருணாநிதியின் வாக்குமூலங்கள்… புகைப்படங்கள்… விழாக்கள் அனைத்துமே தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தன.]
கருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!
எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்… மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் – எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான்.
அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ”எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!” – இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது. இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராதவராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும்.
இளமைக் காலம் முதலே கருணாநிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ”என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்… பார்த்தீங்கள்ல… அதுதான் நடந்திருக்கு!” என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!
எல்லா மனிதனுக்கும் முதலில் இருக்க வேண்டியது குற்ற உணர்ச்சி! தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தேவை இல்லை. தன் மனதளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டுவதுதான் குற்ற உணர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி, தவறுகளைப் பகிரங்கமாகச் செய்தார்.
அதைக் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப்படுத்தினார். துளி வருத்தமும் அவரது வார்த்தைகளில் இல்லை. விமர்சனங்கள் குறித்துக் கவலையே படவில்லை. மன்னராட்சிகளில்கூட லேசான கிண்டலால் உணர்த்த ‘கோமாளிகள்’ இருந்தார்கள். ஆனால், இன்று மந்திரிகளே… தந்திரிகளாக மாறி கருணாநிதியின் ஜாடிக்கு ஏற்ற மூடிகளாக உருமாறிப்போனார்கள். இவர்கள் அனைவருமே வெளி யதார்த்தங்களை மறைத்து, திரை மறைவில் தி.மு.க-வைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். கட்சியில், ஆட்சியில், கருணாநிதி வீட்டில் நடந்தது எதுவுமே தொண்டனுக்குத் தெரியாது. ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று கருணாநிதியும் சொல்ல முடியாது.
விலைவாசி, மின்சாரம் இரண்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு எழுதி யாருக்கும் தெரிய வேண்டிய நிலை இல்லை. ஆனால், இவை இரண்டையும் ஒரு பிரச்னையாகவே கருணாநிதி நினைக்கவில்லை என்பதுதான் வேதனைக்கு உரியது. கோடிகளைக் கொட்டி கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதற்காக… ஐந்து நாள் கூத்துக்காக… 1008 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திய கருணாநிதி, ‘விலைவாசி இப்படி அநியாயமாகப் போய்க்கொண்டு இருக்கிறதே… என்ன செய்யலாம்?’ என்று விவாதிக்கவே இல்லை. மின் தட்டுப்பாடு குறித்து, ஒரே ஒரு முறை விவாதித்ததாக நினைவு. ஒரு முதலமைச்சர் தீர்க்க வேண்டிய பிரச்னையாக இவை இரண்டையும் கருணாநிதி நினைக்கவே இல்லை. கேட்டால், ஆந்திரா, கர்நாடகா விலைவாசியை வாசிப்பார். மேற்கு வங்கத்தில் மின்சாரம் இல்லை, எல்லோருமே இருட்டில்தான் இருக்கிறார்கள் என்பார். விலைவாசியைக் குறைக்க முடியவில்லையே, தடை இல்லாமல் மின்சாரம் தர முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது குரலில் இருந்து வெளிப்படவே இல்லை. ‘இதெல்லாம் என் வேலை இல்லை’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, பாராட்டு விழாக்களில் திளைத்தார்.
கருணாநிதி, முதல்வர். அவரது மகன் ஸ்டாலின், துணை முதல்வர். மூத்த மகன் அழகிரி, மத்திய அமைச்சர். பேரன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர். பேத்தி கயல்விழி, கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். பேத்தி எழிலரசி, செம்மொழி மாநாட்டில் வீணை வாசிக்கிறார். திரைத் துறையில் சன் டி.வி-யின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து, அழகிரி மகனும் ஸ்டாலின் மகனும் வந்தார்கள். அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டி.வி. மூலமாக வருகிறார். தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்களாக மகன் தமிழரசுவும், மகள் செல்வியும் என கருணாநிதியின் குடும்பம் அரசியலில், தொழில் துறையில், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கதையை எத்தனையோ முறை எழுதி ஆகிவிட்டது.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தினர் மேடையில் அமர்ந்தபடி பார்க்க… தமிழறிஞர்கள் உட்கார இடம் இல்லாமல் நின்றபடி தவிக்கும் அளவுக்குக் குடும்ப ஆதிக்கம் தூள் கிளப்பியது. இது எங்கே வந்து நிற்கிறது தெரியுமா… கருணாநிதியின் அக்கா மகன் சொர்ணத்தின் பேத்தி மதுரம், 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் புகழும் படம் ‘முரசொலி’யில் கால் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் இது. அதாவது, குடும்பத்தின் குதூகலத்துக்காகவே கருணாநிதி இயங்கலாம். நல்ல குடும்பத் தலைவரின் பொறுப்பும் அதுதான். ஆனால் கட்சியை, ஆட்சியை, முரசொலியையும் பலியிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கருணாநிதிக்கு இல்லை. குடும்ப ஆதிக்கம் குறித்துக் குறை சொல்லும்போது எல்லாம், ‘என்ன செய்ய… எனக்குக் குடும்பம் இருக்கிறதே!’ என்றார் கருணாநிதி. ‘கத்தி இருக்கிறது வெட்டுகிறேன், துப்பாக்கி இருக்கிறது சுடுவேன்’ என்று யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?
