இஸ்லாம் மற்ற மதங்களை விட சிறந்தது ஏன்?
[ எந்த ஒரு மதத்தினை பின்பற்றுவதாக இருந்தாலும் அதன் கோட்பாடுகள் வெறும் இறைவணக்கம், வழிபாடுகள் என்று நின்றுவிடக் கூடாது. அது இந்த சமுதாயத்திற்க்கும் தனி மணித வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக பயனுள்ளதாக இருத்தல் வேண்டும். இந்த வகையில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்து விளங்குகிறது.
தீயது தவிர்த்து நல்வழியில் செயல்பட இஸ்லாம் வெறும் இறைவழிபாடோடு நின்றுவிடாமல் எந்த ஒரு தனி மனித வாழ்விலும் குறுக்கிட்டு ஓர் நெறியான வாழ்வை வாழ வழிவகுக்கிறது.]
பொதுவாகவே எல்லா மதங்களும், பின்பற்றுவோர்களை நன்மையான காரியங்களை செய்யவும், தீமையினை தவிர்த்துக் கொள்ளவுமே வலியுறுத்துகின்றன. ஏன் ஒருவர் இஸ்லாமை மட்டுமே பின்பற்ற வேண்டும், அப்படியெனில் மற்ற மதங்கள் கூடாதா?
முன்னறே கூறியது போல வாழ்க்கையில் நன்மையான காரியங்களை செய்யவும், தீமையினை தவிர்த்துக் கொள்ளவுமே எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன, இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது. ஆனால் மற்றவைகளிலிருந்து ஒரு படி மேலே சென்று எவ்வாறு அந்த தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்கிற வழிமுறைகளையும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது. இஸ்லாம் நம்மைப் படைத்த ஏகனின் நேர்வழி வழிகாட்டல் உடையது, எனவே தான் இஸ்லாம் தீனுல் ஃபித்ராஹ் (மனிதனின் இயல்பான மதம்) என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை.
எல்லா மதங்களிலும் திருடுதல் குற்றம் என்று போதிக்கப்படுகின்றன, இஸ்லாமும் இதையே தான் போதிக்கின்றது. பிறகெந்த வகையில் மற்றவைகளை விட சிறந்து விளங்குகிறது எனில் திருடுதல் குற்றம் என்று கூறுவதோடு நின்று விடாமல் எந்த வகையில் ஒரு சமுதாயம் செயல்பட்டால் யாருக்கும் திருடுவதற்கே அவசியம் இருக்காது என்பதையும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.
இன்னும் விரிவாக சொல்லப்போனால், இஸ்லாம் ஒவ்வொரு மனிதனும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியுள்ளது, அதாவது ஒருவனின் சேமிப்பு 85 கிராம் தங்கத்தின் மதிப்பிற்க்கு அதிகமாக இருக்குமெனில் அவன் தன் சேமிப்பிலிருந்து 2.5 சதவீதம் ஒவவொரு ஆண்டும் ஏழைகளுக்கும் வறியோர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன்படி ஒவ்வொரு மனிதனும் நீதமுடன் நடந்து இதனை பூரணமாக நிறைவேற்றினால் வறுமை இவ்வுலகில் இல்லாமல் போய் எவர் ஒருவரும் பசிக்கொடுமையினால் மரணிக்கும் வாய்ப்பு இருக்காது, எனவே இதன் மூலம் வறுமை ஒழிந்து அனைவரும் சமம் என்கிற நிலை உருவாகும்.
நீதியால் திருட்டு நிருபிக்கப்பட்ட ஒருவனை கைச்சேதம் செய்தல் இஸ்லாம் திருட்டிற்க்கு தரும் தண்டனையாகும்.
இறை மறை குர்ஆனில்;
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் திரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 5:38)
மற்ற சமயத்தோர் இதனை அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டுகளில் கைச்சேதமா, இஸ்லாமிய சட்டங்கள் காலத்திற்க்கு ஒவ்வாத இரக்கமற்றவை என்று கூட கூறலாம், ஆனால் இஸ்லாமிய சட்டங்ளை அமல்படுத்துவதின் மூலம் பெருமளவில் இது போன்ற குற்றங்களை ஒழித்திட இயலும்.
