Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெரும்பாவங்கள் 7

Posted on April 13, 2011 by admin

Image result for seven in fire

    பெரும்பாவங்கள் 7      

1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

2. சூனியம் செய்தல்

3. இறைவன் தடுத்த ஓர்உயிரை அநியாயமாக கொலை செய்தல்

4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது

5. வட்டிப்பொருளை உண்ணுதல்

6. போரில் பறமுதகிட்டு ஓடுவது

7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

(அறிவிப்பவர். அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்கள் புகாரி. முஸ்லிம்)

பாவங்கள் என்றால் என்ன? என்பதைப் புரியாமலே நம்மில் பலர் அதைச்செய்து குற்றவாளியாகின்றனர். எனவே பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நன்மையைப்பற்றியும் தீமையைப்பற்றியும் வினவினேன். அதற்கவர்கள் “நல்லொழுக்கமே நன்மையெனப்படும்.பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்செரிப்பதும், அதைப்பிறரிடம் வெளியிடும் போது நீ வெறுப்பதுமாகும்.” என விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸிற பின் ஸம்ஆன், நூல் முஸ்லிம்)

இதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தடுத்துள்ள அறிவுக்குப் பொருந்தாத, அறிவை மழுங்கச்செய்யும் மூடநம்பிக்கைகள்,சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும் பாவம் என்றே இஸ்லாம் கூறுகிறது.

மதத்தின் பெயரால் எல்லா மதங்களிலும் மலிந்துள்ளதைப் போல் இஸ்லாத்திலும் மூடநம்பிக்கைகளைக காணமுடிகிறதே என்ற ஐயம் நம்மில் பலருக்கு எழலாம்.அவை யாவும் அந்நிய மதங்களிலிருந்து நம்மதத்தில் இறககுமதியானவையாகும். எனவே இஸ்லாத்தில் ஊடுருவியுள்ள சிறு பாவங்களையும் நம்மை அழிக்கும் பெரும் பாவங்களையும் விட்டு தவிர்ந்து கொள்வது நம்மனைவர் மீதும் தலையாய கடமையாகும். இப்போது தண்டனைக்குரிய பெரும் பாவங்களைப் பற்றித் தெரிந்து கொளவோம்.

    பெரும் பாவம் என்றால் என்ன?       

பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினாலும், அவன் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலும் விலக்கப்பட்வைகளைக் குறிக்கும்.இவற்றைச் செய்வதால் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரழடும்.

பெரும் பாவங்களைத்தவிர்த்து ஏனைய சிறு பாவங்களை மன்னிப்பதாக பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்:-

إِن تَجْتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيماً

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்களுடைய சிறு பாவங்களுக்கு(அதனை)நாம் பரிகாரமாக்கி உங்களை (மன்னித்து மிக்க) கண்ணியத்தின் வாயிலிலும் புகுத்துவோம். (அல்குர்ஆன் 4:31)

என்ற மறைவசனத்தின் வாயிலாக பெரும் பாவங்களைத் தவிர்த்து தங்களை பாதுகாத்துக் கொண்டவர்களை சுவர்கத்தில் புகுத்துவதாக அறிவிக்கிறான வல்ல நாயன். மேலும்,

وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ

(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள் அல்குர்ஆன் 42:37), எனவும்

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ

(நன்மை செய்யும்) அவர்கள் (அறியாமல் நேர்ந்துவிடும்) சிறு தவறுகளைத்தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்து விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். (அல்குர்ஆன் 53:32) எனவும் கூறியுள்ளான்.

“ஐந்து நேரத் தொழுகைகளும். ஒவ்வொரு ஜும்ஆவும். ஒவ்வொரு ரமளானும். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யக்கூடிய சிறுதவறுகளுக்கு பரிகாரமாகும். (ஆனால்) இடைப்பட்ட காலங்களில் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம். திர்மிதி. அஹ்மத்)

இதன் மூலம் பெரும் பாவங்களை செய்யாதவனுக்கு ம்ட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

மனிதனிடம் காணப்படும் பாவச்செயல்களில் ஏழு பாவங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவற்றில் ஒன்றைச் செய்தாலும் அது அவனை அழித்துவிடும்.

“ஏழு பெரும் பாவங்கள்”

عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – عَنِ النَّبِىِّ – صلى الله عليه وسلم – قَالَ அ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ – . قَالُوا يَا رَسُولَ اللَّهِ ، وَمَا هُنَّ قَالَ அ الشِّرْكُ بِاللَّهِ ، وَالسِّحْرُ ، وَقَتْلُ النَّفْسِ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ ، وَأَكْلُ الرِّبَا ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ ، وَالتَّوَلِّى يَوْمَ الزَّحْفِ ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ –

ஒருமுறை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் “அழிவைத்த்தரும் ஏழு பாவங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு” எச்சரித்தார்கள்’அவை யாவை? என நபித்தோழர்கள் கேட்டபோது பின்வருமாறு விளக்கமளித்தார்கள் அண்ணலவர்கள்.

1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

2. சூனியம் செய்தல்

3. இறைவன் தடுத்த ஓர்உயிரை அநியாயமாக கொலை செய்தல்

4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது

5. வட்டிப்பொருளை உண்ணுதல்

6. போரில் பறமுதகிட்டு ஓடுவது

7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

(அறிவிப்பவர். அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்கள் புகாரி. முஸ்லிம்)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவை ஏழிலிருந்து எழுபது வரை ஆகும் எனக்கூறுகிறார்கள். உண்மையில் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவது சரிதான் என இமாம் தஹபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.மேலே கூறப்பட்ட நபி மொழியில் பெரும் பாவங்கள் யாவும் கூறப்படவில்லை. அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய பாவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

கொலை. களவு. விபச்சாரம் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களும், விலக்கபட்டவைகளை உண்ணுதல், பருகுதல் போன்ற வேதனைக் குரிய குற்றங்களும், பொய். கோள் சொல்லுதல் போன்ற சாபத்திற் குரிய குற்றங்களும் பெரும் பாவங்களச் சார்ந்தவையாகும். இவற்றுள் சில சிலவற்றைவிட கொடியதாகும்.அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் பெரும் பாவங்களில் தலையாயது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பதிலிருந்தும்,” அதற்கு மன்னிப்பே கிடையாது, இணை வத்தவன் நிரந்தரமாக நரகிலேயே இருப்பான்” என்பதிலிருந்தும் இது பெரும் பாவம் மட்டுமல்ல, அதைவிடக்கொடியது என்பதும் புரியமுடிகிறது.

source: http://hakkem.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb