தகாபுல் – இஸ்லாமியக் காப்புறுதி
இர்ஃபான் அஷ்கர்
தகாபுல் என்ற சொல் பரஸ்பரம் உதவிக்கொள்ளுதல் என்ற மொழிக்கருத்தைக் கொடுக்கின்றது. அதாவது இரு சாராருக்கிடையிலான ஒரு கூட்டுறவு ஒப்பந்தத்தின் படி ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாகும். எதிர் காலத்தில் மனிதனுக்கோ அல்லது ஏதாவது நிறுவனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கோ ஏற்படக்கூடும் எனக் கருதும் இழப்பிற்கு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றைச் செய்து கொள்வதையே காப்புறுதி (தகாபுல்) என்கின்றோம்.
தோற்றப் பின்னனி:
பண்டைய அரபிகளிடத்தில் ‘ஆகிலா’ முறையிலான காப்புறுதி நடைமுறையில் இருந்து வந்தது. ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலை செய்தவரின் குடும்பத்தினர் அதற்கான தண்டப்பணத்தை கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு செலுத்தினர்;. இவ்வாறு பணம் செலுத்துபவர்கள் ஆகிலா என்றளைக்கப்பட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இத்தகைய காப்புறுதி வகையை அங்கீகரித்தார்கள்.
ஹுஸைல் கோத்திரத்தை சேர்ந்த இரு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டபோது அவர்களில் ஒரு பெண் கர்பிணியாய் இருந்தாள். அவளை, அடுத்த பெண் கொன்று விட்டாள். இந்த சம்பவம் அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்த அப்பெண்ணுக்கு நஷ்டஈடாக ஒரு தொகைப் பணத்தை வழங்கும்படியும் கருவிலிருந்த சிசுவிற்கு நஷ்டஈடாக ஓர் அடிமையை விடுதலை செய்யும் படியும் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்திலும் இவ்வகையான காப்புறுதி முறையில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு கஸாமரஹ், முவல்லா, லமானா, கபாலா போன்ற பல்வேறு காப்புறுதி முறைகளும் அக்காலத்தில் நடைமுறையில் இருந்தன.
அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்கள்:
” இன்னும் நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்” (அல்குர்ஆன் 5:2).
”அடியான் தனது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருப்பான்” (நூல்: அஹ்மத், அபூதாவூத்).
ஏவன் கைவசம் தன் உயிர் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! தனது அண்டை வீட்டாருடைய நெருக்கடியில் உதவிக்கரம் நீட்டாதவன் நிச்சயம் சுவனம் நுழைய மாட்டான்” (நூல்: முஸ்னத் அஹ்மத்).
நவீன காப்புறுதி:
இன்றைய நவீன உலகின் இஸ்லாமியக் காப்புறுதி முறை இப்னு ஆப்தீன் என்பவரால் 19ம் நூற்றாண்டில் முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டது. எனவே முஸ்லிம்கள் காப்புறுதி விஷயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அத்தோடு அது மார்க்கத்துக்கு முரணாணது என்ற கருத்தைக் கொண்டவர்களும் தமது கருத்துக்களிலிருந்து ஓரளவு நழுவத் தொடங்கினர். இந்நிலையில் 20ம் நூற்றாண்டில் முஹம்மது அப்துஹு என்ற அறிஞரால் வெளியிடப்பட்ட இரண்டு பத்வாக்களின் அடிப்படையில் காப்புறுதி என்பது முழாரபா வகையைச் சேர்ந்த ஒரு வியாபார முறை என இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றக்கொள்ளப் பட்டது. அத்தோடு 1979ம் ஆண்டு ஷரீஆ சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட முதலாவது காப்புறுதி நிறுவனம் சூடானில் “வரையறுக்கப்பட்ட இஸ்லாமியக் காப்பறுதிக் கம்பனி” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் முஸ்லிம் நாடுகளில் மட்டுமன்றி முஸ்லிமல்லாத நாடுகளிலும் பல்வேறு இஸ்லாமியக் காப்புறுதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. உதாரணமாக சவூதி அரேபியாவில் “இஸ்லாமிய அரபு காப்புறுதி நிறுவனம்”, சுவீஸில் “தார் அல் மால் அல் இஸ்லாமி”, அமெரிக்காவில் “தகாபுல் ருளுயு”, சிங்கப்பூரில் “ஷரீகத் தகாபுல் சிங்கப்பூர்”, மலேசியாவில் எம்.என்.ஐ.தகாபுல்”, இலங்கையில் “அமானா தகாபுல்” என்பன பல்வேறு கால கட்டங்களில் நிறுவப்பட்டன. இலங்கையின் அமானா தகாபுல் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவை தவிர இன்னும் பல்வேறு தகாபுல் நிறுவனங்கள் உலகின் பல நாடுகளிலும் இயங்கி வருகின்றன.
காப்புறுதி சம்பந்தமான வேறுபட்ட கருத்துக்கள்:
காப்புறுதி எனும் விடயம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா எனும் விடயத்தில் அறிஞர்கள் கருத்து முரண்படுகின்றனர். 1985ம் ஆண்டு ஜித்தாவின் ஷரீஆ அகடமி காப்புறுதி சம்மந்தமாக இரண்டு கருத்துக்களை வெளியிட்டது. முதலாவது, காப்புறுதி முறை நிச்சயமற்ற ஒன்றிற்கு பணம் செலுத்துவது காரணமாக கரார்(பாயசயச) அடிப்படையில் அது அனுமதியற்றதாகும் என்று கூறியது.
இரண்டாவது கருத்து, தகாபுல் முறை பரஸ்பர உதவும் நிய்யத்துடன் செய்யப்படுவதால் அது ஆகுமானதே என்பதாகும். 1965ம் ஆண்டு கைரோ உலமாக்களும்;இ 1972ம் ஆண்டு மொரோக்கோ அறிஞர்களும் ஆயுள் காப்புறுதிக்கு எதிராக தீர்ப்புக்களை வழங்கினர். ஆனால் அதற்குமுன்னரே (1900ம் ஆண்டு) எகிப்தின் அதிஉயர் முப்தியான ஷேக்முஹம்மத் அப்துல்லாஹ்வின் தீர்ப்புக்கள் ஆயுள் காப்புறுதிக்கு ஆதரவானதாகவே இருந்தன.
எனவே முஸ்லிம்களும் இவ்வகையான காப்புறுதி முறைகளில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தனர் ஷேஹ் முஹம்மத் அப்துஹு வட்டியுடன் தொடர்பற்ற அனைத்து வகையான காப்புறுதி முறைகளும் ஆகுமானவை எனக் கூறினார்.
மேலும் அப்துர்ரஹ்மான் ஈஸா போன்ற அறி;ஞர்கள் பலர் ஆயுள் காப்பறுதியில் கரார்(பாயசயச-நிச்சயமற்ற தன்மை), மய்ஸிர்(சூது), ரிபா(வட்டி) போன்றன காணப்படுவதால் அது ஹராம் என்றும்யூயூ ஏனைய வகையான காப்புறுதிகள் ஆகுமானவை எனவும் கூறுகின்றனர். ஜலால் முஸ்தஃபா, ஸவ்கத் அலிகான், முஸ்தபா ஜய்த் போன்ற அறிஞர்கள் கரார், மய்ஸிர், ரிபா போன்ற மூன்று அம்சம்களும் இன்றைய அனைத்துவகையான காப்புறுதி முறைகளிலும் இருப்பதாகக் கூறி எல்லா வகையான காப்புறுதிகளும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர்.
நவீனகாலப் பிரபல இஸ்லாமியப் பொருளியல் அறிஞரான முஹம்மத் தகிஉஸ்மானி காப்புறுதிக் கூறும்போது, இன்று எல்லா வகையான வர்த்தக நடவடிக்கைகளிலும் காப்புறுதி முக்கிய இடத்தை வகித்துள்ளதால் இது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது என்று கூறுகின்றார். மேலும் பிரபல மார்க்க அறிஞறான அபூஸுஹ்ரா காப்புறுதி ஹராம் என்று கூறுகின்றார். முஸ்தஃபா ஷர்கா மற்றும் அலி அல்ஹபீப் போன்ற அறிஞர்கள் காப்புறுதி ஆகும் என்று கூறுகின்றனர். இவர்கள் இதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர்.
1. காப்புறுதியில் உடன்படிக்கை உண்டு. சூதாட்டத்தில் எவ்வித உடன்படிக்கைகளும் இல்லை.
2. இது காவல் காப்பவர்களுக்குக் கொடுப்பது போன்ற பாதுகாப்புக்காகக் கொடுக்கும் ஒரு தொகை என்பதால் ஆகுமானதாகும்.
இவ்வாறாக, அறிஞர்கள் மத்தியில் காப்புறுதி பற்றிப் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
காப்புறுதியின் வகைகள்:
1. பொருள் காப்புறுதி:
இதில் வீடு, வாகனங்கள் மற்றும் பொருட்கள் (உதாரணம்: கப்பலில் எடுத்துச்செல்லப்படும் பொருட்கள்) போன்றன உள்ளடங்கும். காப்புறுதி செய்யப்பட்டுள்ள இவ்வகையான பொருட்களுக்கு ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டுத்தொகை காப்புறுதி நிறுவனத்தால் வழங்கப்படும். அப்பொருட்களுக்குக் குறித்த காலத்தில் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படாவிடின் அப்பணம் காப்புறுதி நிறுவனத்தால் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது.
2. பொறுப்புக் காப்புறுதி:
இது எதிர்பாராத வண்ணம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்குப் பொறுப்பாகச் செய்யப்படும் காப்புறுதி வகையாகும். உதாரணமாக இலங்கையில் வாசைன pயசவல iளெரசயnஉந செய்யப்பட்ட பின்னர் தான் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி உண்டு. எனவே வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்தால் உண்டாகக் கூடிய இழப்பீட்டை ஈடு செய்வதற்கு இவ்வகையான காப்புறுதி துணை புரிகின்றது.
3. ஆயுள் காப்புறுதி:
ஒருவர் அயுள் காப்புறுதி செய்துகொண்டால்… அக்காலத்தினுள் அவர் இறந்தால் அவருக்கான இழப்பீட்டுத் தொகை காப்புறுதி நறுவனத்தினால் அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும். இவர் அக்குறிப்பிட்ட காலத்தினுள் இறக்காது உயிருடனிருந்தால் காப்புறுதி நிறுவனம் அவர் காப்பீடு செய்த தொகையை வட்டியுடன் அவருக்கு வழங்கும். எனவே அவர் இறந்தாலும் இறக்காவிட்டாலும் அவர் செலுத்திய தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்கின்றன.
காப்புறுதி செய்வதன் அடிப்படையில் காப்புறுதியை இன்னும் 3 வகைகளாகக் பிரிக்கலாம்.
1) group insurance.
2) mutual insurance.
3) commercial insurance.
அமானா தகாபுல் நிறுவனம்:
ஃபிக்ஹுல் முஆமலாத்தில் ‘ஷரிகா அல்இனான்’ என்று அழைக்கப்படுகின்ற வியாபாரத்தினைப் போன்றே அமானா தகாபுலின் செயற்பாடுகளும் காணப்படுகினறன. இது எல்லா மத்ஹபுகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது அமானா தகாபுலானது 4 பேருக்கு அதிகமான பங்குதாரர்களின் முதலீட்டில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
மேலும் அமானா தகாபுல் நிறுவனமானது ஷரீஆ கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதால் இங்கு பணிபுரிபவர்கள் தக்வாவுடனும் நம்பிக்கை, நேர்மை, பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும். அத்தோடு வாடிக்கையாளர்களுடன் பணிவுடனும் கருணையுடனும் நடந்து கொள்வது அவசியமாகும். அப்போது தான் இஸ்லாம் எதிர்பார்க்கும் தகாபுல் சேவையை நடைமுறைப்படுத்தப் படுவதோடு இஸ்லாமியப் பொருளாதாரமும் இவ்வுலகில் நிலைபெறும்.
Written by Irfan Ashkar
ஸரையா நூருல் ஹம்ஸா, திஹாரிய.
source: http://www.jbookonline.com