[ முஸ்லிம் மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் நீண்டநாள் கனவு. நாற்பது லட்சம் முஸ்லிம்களுக்கு நான்கு மருத்துவக்கல்லூரிகள் தேவைப்படுகிறது. இதன் முதல்படி, சேவைக் குழுக்களை இனம் காண வேண்டும். சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு, அங்கீகாரம் பெறவேண்டும்.
முஸ்லிம் வி.ஐ.பி.க்களின் வாரிசுகள் மருத்துவத் துறையில் எம்.டி., எம்.எஸ். பட்டம் பெற்று சம்பாதிக்கின்றனர். வாரம் ஒரு நாள் இலவச மருத்துவ ஆலோசனைக்கு இவர்களைப் பயன்படுத்தலாம். ஊருக்குத்தான் உபதேசம் பாணியில் களம் நிற்கிறது.
அரசாங்கம், அரசியல் கட்சி தொடர்புள்ள தமிழக முஸ்லிம் புரவலர்கள், சமுதாயக் காவலர்கள், கவ்மின் எஜமானர்கள் குடும்ப உறுப்பினர்களை மருத்துவப் பட்டதாரிகளாக்கியுள்ளனர். இது குறித்து வெள்ளை அறிக்கை தேவை. சமுதாய அறுவடை நல்ல விதமாக சுய ஆதாயத்தை தந்துள்ளது. ஆனால், மருத்துவச் சேவை நடைபெறவில்லை.
ஆடம்பரத் திருமணம், மாளிகை, அரண்மனை வீடு, விலை உயர்ந்த கார் வசதிவாழ் மருத்துவர்கள் சமூக விரோதிகளாக வலம் வருகின்றனர். ஏற்கனவே முப்பதாயிரம் கோடி ரூபாய் சொத்து சிறுபான்மை கல்வி வளாகங்களில் முடங்கிக் கிடக்கிறது. ஏழை மத்திய தரத்தினர் உள்ளே நுழையவில்லை. ஆயுள் உறுப்பினர் யோக்கியதை, தகுதி அமுக்கமாக, ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.]
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் மருத்துவம் ஒன்று. நச்சுத் தன்மை நிறைந்த செயற்கை உர விளைச்சல் நல்ல திடகாத்திர உடல்களையும் செயலிழக்க வைத்துள்ளது. இயற்கை உரம், இயற்கை விவசாயம் இப்போது கவனம் கொள்கிறது. மூன்றரை சதவீத ஒதுக்கீடு புதிய மருத்துவ பட்டதாரிகளை தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது.
சேவை மனப்பான்மைக்கு மிகப்பெரிய விரோதிகளாக மருத்துவர்கள் திகழ்கின்றனர். ஹிந்து, கிருஸ்துவ ஆன்மீகக் குருக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளை திறம்பட நடத்துகின்றனர். மதத்தில் தீவிர, அதி தீவிர போக்குகளைக் கடைப்பிடிக்கும் தமிழக முஸ்லிம்கள் மருத்துவத் துறையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
சொகுசு வாழ்க்கையில் நாட்டம் காணும் ஆங்கில மருத்துவர்களை பொது வாழ்வுக்கு இழுத்து வருவது பெரும் சவால். மாபெரும் தொடர் தோல்வியை சமுதாயம் சந்தித்து வருகிறது. தனித்தனியே இயக்கம், அமைப்புகளை பிரச்சாரம் செய்ய கோடிக்கணக்கான நிதி செலவழிக்கப்படுகிறது. ஆனால், ஒருங்கிணைந்த மருத்துவ உதவி தமிழகத்தில் இல்லை.
அரை நூற்றாண்டு காலம் முஸ்லிம்களுக்கு சேவையாற்றிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் தமது இல்ல உறுப்பினர்களின் நோய்களுக்கு பிராமண, கிருஸ்துவ மருத்துவமனைகளை நாடுகின்றனர். பரஸ்பர அறிமுகத்துடன் ஒரே ஒரு மருத்துவர் பெயரும், மருத்துவமனையும் நினைவுக்கு வரவில்லை. இரண்டு லட்ச ரூபாய் அறுவை சிகிச்சைச் செலவு சராசரி மனிதருக்குக் கூடுதல் வலியைத் தருகிறது.
முஸ்லிம் மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் நீண்டநாள் கனவு. நாற்பது லட்சம் முஸ்லிம்களுக்கு நான்கு மருத்துவக்கல்லூரிகள் தேவைப்படுகிறது. இதன் முதல்படி, சேவைக் குழுக்களை இனம் காண வேண்டும். சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு, அங்கீகாரம் பெறவேண்டும்.
மருத்துவ சேவையாளரின் பட்டியல் இஸ்லாமிய இதழ்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள் வாயிலாக பரவலாக அறிமுகமாக வேண்டும். இன்றைய நிலையில் பணவெறி பிடித்தலையும் மருத்துவர்களை கட்டிக்கொண்டு மாரடிப்பதே வீண் வேலை. கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் உருவாகும் புதிய இலவச மருத்துவமனைகள், கல்லூரிகள் சேவையில் கவனம் செலுத்து உத்தரவாதமில்லை.
முஸ்லிம் வி.ஐ.பி.க்களின் வாரிசுகள் மருத்துவத் துறையில் எம்.டி., எம்.எஸ். பட்டம் பெற்று சம்பாதிக்கின்றனர். வாரம் ஒரு நாள் இலவச மருத்துவ ஆலோசனைக்கு இவர்களைப் பயன்படுத்தலாம். ஊருக்குத்தான் உபதேசம் பாணியில் களம் நிற்கிறது. அரசாங்கம், அரசியல் கட்சி தொடர்புள்ள தமிழக முஸ்லிம் புரவலர்கள், சமுதாயக் காவலர்கள், கவ்மின் எஜமானர்கள் குடும்ப உறுப்பினர்களை மருத்துவப் பட்டதாரிகளாக்கியுள்ளனர். இது குறித்து வெள்ளை அறிக்கை தேவை. சமுதாய அறுவடை நல்ல விதமாக சுய ஆதாயத்தை தந்துள்ளது. ஆனால், மருத்துவச் சேவை நடைபெறவில்லை.
ஆடம்பரத் திருமணம், மாளிகை, அரண்மனை வீடு, விலை உயர்ந்த கார் வசதிவாழ் மருத்துவர்கள் சமூக விரோதிகளாக வலம் வருகின்றனர். ஏற்கனவே முப்பதாயிரம் கோடி ரூபாய் சொத்து சிறுபான்மை கல்வி வளாகங்களில் முடங்கிக் கிடக்கிறது. ஏழை மத்திய தரத்தினர் உள்ளே நுழையவில்லை. ஆயுள் உறுப்பினர் யோக்கியதை, தகுதி அமுக்கமாக, ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவியளிக்க இரண்டு காரணிகள் போதும். சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்கள், ஈர நெஞ்சுள்ள புரவலர்கள். இரண்டுக்கும் கடுமையான பஞ்சம். புதியமனை நிலப்பரப்பு, கட்டடம், கருவிகள் உதவப் போவதில்லை. கனவு காண வேண்டாம்.
– ஆ.மு. ரஸூல் முஹ்யித்தீன்
நன்றி: முஸ்லிம் முரசு