Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
நவீன உலகில் வாழ்க்கை கடினமானதும், சவாலானதும் ஆகும். ஆனால் திறமையிருந்தால் சமாளிக்கலாம் என்ற கருத்துடன் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.
அதிர்ஷ்டத்தினை நம்பியிருக்கிறவனுக்கும், அதிர்ஷ்ட தேவதை அவன் கதவைத் தட்டினாலும் அதனை சமாளிக்க சிலருக்குத் தெரியாது.
ஒருவனுக்கு ஒரு நகைக்கடை பரிசுக் கூப்பனால் ஒரு பி.எம்.டபுள்யு கார் பரிசாக கிடைக்கிறது என்ற வைத்துக் கொள்வோம். படகு போன்ற பளபளப்பான காரை சாலையில் செலுத்தும் போது அந்தக் காரையும் அதனை ஓட்டுகின்றவரையும் ஆண், பெண் என்ற பலரின் கவனம் கவரும். அவருக்கு பல புது நண்பர்கள் கூடுவார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சியிடன் பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வார். அதனால் பெட்ரோலுக்கும், மற்ற செலவினங்களுக்கு காசு கரையும். சிறிது நாட்கள் நகன்ற பின்பு காரும் பழுது படும். அதற்கான பராமரிப்பு செலவும் பண்மடங்காகும். அதனால் ஏற்படுகின்ற மன உலச்சல் பெரிய பாரமாக அமையம். ஆகவே அதிர்ஸ்டம் மூலம் வருகின்ற பொருளாதாரம் உண்மையான சந்தோசத்தினைத் தருவதிற்குப் பதிலாக சோகத்தின் எல்லைக்கே அலைத்துச் செல்லும்.
சிலருக்கு நோய்கள் வந்தால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவர். ஆனால் அந்த நோயையே வென்று உலகப் புகழ் ஏணிக்கு எட்டியுள்ள ஒரு பெண்மணியின் கதையினை இங்கே சொல்வது பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன். அவருடைய படத்தினையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
32 வயதான ராபியா கேரள மாநிலம் மலப்புர மாவட்டம் திருராங்காடிக்கு அருகில் உள்ள வெள்ளிக்காடு என்ற இடத்தில் பிறந்த ராபியா சிறு வயதில் இளம் பிள்ளை வாத்தால் பாதிக்கப் பட்டதால் 14 வயதிலிருந்து நடக்க முடியாது.. அத்துடன் அவரை புற்று நோயும் துன்பத்தில் ஆழ்த்தியது. ‘பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கிணங்க’ குளியல் அறையில் விழுந்து கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டு துண்பப்பட்டார். அத்துடன் தனது நோயிற்காக சாப்பிட்ட மருந்துகளால் குடல் அலர்ச்சி நோயால் அவதிப்படுகிறார்.
இத்தனை இருந்து அவரின் ‘காலத்தினை வெல்வேன்’ என்ற உறுதியான நம்பிக்கையால் அவர் போன்ற வாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறு பள்ளிக்கூடங்கள் தன்னார்வ தொண்டர்களுடன் நடத்துகிறார். அவருடைய சேவையினை கேரளாவில் உள்ள நான்கு மற்றும் ஐந்தாவது பள்ளி மாணவர்களுக்க பாடமாக வைத்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். அவர் மட்டும் கிறித்துவராக இருந்திருந்தால் அவரை ‘அன்னை தெராசா’வாக சித்தரித்திருப்பார்கள்.
அவருடைய சேவையினை பாராட்டி1993 வருட தேசிய இளைஞர் பரிசும், 1999ஆம் வருடம் கண்ணகி ஸ்ரீசக்தி பரிசும், 2000 ஆம் வருடம் ஐ.நா. சபையின் பரிசும், 2010 ஆம் வருடம் ஜோசப் முண்டேஸ்வரி பரிசினையும் தட்டிச் சென்றுள்ளார். ஆகவே ராபியா நோயினால் மன உலச்சலில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற அசையா நம்பிக்கையால் தன்போன்ற பல குழந்தைகளுக்க உதவி செய்து புகழ் ஏணியில் ஏறியுள்ளார்.
சிலருடைய முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் அதற்கு காரணத்தினைத் தேடி அதனை நிவர்த்தி செய்யாமல் இறைவனை நொந்து கொள்வார்கள். ஒரு டாக்டருக்கு புகை பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் ஏற்படும் புற்றுநோய் உற்பட்ட பல நோய்கள் தன்னை வந்து சேரும் என தெரியும். ஆனால் சில டாக்டர்களால் அதனை நிறுத்த முடியவில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். தாங்கள் பணியின் பிரஷ்சரில் புகை பிடிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் புற்று நோய் வரும் போது இறைவனை குறைகூறுகிறார்கள். மன உலச்சலில் உள்ளவர்கள் தங்களின் தவறான செயல் முறைகளை மாற்றினால் அந்த மன உலச்சலிருந்து விலகலாம்.
சிலர் வருங்காலத்திற்கு வேண்டுமென்று பெரும் பொருளை சேர்க்க ஓடி, ஓடி உழைக்கின்றனர்.. ஆதனால் அன்றைய உலகில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ மறந்து விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு யுகோஸ்லேவியாவினைச் சார்ந்த அன்னை தெராசா அமெரிக்காவிற்கு முதல் தடவையாக சென்றார். அங்குள்ளவர்களைப் பார்த்து விட்டு இந்தியாவிற்கு வந்த பின்னர் அவர் பேட்டி கொடுக்கும் போது. ‘ இந்தியாவில் பலர் பட்டிணியால் வாடுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் பலர் மன உலச்சலாலும், இறை பக்தி இல்லாததாலும் வாடுகின்றனர்’ என்றார் இது எதனைக் காட்டுகின்றது என்றால் வளர்ந்த நாடுகளிலெல்லாம் மக்கள் மன உலச்சலால் ஒரு வகையில் சந்தோசத்தினையும், அமைதியான வாழ்வினையும் இழந்து உள்ளனர் என உங்களுக்கு புரிந்திருக்கும்.
மனிதனுக்கு ஒரு பதவி கொடுத்தாலும், அல்லது ஒரு ஆட்சி அமைந்தாலும் அது நிலையாக இருக்கின்றதா என்றால் இல்லையே! உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் மந்திய பகுதியில் உள்ள வறண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த தலித் இனத்தினைச் சார்ந்த ராஜாவிற்கு இந்திய தேசத்தின் உயர்ந்த கேபினட் அந்தஸ்து பதவி கொடுத்து அலங்கரிக்கப்பட்டார். ஆனால் அவர் தன் சொந்த நலனுக்காக பல கோடி ஊழலில் உழன்றார். என்னானது அவர் அரசியல் வாழ்வு? தேனடையெடுத்தவன் புறங்கையினை நக்கிய கதையாகி திகார் சிறைக்கூடத்தில் தன் பதவியும் இழந்து கம்பி எண்ணுகிறார். அதே போன்று மங்கோலிய செங்கிஸ்கான், ஜூலியர் சீசர் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோருடைய சாம்ராஜ்யங்கள் இன்று நிலைத்திருக்கின்றதா இல்லையே! ஏன் 20ஆம் நூற்றாண்டின் சர்வாதிகாரிகளான ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், முஷரஃப், 21ஆம் நூற்றாணடின் சர்வ வல்லமை படைத்த ஆடசியாளர்களாக கருதப் பட்ட ஜார்ஜ் புஷ், டோனி பிளேர் போன்றவர்களாவது தங்களது கட்சி ஆட்சியினை தக்க வைக்க முடிந்ததா இல்லையே!
ஒரு மனிதனுக்கு காம சுகத்தால் இன்பமளிக்க முடியுமா? காம சுகத்தால் பதவியிழந்தோர் எத்தனையோ மனிதர்களும், ஆட்சியாளர்களையும் நாம் படித்திருக்கிறோம். வயாகாரா மாத்திரையினால் நிரந்தர காம சுகம் தர முடியுமா? முடியாதே! ஒரு மனிதனுக்குத் தேவை சுகாதாரமான உடல், நன்னடத்தை, தியான வாழ்வு, சுய நலமின்று வாழ்தல் மகிழ்ச்சியினைத் தறும்.
ஒருவர் பல்வேறு பிரச்னைகளை மனதில் போட்டு அழுத்திக் கொண்டு இருந்தால் மன உலச்சல் ஏற்படும். மாறாக தங்களுடைய பிரச்னைகளை தங்கள் நம்பிக்கையாளவர்களுடன் கலந்து கொண்டால் அது மனதுக்கு சற்று ஆறுதல் தரும்.
என்னை பிறர் எப்படி நடத்தினார்களோ அதன் படியே நானும் அவர்களை நடத்துவேன் என்ற குரோத மனப்பான்மை நிம்மதியினைக் கெடுக்கும். மாறாக தீங்கு செய்தவர்களுக்கும் உதவி செய்தால் அது ஒரு புண்ணுக்கு மறுந்து போடுவது போல ஆகும்.. ஆனால் சிலர் தங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் சிறிய வயதில் தங்களுக்கு செய்த சிறிய தவறுகளைக் கூட பெரியவனான பின்பும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் மற்றவர்கள் முன்னால் பரிதாபமாக கருதப்படுவார்கள். ஆகவே அவைகளை மறக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
1) உங்களுக்கு நேர்ந்த மனக் காயங்களை நீங்கள் மறக்காவிட்டால் நீங்கள் ஏற்படுத்திய காயங்கள் மறையாது.
2) உங்களை அவமானப்படுத்தியவரை, ஏமாற்றியவரை, உங்களை குறை சொல்பவரை அவர் ஆச்சரியப்படுமளவிற்கு அழைத்து ஒரு கப் டீ கொடுங்கள். அவர் உங்களை மேலானவர் என்று போற்றுவார்.
3) ஒருவருக்கு ஹெப்பாடிடிஸ் ஈரல் நோயிருந்து அவருடைய உடலிலிருந்து கெட்டுப் போன பழைய ரத்தத்தினை டயாலிசிஸ் மூலம் எடுத்து விட்டு புது ரத்தத்தினை உடலில் செலுத்துவது போல உங்கள் உள்ளம் புத்துணர்வு பெற பழைய கசப்பினை மறந்து புதிய வாழ்விற்கு வித்திடுங்கள்.
5) ஒரு தாயார் தங்கள் குழந்தைகளுக்குள் ஏற்படும் சண்டையினையும், மன வேறுபாடுகளையும் களைய பாடுபடுவது போல ஒரு சமுதாயத்தில் ஏற்படும் சண்டை, சச்சரவுகளை, மன வேறுபாடுகளை களைந்து சமாதானத்திற்கும், சமுதாய அமைப்பின் அமைதிக்கும் இணைப்பு பாலமாக செயல்படுங்கள்.
மேற்கொண்ட செயல்கள் மூலம் நீங்கள் வெற்றி பெற்ற மனிதவர்களாக உங்களை மாற்ற முடியும் என்றால் சரியாகுமா?