உதாரணத்திற்க்கு அமெரிக்காவை நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகக் கூறலாம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கு தான் கொலை கொள்ளை கற்;பழிப்புகள் அதிகம் நடைபெறுகின்றன. இஸ்லாமிய சட்டங்கள் அங்கே அமலுக்கு வருவதாக வைத்துக் கொள்வோமெனில், அதாவது ஒவ்வொருவரும் தனது அளவிற்க்கு அதிகமான (85 கிராம் தங்கத்தின் மதிப்பிற்க்கு மேலான) சேமிப்பில் இரண்டறை சதவீதம் வறியோர்க்கும் ஏழைகளுக்கும் அளிக்க வேண்டும், மேலும் திருடிய ஒருவனின் இரு கைகளையும் துண்டிப்பது என்று அறிவித்தால் எண்ணிப்பாருங்கள் அங்கே திருட்டு மற்றும் வறுமை ஒழியுமா அல்லது அதிகமாகுமா.
அனைவரும் ஜக்காத் கொடுப்பதின் மூலம் வறியோர்கள் வசதிபடைத்தவர்கள் என்கிற ஏற்றத்தாழ்வுகள் நீங்கி அனைவரும் சமம் என்கிற நிலை உருவாகும், மேலும் வறுமை ஒழியும். அதே போல திருடினால் சிரச்சேதம் என்று கடுமையான ஒரு தண்டனை நிறைவேற்றப்பட்டால் திருடுவதற்க்கே தயங்குவர். எல்லாவற்றுக்கும் மேலாக வறுமையே இல்லாத ஓர் சமுதாயத்தில் திருட்டிற்க்கு அவசியம் இருக்காது. எனவே தான் இஸ்லாம் தனி மனித வாழ்விற்க்கு மட்டுமின்றி சமுதாயத்திற்க்கே வழிகாட்டியாக விளங்குகின்றது.
அடுத்தபடியாக பெண்களுக்கு இடைய+றுகள் (ஈவ் டீஸிங்) செய்வதையும் கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் விளைவிப்பதையும் வண்மையாகக் கண்டிக்கிறது. இதோடு மட்டும் நின்று விடாமல் ஒரூ படி மேல சென்று ஆண்களும் பெண்களும் எவ்வாறு இது போன்ற பிரச்சினைகளிலிருந்து நம்மை தவிர்த்துக் கொள்ளலாம் என்பதனையும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் ஹிஜாப் முறையினை பின்பற்ற வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.இந்த குர் ஆன் வசனங்கள் ஆண்களுக்கான ஹிஜாப் முறையினை விளக்குகின்றது.
”(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.” (அல் குர்ஆன் 24:30)
எல்லா ஆண்களும் எந்த ஒரு அந்நியப் பெண்களை கண்டால் தமது பார்வையினை தாழ்த்திக் கொள்ள வேண்டும், இதன் முலம் மனதில் தவறான எண்ணங்கள், தீய தூண்டுதல்கள் உண்டாவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும்.
அடுத்ததாக பெண்களுக்கான ஹிஜாப்
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல் குர்ஆன் 24:31)
பெண்கள் தங்கள் அவையங்களையும் ஆடை அலங்காரங்களையும் அந்நிய ஆடவர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது. அவர்கள் முகம் மற்றும் முழங்கைகள் தவிர ஏனைய பாகங்களை யாரேனும் காணாதவாறு மறைத்தல் அவசியம். அவர்கள் விரும்பினால் முகம் மற்றும் முழங்கைகளையும் மறைத்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கான ஹிஜாபின் அவசியத்தை பின் வரும் திருமறையின் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றது.
”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.’ (அல் குர்ஆன் 33:59)
பெண்ணுரிமை பேசுவோர் இதனை பெண்களின் அடக்குமுறை, ஆணாதிக்கம் என்று கூட கூறலாம் ஆனால் உண்மையில் இதில் தான் பெண்களுக்கே பாதுகாப்பு அடங்கியுள்ளது. அவர்கள் மீது மரியாதையையும் கண்ணியத்தையும் இது ஏற்ப்படுத்தும்.
உதாரணத்திற்க்கு இரு அழகிய பெண்கள் வீதியில் நடந்து செல்வதாகக் கொள்வோம், இருவரில் ஒரு பெண் இஸ்லாமிய மரபுப்படி ஹிஜாப் அணிந்து அதாவது முகம் மற்றும் முழங்கைகள் தவிர ஏனைய பாகங்கள் மறைத்து உடையனிந்து செல்கின்றாள், மற்றொரு பெண் அங்கங்களை வெளிப்படுத்தக் கூடிய குட்டைப் பாவாடையோ ஆண்கள் அணியக்கூடிய அரைக்கால்சட்டையோ அணிந்து செல்கின்றாள். எண்ணிப்பாருங்கள் தெருமுனையில் காத்திருக்கும் விஷமிகள் கூட்டம் இந்த இருவரில் யாரை கேலி கிண்டல் செய்யும். ஓரு பெண் மீது கண்ணியத்தை உண்டாக்குவதும் அல்லது தவறான எண்ணங்களைத் தூண்டுவதும் அவள் அணிந்திருக்கக் கூடிய ஆடைகளும் அவளின் செயல்களும் தான். எனவே தான் அணிந்திருக்கக்கூடிய ஆடைகள் கூட பாலியல் கொடுமைகளுக்கு வழிவகை செய்துவிடக் கூடாது எனறு கருதியே இஸ்லாம் ஹிஜாபின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
கற்;பழிப்பு குற்றம் புரிந்த ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது இஸ்லாம் தரும் தண்டனையாகும். ஏனைய சகோதரர்கள் இதனை இஸ்லாம் ஒரு இரக்கமற்ற முரட்டுத்தனமான மதம் என்று கூட கூறலாம். உங்களிடம் ஓர் கேள்வி, உங்கள் இல்லத்துப் பெண்களில் உங்களின் தாயையோ, மனைவியையே அல்லது உங்களின் சகோதரியையோ எவனோ ஒருவன் கற்;பழித்துவிட்டதாகக் கொள்வோம், அவ்வாறு செய்த ஒருவனை உங்கள் முன் கொண்டு வந்து உங்களை நீதிபதியாக்கி தீர்ப்பு வழங்கச் சொன்னால் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள். மரண தண்டனை காட்டுமிரான்டித்தனம் என்று அவனை விட்டு விடுவீர்களா? அவனைக் கொல்ல வேண்டும், சாகும் வரை அவனை துன்புறுத்த வேண்டும் என்றெல்லாம் கூறமாட்டீர்கள்? பாதிக்கப்பட்டது உங்கள் இல்லப் பெண்ணெனில் அவனைக் கொல்ல வேண்டும், இதுவே வேறு ஒருவனின் மனைவியோ சகோதரியோ எனில் மரண தண்டனை காட்டுமிரான்டித்தனம், இரக்கமற்றது என்பது. ஏன் இந்த இரட்டை வேடங்கள். எனவே தான் இஸ்லாம் அனைவர்க்கும் பொதுவான நீதியினை வழங்குகிறது.
இது மட்டுமின்றி இப்படிப்பட்ட ஓர் தண்டனை இருந்தால் தான் மற்றோர் இத்தவறை செய்ய அச்சப்படுவர், பெண்கள் பாதுகாப்பாக நடமாட இயலும். எனவே தான் இஸ்லாமிய சட்டங்கள் கடைபிடிக்கப்படும் நாடுகளில் ஏனைய நாடுகளை விட திருட்டு கற்ப்பழிப்பு இன்றி கட்டுப்பாடுடன் காணப்படுகின்றது. இஸ்லாம் பெண்கள் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்க்கே பாதுகாப்பு அரணாய் உள்ளது.
உலகிலேயே அமெரிக்கா மட்டுமே அதிக கற்;பழிப்பு குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடாக உள்ளது. அமெரிக்க புலணாய்வுத் துறையின் 1990ம் ஆண்டின் அறிக்கையின் படி அந்த ஆண்டில் மட்டுமே 1,02,555 கற்;பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறுகிறது. இதுவும் நிகழ்ந்த மொத்த சம்பவங்களில் பதிவான 16 சதவீதம் மட்டுமே, ஆக அவ்வாண்டில் நடைபெற்ற மொத்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 6,40,968.
இதிலிருந்து சராசரியாக ஓர் நாளில் 1756 கற்பழிப்புகள். இதே போன்று 1996ம் ஆண்டின் அறிக்கையின் படி 9,90,322 கற்பழிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதாவது 2713 கற்பழிப்புகள் ஒவ்வொரு நாளும். எனில் ஒவ்வொரு 32 நொடிகளில் ஓர் கற்பழிப்பு அங்கே நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதன் படி இந்த ஆண்டின் எண்ணிக்கையினை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அந்த அறிக்கையில் மேலும் இத்தனை தவறிழைத்தோரில் 10 சதவீதம் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அமெரிக்க சட்டங்களின் படி கற்பழிப்பு குற்றத்திற்க்கு 7 வருட சிறை தண்டனை என்பது தீர்ப்பு. இதிலும் நீதிபதியின் கருணையினால் 7 வருடமென்பது 1 வருடமாக குறைக்கப்பட்டு தண்டனை முடிந்து வெளியாகும் ஒருவன் மீண்டும் இதே தவறினை செய்ய வழிவகுக்கிறது.
இதுவே இஸ்லாமிய சட்டங்கள் இங்கே அமலுக்கு வருவதாகக் கொள்வோம், அதாவது யாதெரு ஆடவனும் பெண்களைக் காண்கையில் தங்களின் பார்வையினை தாழ்த்திக் கொள்ளட்டும், இதன் மூலம் மனதில் உருவாகும் தவறான எண்ணங்கள், சபலத்தை தவிர்க்கலாம். இது போலவே பெண்களும் அந்நிய ஆடவர் முன் தமது அவையங்களை வெளிப்படுத்தாது ஹிஜாப் கொண்டு மறைக்கட்டும். மேலும் அங்கே கற்பழிப்பு செய்த ஒருவனுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளிக்கப்படட்டும். எனில் அங்கே குற்றங்கள் குறையுமா அல்லது கூடுமா? என எண்ணிப் பாருங்கள். உண்மையில் குறையும். சட்டங்கள் என்றும் குற்றம் புரிந்தோர்களை தண்டிக்க மட்டுமே பயன்பட வேண்டுமே அன்றி ஊக்குவித்தல் கூடாது.
எனவே எந்த ஒரு மதத்தினை பின்பற்றுவதாக இருந்தாலும் அதன் கோட்பாடுகள் வெறும் இறைவணக்கம், வழிபாடுகள் என்று நின்றுவிடக் கூடாது. அது இந்த சமுதாயத்திற்க்கும் தனி மணித வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக பயனுள்ளதாக இருத்தல் வேண்டும். இந்த வகையில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்து விளங்குகிறது. தீயது தவிர்த்து நல்வழியில் செயல்பட இஸ்லாம் வெறும் இறைவழிபாடோடு நின்றுவிடாமல் எந்த ஒரு தனி மனித வாழ்விலும் குறுக்கிட்டு ஓர் நெறியான வாழ்வை வாழ வழிவகுக்கிறது. இதன் மூலம் இந்த சமுதாயமே பயனடையும் எனில் இஸ்லாம் அனைவராலும் போற்றப்பட வேண்டிய நல்மார்க்கமே.
source: http://www.a1realism.com/TAMIL/specialty/islam%20is%20best.htm