[ “வியர்வை காயும் முன் கூலி கொடு” என்பது நபி மொழி. தொழிலாளி வியர்வைக்குரிய கூலியை முழுமையாகக் கொடு என்பதே அதன் பொருள். ஆனால் உரிய கூலி கொடுப்பதில்லை.
முதலாளி மகளுக்கு 100, 50 சவரன் நகை போட்டுத் திருமணம். ஊழியர் மகள் திருமணத்துக்கு ஐந்தாயிரம் பிச்சை. முதலாளி பிள்ளை கான்வெண்டில் படிக்கும். தொழிலாளி குழந்தை சாதாரணப் பள்ளிக் கூடம். ஊழியர், அக்கா, தங்கை மகள் திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக வீட்டிலிருப்பர்.
முதலாளி மூன்றாவது முறை ஹஜ்ஜும், ஆறாவது முறை உம்ராவும் முடிப்பார். ஊழியர் வாழ்வறிய அவர் வீட்டுக்கு முதலாளி செல்வதில்லை. அக்கரை செலுத்துவதில்லை.
ஒவ்வொரு இடத்திலும் லாரி நிறுத்தும் போது அதன் டிரைவர் நான்கு டயர்களையும் அழுத்திப் பார்ப்பார், தட்டிப்பார்பார். ஆணியைப் பிடுங்கி எடுப்பார். காற்றடிப்பார். முழுமையாக அதன்மீது கவனம் வைத்து அக்கறை செலுத்துவார். சக்கரம் இல்லையெனில் வண்டி ஓடாது என்பதை லாரி டிரைவர் உணர்ந்திருப்பது போல், முதலாளிகள் உணர்வதில்லை.]
ஐ.டி. நிறுவனங்கள் ஐ.டி.சாராத நிறுவனங்கள் கல்லூரிகளில் கேம்பஸ் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து தத்தமது துறை தொழில் நுட்ப நுணுக்கம், ரகசியம், செயல்முறை பயிற்சி கொடுக்கின்றன. தேர்வாகும் மாணவர் மீது பயிற்சிக்காக ஒன்றுமுதல் ஐந்து லட்சம்வரை முதலீடு செய்யப்படுகிறது. பயிற்சியடைபவர் செய்யும் பணிமூலம் தமது முதலீட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையில் குறிப்பிட்ட காலம் தம்முடைய நிறுவனத்தில் பணி செய்ய வேண்டும் என்று “எம்ளாய்மெண்ட் பாண்ட்” (வாக்குறுதிச் சீட்டு) பெறப்படுகிறது. வாக்குறுதிச் சீட்டை மதியாமல் ஒப்பந்தக் கால வரைக்குள்ளாக பணியை விட்டு சென்று விடுகின்றனர்.
தொழில் ரகசியத்தை அடுத்துள்ள, போட்டி நிறுவனத்துக்குக் கூறி விடுகின்றனர். முதலீடு நஷ்டத்திற்குள்ளாகிறது என்ற குற்றச்சாட்டை நிறுவனங்கள் ஊழியர் மீது சுமத்துகின்றன. தூக்கத்திலிருந்து எழுப்பியும், சனி, ஞாயிறுகளிலும் வேலை வாங்குகின்றனர். ஊழியரை முழுமையாக நம்பாமல் கேமரா வைத்து கண்காணிக்கின்றனர்.
பாண்டுப்படி பணிக்காலம் நிறைவடைந்து பணிசெய்த எக்ஸ்பீரியன்ஸ் கடிதம் கேட்கும் போது தருவதில்லை. வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் பழைய நிறுவனத்திடம் ஊழியர் பற்றி கேட்டால் தப்புத்தவறாக சொல்லி விடுகின்றனர் என்று நிறுவனங்கள் மீது ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இன்றைய நவீன காலக் குரல்கள் அல்ல இவை. ஊழியர், முதலாளி மத்தியில் காலம் காலமாக வெளிப்பட்டு வருபவை.
தொழிற் சாலைகள், பெரு, சிறு வணிக நிறுவனங்கள், குறுந் தொழிற்சாலைகள், சிறு கடைகள் பணிக்காக 16 வயதிலேயே சிறுவர்கள் அழைத்து வந்து பொருட்கள் உற்பத்தி, இயந்திரம், வாகனம் பழுது பார்த்தல், ரெடிமேட் ஆடை வெட்டி தைக்கக் கற்றுக் கொடுத்தல், தோல், பிளாஸ்டிக், ரெக்ஸின் பொருட்கள், செருப்பு தயாரிக்கக் கற்றுக்கொடுத்தல் என எண்ணற்ற தயாரிப்புகள், தொழில் நுணுக்கம், ரகசியங்களைக் கற்றுக் கொடுப்பது வழக்கம்.
கற்றலின்போது மூலதனப் பொருட்களை வீணடிப்பர். கஸ்டமர் பொருட்களை நாசப்படுத்தி இழப்பீடு வழங்கும் நிலையை ஏற்படுத்துவர். எல்லா நஷ்டங்களையும் முதலாளி பொறுத்துக் கொள்வார். வேலை கற்றுக் கொண்ட பிறகு அவர் தமக்கு உதவியாக இருப்பார் என்ற நம்பிக்கை. ஆனால், நேரத்தை, பணத்தை வீணடித்து முதலாளியிடம் கற்றுக் கொண்டவுடன் இறைக்கை முளைத்த கிளியாக பறந்து போவார் ஊழியர்.
அடுத்து அவர் செய்யும் துரோகம், முதலாளி கடைக்கு அருகிலேயே கடைவைப்பார். முதலாளி சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு விலைகுறைத்து சப்ளை செய்வார். முதலாளியிடம் பணிசெய்யும் மற்ற ஆட்களுக்கு கூடுதல் சம்பளம் ஆசையூட்டி அழைத்துக் கொள்வார். தனிக்கம்பெனி போடுவார் இவையணைத்தும் முதலாளிக்கு தொழிலாளி செய்யும் துரோகங்கள்.
“வியர்வை காயும் முன் கூலி கொடு” என்பது நபி மொழி. தொழிலாளி வியர்வைக்குரிய கூலியை முழுமையாகக் கொடு என்பதே அதன் பொருள். ஆனால் உரிய கூலி கொடுப்பதில்லை. முதலாளி மகளுக்கு 100, 50 சவரன் நகை போட்டுத் திருமணம். ஊழியர் மகள் திருமணத்துக்கு ஐந்தாயிரம் பிச்சை. முதலாளி பிள்ளை கான்வெண்டில் படிக்கும். தொழிலாளி குழந்தை சாதாரணப் பள்ளிக் கூடம். ஊழியர், அக்கா, தங்கை மகள் திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக வீட்டிலிருப்பர்.
முதலாளி மூன்றாவது முறை ஹஜ்ஜும், ஆறாவது முறை உம்ராவும் முடிப்பார். ஊழியர் வாழ்வறிய அவர் வீட்டுக்கு முதலாளி செல்வதில்லை. அக்கரை செலுத்துவதில்லை. ஒவ்வொரு இடத்திலும் லாரி நிறுத்தும் போது அதன் டிரைவர் நான்கு டயர்களையும் அழுத்திப் பார்ப்பார், தட்டிப்பார்பார். ஆணியைப் பிடுங்கி எடுப்பார். காற்றடிப்பார். முழுமையாக அதன்மீது கவனம் வைத்து அக்கறை செலுத்துவார். சக்கரம் இல்லையெனில் வண்டி ஓடாது என்பதை லாரி டிரைவர் உணர்ந்திருப்பது போல், முதலாளிகள் உணர்வதில்லை.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு பணம், துணி கொடுக்கும் நற்பெயர் பெற்றவர்கள் ஊழியருக்கு விடுமுறையளிப்பதில்லை. கசக்கிப் பிழிகின்றனர். 40,000ம் கோடி வருமானம் பெறக் காரணமான ‘தோல்’ துறையின் ஒரு லட்சம் ஊழியர்கள் வாழ்வியல் மீது கவனம் செலுத்தப்படுவதில்லை.
பத்திரிகை மூலம் தன்னைக்காட்டி வளர்த்து பெறுபவர்கள் தன்னைத்தூக்கிப் பிடிக்கக் காரணமான எழுத்தாளரைக் கண்டு கொள்வதில்லை. தனக்குக் கிடைத்ததை பத்திரிகைப் பணியாளருக்குப் பங்கு வைப்பதில்லை.
இரு புறமும், தவறுகளும், துரோகங்களும் மிகைப்பதற்குக் காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பு என்றசொல்லை உள் வாங்காதது தான்.
ஊழியரைத் தக்கவைக்க நான்கு செய்தாக வேண்டும்.
1. தொழிலாளி குழந்தைகள் கல்விக்கு பொறுப்பெடுக்கலாம்.
2. முதலாளி வீட்டில் ஒரு போர்ஷன் தொழிலாளிக்கு ஒதுக்கி குடியமர்த்தலாம்.
3. பெண் கொடுக்கலாம் அல்லது எடுக்கலாம்.
4. நஷ்டம், இலாபம் இரண்டிலும் பொறுப்பேற்கும் வகையில் பங்குதாரராக ஆக்கலாம்.
இவைகளை பின்பற்றினால், ஊழியரது வியர்வைக்குரிய கூலியாக ஆகும். வெளியே பார்வையை படர விடாது விசுவாசமாக விருப்பார் ஊழியர். கம்பீரமாகச் சென்று கொண்டிருக்கும் கப்பல் திடீரென ஓட்டையாகி மூழ்குவது போல் நிறுவனம், கடை, தொழிற்சாலை மூழ்காது. மறையாது.
-ஜெ. ஜஹாங்கீர், டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு