டாக்டர் எ.பீ. முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்
அரேபியாவில் பல தொழில்களுக்கு அதிபரான
அநேக மக்களின் அன்பிற்கு பாத்திரமான
லேடன் வாரிசில் ‘பான் வித் சில்வர் ஸ்பூன்;” என்ற
ஆங்கில பழமொழியின் செல்வக்கொழிப்பில் உதித்தான்.
எங்களுக்கு ஒரு மகன் பிறப்பான் -அவன்
ஈமான் சொல்படி நடப்பான்
தனக்கொரு வழியில் நடக்காமல்- இறைவனுக்கு
பிடித்த வழியில் நடப்பான்
இஸ்லாமிய இனம் காக்க
உதவும் நாள் கண்டு துடிப்பான்,
சுற்றி பகை வந்து சூழும் திருநாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்.
என பெற்றோர் எதிர்பார்த்த படியே
தாயின் தண்ணீர் குடத்தை பிளந்து
மண்ணில் பிறந்து-லேடன்
விண்ணைப் பிளந்தான்!
தவமிருந்து பெற்ற மகனைப்
பகலிரவாய் பேணிக்காத்து
வித்தைகள் பல கற்பித்து-பெற்றேர்
மேதினிலே சிறந்து விளங்கச் செய்தனரே.
ஆகாய விமான விபத்தில்
தந்தையை இழந்து
அடுத்தடுத்து தாயை இழந்த போது
பொத்தி வளர்த்தது போதுமா
ஏதம்மா இப்படி சாஞ்சி சிடக்கிறே
நியாயமா- என
அறியாத வயதில்-பரியாத மனதில்
கதறி அழுது சோகக் கடலானான்-லேடன்
வான் மழைத் துளியாவும் முத்தாக மாறாது
வண்ண மிகு மலர் யாவும் லேடன் போல சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும்
தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளியழகும் உன்னழகை காட்டாது
வேல் சிரிக்கும் கண்களில்
தடியிருக்கும் உன் கைகளில்-தாடியிருக்கும் உன் வதனத்தில்
பிழை செய்பவர் மீதினிலே பிரம்படி கொடுத்திடுவாய்
ஆப்கானிஸ்தானிலிருந்து செஞ்சட்டையிரை
விரட்ட கொம்பு வீசப்பட்டாய்-அமெரிக்காவால்
ஆக்கிரமிப்பினரை விரட்ட-எத்தனை
தழும்புகள் உன் மார்பில்
செஞ்சட்டை போய்; எஞ்சிய
இஸ்லாமிய நாட்டிலே நுழைந்த
மேற்கத்திய காலனி ஆதிக்கத்தினை
ஏதிர்த்து போட்டான் வீறு நடை.
அநியாயம் இந்த மேற்கத்திய
நாடுகளின் அநியாயம்
இஸ்லாமியர் நாட்டினை
அடிமையாக்குவது அநியாயம்-என ஆர்த்தெழுந்தாய்
ஊரையும், உறவையும் மறந்து
காடோ, செடியோ
கடுங்குளிரோ, மழையோ-பாராது
அழைந்து திரிந்தான்
கல்லுக்குள்ளேயுள்ள தேரைபோல
வளந்திருக்கும் தாடிக்குள்ளே
ஒளிந்திருக்கும் அசையா
அல்லாஹ்வின் பாசத்தால்;
பொட்டக் காட்டிலும்
புல்லுத் தரையிலும்
புறண்டு படுத்து
கண் துஞ்சா, பசி நோக்கா
கானலிலே கர்ச்சிக்கும் சிங்கமாய்
நட்டுவாக்களி பூரான் விஷப்
பாம்பு உனைச் சீண்டாமல்-எங்கே
கண்ணின் இமை போல் பாதுகாத்த வீரர்கள!;
பாச வலையில் வீழ்ந்திருந்தான்
காட்டுப் புலியொன்று-சிறிது ஓய்வுக்கு
வீட்டுக்கு வந்ததால்-கயவன்
உருவத்தில் வந்ததே வினை!
சேனை பலவென்று ஆளப்பிறந்த
உன்னை ஞாயிறு இரவு
விடிந்தும் விடியாக் காலையாக
மாறியதே உன் வீர வாழ்வு!
மண்ணுலகம் உன்னைத் தாங்காது-என்று
விண்ணுலகம் விடப்பாட்டாய்
நீலக் கடல் உன்னை அரவணைத்து
நீங்கா புகழ் கொடுத்தது!
கடல் அலை மீது உன் பொன்னுடல்
பார் மகனே பார் என் மார்பகத்தில்
பலர் சங்கமமானதைப் பார்
இந்த வீடு இரவல் வீடு-நீ
இருக்கப் போவது-உன் சொந்த வீடு
வருந்த வேண்டாம் உருளும் உலகில்
இருளும் ஒளியும்
இயற்கையின் சுழற்சியே!
அழுதால் சிரிக்கும்
அன்பில்லாத உலகம்-இது
அன்பு காட்டி அரவணைக்கும்
அல்லாஹ்வின் மஞ்சம்-உன் பக்கம்
இறைவன் அசைந்தால் அசையும்-உலகம்
இறையிசை நின்றால் அடங்கும்-வையம்
அறியாதோர் இதை மேலை நாட்டார்
ஆணவத்தால் தாண்டவம் ஆடுவது பெரிதா!!
நீதியின் தீபங்கள் ஏந்திய கைகளின்
தொடர்ந்த லட்சியப் பயணம் நீ கொண்டது
சத்திய சோதனை எத்தனை வந்த போதும்
தாங்கிடும் இஸ்லாமியர் இதயமிது!
‘கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவானென்றார்”
டூஜி ஊழலில் ஊரை அடித்து உளையில் போட்டு
திகார் ஜெயலில் தியானம் செய்யும்
ஊர் பெரியார் ஒருவர் உளறுகின்றார்-உன் முடிவை எண்ணி
சரித்திரம் கதை சொல்லும் சிறைக்கதவை-அவர்களுக்கு
இறை சக்தியிருப்பதால்-இஸ்லாமியர்
வெற்றி உனைக் கண்டு சிரிக்கும்
நiளைய உலகம் நம் பக்கமே-அறியாயோ மானிடரே!