Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை…?

Posted on May 24, 2011 by admin

ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை…?

இந்த நவீன, நாகரிக உலகத்தில் மனிதனுக்கு அல்லாஹ்வின் கட்டளை, சட்டங்கள் அவனின் குணாதிசயங்கள் பற்றி இந்த சந்தேகங்கள் வருவதற்கு சாத்தியம் இல்லாவிட்டாலும்,சராசரி பாமர மக்களுக்கு இவ்வித சந்தேகங்களுக்கு,சரியான பதில்கள் கொடுக்க வேண்டியது அறிந்த ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கடமையாகிவிட்டபடியால், சில சந்தேகங்களும் அதற்கு அல்குர்ஆன் அடிப்படையில் விடைகளும் கீழே தரப்படுகின்றது.

மனிதன் கேட்கிறான், “இந்த அடையாளங்கள், பிரபஞ்சங்கள், வானம், பூமி, இதனுள் உள்ள உயிரினங்கள் இவை எல்லாம் படைத்தவன் அல்லாஹ் என்கிறீர்கள்? சரி! உலகத்தை எடுத்துக் கொள்வோம், இங்கு, எல்லா உயிரினங்களையும் படைத்து, அதற்குரிய உணவு வகைகளையும் படைத்து குறிப்பாக மனிதனையும், அவனுக்கு வேண்டிய அறிவையும் தந்து, எல்லாப் படைப்புகளையும் விட அவனுக்கு பெரிய அந்தஸ்தையும் தந்து வாழவைத்தான், இருந்தும் ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை…? ஏன் சிலரை மேலானவர்களாகவும், பலரை கீழானவர்கலாகவும், நடமாடவிடவேண்டும்?

சிலர் பிறப்பால் சரியான மார்க்கம் உள்ள தாய் தந்தையிடம் தோன்றி அதில் திளைகின்றார்கள், சிலர் அறிவே இல்லாத மக்களிடம் பிறக்கின்றார்கள். முன்னர், காட்டியவர் நேரான மார்க்கத்தில் வருவதால் அது அவரின் பங்கா?… அன்றி அவரின் பிறப்பால் வந்த பயனா? பின்னே கூறியவர் அறிவில்லாத கூட்டத்தில் பிறந்தால் அது அவரின் பங்கா?..அன்றி அவரின் பிறப்பால் வந்த தீமையா? மேலும் உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவரை விட நிராகரிப்பவர்களும் இணைவைப்பவர்களும் நல்ல நிலைமைகளில் உள்ளார்களே… சிலருக்கு அன்றுட வயிற்றுப்பாட்டை கவனிக்கவோ நேரமில்லாத போடு…இறைவனை நினைக்க, சிந்தனை செய்ய எப்படி நேரம் வரும்?

ஆக,, இப்படி ஏழ்மையில், உள்ளவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார் செயல்? மனிதனின் அவன் பிறப்பதற்கு முன் முதல் அவன் இறக்கும் வரை மேலும், இறந்த பின்னும் அவனுக்கு நரகமா அன்றி சுவனமா?… என்பது வரை இறைவன் அவனுடைய பதிவு புத்தகத்தில் (லவ்ஹுல் மக்பூல்) எழுதிவைத்துவிட்டான் என்கிறானே அப்படி என்றால் ஏன் மனிதன் செய்யும் செயல்களுக்கு அல்லாஹ் கேள்வி கேட்க வேண்டும்? படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு உணவளிப்பது தனக்கு கடமை என்று இறைவன் கூறுகின்றான் அப்படியானால் உலகில் சில இடங்களில் பட்னி சாவு ஏற்படுகின்றதே ஏன்? ஆக, இத்தகைய கேள்விகளுக்கு சரியான பதிலை வேண்டுகிறோம்!”

மேற்கண்டவை மனிதனின் மனம் கேட்கும் கேள்வி, இதற்குரிய பதில்கள்… அல்குர்ஆனின் அடிப்படையில் தரப்படுகின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்,

“அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான்,மேலும்,அவன் வானத்தைப் படைக்கக்கருதி (ய போது) அவைகளை ஏழு வானங்களாகவும்,அமைத்தான்.அன்றி, (அவற்றிலுள்ள) யாவற்றையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 2:29

அல்லாஹ் ,நீங்கள் கேள்வியில் கூறியபடியே தனது திருமறையிலும் கூறுகின்றான்….உங்களின் கேள்வியின் சாராம்சம், ஏன் எல்ல மனிதர்களையும் ஒரே மார்க்கத்தில் நிலை நிறுத்தவில்லை என்பது…

அல்லாஹ் ஆரம்பத்தில் மனிதனை படைக்க எண்ணிய போது …

திருமறை கூறுகின்றது…

“(நபியே!) உமதிறைவன் மலக்குகளை நோக்கி, “நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதி (-ஆதமை) நிச்சயமாக அமைக்கப் போகிறேன், “”எனக்கூறிய சமையத்தில் (அதற்கு) அவர்கள், “(பூமியில்) அழிம்பு செய்து இரத்தம் சிந்தக் கூடிய ( சந்ததிகளைப் பெரும்) அவரை, அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ, உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைத் துதிசெய்து கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்கள்.(அதற்க்கு இறைவன்) “நீங்கள் அறியாதவர்ரைஎல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்” என கூறி விட்டான். (அல்குர்ஆன் 2:30)

ஆக, மேற்கண்ட ஆயத்தின் வசனக் கூற்றுப்படி, மனிதன் அழிம்பு செய்யக்கூடியவன், இரத்தம் சிந்தக் கூடியவன், வழிதவற கூடியவன் என்பதை மலக்குகள் அறிந்திருப்பதால்தான், அல்லாஹ் மனிதனை படைக்க எண்ணி அதுப்பற்றி மலக்குகளிடம் கூறும்போது அவர்கள் மேற்கண்ட வாறு இறைவநிதம் கேட்கின்ரனை… ஆகவே மனிதனை இறைவன் படைத்து அறிவைக் கொடித்த்தாலும், எல்லோரும் ஒரே மார்க்கத்தை பெறக் கூடிய சூழ்நிலை இல்லாமலேயே இறைவன் வைத்துள்ளான்….

மேலும், இறைவன் ஆதமை படைத்து அவரின் ஜோடியான ஹவ்வாவைப் படைத்து இருவரையும் சுவனத்தில் தாமதப்படுத்தி, அவர்களுக்கு நல்வாழ்வு கொடுத்தபோது, இப்லீஸ் சூழ்ச்சி செய்து அவ்விருவரையும் கெடுத்து வழிதவற வைத்துவிட்டான்… அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாகி சுவனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். பிறகு இறைவனிடத்தில் சில சொற்களைக் கற்று அவனின் மன்னிப்பையும் பெற்றனர், இதிலிருந்து என்ன தெரிகின்றது முதல் மனிதர் ஆதம் ஹவ்வாவே, வழித்தவறி இருக்கும்போது, இறைவனின் நேரிடை உபதேசத்தைக் கேட்டவர்களே வழிதவறி இருக்கும்போது இப்போதுள்ள மக்கள் அன்றி தொடரும் மக்கள் வழித்தவறுவது மிகவும் ஆச்சர்யம் அல்ல..

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோரை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த ) சோலையிலிருந்து வெளியேறி (துன்பத்திற்குள்ளாகி)ய பிரகாரம், உங்களையும் துன்பத்திற்குள்ளாகி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு, அவன் அவர்களுடைய ஆடைகளை களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்து கொண்டு) உங்களை (வழிகெடுக்க சமயம்) பார்த்து கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக விசுவாசம் கொள்ளாதவர்களுக்குத் தான் ,அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்கலாக்குகின்றோம். (அல்குர்ஆன் 7:27)

மனிதர்களுக்கு ,இந்த உலகத்தில் ஷைத்தானின் பின் சென்று வழிகெட்டுவிடாமல் இருக்கும்படி தன் அருள்மறையில் இறைவன் பல இடங்களில் எச்சரிக்கை செய்கின்றான் இருந்தாலும் மக்கள் வீண் சந்தேகங்களுக்கு உள்ளாகி அவர்களில் பெரும்பாலோர் வழி தவறிவிடுகின்றனர்.ஆகவே,இறைவன் மனிதனை முதன் முதலில் தன் மார்க்கத்திலேயே உள்ளாகி பிறப்பிக்க வைத்தாலும் நாலாம் வட்டத்தில் அவர்கள் பல்கி, பெருகி பல பாகங்களிலும் பரவும் போது …அவர்களின் எண்ணங்கள் பலவாறுக பெருகி,முன் கண்ட உண்மைகள் மறந்து பொய் வீண் சந்தேகங்களுக்கு உள்ளாகி பல பிரிவுகளாக பிரிந்து விடுகின்றனர்.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்)ஒரே சமுதாயத்தவரகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு,நான்மை மனித)சமுதாயம் கூறும்படியும் (தீமை செய்வோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ், நபிமார்களை அனுப்பி வைத்தான், தவிர, அம்மனிதருக்குள் விகற்பங்களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு, அவர்களோடு சத்திய வேதத்தையும் அருட்செய்தான்.இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்)வந்ததன் பின்னர், அதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே, (அந்த சத்திய வேதத்திற்கு)மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு புறக்கணித்து விட்ட அந்த சத்தியதளவில் செல்லும்படி விசுவாசிகளுக்கு,அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்) வழிகாட்டினான். இன்னும் (இவ்வாறே)டான் விரும்பியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 2:213)

ஆக மனித சமுதாயம் நாளடைவில் தானாகவே பிரிந்து விட்டனர். இறைவன் ஒரே மார்க்கத்தில் அவர்களை படைத்தாலும் ஷைத்தான் சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டுவிட்டனர்.இன்றைய உலகில் ஒருவர் கூறிய கருத்துக்களை விட்டு அதையே பேசி பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் கட்சிகளை காண்கிறோம்… கம்யூனிஸம், இம்பிரியலிஸம் நாடு நிலைமை எனக் கூறிக் கொண்டு, அந்தந்த பிரிவில் உள்ளவர்களே பல பிரிவுகளாக பிரிந்து வாதிப்பதை கண்கூடாக காணுகின்றோம்.

source: www.readislam.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb