[ சிறுநீரக வீக்கம் இருந்தால் சிறுநீர் வெளியேறாமல் கால் வீங்கியிருக்கும், உடல் வெளுக்கும், ஹ”மோகுளோபின் அளவு குறையும், அசதி ஏற்படும். சிலருக்கு சுருக்கம் இருந்தால் மெலிந்து இருப்பார்கள். அடிக்கடி சிறுநீர் போவார்கள், உடல் வறட்சியாக இருக்கும். கண் குழி விழுந்து காணப்படும்.
சிறுநீரகப் பிரச்சினை வந்து விட்டால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அறுவை சிகிச்சை செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் ஆகும்.]
நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் சிறு நீரகமும் ஒன்றாகும். நம் உடலில் இரண்டு சிறு நீரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 150 கிராம் எடை கொண்டது. நம் உடலில் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. அதைத் தவிர நம் உடலில் உள்ள நீரின் அளவு, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளின் அளவு, அமிலத்தன்மையின் அளவு ஆகியவற்றை சமசீராக வைக்க உதவுகின்றது.
மேலும் சிவப்பணுக்கள் உற்பத்தியை தூண்டும் எரித்ரோபாய்டின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. எலும்புகளை வலிமையாக்கும் வைட்டமின் டியை செறிவூட்டுகிறது. ரெவின் என்னும் பொருளை உற்பத்தி செய்து ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.
சிறுநீரகங்களில் பலதரப்பட்ட நோய்கள் உண்டாகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது சிறுநீரக செயலிழப்பு ஆகும். சிறுநீரகப் பாதையில் நோய்கிருமிகள் தாக்குதல், கற்கள் ஏற்படுதல், சிறுநீரக பாதையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி மற்றும் நீர்காமாலை ஆகியவையும் சிறுநீரகங்களைத் தாக்கும் பிற முக்கியமான நோய்களாகும்.
இவை இரண்டு வகைப்படும். அவை நேப்ரைடிஸ் மற்றும் நெப்ராடிக் சின்ட்ரோம் ஆகியவையாகும். இதில் சிறுநீரகத்தில் கீளாமெருஸ் என்ற பகுதி நம் உடலிலேயே உற்பத்தியாகும் நோய் எதிர்க்கும் பொருளால் பாதிக்கப்படுகிறது. இந்நோய் உண்டானால் சிறுநீரின் அளவு குறைதல், முகம், கால் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் ரத்தம் மற்றும் புரதம் வெளியேறுதல் ஆகியவை ஏற்படும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகுதல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், கடுமையான வயிற்றுவலி ஆகியவை சிறுநீரக கற்களின் அறிகுறிகள்.
தடுப்பது எப்படி?
சிறுநீரக கற்கள் ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கற்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் அதிகம். தினமும் அதிக நீர் பருகி வந்தால் இக்கற்கள் சிறியதாக இருக்கும் போதே உடலை விட்டு வெளியேறி விடும். அப்போது அதிகம் தொந்தரவு இருக்காது.
மேலும் உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும் அதிக புரதச்சத்துக்கள் மாமிச உணவுகளை குறைப்பதன் மூலமும் கற்கள் உற்பத்தியாவதை தடுக்கலாம்.
அதிகநீர் பருகி அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் கிருமிகளின் தாக்குதலை தடுக்கலாம். சிலருக்கு அடிக்கடி கிருமி தாக்குதல் ஏற்படும் அவர்களுக்கு சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதையில் கற்கள் அடைவு, அல்லது சதைவளர்ச்சி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தகுந்த பரிசோதனைகளை செய்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகங்கள் இரண்டும் பழுது அடைந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றாமல் இருப்பதே சிறுநீரக செயலிழப்பு ஆகும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதை தற்காலிக செயலிழப்பு மற்றும் நிரந்தர செயலிழப்பு என இரு வகையாகப் பிரிக்கலாம்.
தற்காலிக செயலிழப்பிற்கு பலவகை காரணங்கள் உண்டு. குறிப்பாக அதிக அளவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் நீர்சத்து குறைவதால் ஏற்படுகிறது.
நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் மூன்றில் 2 பங்கினர் சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிப்படைந்தவர்கள். இது தவிர சிலவகை பரம்பரை நோய்கள், வலிமருந்துகளை வருடக்கணக்கில் உட்கொள்தல், அதிக கற்கள் உண்டாகுதல், மீண்டும் மீண்டும் சிறுநீரகப் பாதையில் கிருமிகள் தாக்குதல் போன்றவற்றால் சிறு நீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
இவர்கள் எல்லாம் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். தகுந்த உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து சிறு நீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே அறிந்து தகுந்த சிகிச்சை செய்வதன் மூலம் நிரந்தர செயலிழப்பை தடுக்கலாம் என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்கிறார்களே ஏன்?
இவற்றில் அதிகமான பொட்டாசியம் சத்துக்கள் இருக்கின்றன. இளநீர், வாழைப்பழம், சாலாடுகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு சாறு ஆகியவற்றிலுள்ள இந்த பொட்டாசியம் அதிகமாகச் சேர்ந்தால் கிட்னியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொதுவாக சொல்வார்கள்.
உண்மையில் கிட்னி பாதிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று சுருங்குவது, இன்னொன்று வீங்குவது.
