நபி மருத்துவம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
”ஹிஜாமா” என்ற பதம், ”ஹிஜாம்” அதாவது உறிஞ்சுதல் என்று அரபியில் பொருட்படும். ”ஹிஜாமா மருத்துவம்” பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் போது
“நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும் (ஹிஜாமா), வெண்கோஷ்டமும்தான்” என்றார்கள். (நூல்: புகாரி)
இதனை ஆங்கிலத்தில் “கப்பிங்” என்ரளைப்பார்கள். ஹிஜாமா மருத்துவம் வஹியின் வழிகாட்டல் கிடைத்த ஒரு மருத் துவ முறை என்பதால் ஏனைய எல்லா மருத்துவ முறைகளிலிருந்தும் அது வித்தியாசப்படுகிறது. அத்தோடு இஸ்லாமிய ஷரீஆ, நம் பிக்கைக் கோட்பாடு என்பவற்றுக்கு முரண்படாத ஒரு வைத்திய முறை.
இன்னும், வஹி இதனை சிறப்பான நோய் நிவாரண முறை என நற்சான்றிதழும் தந்து விட்டது. இது நபியவர்கள் செய்த திப்பு நபவியை இணைத்துச் சொல்வதாகும்.
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
”மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும்தான். மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களின்) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
நோய்களுக்கு மருந்து சாப்பிட்டால் கசக்கும், ஊசி குத்தினால் வலிக்கும் ஆனால் இந்த கப்பிங் மருத்துவம் வலியில்லாத நிவாரணி. இந்த கப்பிங்கின் போது நஞ்சு நீங்கும் போது வலியிருக்காது ஆனால் உறிஞ்சிய இடத்தில் இரத்தம் கட்டியது போல் வடு ஏற்படும், எப்படி அட்டை உறிஞ்சிவிட்ட இடத்தில் சிகப்பாக இருக்குமோ அந்த மாதிரி. அந்த வடு கூட சில நாட்களில் மறைந்துவிடும். பல வருடங்களாக சிகிச்சை செய்தும் பயன் இல்லாத நிலையில் இருக்கும் நோய்கள், ஹிஜாமா மூலம் 2 தினங்களில் பூரண குணமடைந்து விடுகின்றது. இது பல நோய்களான நாள்பட்ட தலைவலி, முதுகுவலி, அல்சர், ஆண்மைக்குறைவு, தூக்கமின்மை, அதிக தூக்கம், ஜின் / ஷெய்தான் போன்ற இன்னும் பல தீராத நோய்களுக்கும் அல்லாஹ்வின் உதவியால் பூரண குணம் கிடைகின்றது.
ஆனால் இந்த திப்புன் நபவி முஸ்லிம்களால் கைவிடப்பட்ட, மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட மருத்துவமாக கானப்படுக்கிறது. முஸ்லிம்களின் நம்பிக்கை வஹியினால் செடிபைட் பண்ணப்பட்ட மருத்துவ முறைகளை விடவும் குப்பார்களின் மருத்துவ வழிமுறைகளை நம்பிக்கையோடு பின்பற்றுவதில் தான் இருக்கிறது. எவ்வாறு நபி வழி ஏனைய விடயங்களில் முஸ்லிம்களால் கைவிடப்பட்டதோ அதே போன்று மருத்துவத்திலும் கை விடப்பட்டுள்ளது.
அதே போன்று, எவ்வாறு ஏனைய விடயங்களில் நபி வழியை புறக்கணித்து பிரச்சனைகளிலும் துன்பத்திலும் இந்த உம்மத் சிக்கித் தவிக்கிறதோ அதே போன்று , மருத்துவத்திலும் நபி வழியை புறக்கணித்து துன்பத்திலும் துயரத்திலும் சிக்கி தவிக்கிறது. இந்த உம்மத் எவ்வாறு ஏனைய விடயங்களில் விமோசனம் பெற சுன்னாவின் பக்கம் திரும்ப வேண்டுமோ அதே போன்று பௌதீக ரீதியாக மருத்துவ குணம் பெறவும் சுன்னாவின் பக்கம் திரும்புவதிலே தான் குணம் இருக்கிறது.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களை கடக்கும் போது “ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள்” என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)