தனக்கு இயற்கையாக அமைந்த வாதத் திறமையையும் தமிழ் வளத்தையும், சுயநலனுக்காக மட்டுமே என்று சுருக்கினார். இது தொடர்பான கருணாநிதியின் வாக்குமூலங்கள்… புகைப்படங்கள்… விழாக்கள் அனைத்துமே தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தன.
இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு பூதாகாரமாகக் கிளம்பியது. ‘ஆ.ராசா குற்றமற்றவர்… அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை’ என்ற கருணாநிதியே… அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவரை நியாயப்படுத்தி தீர்மானம் போட்டார். காமன் வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியை, ‘போஃபர்ஸ் கறை படிந்த காங்கிரஸ்’கூட கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால், ராசாவை கருணாநிதி நீக்கவும் இல்லை. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் இல்லை. அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன், தனது துணைவி ராஜாத்தியும் மகள் கனிமொழியும் பேசியது குறித்தும் கருணாநிதி கவலைப்படவில்லை. அவரது பெயரால் உருவாக்கப்பட்ட டி.வி-யே ஸ்பெக்ட்ரம் ஊழலின் லஞ்சப் பணத்தால் வந்தது என்று சி.பி.ஐ. சொன்னபோதும் வாய் திறக்கவில்லை. மனைவி தயாளு அம்மாளை அறிவாலயத்துக்கு உள்ளேயே வந்து சி.பி.ஐ. விசாரிக்கிறது. மகள் கனிமொழி, ‘கஸ்டடி குற்றவாளி’யாக நித்தமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்.
இது எதுபற்றியும் கருணாநிதிக்குக் குற்ற உணர்ச்சி வரவே இல்லை. ‘சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறதே!’ என்று கேட்டால், ‘இது வழக்கமானதுதானே!’ என்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டில் எல்லார் வீட்டுக்கும் பேப்பர் பையன் வந்து போவதுபோல், சி.பி.ஐ. வந்து போகிறதா என்ன? அறிவாலயத்தின் மேல் தளத்தில் சி.பி.ஐ. இருக்க… தரைத் தளத்தில் கருணாநிதி – காங்கிரஸுடன் மன சஞ்சலம் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்க முடியுமானால், அது அதிர்ச்சிக்கு உரியது!
இவை அனைத்துக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்னை! 2008 நவம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தி, தங்கள் கட்சி எம்.பி-க்கள் பதவி விலகப்போகிறார்கள் என்று அறிவித்தது முதல்… இன்றைக்கு வரை கருணாநிதி நித்தமும் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களின் பின்னணியில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானதுதான் மிச்சம். தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக… தனக்கு ‘தமிழினத் தலைவர்’ என்ற அங்கீகாரம் எதனால் கிடைத்ததோ, அந்தக் கொள்கையையே காவு கொடுக்க கருணாநிதி தயாரானார். கொத்துக் கொத்தாகச் செத்தது குறைந்து… தனித் தனியாகப் பலரும் மரணித்தபோது, ‘மழைவிட்டாலும் தூவானம் விடாது அல்லவா’ என்று கருணாநிதி சொன்னதைப்போன்ற கல் நெஞ்ச வாக்குமூலம் உலகச் சர்வாதிகாரிகளின் வரிசையில் பொறிக்கத்தக்கது.
போர்க் குற்றவாளியாக ஐ.நா. இன்று சொல்லும் ராஜபக்ஷேவைக் கோபப்படுத்துவது மாதிரி எதுவும் பேசக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி. அரசியல் அதிகாரப் பதவி ஒரு மனிதரை இப்படி எல்லாமா மாற்றிவிடும் என்று சந்தேகப்படத்தக்க வார்த்தைகள் இவை.
இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழக வாக்காளனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது.
‘உதவாது இனி தாமதம்’ என்று வாக்கு இயந்திரத்தில் அழுந்தக் குத்தி இருக்கிறார்கள்.
தனி நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, ‘வேட்டுக்களால் தீர்மானிக்க முடியாததை, ஓட்டுக்களால் செய்ய முடியும்’ என்றார் அண்ணா. பாதை தவறிய தம்பியைப் பதம் பார்த்து இருக்கிறது ஓட்டு.
பொதுவாகவே, வீழ்ந்துபட்டவர்களை விமர்சிப்பது தவறானதுதான். ஆனால், வீழ்த்தப்பட்ட காரணங்களை உணர்ந்து சொல்வது தேவையானது. இது கருணாநிதிக்காக மட்டும் அல்ல… ஜெயலலிதாவுக்கும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரை!
source: http://tamilan-superpowerindia.blogspot.com/2011/05/blog-post_7497.html