சிறுநீரகச் சுருக்கம் உள்ளவர்கள் அவசியம் இளநீர் சாப்பிடவேண்டும். புதினா கலந்த உணவுகள், பட்டை, கிராம்பு போன்றவை சிறுநீரக சுருக்கத்தை உண்டாக்கும். இதற்கு இளநீர் அவசியம் சாப்பிடவேண்டும். புரோட்டீன் அதிகம் சாப்பிடவேண்டும். பால் சாப்பிடக்கூடாது. சிக்கன் செரிமானமாக இரண்டரை மணி நேரம் ஆகும் என்றால், பால் செரிமானம் ஆக நான்கு மணி நேரம் ஆகும். பலருக்கு இது தெரியாது.
சிறுநீரக வீக்கம் உள்ளவர்கள் அசைவம், தானியப் புரோட்டீன் இல்லாத உணவாக உண்ணவேண்டும். பால், பருப்பு, இளநீர் சாப்பிடக்கூடாது. இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து சாப்பிடலாம்.
சிறுநீரக வீக்கம் இருந்தால் சிறுநீர் வெளியேறாமல் கால் வீங்கியிருக்கும், உடல் வெளுக்கும், ஹ”மோகுளோபின் அளவு குறையும், அசதி ஏற்படும். சிலருக்கு சுருக்கம் இருந்தால் மெலிந்து இருப்பார்கள். அடிக்கடி சிறுநீர் போவார்கள், உடல் வறட்சியாக இருக்கும். கண் குழி விழுந்து காணப்படும்.
வயிற்றுப்போக்கு இருந்தால் என்ன காரணத்தினால் ஏற்பட்டது, என்ன தடுப்பு முறைகளைப் பயன் படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கபம் காரணமாக வரும் வயிற்றுப்போக்குக்கு டிகாக்ஷன் நல்லது. பித்தம் காரணமாக வயிற்று வலி வந்தால் மரவள்ளி (ஆரோரூட்) மாவையும்,
வாதம் காரணமாக வயிற்று வலி வந்தால் பாகற்காய் வற்றல் அல்லது சுண்டைக்காய் வற்றல் சாப்பிட்டால் பேதி நிற்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய பசிப்பதாகச் சொல்வார்கள். அவர்களுக்கு எந்த உணவை சாப்பிட்டால் திரும்பத்திரும்ப பசிக்கிறதோ, உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்தால், சாப்பிட்ட உணவுக்கு மாற்று உணவு சாப்பிடவேண்டும்.
பித்த உடம்புக்காரர்கள் வெப்பத்தை தூண்டும் உணவுகளை சாப்பிடவேண்டும். பல புதிய பெயர்களில் தண்ணிர் விற்பனைக்கு வருகிறது அல்லவா? இதிலும் வாதம், கபம், பித்தம் கலந்த தன்மைகள் இருக்கின்றன. வாத சர்க்கரை உள்ளவர்கள் அக்கு வாகா, கின்லே சாப்பிடலாம்.
பித்த சர்க்கரை உள்ளவர்கள் பிஸ்லரி, சாப்பிடலாம்.
இந்த தண்ணிரில் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பித்தத்தையும், வாதத்தையும் தூண்டும் தன்மையால் மேற்கண்ட விளைவுகள் உண்டாகின்றன.
டயனில் மாத்திரை வாதத்தையும், மெட்டாபார்மின் பித்தத்தையும் தூண்டும்.
கபநாடி உள்ளவர்கள் சாப்பிட்ட இரவு உணவு ஜ”ரணிக்காவிட்டால் இடப்பக்கம் கைவைத்துப்படுத்தால் žக்கிரம் ஜ”ரணமாகும். ஆனால் அசிடிடி உள்ள செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் மல்லாந்து படுக்க ஜ”ரணம் எளிதில் ஆகும். புரோட்டின் மிக்க வாத நாடி உள்ளவர்கள் வலப்பக்கம் தலை வைத்துப்படுக்க அது சரியாகிவிடும்.
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுகூட நாடி சரியாக அமையாததால் இப்படி வருவது ஆகும். இதை போன்ற பல செய்திகளை அனுபவமாகவே தெரிந்துகொள்ளலாம். சிறுநீரகங்களை செயலிழக்க செய்யும்…
சிறுநீரகப் பிரச்சினை வந்து விட்டால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அறுவை சிகிச்சை செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் ஆகும்.
சிறுநீரகப் பிரச்சினை இப்படி அபாயகரமாக இருக்கும் நிலையில், இதயம், ஈரல், நுரையீரல், மற்றும் உள்ளார்ந்த உறுப்புகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது போன்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 7 முதல் 21 சதவீதம் பேருக்கு இயற்கையான சிறுநீரகங்கள் 5 ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.
உள்ளார்ந்த உறுப்புகள், ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். அதே நேரம் இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிசிக்சை செய்து கொண்டவர்களுக்கு ஆபத்து கொஞ்சம் குறைவு தான்.
மாற்று அறுவை சிகிச்சைகளின் போது புதிய உறுப்புகளை உடல் ஏற்றுக் கொள்வதற்காக மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் தான் பின்னாளில் சிறுநீரகங்கள் பழுதுபட காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆக பொதுவாக மாற்று அறுவை சிகிச்சைகளின் மூலம் தொற்று நோய்கள், புற்றுநோய், எலும்பு வியாதிகள் வரும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் சிறுநீரகப் பிரச்சினையையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்த ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும் போது ஏற்கனவே மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பெரும் பணம் செலவிட வேண்டிய நிலையில், தொடர்ந்து போனசாக தொற்றிக் கொள்ளும் சிறுநீரகக் கோளாறையும் குணப்படுத்த மீண்டும் பெரும் பணம் செலவழிப்பது பெரும்பாலானோருக்கு இயலாத காரியம்.
– டாக்டர் ராஜ்குமார் & டாக்டர் மோகன்