1. பக்க விளைவுகளை உண்டாக்குமா கருத்தடை மாத்திரை?
2. கருத்தடை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திய பின்னர் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா?
[ கருத்தடை மாத்திரை உட்கொள்கிற பெண்கள் தவறான ஆண்களின் தொடர்பில் சிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு விசித்திர ஆராய்ச்சி. கருத்தரிக்கப் போவதில்லை என்கிற தைரியத்தில் வாழ்க்கைத் துணை தேவை என்பதை மீறி, செக்ஸ் உறவுக்குத் துணை தேவை என்கிற எண்ணமே பிரதானமாக இருக்கும் என்பதால் மாத்திரை உட்கொள்கிற பெண்களுக்குத் தகாத உறவு உண்டாக வாய்ப்புகள் அதிகமாம்.
செக்ஸ் உறவு வேண்டும். ஆனால் கர்ப்பம் கூடாது என்பதற்காகத்தானே இந்த மாத்திரைகளே* ஆனால் பல பெண்களுக்கு இம்மாத்திரைகள் சாப்பிடுவதால் செக்ஸ் உறவில் நாட்டம் குறைகிறதாம். அப்படி உணர்கிற பெண்கள், ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள மாத்திரையாகப் பார்த்து சாப்பிடுவது நல்லது.
ஏற்கனவே உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் ரோம வளர்ச்சி மேலும் அதிகரிக்கலாம்.]
பக்க விளைவுகளை உண்டாக்குமா கருத்தடை மாத்திரை?
கர்ப்பத்தைத் தடை செய்வதாகச் சொல்லப்படுகிற மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோன் என இரண்டு விதமான பெண் ஹார்மோன்களை உள்ளடக்கியது. இவை இரண்டும் வேறு வேறு விகிதங்களில் கலக்கப்பட்டு, வெவ்வேறு பெயர்களில் கருத்தடை மாத்திரைகளாக விற்கப்படுகின்றன.
இந்த ஹார்மோன்கள் என்ன செய்யும்?
உங்கள் உடலில் மாதந்தோறும் உருவாகும் சினை முட்டையை சினைக்க விடாமல் தடுக்கும். அதன் விளைவாக உங்களின் கர்ப்பம் தடைப்படும். இந்த மாத்திரை கருத்தரிப்பதிலிருந்துதான் உங்களைக் காப்பாற்றுமே தவிர, பால் வினை நோய்களிலிருந்து ஒரு சதவிகிதம் கூடக் காப்பாற்றாது. இம்மாத்திரைகளை நாள் தவறாமல் எடுத்துக் கொள்பவர்களுக்குக் கட்டாயம் நூறு சதவிகிதம் பலன் நிச்சயம். ஆனால் நாள் தவறி எடுத்துக் கொண்டாலோ, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரத்தில் உட்கொண்டாலோ பலன் கிடைக்காமல் போகலாம். இன்று என்ன தேதி, என்ன கிழமை என்பதையே மறந்து போகிற அளவுக்கு மறதி மன்னியா நீங்கள்? கருத்தடை மாத்திரை சாப்பிட நீங்கள் தினசரி அலாரம் வைத்துக் கொண்டால்தான் அதன் பலனை அனுபவிக்க முடியும்.
பக்க விளைவுகளை உண்டாக்குமா கருத்தடை மாத்திரை?
நீண்ட நாட்களுக்குக் கர்ப்பத்தைத் தள்ளிப்போட நினைக்கிற பெண்களுக்கு இம்மாத்திரைகள் சரியான சாய்ஸ் என்பது மகப்பேறு மருத்துவர்களின் பரவலான அபிப்ராயம். ஆனாலும் இது உண்டாக்குகிற பக்க விளைவுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமே?
கருத்தடை மாத்திரை உட்கொள்கிற பெண்கள் தவறான ஆண்களின் தொடர்பில் சிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு விசித்திர ஆராய்ச்சி. கருத்தரிக்கப் போவதில்லை என்கிற தைரியத்தில் வாழ்க்கைத் துணை தேவை என்பதை மீறி, செக்ஸ் உறவுக்குத் துணை தேவை என்கிற எண்ணமே பிரதானமாக இருக்கும் என்பதால் மாத்திரை உட்கொள்கிற பெண்களுக்குத் தகாத உறவு உண்டாக வாய்ப்புகள் அதிகமாம். இது எப்படி இருக்கு?
ஏற்கனவே உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் ரோம வளர்ச்சி மேலும் அதிகரிக்கலாம். எனவே இப்படிப்பட்ட பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப வேறு மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் வைட்டமின் சி, பி 12 மற்றும் துத்தநாகச் சத்துக்கள் உடலிலிருந்து உறிஞ்சப்பட்டு விடுமாம். அவற்றை ஈடுகட்ட தினசரி உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி முடியாதவர்கள், வைட்டமின் மாத்திரைகளையாவது கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
செக்ஸ் உறவு வேண்டும். ஆனால் கர்ப்பம் கூடாது என்பதற்காகத்தானே இந்த மாத்திரைகளே* ஆனால் பல பெண்களுக்கு இம்மாத்திரைகள் சாப்பிடுவதால் செக்ஸ் உறவில் நாட்டம் குறைகிறதாம். அப்படி உணர்கிற பெண்கள், ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள மாத்திரையாகப் பார்த்து சாப்பிடுவது நல்லது.
