போலியான உத்தமிகள்
[ தொடர்களில் நடிக்கும் நடிகைகள் உத்தமிகளாக காட்சியளிப்பதை மெய்மறந்து பார்ப்பவர்கள் உண்மை நிலையை கொஞ்சம் எண்ணிப் பார்க்கட்டும். பணம் கொடுத்தால் எந்த வேஷத்தையும் ஏற்கத் தயார்! எப்படியும் நடிக்கத் தயார்! எதையும் செய்யத் தயார்! என்பவர்கள் இந்த சினிமா, டி.வி. நடிகைகள்! இன்று பணத்திற்காக உத்தமிகளாக நடித்தவர்கள், விபச்சாரம் செய்ய துணிந்து விட்டார்கள். தொடர்ந்து விபச்சார வழக்கில் நடிகைகள் கைது செய்யப்படுகின்றனர்.
சாதாரண பெண்களிடம் இருக்கும் ஒழுக்கம் கூட இல்லாத இந்த நடிகைகள் நடித்த தொடருக்காக பொன்னான பல மணி நேரத்தை வீணடிக்கலாமா? குழந்தைகளை கவனிக்காமல், தொழாமல், கணவனுக்கு சரியான உணவை தயாரிக்காமல் தொடர்களுக்காக பல மணி நேரம் ஒதுக்குவது நியாயமானதா?
ஒழுக்கம் கெட்டவர்கள் நடிக்கும் தொடர்களுக்கு ஒதுக்கும் நேரத்தை குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க, குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்க, தொழ பயிற்சியளிக்க, பெற்றோர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் பணிவிடை செய்ய ஒதுக்கலாமே!
காலம் முக்கியமானது. ஒரு நிமிடம் சென்று விட்டாலும் அதை நாம் திரும்பப் பெற முடியாது என்பதை கவனத்தில் கொண்டு ஒரு பைசாவிற்குக் கூட பலனில்லாத தொடர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டாமா?]
சமீபகாலமாக டி.வி. நடிகைகள் கைது என்ற செய்தி தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதற்கு முன் செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம் நாளிதழ்களில் முக்கிய இடம் பிடித்தன. இவர்களின் சாயம் வெளுக்கப் போகிறது என்ற செய்திகள் வந்தன. பல பெரிய புள்ளிகளுக்கு இவர்களுடன் தொடர்பு உண்டு என்றும் அப்போது பேசப்பட்டது. அதனால் தான் என்னவோ இப்போது அடங்கிக் கிடக்கிறது.
ஆனால் செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம் தொடர்பாக அம்பிகை, அவளுக்கு மேலே ஒரு வானம் போன்ற தொடர்களில் நடித்த பிரபல டி.வி.நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு (முஸ்லிம்களின் கண்ணியமான உடை) புர்காவுடன் சென்று வருகிறார். இவரைத் தொடர்ந்து டி.வி.நடிகை சிந்து, அவரது சகோதரி, ஆயிஷா என்ற சுவேதாக, மாடலிங் செய்து வரும் ஸ்ரீஷா ஆகியோர் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர். இதைப் போன்று டி.வி. நடிகை பாவனா என்ற பெண்ணின ஆபாச படங்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இப்படி பல நடிகைகள் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவது பகிரங்கமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்களை மோசமானவர்கள் என்று மக்கள் எண்ணியிருந்தனர். நடிப்புத் தொழிலில் ஈடுபட பெண்கள் தயக்கம் காட்டினர். ஆனால் நாளடைவில் நாகரீகம் என்ற பெயரில் நடிகையாவது கௌரவம் என்ற நிலை உருவானது. இப்போது சினிமாவில், டி.வி.யில் நடிக்க பெண்கள் போட்டா போட்டி போடுகின்றனர். பெற்றோர்கள் கூட இதை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
சினிமா என்ற பெரிய துறை பல ஆபாச காட்சிகளோடு மக்களை சீரழிக்க அதையும் தாண்டி பெரிய சீரழிவை ஏற்படுத்த சின்னத்திரை – டி.வி. இவ்வுலகிற்கு வருகை தந்துள்ளது.
இப்போது சினிமாவை விட சின்னத்திரையில் வெளிவரும் தொடர்கள் தான் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழில் மட்டுமே இப்போது 14+ சானல்கள் இருப்பது இதற்கு எடுத்துக்காட்டு!
முதலில் இலவச சேனல்களாக அறிவிக்கப்பட்டவைகள், ஒளிபரப்பப்பட்ட தொடர்களில் மக்கள் அடிமையாகி விட்டதை உணர்ந்த டி.வி. சேனல்களின் முதலாளிகள், அனைத்து சேனல்களையும் கட்டண சேனல்களாக மாற்றி விட்டனர்.
திரைப்படங்களுக்கு விருது வழங்குவது போல், டி.வி. தொடர்களுக்கும் ஒரு சேனல் விருது வழங்கி தமிழ் டி.வி. தொடர்களின் முக்கியத்துவத்தை? உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இதை உண்மைப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஊரிலும் டி.வி. சேனல்களை எடுத்து வழங்கும் கேபிள் உரிமையாளர்கள் பகலில் ஒளிபரப்பாகும் தொடர்களை பதிவு செய்து மீண்டும் இரவில் ஒளிபரப்பி காணத்தவறியவர்களுக்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
இதற்கு மகுடம் சூட்டுவது போல் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில் ஒளிபரப்பும் முஸ்லிம் கேபிள் உரிமையாளர்கள் ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் டி.வி. பார்க்க மாட்டார்கள் என்பதற்காக ரமலான் மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும்தொடர்களைப் பதிவு செய்து ஷவ்வால் மாதத்தில் ஒளிபரப்பி முஸ்லிம் மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
இவ்வளவு மோகம் டி.வி. தொடர்களுக்கு இருப்பதால் தான் பிரபலமான தொடரில் நடித்த நடிகைகள் இன்னு வர்த்தக விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வளவு மோசமான நிலைக்குக் காரணம் டி.வி. தொடரில் வரும் செய்திகள் உண்மை என்று நம்புவது தான். நடிகைகள் அழக் கூடிய காட்சியை பார்ப்பவரும் அழுவது இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டு. இந்த அழுகைக்கு எத்தனை இலட்சங்கள் வாங்கினார்கள் என்பது பார்ப்பவருக்கு தெரியுமா?
மேலும் தொடர்களில் நடிக்கும் நடிகைகள் உத்தமிகளாக காட்சியளிப்பதை மெய்மறந்து பார்ப்பவர்கள் உண்மை நிலையை கொஞ்சம் எண்ணிப் பார்க்கட்டும். பணம் கொடுத்தால் எந்த வேஷத்தையும் ஏற்கத் தயார்! எப்படியும் நடிக்கத் தயார்! எதையும் செய்யத் தயார்! என்பவர்கள் இந்த சினிமா, டி.வி. நடிகைகள்! இன்று பணத்திற்காக உத்தமிகளாக நடித்தவர்கள், விபச்சாரம் செய்ய துணிந்து விட்டார்கள். தொடர்ந்து விபச்சார வழக்கில் நடிகைகள் கைது செய்யப்படுகின்றனர்.
சாதாரண பெண்களிடம் இருக்கும் ஒழுக்கம் கூட இல்லாத இந்த நடிகைகள் நடித்த தொடருக்காக பொன்னான பல மணி நேரத்தை வீணடிக்கலாமா? குழந்தைகளை கவனிக்காமல், தொழாமல், கணவனுக்கு சரியான உணவை தயாரிக்காமல் தொடர்களுக்காக பல மணி நேரம் ஒதுக்குவது நியாயமானதா?
ஒழுக்கம் கெட்டவர்கள் நடிக்கும் தொடர்களுக்கு ஒதுக்கும் நேரத்தை குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க, குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்க, தொழ பயிற்சியளிக்க, பெற்றோர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் பணிவிடை செய்ய ஒதுக்கலாமே!
காலம் முக்கியமானது. ஒரு நிமிடம் சென்று விட்டாலும் அதை நாம் திரும்பப் பெற முடியாது என்பதை கவனத்தில் கொண்டு ஒரு பைசாவிற்குக் கூட பலனில்லாத தொடர்களை முற்றிலும் புறக்கணிப்போமாக!
நன்றி: தமிழ் இஸ்லாம் இணையம்
அலைவரிசையில் விலைமாதர்கள்: