Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கணிணி கற்றுத் தரும் இஸ்லாம்

Posted on May 29, 2011 by admin

கணிணி கற்றுத் தரும் இஸ்லாம்

[ தமிழிலும் ஆங்கிலத்திலும் அரபியிலும் பெறுமதிமிக்க இஸ்லாமிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான கணிணி மென்பொருள்கள் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். எல்லாத் துறைகளும் இனி கணிணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு.

அரபுதெரிந்த மௌலவிமார்களின் ஆய்விற்கு பயன் படக்கூடிய மென்பொருள்கள் இன்று ஏராளமாக இலவசமாகக் கிடைக்கின்றன. என்றாலும் கவலைக்கிடமான நிலையாதெனில் அதிகமான மௌலவிமார்கள் கணிணிகள் இருந்தும் இம்மென்பொருள்களின் பெயர்கள் கூடதெரியாமல் இருப்பதுதான்.

அல்லாஹ் எமக்குத்தந்துள்ள அருள்களை உணர்ந்து கணிணியின் மூலம் ஈருலகப்பயன் பெற்றவர்களாக ஆகவேண்டும்.]

கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை தகவல்துறை… என எல்லாத் துறைகளும் இனி கணிணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு. அதிலும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனணியின் உதவி அளப்பொரியதாகும்.

ஒருவர் ”AUTO CAD” என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கட்டிட அமைவு முறையைக் கனணியில் வரைகிறார் ஆனால் அவர் ஒரு சாதாரண படத்தைக் கூட கையால் வரைய முடியாதவராக இருப்பார். ஆக தேர்ச்சியில்லாத துறைகளிலும் மிகத்தேர்ச்சியாக தொழில் புரிய வைத்ததும் வேலை வாய்ப்பின்மை என்றகுறையை பெருவாரிய தீர்த்துவைத்ததும் கணிணிதான்.

தகவல் பரிமாற்றத் துறையில் கணிணியின் பங்களிப்பு இதைவிடப் பன்மடங்கானது. இன்டெனெட் இணைப்பில்லாத நிலையிலும் தகவல் பரிமாற்றத்தில் கனணியின் பங்களிப்பைமறுக்கக்கூடியது. பல இடங்களுக்குப் போய் பல லட்சம் செலவளித்து செய்யவேண்டிய எத்தனையோ தகவல்களை ஒரு சில ரூபாய்களில் வீடியோக்களாக ஓடியோக்களாக படங்களை எழுத்துக்களாக பெற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனாலும், எவ்வளவுதான் நலவுகள் இருந்தாலும் மனிதகுலத்திற்கே எதிராக செயல்படும் ஷைத்தான்களால் இன்று கணிணிகள் முழுவதும் ஆபாசங்களே நிறைந்து வழிகின்றன. எங்குபார்த்தாலும் சினிமாக்கள் அடைக்கப்பட்ட ஊனு க்கள், நீலப்படங்கள் அடங்கிய பென் ட்ரைவர்கள், ஹாட்டிஸ்க்கள், ஸிப் செய்யப்பட்ட ஆபாசமான தகவல்கள் இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் “பள்ளிக்கூடம்” படம் கட்டாயம் ஒவ்வொருவரும் பார்த்தேயாக வேண்டும் என சிலர் இஸ்லாமிய(?) சஞ்சிகைகள். கெமராபோன்கள் மூலம் பிடிக்கப்பட்ட மற்றவர்கள் தனிப்பட்ட விஷயங்களை தேக்கும் ஓர் அறையாக இன்றி கணிணி மாறிவிட்டது.

கணிணி மூலம் எவ்வாறெல்லாம் சிறிய குழந்தைகள் முதல் வயதுபோன முதியவர்கள் வரை படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை என்ன என்ன முறைகளிலௌ;ளாம் கெட்டுப்போகிறார்கள் என்பதை விபரிக்கப்போனால் இந்த இதழ் எமக்கு இடந்தராது. இந்தக் கணிணியில் இஸ்லாத்தைக் கற்க கற்பிக்க எவ்வளவு வழிகளை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கான் என்பதை விளங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மார்க்கத்தை கற்றுக்கொள்ள கொடுக்க இன்று உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்கள் களஞ்சியங்கள் ஒரு சிலதான் இருந்தாலும் அது பற்றிக்கூட அறிவில்லாதவர்களே அதிகம் காணப்படுவதால் அவைகள் பற்றிய சிறு அறிமுகத்தைக் கொடுப்பது சாலச்சிறந்தது என நினைக்கிறேன்.

    01) Arabic School Software    

இது பிள்ளைகளுக்கு அரபு மொழியையும் குர்ஆன் ஓதுதலையும் இலகுவாக கற்பித்துக்கொடுக்கும் ஒரு மென்பொருளாகும். உதாரணமாகச் சொல்வதென்றால் “அலிஃப்” என்ற அரபு எழுத்தை அழுத்தினால் அதனை வரைந்தும் உச்சரித்துங்காட்டும். எண்களை அரபு வடிவத்தில் வரைந்தும் உச்சரித்துக்காட்டும்.

ஒரு பொருளுக்குரிய அல்லது மிருகத்துக்குரிய உருவத்தை அழுத்தினால் அதன் வடிவம் அசைந்து பெயரை உச்சரிக்கும் மிருகம் என்றால் அதன் சத்தத்துடன் பெயரை உச்சரிக்கும். இதுபோன்ற எண்ணற்ற பலவிதமான நவீன கற்பித்தல் முறைகளை உள்ளடக்கிய மிகச் சிறந்ததொரு மென்பொருள் அரபு நாடுகளிலே உள்ள உறவினர்களிடம் நாம் மேலே குறிப்பிட்ட பெயரைக்கொடுத்து வாங்கச் சொல்லுங்கள் அல்லது பின்வரும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையான பிரயோஜனத்தைப் பெற பணஞ்செலுத்தி பதிவிறக்கம் செய்வதே மிகச்சிறந்தது.

    02) மின்னணு நூலகம் 4.0.   

தமிழில் வந்திருக்கக் கூடிய மிகச்சிறந்த கணிணி இஸ்லாமியக் களஞ்சியம் இதுவெல்லாம். இது மக்கள் மத்தியில் “மின்னணு நூலகம்” என்ற பெயரில் மிகப்பிரபல்யமாகும். பல வெளியீடுகளைக் கண்ட இந்தக் கணிணிக் களஞ்சியம் இப்பொழுது 4.0 வெளயீடாக வந்துள்ளது. இதன் உள்ளடக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதெனில்,

    பல பிரபல்யமான தமிழ் இணையத்தளங்களின் தொடுப்பே இந்தக் களஞ்சியம்.  

01) இலக்கவாரியாகத் தேடிக்கொள்ள முடியுமான வசதியுள்ள அல்குர்ஆன்  மொழிபெயர்ப்பு.
02) அல்குர்ஆனிற்கான முழுமையான தமிழ் தஃப்ஸீர் தொடுப்பு.
03) அல்குர்ஆன் ஸ{ரா சம்பந்தப்பட்ட பலவிதமான விளக்க நூல்கள்.
04) புகாரி, புலூகுல் மராம், ரியாலுஸ் ஸாலிஹீன், நவவி இமாமின் 40 நபிமொழித் தொகுப்புக்கள், முவத்தா மாலிக் இன்னும் இதுபோன்ற ஏராளமான ஹதீஸ் நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புக்கள்.
05) தமிழில் வெளிவந்த நூற்றுக்கணக்கான நூற்கள்.
06) ஸ{தைஸ், ஹுதைபி, ஷ{ரைம், அப்துல் பாஸித் போன்ற பல காரீக்களின்  கிராஅத்கள்.
07) தமிழில் வெளிவந்த பல மாத இதழ்களின் தொகுப்புக்கள்.
08) நூற்றுக்கணக்கான பெயர்கள்.
09) ஆங்கிலத்தில் அரபு மொழியைக் கற்க ஒரு முழுமையான மின் கல்லூரி.
10) எழுத்துவாரியாக தேடமுடிந்த குழந்தைகளுக்கான பெயர் பட்டியல்.