பைசா பெறாத விஷயத்துக்கெல்லாம் எரிச்சல், அர்த்தமில்லாமல் கோபம் போன்றவை கூட இம்மாத்திரைகளின் பக்க விளைவுகளாக இருக்கலாம். கண் பார்வையில் கோளாறு உண்டாவதும் கூட இம் மாத்திரை உட்கொள்கிற சிலர் சந்திக்கிற பிரச்சினையே*
மாத்திரையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
உங்கள் உடலில் உள்ள கோளாறுகளை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும். அவர் அவற்றுக்கேற்ப சரியான மாத்திரையை உங்களுக்குப் பரிந்துரைப்பார். மாத்திரை உட்கொள்ள ஆரம்பித்த முதல் சில மாதங்களில் சில பக்க விளைவுகள் இருப்பது சகஜம். பிறகு அது மறைய வேண்டும். அவை தொடர்கிற பட்சத்தில் குறைந்த டோஸ் கொண்ட மருந்துகளை உட்கொள்ளலாம்.
கருத்தடை மாத்திரை சாப்பிடுகிறவர்களுக்கு உடல் எடை பெருத்து விடும் என்பது தவறான நம்பிக்கை. இது பசியைத் தூண்டும் என்பதால் கொழுப்பு தவிர்த்து, சரி விகித உணவை உட்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
கருத்தடை மாத்திரை உட்கொள்கிற பெண்களுக்கு இடுப்பெலும்பு தொடர்பான தொற்று நோய் வர வாய்ப்பில்லையாம்.
சினைப்பையில் புற்றுநோய் உண்டாவதற்கான அபாயத்தையும் இம்மாத்திரைகள் குறைக்கிறதாம். மாத்திரைகளை நிறுத்திய பிறகும் பல வருடங்கள் இந்தப் பாதுகாப்பு தொடருமாம்.
கருத்தடை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திய பின்னர் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா?
தாய்மை அடைவதைத் தவிர்க்க கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு இயற்கையாகவே சந்தேகம் ஏற்படும். அதாவது, மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திய பின்னர் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா? என்பதுதான். அதற்கு ஆய்வு மூலம் விடை கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மன் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வில் தெரியவந்துள்ள பெரிய உண்மை என்னவென்றால், எவ்வளவு காலம் கருத்தடை மாத்திரை உட்கொண்டாலும் அவற்றை நிறுத்திய பின்னர் இயற்கையாக கருத்தரிப்பதில் பெண்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது.
இந்த உண்மையைக் கண்டறிய ஐரோப்பாவில் உள்ள 60 ஆயிரம் பெண்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். இதில் கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்திய பெண்களில் 21% பேர் முதல் மாதவிலக்கு காலம் முடிந்த பின்னர் கருத்தரித்ததாக தெரிவித்தனர். மேலும் 45.7% பெண்கள், மூன்று மாதவிலக்கு காலங்கள் முடிவடைந்த பின்னர் கர்ப்பமுற்றதாகக் கூறினர்.
எனினும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஐந்தில் ஒரு பெண் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி ஒரு ஆண்டுக்கு பின்னரும் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதும், 45% பெண்கள் சுமார் 26 மாத விலக்குகளுக்கு பின்னரே கர்ப்பம் தரித்ததும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்திய பின்னர் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு 88.3% வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்பு 100 சதவீதமாக இருக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பு, மாத்திரைகளை உட்கொண்டு விட்டு அதனை நிறுத்திய பின்னர் 88.3% ஆக இருப்பதாக ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதிலும், ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கருவுறும் வாய்ப்பின் சதவீதம் குறைகிறது. அதாவது கருத்தடை மாத்திரைகளை ஒரு பெண் நீண்ட காலம் பயன்படுத்திய பின்னர் அதனை நிறுத்திவிட்டு கர்ப்பம் தரிக்க விரும்பும் போது கருத்தரிப்பதற்கான சதவீதம் குறைவதாக ஆய்வில் தெரியவந்தாலும், அது கருத்தடை மாத்திரையின் தாக்கத்தால் அல்ல, சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது அதிகரிப்பதே கருத்தரிப்பு சதவீதம் குறைவதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா? – பெயர் வெளியிட விரும்பாத செஞ்சி வாசகி.
பதில்: by Dr.ஷர்மிளா
நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச் செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போட மாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானே தவிர, நீண்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டான பிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிற நீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவே முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில் செய்யக் கூடிய முடிவில்லை இது.
நன்றி: பூவையர் பூங்கா இணையம்