தமிழில் மார்க்கத்தை கனணி வழியாக அறிந்துகொள்ள மேற்சொன்ன வைகளை உரிய முறையில் பயன்படுத்தினாலேயே மிகப்போதுமானது. இது அல்லாமல் ஆங்கிலத்தில் வந்திருப்பவைகள் ஏராளம். அரபுதெரிந்த மௌலவிமார்களின் ஆய்விற்கு பயன் படக்கூடிய மென்பொருள்கள் இன்று ஏராளமாக இலவசமாகக் கிடைக்கின்றன. என்றாலும் கவலைக்கிடமான நிலையாதெனில் அதிகமான மௌலவிமார்கள் கணிணிகள் இருந்தும் இம்மென்பொருள்களின் பெயர்கள் கூடதெரியாமல் இருப்பதுதான்.

    எடுத்துக்காட்டிற்காக ஒரு சில..    

1- المكتبة الشاملة – الاصدار الاول
2- المكتبة الشاملة – الاصدار الثاني
3- المكتبة الشاملة – (الإصدار الثاني – 5000  كتاب)
மேற்குறிப்பிடப்பட்ட மென்பொருள்கள் வெறும் சாதாரண மென்பொருள்கள் போன்று கணக்கிட்டுவிட முடியாது. கலாநிதி நாபிஃ அவர்களின் சொந்தமுயற்சியால் 5000 ற்கு மேற்பட்ட மார்க்க நூல்களைக் கொண்ட ஒரு மார்க்க ஆய்வாளனுக்குத் தேவையான பெரும் நூலகமே இந்த மென்பொருள்.

    கீழே உள்ள அட்டவணையை அவதானியுங்கள்.    

தப்ஸீர் – 69 ஹதீஸ் விரிவுரைகள் – 53
உலூமுல் குர்ஆன் – 122 ஹனஃபி நூற்கள் – 32
அகீதா – 360 மாலிக் நூற்கள் – 23
ஹதீஸ் – 108 ஷாபிஈ நூற்கள் – 40
ஹதீஸ் குறு நூற்கள் – 446 ஹன்பலீ நூற்கள் – 30
இமாம் இப்னு அபீத்துன்யாவின் தொகுப்புக்கள் – 62 பொதுவான
தக்ரீஜ் – 83 பொதுவானவைகள் – 1881
அல்பானியின் தொகுப்புக்கள் – 81 பத்வாத்தொகுப்புக்கள் – 39
அறிவிப்பாளர் பற்றியவைகள் – 244 மஸாயில் நூற்கள்.
அக்லாக் ரகாஇக் நூற்கள் – 125
உஸ{ல் ஃபிக்ஹ் – 117
முஸ்தலஹுல் ஹதீஸ் நூற்கள் – 93
இஸ்லாமிய அரசிய நூற்கள் – 24
ஸீரா நூற்கள் – 30
வரலாற்று நூற்கள் – 134
நாடுகள் பற்றிய நூல்கள் – 44
இலக்கிய நூற்கள் – 264
மொழி நூற்கள் அகராதிகள் – 143
முல்தகா அஹ்லில் ஹதீஸ் இணையத்தள ஆய்வுத் தொகுப்புக்கள் – 5 களஞ்சியங்கள்
இப்னுல் தைமியின் நூற்கள் – 35
இப்னு தைமியாவின் நூற்கள் – 43

இன்னும் இதுபோன்று 33 வகையில் 5510 நூற்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நூலகமே இந்த மென்பொருள்.

    இது தவிர,     

ஸகாத் கணக்கிடும் மென்பொருள்4 – برنامج حاسب الزكاة
சொத்துக் கணக்கீட்டு மென்பொருள்    5 – برنامج المواريث
அஷ்ஷெய்க் ரபீஃ அவர்களின் நூற்கள்6 – مكتبة الشيخ ربيع
அஷ்ஷெய்க் முக்பிபின் நூற்கள் 7 – مكتبة الشيخ مقبل
அப்பாதின் நூற்கள்8 – مكتبة الشيخ العباد

இது போன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் அரபியிலும் பெறுமதிமிக்க இஸ்லாமிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான கணிணி மென்பொருள்கள் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். அல்லாஹ் எமக்குத்தந்துள்ள அருள்களை உணர்ந்து கணிணியின் மூலம் ஈருலகப்பயன் பெற்றவர்களாக ஆகவேண்டும்.

source: http://www.mujahidsrilanki.com/2010/05/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb